மீள்பிரசுரம்: ஆனந்தபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கேற்பட்ட இராணுவத் தோல்வியின் பகுப்பாய்வு!
[விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசபடைகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தின் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தபுரத்தில் புலிகளுக்கேற்பட்ட இழப்பு. அதுபற்றிய பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தேனீ இணையத்தளத்தில் வெளியானது. அதனை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்]
- இந்தக் கட்டுரை முதலில் ஏப்ரல் 10,2009ல், “எல்.ரீ.ரீ.ஈ க்கு ஏற்பட்ட பாரிய தோல்வியினால் உயர்மட்ட புலித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்டது. பின்னர் அது புதுப்பிக்கப்பட்டு திருத்தங்களுடன் தற்போதைய தலைப்புடன் வெளியிடப்படுகிறது.அது மீண்டும் இங்கே வெளியிடப்படுவது, ஏப்ரல் 5,2009ல் ஆனந்தபுரத்தில் முடிவுற்ற தீர்க்கமான போரின் மூன்றாம் ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக. அப்போது நான் எழுதியிருந்தது, ஆனந்தபுர யுத்தம் உண்மையில் எல்.ரீ.ரீ.ஈயின் கண்ணோட்டத்தில் தற்போது நடைபெறும் யுத்தத்தைப் பற்றிய கணிப்பினை தீர்மானிப்பதற்கு ஏற்ற ஒரு தருணம் என்று. - டி.பி.எஸ்.ஜெயராஜ் -