சமூகச் செயற்பாட்டாளர் பாக்கியநாதன் முருகேசுவின் காந்திய அனுபவங்கள்.
சமூகச் செயற்பாட்டாளர் பாக்கியநாதன் முருகேசு அவர்கள் காந்தியம் அமைப்பின் ஆரம்பத்திலிருந்து மருத்துவர் ராஜசுந்தரம், கட்டடக்கலைஞரும், நகரத்திட்டமிடல் நிபுணருமான எஸ்.ஏ.டேவிட் (டேவிட் ஐயா) ஆகியோருடன் செயற்பட்டு வந்தவர். தற்போது முகநூலில் தன் சுயசரிதையினை எழுதி வருகின்றார். அதன் அங்கங்கள் 23, 24 காந்தியம் அமைப்பின் தோற்றம் பற்றிக்குறிப்பிடுவதால் முக்கியத்துவம் மிக்கன. அவை முக்கிய் ஆவணங்களும் கூட. அவற்றின் ஆவணச்சிறப்பின் காரணமாக பகிர்ந்து கொள்கின்றேன்.
அங்கம் 23
1974ஆம் ஆண்டு கிளிநொச்சி, உருத்திரபுரம் “காந்தி சேவா சங்கம்” பொதுக்கூட்டம் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற ஒழுங்கு செய்து இருத்தார் அதன் செயலாளர் அமரர் சி.க.வேலாயுதபிள்ளை அவர்கள் அதன் தலைவர் திரு.பெரியதம்பி (முன்னாள் பாராளுமன்ற சமநேர மொழிபெயரப்பாளர்) இந்தக் கூட்டத்திற்கு காந்திய வாதிகளான திருகோணமலை காந்தி மாஸ்ரர் அவர்கள், உருத்திரபுரம குருகுலம் கதிரவேலு அப்பு ஆசிரியர், ஆ.ம.செல்லத்துரை ஆசிரியர், சி.க.நல்லதம்பி. எஸ்.ஏ.டேவிட், சோ.இராச்சுந்தரம், மு.பாக்கியநாதன், எஸ். ஶ்ரீரங்கன், இராதாகிரஷ்ணன் இன்னும் பலர் கிட்டத்தட்ட 75-80 பேர் பார்வையாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். கூட்டத்தில் பலர் பேசினார்கள். மத்ய போசனம் வழங்கப்பட்டது். வழமைபோல காந்தி மாஸ்ரர் புத்தகக் கடையை கடை விரித்திருந்தார். வாசகர்களுக்கு அது விருந்தாயற்று பலர் நூல்களை வாங்கினார்கள். நானும் சில நூல்களை வாங்கினேன். அவர் எங்கு புத்தகக் கடை வைத்தாலும் அவருக்காக புத்தகங்கள் வாங்குவேன். சிறிய சிறிய நூல்கள் பல நூல்களை அவருக்கு உதவ செய்யும் நோக்கிலும் வாங்குவேன். கூட்டம் முடிந்து எல்லோரும் கலைந்தனர்.
காந்தியம் பிறக்க அடித்தளமிட்ட வரலாறு.
அடுத்தநாள் நான் சாந்தி கிளினிக்கிற்குப் போனேன். அப்போது இராசுந்தரம் அவர்கள் கூறினாரகள் நாம் இந்த ஊரில் சாதியில் ஒதுக்கப்பட்ட ஒரு குடியிருப்பு உண்டு. அவர்கள் நகரசுத்தி தொழிலாளர்கள். அவர்களே இந்த நகரத்தைச்சுத்தமாக வைத்திருக்க உதவுகிறார்கள் இவர்கள் முழுப்பேரும் மலையத்தை சேரந்த மிகப்பிற்படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு சிறுவர் கல்வி, போசாக்கு உணவு , சுகாதார வாழ்க்கை போன்றவற்றை கற்பிக்க வேண்டும். இங்கிருந்து எமது சமூகத்திற்கு சில இங்கு இருந்து அத்திபாரம் போடுவோம் என முடிவு செய்து இரண்டு இளம் படித்த பெண் பிள்ளைகளை தெரிவு இதில் ஒரு பெண்பிள்ளை அந்த சமூகத்தில்இருந்தே தெரிவு செய்தோம். முதலில் வவுனியா நகரத்தில் உள்ள படித்த முற்போக்கு எண்ணம் கொண்ட பத்துப்பேர் வரையில் இராச்சுந்தரம் அவர்கள் அழைத்து பி .எஸ். மொகமட் கட்டிடத்தின் மேல் மாடியில் அவர்களது அனுமதி பெற்று 10-12 பேர் ஒன்று கூடி ஒரு விளக்கக் கூட்டம் நடத்தி அதில் நாம் சூசைப்பிள்ளையார் குளத்தில் குடியிருக்கும் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறுவர் பாடசாலையும் சத்துணவுக் கூடமும் நடத்துவதென்று முடிவு செய்து், மாதம் ஒருவரிடம் 10 ரூபா வீதம் வங்கி கட்டளை மூலம் பெறுவதென்று முடிவு செய்து அதனை இராச்சுந்தரமும் பாக்கியநாதனும் சேர்ந்து சேர்க்க வேண்டும் என்ற முடிவுடன் வந்தவர்கள் யாவரும் வங்கி ஸ்ராண்டிங் ஓடரில் 10ரூபா செலுத்த கையெழுத்திட்டனர்.