அரசியல்: ஸ்ரீலங்காவில் இடம்பெற்றது இனவழிப்பே! - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
பிரித்தானிய தமிழர் பேரவையினால் தமிழ் மக்களுக்கான நீதி கேட்கும் பயணத்துக்கான சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 29) இடம்பெற்றது. இச் சந்திப்பில் உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள், பிரித்தானிய அமைச்சர்கள், 40க்கும் அதிகமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த Bassetlaw Nottinghamshire . பகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு.John Mann Labour MP . இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஐ.நாவின் உதவியுடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து இடம்பெற்றுவரும் இனப்படுகொலையானது கடந்த காலங்களில் அதிகரித்திருந்தது என குறிப்பிட்ட அவர், இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் சர்வதேச நாடுகள் இந்த விசாரணையை அக்கறையுடன் நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.