உங்களைச் சந்திப்பதற்காக பாமட்டும்தான் வருகிறோம், Yosemite National Park ஐப் பார்ப்பதற்கு நேரம் வராது என ராஜாவை அழைத்துக் கூறிவிட்டுத்தான் படுக்கைக்குச் சென்றிருந்தோம். அடுத்த நாள் Fresnoக்குப் போகமுதல், Golden Bridgeஐப் பார்த்துவிட்டுப் போவோமா, கார் இல்லாமல் அதனைப் பார்ப்பது சிரமமென்றா மகள். சரியென, வழியில் யூகலிப்பரஸ் மரங்களால் நிறைந்திருந்த 909 அடி உயரமான Mount Sutroஇல் பார்த்துவிட்டு Golden Bridgeக்குப் போனோம். அது மனதைக் கொள்ளைகொள்ளும் அளவுக்கு மிகவும் அழகாக இருந்தது. பொன் கண்டுபிடித்த காலத்தின் அடையாளத்தில் இதுவும் ஒன்றென்றனர்.
அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரமாகப் பயணித்தபோது, என் வேகத்தில் Fresnoஐ அடைய ஐந்து மணிக்கு மேலாகிவிடுமென்பது தெரிந்தது. ஐந்து மணிக்குப் பின்னர் அங்குபோய் காலையில் 7 மணிக்கு அங்கிருந்து நாங்கள் புறப்படுவது சிரமமாகவிருக்கும், திருமணமொன்றுக்காக அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு அவர்களின் வீட்டிலிருந்து வெளியேற வேண்டியிருந்ததால்
அவர்களுக்கும் அசெளரியமாகவிருக்குமென்ற யதார்த்தமும் புரிந்தது. எனவே அவர்களை அழைத்து எங்களுக்காகச் சிரமப்பட்டு உணவு தயாரித்திருப்பீர்கள், வராமல் விட்டால் மன்னிப்பீர்களா என நிலைமையை விளங்கப்படுத்தினேன். சமையலுடன் தொடர்ந்தும் வேறுபட்ட சிற்றுண்டிகளையும் அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தனர். சாப்பிடுவதற்கோ, சந்திப்பதற்கோ கொடுத்துவைக்கவில்லையென மிகவும் வருத்தமாக இருந்தது. சரி, பரவாயில்லை, அடுத்த ஆண்டில் நாங்கள் கனடா வருகிறோம். அப்போது இதற்கான தண்டனையாக உங்கள் வீட்டில் வைத்து எங்களை உபசரியுங்கள் எனப் பகிடியாகச் சொன்னார் ராஜா.
அங்கு போகவில்லை என்பதால் வேறென்ன செய்யலாமென்றபோது, தொழில்நுட்பப் புதுமையின் உலகமையமாகவிருக்கும் Silicon Valleyக்குப் போக விருப்பமா என்றா மகள். உடனடியாகவே, சரி போவோம் என்றேன் நான். எதைத் தேடுவதானாலும் Apple phoneஇல் Googleக்குச் செல்லும், Facebook (Meta) மூலம் உலகுடன் தொடர்பாக இருக்கும் நான் பார்க்கவேண்டிய இடங்கள்தானே என எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருப்பினும், அங்கு எங்குமே உள்ளே போகமுடியாது என்பதும் தெரிந்திருந்தது. கட்டடங்களைச் சுற்றிவந்து வெறுமன படங்களை எடுத்துக் கொண்டோம். அங்கிருந்த Apple storeஇல் Apple வளாகத்தை virtual realityஆக முப்பரிமாண வடிவத்தில் பார்க்கக்கூடியதாக இருந்தது. Google தனது Android தொலைபேசிகளின் அத்தனை operating systemகளின் பெயரையும் பிரதிபலிக்கும் உருவங்களைச் செய்துவைத்திருந்தது. அத்துடன் பணியாளர்கள் வேலையில் இருக்கும்போது பயன்படுத்துவதற்கென Google Bikeகளை வைத்திருந்தது. அப்படியே வழியில் Facebookஇன் ஆரம்பகர்த்தா Mark Zuckerberg 75 மில்லியனை அன்பளிப்பாக வழங்கியதால், அவரின் பெயரில் இருக்கும் மருத்துவமனையான Zuckerberg San Francisco General Hospital and Trauma Center பார்த்தபின்னர் ஹோட்டலுக்குப் போனோம்.
அடுத்த நாள் காலையில் காரை மீளக் கையளிக்க முன்பாக 5,400 அடி உயர Corono high park Peak இல் நின்று, panorama view இல் மிக அழகான சூரிய உதயமொன்றைப் பார்த்தோம். அது மனதுக்கு மிகவும் ரம்மியமான காட்சியாக இருந்தது. முடியுள்ளது போலக் காட்சியளிப்பதால் இது Corono Peak எனப்படுகிறது.
San Franciscoக்குப் போனநேரம் முதல் Waymo என்ற பெயருடன் விசித்திரமான கார்கள் சாரதியில்லாமல் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து வியப்படைந்திருந்தோம். Self-driving car பற்றியதொரு project ஒன்றை என் சின்ன மகள் 2ம் வகுப்புப் படிக்கும்போது செய்திருந்தா. 17 வருடங்களின் அதை நேரில் பார்த்தபோது மிகவும் excitedஆக இருந்தது. அதில் சவாரி செய்யலாமென்றும் எழுதியிருந்ததபடி, அன்று மாலை அதில் சவாரிசெய்தோம். மகள்தான் பதிவுசெய்திருந்தா. அவவின் பெயரை அதன் மேலுள்ள திரையில் தெரிய அது எங்கள் அருகில் வந்தபோது, பரபரப்பாக இருந்தது. உள்ளே ஏறியது எங்களுக்கான அறிவுறுத்தல்களை அது சொன்னது. அதன் உள்திரையில் நாங்கள் செல்லும் பாதை தெரிய, அதில் பயணிப்பது மிகவும் மகிழ்ச்சியான ஓர் அனுபவமாக இருந்தது. இருவருமே பின்னுக்கு ஏறிவிட்டோம், அடுத்த முறை ஒருவர் முன்னுக்கு இருந்து பார்க்கவேண்டுமென நினைத்தோம், ஆனால் அது சாத்தியப்படவில்லை. San Francisco பயணத்தின் highlightகளில் ஒன்றாக அது அமைந்திருந்தது என்றால் மிகையாகாது. சிலருக்கு வாகனம் ஓடுவது பிடிக்கும். எங்காவது செல்லவேண்டியிருக்கும்போது காரில் செல்வது வசதி என்பதற்காக மட்டும்தான் வாகனம் ஓடுபவர் நான் என்பதால், Waymoஐ ஓடவிட்டுவிட்டு ஒய்யாரமாக இருக்கலாம் என்பதால் வாழ்க்கைக் காலத்தில் அது ரொறன்ரோவுக்கு வந்தால் அப்படி ஒரு காரை நிச்சயம் வாங்க நான் விரும்புவேன். அதனை நாங்கள் வியப்புடன் படமெடுத்திருந்ததுபோல நாங்கள் பயணிக்கும்போது சிலர் நாங்கள் இருந்த வாகனத்தைப் படமெடுத்துக்கொண்டனர். எவ்வளவு கவனமாக Waymo ஓடுகிறது கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம். https://waymo.com/waymo-driver
பின்னர் Ocean Beachஇல் சூரியன் மறைவதைப் பார்க்கச் சென்றிருந்தபோது வழியில் coyote போன்ற சில மிருகங்களையும் பறவைகளையும் பார்க்கமுடிந்திருந்தது.
அடுத்த நாள் Union Square, Ferry Building ஆகியவற்றுக்கு நடந்து சென்றோம். அனேகமான கட்டங்கள் 1849 இல் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் San Franciscoஇல் ராசவள்ளிக்கிழங்கு உணவின் முக்கியமான ஒரு பகுதியாக இருப்பது அதிசயமாக இருந்தது. 1898இல் கட்டப்பட்டிருந்த Ferry Building 1906இல் நிகழ்ந்த பூமியதிர்ச்சியிலிருந்தும் அதைத் தொடர்ந்து ஏற்பட்டிருந்த தீயிலிருந்தும் தப்பியிருக்கும் ஒரு கட்டமாக இருக்கிறது. பூமியதிர்ச்சி 1 முதல் 10 வரையான அளவுத்திட்டமொன்றில் அளக்கப்படுகிறது. 1906இல் ஏற்பட்ட பூமியதிர்ச்சி 7.9 ஆக இருந்தது. அப்படியான மிகப் பாரியதொரு பூமியதிர்ச்சியாக அது இருந்தமையால் பாரதூரமான அழிவுகளை அது ஏற்படுத்தியிருந்தது. அதன்போது வெடித்த இயற்கைவாயுக் குழாய்களின் கசிவே பின்னர் தீயை உருவாக்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தக் கட்டத்தைச் சுற்றி நடந்தபோது பாதையில் கப்பல்களைப் புதைத்த இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. 1849இல் அதிகளவிலான பொன் கண்டறியப்பட்டபோது தங்களின் நாட்டின் செல்வம் வெளியேறாமல் இருப்பதற்காக, வேற்றுநாட்டவர்கள் எங்கெல்லாம் கப்பல்களை நிறுத்தியிருந்தார்களோ அந்த இடங்களுக்கு அவர்கள் சொந்தக்காரர்கள் என US அறிவித்திருந்ததாம். பின்னர் காலவோட்டத்தில் நிலத்தில் தங்களின் கப்பல்களைப் புதைத்துவிட்டு, அதன்மேல் ஹோட்டல்களையும் வியாபார நிறுவனங்களையும் அந்தக் கப்பல்களுக்குச் சொந்தக்காரர்கள் கட்டியிருக்கின்றனர்.
பின்னர் 285 அடி உயரமான Telegraph Hillஇல் ஏறி San Franciscoஇன் இயற்கை அழகை மகள் ரசிக்க நான் கீழே காத்திருந்தேன். வழியெல்லாம் பலரின் வீடுகளைப் பார்த்த மகள், அவ்வளவு உயரத்தில் இருந்துகொண்டு அவர்களால் நாளாந்த வாழ்க்கையை எப்படி வாழமுடிகிறதென வியந்துபோனா. அத்துடன், தன் அக்காமாருடன் எல்லாம் அந்தக் காலத்தில் hiking போன நான் இப்போது தன்னுடன் செல்லாமல் இருப்பது தனக்கு நியாயமற்றது என மனம் நொந்துகொண்டா. முதுமை உதவிசெய்யாத என்னுடலை நான் உறுதியாக வைத்திருப்பதற்கு என்னால் ஆன விடயங்களைச் செய்யவேண்டுமென்ற பொறுப்பு எனக்கிருக்கிருக்கிறது என்பது எனக்கு மேலும் விளங்கியது. பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்பதில் சற்றுக் கவலையாகவும் இருந்தது.
அடுத்த நாள் காலையில், செப்ரெம்பர் 15ம் திகதி அன்று, நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். மனிதன் கட்டமைத்த வியக்கத்தக்க இடங்களைப் பார்ப்பதற்காக, ஐக்கிய அமெரிக்காவிலுள்ள புளோரிடா, தெற்குக் கலிபோனியா, நியூயோர்க், நிவேடா போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். இயற்கை எழிலைக் கண்டுகளிப்பதற்காக ஹவாய்க்கும் வையோமிங்க்கும் போயிருக்கிறோம். அவ்வகையில், ஆறுகள், காடுகள், hot springs, geysers என நானாவிதமான இயற்கையெழிலால் நிரம்பியிருந்த Yellowstone National Park தான் இதுவரை மறக்கமுடியாத ஐக்கிய அமெரிக்க நாட்டுப் பயணமாக அமைந்திருந்தது. ஆனால், அதனை தொழில்நுட்ப மேம்பாட்டினதும், புதுமையினதும் உச்சத்தை எட்டியிருப்பதுடன், இயற்கையின் அற்புதத்தையும் தனக்குள் நிரப்பி வைத்திருக்கும் San Francisco பயணம் இப்போது விஞ்சிவிட்டது எனலாம்.
முற்றும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.