மானுட இனதத்தின் வளர்ச்சிப் போக்கில்
பல படி நிலைகள்.
குரங்கிலிருந்து வந்தவர் மனிதர் என்ப்ர்.
புதுமைப்பித்தனோ முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு
என்றாலே மகிழ்வர் எம்மவர் என்பார்.
குரங்கிலிருந்து வந்தவர்,
குகைகளில் வாழ்ந்தார்.
குழுக்களாக வாழ்ந்தார்.
பெண் வழிக்குடும்பத்தைக் கண்டார்.
பொதுவுடமை பேணினார்.
தனியுடமை கண்டார்.
தனித்து வாழத்தொடங்கினார்.
வர்க்கங்களாகப் பிரிந்தார்.
வர்ணங்களாகப் பிரிந்தார்.
மதம், மொழியெனப் பிரிந்தார்.
'யாரும் ஊரே! யாவரும் கேளிர்!" என்றான்
நம் கவிஞன். கேட்டாரா?
குரங்கிலிருந்து வந்தவர்
காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்.
நம்மவரோ
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
யார் வாழ்ந்தார்? வாழ்வார்?
யார் இருந்தார்? யார் இருப்பார்?
அதுதான் புதுமைப்பித்தன் சொன்னார்
மனிதராக மாறிய முதற் குரங்கும் தமிழர்
என்றால்தான் தமிழருக்குத் திருப்தி.
தமிழ் வெறியர் மலிந்து கிடக்கின்றார்.
தர்க்க நியாயம் அற்ற வெறியர் இவர்.
மானுடத் தொல்குடிகள்
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தார்.
அம்மானுடர் பேசிய மொழியென்ன?
காட்டுமிராண்டிகளின் மொழிதானே.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய குடியென்று உண்டா?
முட்டாள்களே! முட்டாள்களே !
ஆதிக்குடிகள் நிச்சயம் காட்டுமிராண்டிகள்தாம்.
மூடத்தனத்தை விட்டு வெளியே வாரீர்!
பகுத்தறிவைப் பாவிப்பீர்.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த ஆதி மானுடர்
தமிழரென்றால்,
அக்காட்டுமிராண்டிகள் பேசிய மொழியென்ன?
தமிழ்தானே!
மூடத்தனத்தில் மூழ்கிக்கிடப்பர் உணர்ச்சி வெறியர்.
அதனால்தான் மனம் வெந்து சொன்னார் பெரியார்
'தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி' என்று.
அது அவர்
உணர்ச்சி வெறியர்களைப் பார்த்துக் கூறியது.
மூடத்தனத்தில் மூழ்கிக்கிடப்போரை பார்த்துக் கூறியது.
பகுத்தறவுத் திறனற்றோரைப் பார்த்துக் கூறியது.
பெரியார் தான் தமிழரென்று பெருமைப்பட்டவர்.
தமிழே இடத்துக்கிடம்
வேறு வேறு பெயர்களில் பேசப்படுகின்றது
என்றவர்.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவையும் தமிழே
என்றவர்.
பெரியாரே கூறினார் கேள்வி கேள் என்று.
தான் கூறியதையும் கேள்விக்குட்படுத்து என்றார்.
அவரைப்
புரியார் புலம்புகின்றார் பெரியாரை இகழ்கின்றார்.
* இந்த இணைப்பையும் பாருங்கள் -
* பெரியார் தமிழர் தலைவர் என்பதில் சந்தேகம் இருப்பவர்கள் 1938, 1939 காலகட்டத்தில் பெரியார் எழுதியவற்றை உள்ளடக்கியுள்ள இங்குள்ள பக்கங்களைப் பாருங்கள். இவற்றைப் படிக்காமல் திராவிடம் பற்றியும், தமிழ் பற்றியும் கூக்குரல் இடாதீர்கள். இப்பக்கங்கள் அடங்கிய தொகுதிக்கான இணைய இணைப்பு -
பக்கங்கள் 655 - 660 பாருங்கள்.
* பெரியாரின் எழுத்துகளைப் படிக்காமல் இங்கு வந்து உணர்ச்சி வெறி அடைவதற்குப் பதில் பின்வரும் இணைப்பில் அவரது எழுத்துகள் நிறைய உள்ளன. அவற்றை வாசித்து அவற்றைக் கேள்விக்குடுத்தும் வகையில் தர்க்கம் செய்யுங்கள். அத்தகைய எதிர்வினைகளே தற்போது அவசியம்.