கிரீஸ் யக்கா எனும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியின் சாத்தியமான ஒரே விளக்கம் இனவாதம் என்பதுதான்
கட்டுரையில் நான் விவாதிக்க விரும்புவது கிரீஸ் யக்கா (பூதம்) எனும் ஆராய்ச்சிக்குரிய நிகழ்ச்சி பார்க்கப்படவேண்டியது இனவாதம் எனும் உதாரணத்தின் வகையிலேயே ஆகும். மேலும் சாதாரண சட்டங்களின் குறைவின் காரணமாக ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் அடிப்படையிலே இதனைப் பார்க்கக்கூடாது. மற்றும் இந்த கிரீஸ் பூதங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததை, மக்கள் சாதாரணமாக சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டார்கள் என்கிற நோக்கில் பார்க்காமல் மாறிவரும் உலகப்புரட்சியின் ஒரு மேற்கோள் என்ற வடிவத்தில் இதனைப் பார்க்க வேண்டும் என்பதனையே. எல்லாவற்றுக்கும் முதலில், நான் சொல்லவேண்டியது இந்த கிரீஸ் பூதங்களைப்பற்றிய பிரதிபலிப்புகளின் ஒரு பகுதிக்கு காரணம் வெறும் மனப்பிராந்தியும் மிகைப்படுத்தலுமே ஆகும், ஆனால் அடிப்படையில் அதில் உண்மையான காரணங்கள் உள்ளன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.