ஆய்வுக்கட்டுரை படிப்போமா?முனைவர் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி – 635 752  முன்னுரைமுன்னுரை
காடுகளில் வெகு தொலைவில் இருக்கும் இனத்தாரைக் கூக்குரலிட்டு அழைக்கும் போது ஓ… என்கிற சொல்லே அதீதப் பயனளித்தை அறிந்து உணர்ந்த ஆதித்தமிழன் உருவாக்கிய குறிப்பு மொழியே. ஐயோ. (Oh…My.. God) அசாதாரண  கொடூரமான மற்றும் துன்பகரமான சூழ்நிலையிலும். அபயம் வேண்டி ஆண்டவனை, தலைவனை, பெற்றோரை வியத்து அழைத்து முறையிடுவது தமிழர் தம் வழக்கம் மண்டையில் குட்டு பட்டாலும் உதடுகள் சொல் வார்த்தை ஐயோ.

ஐயோ – பொருள்
ஐயோ என்ற சொல் ஓலம் இக்கட்டான நிலையில் அபயம் வேண்டி எழுப்பட்ட கூக்குரலாகும். ஐயோ – அபாயகரமான சூழ்நிலயில் அபயம் வேண்டி ஒலிக்கப்பட்ட குறிப்பு மொழியாகும். இரக்கம், ஆக்கம், சோகம், வலி, துன்பம் முதலிய உணர்ச்சிக்களை தம்மால் கட்டுபடுத்த முடியாத நிலையில் ஓலமிடுவது ஆதிமனிதனில் காடுகளில் திரிந்த போதிலிருந்தே தொடரும் உள்ளுணர்வின் தாக்கம் ஆகும். இது அனைத்து கலாச்சரங்களிலும் இன்றைக்கும் தொடரும் வழமை. ஐயோ  என்பது எமனின் மனைவியின் பெயராகும்.

சங்ககாலம்
ஐயோ! ஐயமே! வேண்டாம்! சங்ககால தொட்டு ஐயோ! பல பொருளில் பயன்பட்டு வருகின்றது அதன் நீளமும் அகலமும் மிகப் பெரிது! ஐயோ என்ற சொல் தமிழ்மொழி   தோன்றியதிலிருந்து தொடங்கியிருக்கலாம். ஐயோ, இங்கே வாருங்களேன் என்ற ஓலம் இக்கட்டான நிலையில் அபயம் வேண்டி எழுப்பப்பட்டும் கூக்குரலாகும். வலியைக் குறிக்க சங்ககால ஐயோ! கையறு நிலை அடைந்து தவிக்கும் போது பயன்படுத்தும் சொல்லாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் புறநானூற்றுப் பாடல் 255ல் அவலத்தைக் குறிக்க எடுத்தாளப்பட்டுள்ளது.

ஐயோ! எனின், யான் புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்க
வல்லேன்@
என்போல்பெரு விதிர்ப்புறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரை வளை முன் கை பற்றி
வரை நிழல் சேர்கம் - நடந்திசின் சிறிதே!1

பொதுவில் திணை, முதுபாலைத் துறை, நேரிசை ஆசிரியப்பா என்னும் பா வகையில் காடியவர் சங்கப்புலவர் வன்பரணர் காட்டுவழி செல்லுகின்ற காதலியைத் தாக்க வந்த புலியை எதிரித்துப் போராடிக் கொன்று, காயம்பட்டு விழுந்து கிடக்கிறான் காதலன் கையணைத்து வாநீ எடுக்க காதலி  முயலுகையில். வுலி வேதனையில் “ஐயோ”என்று முனங்குபவனிடம் காதலி சொல்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.

‘நீ ஐயோ’ எனின் மீண்டும் புலி வருமோ என்று  அஞ்சுகிறேன் என்னை அணைத்த மார்பிலிருந்து என்னை எடுக்க முடியவில்லை நீ இப்படிச் சாயும்படி, புலி வடிவில் வந்து உன்னை தாக்கிய அறமற்ற கூற்றுவன், என்னையேல் பெருள் துன்புறட்டும்! வளையலணிந்த என் கையைப் பற்றிக்கொண்டு, மெல்ல மெல்ல நட, மலையோர நிழலில் அமரலாம் வா! என்று காதலி சொல்வதாக அமைந்துள்ளது அப்பாடல் எனவே, இச்சொல் தொன்மையான தமிழ்ச்சொல் என்னும் வலி, துன்பம், இரக்கம:. துக்கம், சோகம் போன்றவை குறிக்க, குறைந்த அளவு. இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளாவது பயன்பாட்டில் உள்ளது என்பதுவும் தெளிவு!

மாணிக்கவாசகர்
திகைப்பைக் குறித்த கி.பி நான்காம் நூற்றாண்டின் ஐயோ! மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரின் காலத்தில் ஐயோ! என்ற சொல் கொண்டு இறைவனைப் பாடும் திருவாசகத்தில் திகைப்பைக் குறிக்க ‘ஐயோ’ எழுந்தபோது மங்கலிமான சொல்லாக மாற்றியே எழுத வேண்டும் என்ற கவிதை மரபின் ‘ஐயோ’ வாக மாறியது

ஐயோ! திருவாசகம் - சிவபுராணத்தில்

“உய்யஎன்
உள்ளத்தில் ஓங்காராமாய் நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா!
வேதங்கள் ஐயோ! என வோங்கி ஆழ்ந்து
அகன்ற நுண்ணியனே” என்று
எழுத  வேண்டிய இடத்தில் “வேதங்கள் ஐயோ!
என வோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!2

ஏன்று அருளினர் மணிக்கவாசகர் எதனால் இறைவனது பெருமையை வேதங்காலும் அறிய முடியாது எனத் திருவாசகம் சொல்கின்றது என்று சற்றே நுட்பமாக நோக்கிவோம்.

“வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்தும், அகன்றும், பற்பல கோணங்களால் ஆராய்ந்து நோக்கியும், இறைவனின் பெருமையைக் கூறச் சொற்கள் போதாமையால், திகைப்புற்றுக் கையறுநிலையை அடைந்தன. அத்தகு பெரிதினும் பெரிய இறைவனோ மிகமிகச்சிறிய நுண்ணியவற்றிலும் நுட்பமாக நிறைந்துள்ளான், என்ன விந்தை இது! என்று வியக்கிறார், மாணிக்கவாசகர்.

இறைவன் மிக நுட்பமானவன், அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்தருப்பவன் நுண்பொருளுக்குத் தானே, ‘வியாபித்தல்” என்று வடமொழி சொல்லும் எங்கும் நிறைந்திருத்தல் தன்மையுண்டு. அதைக் குறிப்பிடவே ‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே என்றார்.

திருமழிசையாழ்வார்
ஆழ்வார்கள் அனைவரும் திருமாலின் திருக்கோயில்களில் மங்களா சாசனம் செய்தார்கள். திருமழிசையாடைவாரோ, செய்யுள் வழக்கு அமங்கலச்சொல் என்று முத்திரை குத்திய ஐயோ’ வை

“திருவரங்கனின் சிவந்த வாய் அழகைக்
கண்டவியப்பால் உதித்த
மங்கலச் சொல் ‘ஐயோ’ வாக மங்களா
சாசனம் செய்யது உயர்த்தினார்.
கையனார் சுரிசங்களலாழியர்
நீள்வரையோல்
மெய்யனார் துன்ப விரையார் கமழ்
நீள்முடியெம்
ஐயனார் அணியரங்கனார்
அரவினணை மிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை
கவர்ந்ததுவே!3

ஐயோ மீது மீண்டும் கருணை கொண்ட திருமழிசையாழ்வார்

திருவரங்கனின் நீலமேனி நெஞ்சினில்
நிறை கொண்ட வியப்பால் உதித்த
மங்கலச் சொல்லாக ஐயோ வுக்கு
இரண்டாவது மங்களா சாசனம்
சேய்து உயர்த்தினார்!
ஆலமா! முரத்தின் இலைமேல் ஒரு
புhலகனாய்
ஞாலமேழும் உண்டான
அரங்கத்தரவினணையான்
கோலமா மணியாரமும் முத்துத்
தாமமும் முடிவில்லதோhர் எழில்
நீலமேனி ஐயோ நிறை கொண்டது
என்நெஞ்சினையே!4

அரங்கனின் “செய்யவாய் சிந்தை கவர்ந்ததையும் முடிவில்லதோர் எழில் நீலமேனி நெஞ்சினல் நிற கொண்டதையும் ஐயோ என்ற சொல்லால் தம் மகிழ்வை வருணித்து அச்சொல்லைப் புனிதப்படுத்தினார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர்
12ஆம் நூற்றாண்டில் ‘ஐயோ” வை மங்களமாக மாற்றி பெருமை கம்பரைச் சாரும். ஐயோ! என்னம் அமங்கலத் திகைப்புச் சொல்லை மங்கள வழக்காக்கிய பெருமை கவிச்சக்கரவர்த்தி கம்பனையே சாரும் கம்பராமாயணத்தில் வரும் ஒரு எடுத்துக்காட்டு இதற்குச் சாட்சி. தந்தையின் வாக்கைக் காக்க இராமபிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்கிறான். இராமபிரான் சீதைபிராட்டியுடன் இளையபெருமான் இலக்குவனுடனும் மரவுரி அணிந்து ஒரு பொன்மாலைப் பொழுதில் கானகம் நோக்கிச் செல்கிறான்

“எந்த அணிகலனும் இல்லாமல் மரவுரி
தரித்த நிலையிலும், இராமபிரானின்
திருமேனியிலிருந்து வீசும் ஒளி
பொன்மானாப் பொழுதுக் கதிரவனின்
மின்னி ஒளிவீசும் தங்க நிறத்தை
ஒன்றுமில்லாமல் செய்து விட்டதைக்கொண்டு
ஞாணி மறைகிறான் கதிரவன்

‘இவளக்கு இடை என்ற ஒன்று உண்ட என்று பொய்யோ’ என்று வியக்கும் கொடியிடையாளான சீதா டீதவழயுடனும் இளையபெருமான் இலட்சுமணனுடனும். இராமபிரான் கானகம் செல்லுகிறாள்’ என்று சொல்லவந்த கம்பர் இராமபிரானின் கரியமேனி ஒளிவீசும்  அழகைப் பின்வருமாறு வருணித்து மயங்குகின்றார்.

“இராமபிரானின் திருமேனி ‘மை’ போனது கருமையாக உள்ளதோ! ஏன்று ஐயுற்றவர்,; “இல்லை! இல்லை!! கருமையான மை ஒளிவீசும் தன்மை கொண்டதன்று! எனவே மையை பிரானின் திருமேனிக்கு உவமை சொல்வது பொருத்தமன்று என்று தெளிகிறார்

பின் சிந்தித்து “இவன் திருமேனி மரகத ஒளிபோன்று பச்சை நிறமோ” என உவமிக்கப் போனவர் மரகதக்கல் மிகவும்சிறியதல்லவா! உலகளந் நீண்டமாலவகை உவமிக்க மரகதக்கல்லுக்குத் தகுதி இல்லையே! ஏன்று மரகத்தை விட்டொழித்தார் கம்பர். பின் சற்றே தெளிந்த, “பரந்துவிரிந்து அலை கடலைப்போல நீ நிறமோ: என்று வியந்தவ் இல்லை! இல்லை!  இலைகடல் உவர்ப்பு என்னும் குற்றம் உடையது! அது எங்ஙனம் எம்பெருமானுக்கு ஒப்பாகும்? எனவே, அதுவும் புறந்தள்ளவேன்டியதே! ஏன்று துணிந்தார்!

பின் “உவர்ப்பு என்னும் குற்றமற்றதும் நிறம் கறுத்த மின்னொளி வீசுவதுமான மழைமுகிலோ” என்று உவமித்தவர். சற்றே பின்வாங்கி, “இம்மழைமுகில் மழையாகப் பொழிந்தபின் மறைந்துபோகும் குற்றமுள்ளதல்லவா? ஏன்னென்றும் நிலைபேறு கொண்ட எம்பிரானுக்கு இம்மழைமுகில் ஒருக்காலும் ஒப்பாகாது” என்று மழைமுகிலயும் விலக்கினார்.

இனி எம்பிரானின் வடிவழகை வருணிக்க யாம் ஒப்புமை கூறும் வகையில் தமிழில் சொற்பொருள் காண இயவில்லையே ”ஐயோ” என்றும் அழியாத வடிவ அழகை உடைய இவன் அழகை எவ்வாறு தொக்கி நிற்க. வார்த்தைகளுக்குள் அடங்காதது இராமபிரானின் வடிவழகு என்று தன் இயலாமையைப் பதிவிட்டுத் தன் பாடலை முடிகிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பன்

இவ்வொளிக்காட்சியைக்
சொற்காவியாமாக்கித் துள்ளலோசையில்
துள்ளும் களப்பாவிப் கம்பனின்
சொல்லோவியத்தைக் கானுங்கள்
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி
சோதியின் மறைய,
பொய்யோ! எனும் இடையாளொடும்,
இளயானொடும் போனான்
மையே!மரகதமோ! மறிகடலோ
மழைமுகிலோ!
ஐயோ இவன் வடிவு! ஏன்பது ஓர்   
அழியா அழகு உடையான்!5

மாணிக்கவாசகரின் திருவாசகம், கம்பனின் கவிச்சுவை என்று ஐயோ என்ற தமிழ்ச் சொல்லன் நயம் நயந்து நம்மை இன்சுவையில் நனைக்கின்றது என்றால் மிகையன்று. “கருட சேவைக் கண்டு சேவித்த கவி காளமேகம் வஞ்சப் புகழ்ச்சி  அணிக்கு ஐயோ வை ஆயுதமாக்கினார்”

பொருமாளும் நல்ல பெருமார், அவர்
தம்
திருநாளும் நல்ல திருநாள்!
பெருமாள்
இருந்திடத்தில் சும்மா
இராமையினால் ஐயோ!
பருந்து எடுத்துப் போகிறதே பார்.6

சயனக் கொலத்தில், கோவிலில் பள்ளிகொண்டு அருள் பாலிக்குப் திருமால், கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதை இருந்த இடத்தில் சும்மா இருக்காமல் வீதி உலா வந்த உலகளந்த பெருமாள ஐயோ! குருடன் தூக்கிக் கொண்டு போவதாக விளையாட்டாகக் கவிபாடிய காளமேகத்தின் கவித்திறனுக்கு இப்பாடல் சான்று அடுத்து.

விநாயகர் சதுர்த்தி முடிந்து வீதியில் வகை வகையாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் வரும் போது நாம் என்ன செய்வோம்! வெளியில்  நின்று வேடிக்கை பார்ப்போம் பக்கத்தில் வந்து காணிக்கை பேட்டு விபூது பூசிக் கொள்வோம். ஆனால், காளமேகப்புலவர் விநாயகர் வீதியில் ஊர்வலம் வருவதைப் பார்த்து விட்டு எப்படி ஜோக் அடிக்கிறார். இது வெறுமனே ஜோக் அல்ல இதை நிந்தாஸ்துதி என்பார். அதாவது இகழ்வது போல புகழ்ந்து கீழ்காணுமாறு பாடினார் கவிகாளமேகப் புலவர்

மூப்பின் மழுவும், முராகி திருச்
சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ?
மார்ப்பான்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்த
ஐயோ!
எலி; இழுத்துப்  போகின்றது, ஏன்?7

பரம சிவன் கையில் ஏந்தும் மழுவும், திருமால் கையில் இருக்கும் சுதர்சனமும், யமன் கையில் ஏந்தும் கதையும் எங்காவது காணமால் ஆபாய் விட்டதா என்ன? இவ்வளவு பேர் இருந்தும் மிகுந்த வலிமை கொண்ட இந்த மதயானையை ஒரு பெருச்சாளி இழுத்துக்கொண்டு போகிறது பாருங்கள் என்றார். தாயுமானவர் சுவாமிகள்; ஐயோ என்ற செல்லால் உயர்வடைந்து இன்புற்றிருக்கப் பாடிய பாடல் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறென்றறியேன் பராபரமே!

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்
அகண்டாகார சிவ
போகஅமனும் பேரின்ப வெள்ளம்
ஆபாங்கித் ததும்பிப் பூரணமா
ஏக உருவாய்க் கிடக்குது ஐயோ!
இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர
வாரும் செகத்தீரே!   
ஐயோ உணைக்காண்யின் ஆசை கொண்ட
தத்தனையுப்
பொய்யோ வெளியாப் பகலாய் பராபரமே8

மனிதகுலத்தின் மீது அளவுகடந்த இரக்கம் கொண்டு தாயுமானவர் கூறுவது.சிவபோகம் என்னும் நிலைத்த பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பி முழுமையான ஓரே வடிவத்தில் கிடக்கின்றது! ஐயோ அதை அனைவரும் சிறப்புடன் துய்தில் பேரின்பமடையுங்கள்! என்று ஆற்றாமையால் உள்ளம் நெகிழ்ந்து அருள் கின்றார் தாயுமானவர்.

மகாகவி பராதி
இக்கால இலக்கியத்தை புரட்டிப் போட்ட பராதி படித்தவர்களுக்கு ஐயோவைக்கொண்டு  பின்வருமாறு சாபமிடுகிறார்.

படிச்சவன் சூதும் பாவமும்
பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று
போவான்”9

படித்தவன் சூதும் பாவமும் செய்தால் ஐயோ வென்று போவான் எனத் தனது புதிய கோணங்கிப்  பாடலில் சபிக்கிறார் மகாகவி பராதி

அடிக்குறிப்புகள்
1.புறநானூறூ – பா,255
2. திருவாசகம் சிவபுராணம், பா.35
3. திருமழிசையாழவார், திவ்யதேச பாசுரங்கள், பா. 933
4. மேலது, பா.935
5. கம்பர் கம்பராமாயணம், பா.1926
6. காளமேகப் புலவர் தனிப்பாடல், பா 63
7. மேலது,பா.69
8. தாயுமானவர் தனிப்பாடல், ப.38
9. பாரதியர் கவிதைகள் புதிய கோணாங்கி பாடல்,

பயன்பட்ட நூல்கள்
முனைவர் அ.மா. பரிமணம் புறநானூறு (மூலமும் உரையும்)
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-பி, சிட்கோ இண்ட்ஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை – 600 098

2; சிவ. ஆ. பக்தவச்சலம்     சிவபுராணம்  43. சன்னதி வீதி நல்லூர்ப்பேட்டை குடியாத்தம் - 632 602
ஸ்ரீ. உ. வே ளு. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ 214,கீழ் உத்தர வீதி, ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006
மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் லியோ புக் பப்ளிஷர்ஸ்  1047, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம், சென்னை - 600106

* கட்டுரையாளர்:  முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752, திருப்பத்தூர் மாவட்டம் -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R