பதிவுகள் முகப்பு

ரொறன்ரோவில் நூல்களின் சங்கமம் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
18 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை ‘நூல்களின் சங்கமம்’ என்ற புத்தகக் கண்காட்சி ஒன்று 635 மிடில்பீல்ட் வீதியில் உள்ள கனடா இந்து ஐயப்பன் ஆலய அரங்கில் நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வில் கட்டணம் எதுவுமின்றி இலவசமாகப் பார்வையாளர்கள் கலந்து கொள்ளமுடியும்.

காலை 10 மணிக்குத் தொடங்கி மலை 5 மணிவரையும் இந்தக் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. உங்களுக்கு வசதியான நேரம் நீங்கள் வந்து பார்வையிடவோ, நூல்களை வாங்கிச் செல்லவோ முடியும். கனடாவில் உள்ள சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் படைப்புக்களைக் காட்சிப் படுத்தவும், விற்பனை செய்யவும்  முன்வந்திருக்கிறார்கள். இதுவரை கனடாவில் உள்ள பிரபலமான 32 நூலாசிரியர்கள் தங்கள் நூல்களைக் காட்சிப்படுத்த முன்வந்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
17 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஐந்து:   இருப்பின்  புதிரொன்றும் , நங்கையுடனான சந்திப்பும்!

"நான் மாதவன். யுனிட் 203இல் வசிப்பவன்.  போஸ்ட்மன் தவறுதலாக உங்களுக்குரிய கடிதத்தை என் தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்று விட்டார். உள்ளே ஏதோ ஒருவிதமான அட்டை  , கடன் அட்டை அல்லது  வங்கி அட்டையாகவிருக்கலாம், இருப்பதுபோல் தெரிகிறது.  அதனால்தான் அதனைக்க் கொடுப்பதற்காக இங்கு வந்தேன்" இவ்விதம் ஆங்கிலத்தில் கூறினான் மாதவன். அத்துடன் கடிதத்தையும் அவளிடம் கொடுத்தான்.

அதற்கு அவள் பதிலாக , ஆங்கிலத்தில் "ஓ. மிகவும் நன்றி. இவ்விதம் நேரமெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதனை மிகவும் மதிக்கின்றேன். இன்னுமொன்று .. நீங்கள் கேரளக்காரரா? உங்கள் பெயர் அங்கு பிரசித்தமானது. அதிகமாகப் பாவிக்கப்படும் பெயர்களில் ஒன்று" என்று கேள்வியுடன் பதிலளித்தாள்.

"நான் கேரளக்காரன் அல்ல. தமிழ்நாட்டுக்காரனும் அல்ல. ஶ்ரீலங்கன். நீங்களும் ஶ்ரீலங்காவா" என்றான் மாதவன்.

இதற்கு அவள் இலேசாக முறுவலித்தபடியே "இல்லை, நான் தமிழ்நாட்டுக்காரி. தஞ்சாவூர்க்காரி. ஆனால் அம்மா ஶ்ரீலங்காக்காரி" என்றாள்.

இதைக்கேட்டதும் அவன் பதிலுக்கு முறுவலித்தபடி ' அப்போ நீங்கள் தமிழச்சி. உங்களுடன் தமிழிலேயே கதைக்கலாம்."

இதற்குப் பதிலாக "தாராளமாக' என்றவள் " தொடர்ந்து  "உள்ளே வாருங்கள். ஒரு கப் தேநீர் அருந்தலாம்"  என்றாள்.

பதிலுக்கு நன்றி கூறியபடி அவள் அவளது அபார்ட்மென்டினுள் நுழைந்தான்.  அது ஒரு படுக்கை அறையைக் கொண்ட அப்பார்ட்மென்ட். அவனுடையதை விடச் சிறிது பெரிதாகவிருந்தது. லிவிங்ரூமில் அவள் ஹோம் ஒபிஸ் உருவாக்கியிருந்தாள். வீட்டிலிருந்து வேலை செய்பவள் போலும்.

அவனை லிவிங் ரூமிலிருந்த சோபாவில் அமரக்கூறிவிட்டு, தேநீர் தயாரிக்கச் சென்றாள் பானுமதி.

"உங்களுக்கு எப்படி தேநீர் தேவை. சுகர் , மில்க் எப்படியிருக்க வேணும்" என்று  சமையலறையிலிருந்து  கேட்டாள்.

" எனக்கு 'டபுள் டபுள்' " என்றான்.

சிறிது நேரத்திலேயே தேநீருடன் வந்தாள்.  அவனுக்கும், தனக்குமாகத்  தயாரித்துக்கொண்டு வந்திருந்தாள். தேநீரை அருந்தியபடியே உரையாடலும் தொடர்ந்தது.

"நீங்கள் இங்கு  ஸ்டுடெண்டாக வந்தனீங்களா?"

"ஆமாம். மூன்று வருடக் காலேஜ் படிப்புக்காக வந்தேன். படிப்பு முடிந்து நிரந்தர் வசிப்பிட உரிமைக்கு விண்ணப்பித்து, இப்பொழுது வேலை பார்க்கிறேன்."

"ஏந்த ஃபீல்டிலை வேலை செய்கிறீர்கள்?"

"ஐடியிலைதான் வேலை பார்க்கிறேன்.  'வெப் ஹொஸ்டிங்' கம்பனியொன்றில் டெக்னிகல் சப்போர்ட், வெப் அட்மின் ஆக வேலை பார்க்கிறேன். ரிமோட் வேலைதான்."

அப்பொழுதுதான் அவன் அவளது மேசைக்கருகிலிருந்த் புக் ஷெல்ஃபைக் கவனித்தான்.  வானியற்பியல், கலை, இலக்கியம் பற்றிய ஆங்கில , தமிழ் நூல்கள் பல அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அவதானித்தபோது ஆச்சரிய உணர்வுகள் அவன் முகத்தில் படர்ந்தன.

மேலும் படிக்க ...

நியூசிலாந்து ஊடகத்திற்கு எழுத்தாளர் முருகபூபதி வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: நியூசிலாந்திலிருந்து எழுத்தாளர் சிற்சபேசன்

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
16 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேர்காணல்: "கருத்து முரண்பாடுகள், ஒருவரின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடலாகாது நியூசிலாந்து 'நியூசிலாந்து தமிழ் மையம்' ஊடகத்திற்கு   எழுத்தாளர்  முருகபூபதி வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்:    நியூசிலாந்திலிருந்து  எழுத்தாளர் சிற்சபேசன்

https://youtu.be/QmZYXkR17e8?si=b0UR1Ua6QE38ZQ33

பேர்த் மாநகரில் நூல் வெளியீடு! - ஐங்கரன் விக்னேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்னேஸ்வரா -
நிகழ்வுகள்
16 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* படத்தை இரு தடவைகள் அழுத்தித் தெளிவாகப் பார்க்கவும்.

மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் (Perth) மாநகரில் கலாசூரி இ.சிவகுருநாதனின் ஊடக பணியை கௌரவிக்கும் முகமாக ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூல் வெளியிடப்படவுள்ளது.

தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ. சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி சனிக்கிழமை மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் மாநகரில்
நடைபெறவுள்ளது.

தினகரன் பத்திரிகையில் நீண்ட காலம் பிரதம ஆசிரியராக பணியாற்றிய, கலாசூரி இ.சிவகுருநாதன் மிக இலகுவான மொழியில் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் கருத்துக்களை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. அவரின் நினைவாக இந்நூல் வெளியீடு, ஹில்வியூ இன்டர்கல்ச்சுரல் கம்யூனிட்டி சென்டர் மண்டபத்தில், 01/06/2024 மாலை 3.30 முதல் 5.30 வரை நடைபெறும். 1 ஹில் வியூ பிளேஸ், பென்ட்லி, மேற்கு அவுஸ்திரேலியா. (Hillview Intercultural Community Centre, 1 Hill View Place, Bentley, Western Australia) எனும் முகவரியில் நடைபெறும்.

மேலும் படிக்க ...

நூல் மதிப்பீடு: முருகபூபதியின் 'இலங்கையில் பாரதி' - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நூல் அறிமுகம்
16 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எமது அண்டை நாடான பாரத தேசத்தில் பிறந்த மூவர் நமது இலங்கையில் தங்களது சிந்தனைகள் , செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள். அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர். அவர் இலங்கைக்கு வந்தாரோ, இல்லையோ, அவரது உபதேசங்கள் இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன், அவரது அரசியல் கருத்து போராட்ட வழி முறைகள் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியது.

உண்ணாவிரதம், அகிம்சை வழி, கடையடைப்பு என இங்கும் தமிழர், சிங்களவர் என இரு இனத்தவரும் அத்தகைய போராட்ட வடிவங்களை முன்னெடுத்தார்கள். ஆனால், இலங்கைக்கு வராதபோதிலும் பட்டி தொட்டி எங்கும் தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படுபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

மற்றைய இருவரிலும் பார்க்க, இவர் ஒரு விடயத்தால் முக்கியத்துவமாகிறார்.

கௌதம புத்தரை இலங்கை, கடந்த 75 வருடங்களாகத் தேர்தல் அரசியல் சரக்காக மாற்றியதுடன், இனக்கலவரம் , போர் என மூலப்பொருளாகப் பாவித்து பெரும்பான்மையான சிங்கள அரசியல்வாதிகள், அவரது கீர்த்தியை அபகீர்த்தியுடைய வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

அதேபோன்று தமிழ் அரசியல்வாதிகள் காந்தியின் கொள்கைகளை தங்களது சுயநலவாத அரசியலுக்குப் பாவித்தார்கள். போதாக்குறைக்கு ஆயுதத்தில் நம்பிக்கை வைத்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்சென்னையில் உண்ணாவிரதமுமிருந்தார். அவரது தளபதியான திலீபன் இந்திய அமைதிப்படைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இவற்றை மன்னிக்க முடியும். ஆனால், வன்னியில் அவர்களின் சித்திரவதை முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவருக்கு காந்தி என்ற பெயரை வைத்திருந்தார்கள்.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: அருந்ததி ராயின் ‘பெருமகிழ்வின் பேரவை’ நாவல் குறித்து… - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
15 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1997இல் வெளிவந்த அருந்ததி ராயின்  The God of Small Things நாவலுக்கு இருபது வருஷங்களுக்குப் பின்னால் அவரது இரண்டாவது நாவலான The Ministry of Utmost Happiness 2017இல் வெளிவந்தது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு ‘பெருமகிழ்வின் பேரவை’ என்ற மகுடத்துடன் காலச்சுவடு பதிப்பாக ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் பெப். 2021இல் பிரசுரமானது. இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே இதை வாசித்திருந்தபோதும், ஏதோ சில தெளிவுகளுக்காக திரும்ப ‘சின்ன விஷயங்களின் கடவு’ளை வாசித்து, மறுபடி ‘பெருமகிழ்வின் பேரவை’க்குள் புகுந்து, மீண்ட பின்னாலும், நாவலின் ஆதாரக் கருத்துநிலை அவ்வளவு அச்சொட்டாய் பிடிபட்டிருக்கவில்லை. அதற்கான சிந்திப்பில் ஒரு நீண்ட காத்திருப்பு தொடர, ஒருபோது மங்கலாகவெனினும் கிடைத்த ஒரு வெளிப்பைத் தொடர்ந்து நூல்பற்றிய மதிப்பீட்டை இங்கு பதிவாக்க விழைகிறேன்.

தமிழ் மூல நாவல்களுக்குப்போல் தமிழில் மொழிபெயர்ப்பாகி வரும் நாவல்களுக்கு வரவேற்பிருந்தாலும் திறனாய்வு ரீதியிலானவோ ரசனை ரீதியிலானவோ விமர்சனங்களோ மதிப்பீடுகளோ குறைவாக வருவதையே என் அவதானித்திருக்கிறேன். தமிழவனின் தமிழ் மூல நாவலான ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’போல, மார்க்வெய்ஸின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவலான ‘தனிமையின் நூற்றாண்டு’ விமர்சன ரீதியாக எதிர்கொள்ளப்படவில்லை எனவே கருதத் தோன்றுகிறது. இது காரணமாகவே வழுக்குப் பாறையில் நடக்கும் வெகு அவதானம் இம் மதிப்பீட்டை முன்வைக்கையில் என்னிடத்தில் இருந்தது.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (4) - வ.ந.கிரிதரன்-

விவரங்கள்
- வ.ந.கிரிதரன்-
நாவல்
15 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் நான்கு: பக்கத்து வீட்டுப் பெண்!

மறுநாள் நேரத்துடன் எழுந்து விட்டான் மாதவன். அன்று அவன் நாளை எவ்விதம் கழிக்க வேண்டுமென்று சில திட்டங்கள் வைத்திருந்தான். நண்பகல் வரையில் 'ஒன் லை'னில் வேலை தேடுவது. கல்வித் தகமைகளை இணையத்தில் அதிகரிக்க உதவும் பயிற்சிக் காணொளிகளை, கட்டுரைகளை ஆராய்வது எனத் திட்டமிட்டிருந்தான். தகவற் தொழில் நுட்பத்தில் அவனுக்கு இலவசமாகக் கிடைக்கும், அதே சமயம் பலரால் , நிறுவனங்களால் பாவிக்கப்படும் லினக்ஸ் 'ஒபரேட்டிங் சிஸ்டம்' பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது எனத் தீர்மானித்திருந்தான். தகவல் தொழில் நுட்பத்துறையைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் நுட்பம் பற்றிய அறிவும், அனுபவமும் இருந்தால் அவை போதுமானவை அத்துறையில் வேலையொன்றைப் பெறுவதற்கு என்பது அவனது எண்ணம்.

அதே சமயம் அவனுக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பிக்க வேண்டுமென்பது நீண்ட  காலத்து எண்ணம். அது பற்றியும் இன்று முடிவொன்றினை எடுத்து, அதற்கான அத்திவாரத்தை இன்று உருவாக்க வேண்டுமென்றும் ஏற்கனவே தீர்மானித்திருந்தான். தன் பல்வகைப்பட்ட சிந்தனைகளையும் இணையத்தில் பதிவு செய்வதன் மூலம், வாசிப்பவற்றைப்பற்றிய மற்றும் பல்வகைப்பட்ட சொந்த அனுபவங்களையெல்லாம் அவ்வலைப்பதிவில் பதிவு செய்வதன் மூலம் மனப்பாரம் குறையும், சிந்தனைத்தெளிவு பிறக்கும், வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்தாற்றலும் அதிகரிக்கும். ஓர் எழுத்தாளனாவது அவனது முக்கிய எண்ணமாக இருக்கவில்லை. ஆனால் எழுவதுவதில் ஆர்வம் மிக்கவனாக அவனிருந்தான். அவ்வார்வத்துக்கு வடிகாலாக அவனது எழுத்துகள் இருக்குமென்றும் எண்ணிக்கொண்டான்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர்களின் ஓவியங்கள் கண்காட்சி - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
13 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கொங்கு பகுதி இலக்கிய இதழ்களின் ஆசிரியர்களை ஓவியங்களாக கொண்ட ஓவிய கண்காட்சி திருப்பூர் காந்திநகர் ஏவிபி லேஅவுட் குடியிருப்போர் சங்க கட்டிடத்தில் ஞாயிறு அன்று நடைபெற்றது.

 இந்த ஓவிய கண்காட்சியில் சுமார் 50 ஓவியங்கள் இடம் பெற்றன. இவற்றில் 30 ஓவியங்கள் கொங்கு பகுதி சார்ந்த எழுத்தாளர்களின் ஓவியங்கள்.. இவர்களில் சாகித்தய  அகடமி பரிசு பெற்ற சிற்பி பாலசுப்ரமணியம் ,கவிஞர் புவியரசு மற்றும் சுப்ரபாரதிமணியன்,  கோவை ஞானி, பூ அ. ரவீந்திரன் உட்பட பல எழுத்தாளர்களின் ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன இந்த வண்ண ஓவியங்களை கோவை சார்ந்த தூரிகை சின்னராஜ் அவர்கள் வரைந்திருந்தார்

 இதைத் தவிர அமீரக எழுத்தாளர்கள் என்று முப்பது  எழுத்தாளர்களின் ஓவியங்கள் கண்காட்சி இடம் பெற்றன .சார்ஜா, அபுதாபி, துபாயில் வாழும் முப்பது இளம் மலையாள எழுத்தாளர்களின் ஓவியங்களை தூரிகை  சின்னராஜ் ஓவியங்களாகத் தீட்டி இருந்தார். அவையெல்லாம் சென்ற ஆண்டின் சார்ஜா புத்தக கண்காட்சியின் போது அங்கே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. தூரிகை சின்னராஜ் அவர்களுக்கு புக்கிஷ் என்ற விருதை இதன் காரணமாக அங்கே அவருக்குத் தந்தார்கள் அந்த ஓவியங்களும் இந்த ஓவிய கண்காட்சி இடம்பெற்றிருந்தன.

மேலும் படிக்க ...

கனடாவில் சூரியனைத் தேடிய பயணம் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
12 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடா நாட்டிலே பனிக்காலத்தில் சூரியனைக் காண்பது என்பது அரிதாகவே இருக்கும். வெளியே வெய்யில் எறிப்பது போல இருந்தாலும், வெளியே சென்றால் சில சமயம் கடும் குளிராகவும் இருக்கும். காலநிலை காரணமாக இம்முறை கனடாவில் பனி கொட்டுவது மிகக் குறைவாகவே இருந்தது. வழமைபோல ஆய்வாளர்கள் பல காரணங்கள் சொன்னாலும், இந்த மாற்றத்திற்கு எல்நினோ (El Nino) என்ற பசுபிக்சமுத்திர நீரோட்டமும் இம்முறை ஒரு காரணமாக இருந்தது. சில வருடங்களுக்கு ஒரு முறை டிசெம்பர் மாதத்தில் எல்நினோவின் இதுபோன்ற பாதிப்பை எங்களால் இங்கே அவதானிக்க முடிகிறது.

ஏப்ரல் 8 ஆம் திகதி சூரிய கிரகணம் நடக்கப் போவதாகவும், வட அமெரிக்காவில் அதை முழுமையாகப் பார்க்க முடியும் என்றும் ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டிருந்தன. சூரிய கிரகணம் என்பது எப்போதாவது நடக்கும் ஒரு சிறப்பு வானியல் நிகழ்வாக இருக்கின்றது. சில சமயங்களில் சந்திரன், பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது இத்தகைய நிலை ஏற்படுகின்றது. முக்கிமாக சூரியன் மற்றும் பூமிக்கு இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், இவற்றுக்கு நடுவே ஒரே நேர்க் கோட்டில் பூமி வரும்போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.

அனேகமான கனடியர்கள் போலவே நாங்களும் இதற்கான ஆயத்தங்களைச் செய்திருந்தோம். சூரியனைப் பார்ப்பதற்கான விசேட கண்ணாடி, நிகழ்வைப் படம் பிடிப்பதற்கான கமெரா எல்லாம் தயாராக வைத்திருந்தோம். நாயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதிதான் இதற்குச் சிறந்த இடம் என்று ஊடகங்கள் தெரிவித்திருந்தன. பிள்ளைகளும் எங்களுடன் வந்ததால், நாங்களும் அங்குதான் போவதாக இருந்தோம். அதே நேரம் கூட்டத்தைச் சமாளிக்க அனேகமான வீதிகளின் போக்குவரத்தைத் தற்காலிகமாக மூடப்போவதாக நயாகரா பொலீஸார் அறிவித்திருந்தார்கள்.

மேலும் படிக்க ...

சித்திரைத் திருநாள் சிறப்பாக மலர்கிறதே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
12 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தைமகள் வந்தாள் தழுவியே நின்றாள்.
கைநிறைய அள்ளித் தந்துமே நின்றாள்.
தெய்வீகம் நிறைந்தது தெளிவுமே தந்தாள்.
தித்திப்பாய் பொங்கலை ஆக்கியே நின்றாள்.

என்பின்னே சித்திரை வருகிறாள் என்றாள்.
ஏற்றபல உங்களுக்கு அளித்திடுவாள் என்றாள்.
தைமகளின் வார்த்தை தடவியே கொடுத்தது.
தளர்வகன்று சித்திரயை  வரவேற்க நின்றோம்.

மேலும் படிக்க ...

விக்கிமூலத்தில் (Wikisource) ஐங்குறுநூற்றுத் தரவு மேம்பாடு! - முனைவர் ம. மைதிலி & முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி

விவரங்கள்
- முனைவர் ம. மைதிலி & முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
ஆய்வு
12 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முனைவர் ம. மைதிலி , தமிழ் உதவிப்பேராசிரியர் , விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042  & முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி , தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042 -

ஆய்வுச்சுருக்கம்

தமிழ் விக்கிமூலம் என்பது விக்கிமீடியா அறக்கட்டளைத் திட்டங்களுள் ஓர் இணைய நூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாக விளங்கி வருகின்றது. இந்தத் திட்டத்தில் பங்களிக்க, யார் வேண்டும் என்றாலும் தங்கள் விருப்பப்படி நூல்களைப் பதிவேற்றலாம்; திருத்தலாம்; மேம்படுத்தலாம். அதன் மேம்பாடு குறித்தும் தாராளமாகக் கருத்துத் தெரிவிக்கலாம். அத்தகு இத்திட்டத்தை 72 மொழிகள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இந்த விக்கிமூலத்திட்டத்தில் தமிழ் மொழிக்குரிய நூல்கள் மொத்தம் 2468 மேல் உள்ளன. இந்த நூல்களின் பக்கங்கள் மொத்தம் 3.5 இலக்கத்திற்கும் மேல் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், வரலாறு, அறிவியல், கலை, இலக்கணம், பயணம், வாழ்க்கை வரலாறு போன்ற பல்வேறு வகையான நூல்கள் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் என்றழைக்கப்பெறும் தமிழின் தொன்மை இலக்கியங்களின் தரவாக்கம் விரல்விட்டு எண்ணி விடும் அளவே உள்ளன. அவற்றுள் ஐங்குறுநூறு தொடர்பான நூல்கள் அல்லது மூலநூல் தரவுகள் வெறும் 5 மட்டுமே உள்ளன. எது அந்தத் தரவுகளின் மூலம் என்று அறியமுடியவில்லை. இருப்பினும் ஐங்குறுநூறு சார்ந்த நூல்கள் இவ்வளவுதான் உள்ளனவா என்ற கேள்வியும் எழும். அதற்கு என்ன பதில் தரப்போகின்றோம். அதன் மேம்பாடு குறித்து எண்ண வேண்டாமா? இந்த ஆய்வின் மூலம் விக்கிமூலத்தில் இடம்பெறக்கூடிய தன்மையுடைய கட்டற்ற உரிம நூல்களையாவது அடையாளம் கண்டு இணைக்கவேண்டியது காலத்தின் தேவையல்லவா? அதை இந்த ஆய்வின் மூலம் எடுத்துரைக்கப்பெறும். அதற்கு அச்சுநிலைகளிலும் இன்னும் பிற நிலைகளிலும் உள்ள தரவுகளை ஓரளவிற்காகவாவது திரட்டிக் காட்டும் பொழுது அல்லது அடையாளப்படுத்திக் காட்டும் பொழுது இவ்வளவு விடுபாடு உள்ளமையை உணர வைக்கமுடியும். இதுபோன்ற ஆய்வுளால்தான் செய்யறிவிற்குத் தேவையான மொழிசார் தரவுகளைத் திரட்டித் தர இயலும். அந்தத் திரட்டல் செய்யறிவுத் தொழில்நுட்பத்திற்கோ இயற்கைமொழி ஆய்விற்கோ பயன்படும் தரவு உருவாக்கமாக அமையும். ஆகவே, விக்கிமூலத்தில் விடுபட்டுள்ள ஐங்குறுநூறு சார்ந்த நூல்களின் பட்டியலைத் தமிழ் விக்கிமூலத்தில் இணைப்பது குறித்தும் அதன் தேவை குறித்தும் இவ்வாய்வுரை முன்வைக்கின்றது.

மேலும் படிக்க ...

தேவகாந்தனின் கனவுச்சிறை : அறிமுக உரை! - அருண்மொழிவர்மன் -

விவரங்கள்
அருண்மொழிவர்மன் -
நூல் அறிமுகம்
11 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்துப் படைப்பாளிகளில் மிக நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அரிது.  மிக அருமையான படைப்பிலக்கியங்களை ஆக்கிய பலர் இள வயதிலேயே மரணித்துள்ளார்கள்.  இன்னும் பலர் மிகச் சில படைப்புகளுடன் தம் எழுத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டார்கள்.  இந்த நிலையில், நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் எழுதிக்கொண்டிருக்கின்ற காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் தேவகாந்தன்.

“எங்கள் குடும்பம் அடிஅடியாக தமிழ்ப் புலவர் பரம்பரையில் வந்தது என்று என் தாயார் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று மின்னம்பலத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.  தனது எழுத்துலகப் பிரவேசம் குறித்த கேள்விக்கு “எனது தொடக்கம் புதுமைப்பித்தன் எழுத்துக்களோடேயே ஆரம்பித்தது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். கலித்தொகைக் காட்சிகள் போன்ற இலக்கியக் கட்டுரைகள் எழுதிவந்த என்னை இத்தகு நவீன இலக்கிய வாசிப்பும், பத்திரிகைத் துறைப் பிரவேசமுமே எழுத்தாளன் ஆக்கிற்று என்றால் தப்பில்லை” என்று பதிலளிக்கின்றார் தேவகாந்தன்.  தமிழில் எழுதும் ஒருவருக்கு பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் என்பது பெரும் வரம்.  அது எழுத்தினை செழுமைப்படுத்துவதுடன் ஆழமானதாகவும் ஆக்கும்.  தேவகாந்தன் சங்க இலக்கியம் பயிலும் நோக்குடன் பாலபண்டிதருக்குப் படித்திருக்கின்றார்.  பின்னர் அப்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தில் இணைந்து சமஸ்கிருதமும் கற்றிருக்கின்றார்.  சென்ற வருடம் அளவில் மகாபாரதம் தொடர்பாக முகநூலில் நடந்த உரையாடல் ஒன்றில் ரஞ்சகுமார் அவர்கள் தேவகாந்தன் குறித்துக் அவரது சமஸ்கிருத பயிற்சியையும் பற்றிக் குறிப்பிட்டிருந்ததுடன், மகாபாரதத்தை விரிவாகப் பேசக்கூடியவர் தேவகாந்தன் என்றும் குறிப்பிட்டிருந்தார். மறுநாள் தேவகாந்தனிடமே அதுபற்றி நேரடியாகவே கேட்டேன், அப்போது அவர் கூறிய தகவல்களூடாக தேவகாந்தனை இன்னும் ஒரு படி நெருக்கமாக அறியமுடிந்தது.

மேலும் படிக்க ...

தேவிபாரதியின் நிலமொழியில் இயன்ற ‘நீர்வழிப்படூஉம்’ நாவல் - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
10 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் தேவிபாரதியின் 'நீர்வழிப்படூஉம்' நாவல் 2023ர்கான  இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதெமியின் விருதினைப்பெற்ற நாவல்.  அது பற்றிய எழுத்தாளர் தேவகாந்தனின் கட்டுரை.-

‘தனிமையின் நிழல்’, ‘நட்ராஜ் மகராஜ்’ ஆகிய நாவல்களுக்குப் பிறகு மூன்றாவதாக வெளிவந்திருக்கிற தேவிபாரதியின்   அளபெடைத் தலைப்புக்கொண்ட நாவல் ‘நீர்வழிப்படூஉம்’.  நாவலின் மதிப்பீட்டைச் செய்வதற்கு முன்பாக ‘நீர்வழிப்படூஉம்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்துகொள்வது அதன் புரிதலை இலகுவாக்கும்படிக்கான ஒரு ஊடுவழியினைத் திறந்துவிடுமென நம்பலாம். ஏனெனில் முதன்மையாய் ஒரு கதையைச் சொல்கிற நாவலாகவன்றி, உறவு மனங்களின் இறுகும் கனிவுகொள்ளும் தன்மையின் மூலத்தைப் பேசவந்த நாவலாக இது இருப்பதில், தலைப்பின் பொருளை ஒரு மர்மம்போல் இறுதிவரை காப்பாற்றிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமில்லை.  கார்ட்டுகளெல்லாம் விரித்துப்போட்டு விளையாடும் ஒரு விளையாட்டாக இதை மாற்றிக்கொள்ளலாம்.

பள்ளம் கண்ட இடமெல்லாம் பாய்ந்தோடும் இயல்பு நீருக்குண்டு. நீர்வழிப்படூஉம் என்பது, நீரின் தன்மையை நிகர்த்திருத்தல் என்பதுமாகும். மனிதர்கள் நீர்வழிப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். மனித இயல்பு அதுதான். இந் நாவலில் வரும் மனிதர்களும் தத்தம் பூர்வீக ஊர்களிலிருந்து வாழ்வின் நிமித்தம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். மனித சமுதாயம் விரிவுகொள்ளக் கொள்ள வாழ்வின் இறுகிவரும் சூழ்நிலைமையிலிருந்து தப்புவதற்காக அது இயல்பாக நடக்கவே செய்யும். அதுபோல் தினசரிகளின் நெருக்குதல்களால் வாழ்வு கடினமாவதும், பின் தெளிந்து இளகுவதுமாய் தண்ணென்ற நீரின் தன்மையை மனிதர் அடைந்துகொள்கிறார்கள்.

மேலும் படிக்க ...

நான் சந்தித்த ஆளுமைகள் : பேராசிரியர் ஆஷ்லி ஹல்பே (Ashley Halpe) & பிரிஜட் ஹல்பே (Bridget Halpe) (பகுதி இரண்டு) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
10 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

7

அவர்களது ஒடுங்கிய சாப்பாட்டு மேசையில் மூவரும் நெருக்கமாய் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம்.

‘நுளம்பு தைலத்தை’ நீட்டி தேய்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு சிறிய குப்பியை என்னிடம் நீட்டினார்.

“கண்களைத் திறக்க முடியவில்லை...’’ என்று கூறியப்படி கண்களை இரு கரங்களாலும் அழுந்த தேய்த்து கொண்டே. அவள் வந்தாள.; “பித்தோவன், வேரியேசன் ஒஃப் பிரமத்தியூஸ் (Variation
Of Prometheus) என்று ஒரு ராகத்தை இசைத்துள்ளாரே...” கதை, அங்குமிங்கும் சுற்றி இறுதியில் அனிவத்த மாதா கோவிலில் வந்து நின்றது.

“அதை நீங்கள் பார்க்கத்தான் வேண்டும். எனது வீட்டு உதவியாள் என்னிடமிருந்து எதை எதையோ எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டாள். நீங்கள் இருவரும்தான் என் பெற்றோர்கள் என்று கூறுவாள். அப்படித்தான் நானும் பார்த்து வந்தேன். அவள் எடுத்துக்கொண்டு மறைந்ததும், யாருமில்லை. மாதாவிடம் சென்றுத்தான் முறையிட்டேன். மாதாவே, எனது நிலைமையை பார்த்தாயா என்றேன். இரண்டு நாட்களில் எங்கேயோ இருந்து வந்து சேர்ந்துவிட்டாள்”.

“எனது மகனுக்குத்தான் என்னை காட்ட முடியாது... நான் இல்லாவிடின் இவன்...”

“காலையிலிருந்து, ஒரே வேலை... பிறகு இரண்டு மணிக்கு பாடசாலை கூட்டம்... ஆறுமணிக்குத்தான் வீடு திரும்பினேன்... பிறகு அதிலிருந்து இப்போது ஏழு மணிவரை - கற்பித்தல். ம்... நான் செய்த பாவங்களுக்கெல்லாம் தான் இப்போது அனுபவிக்கின்றேன்...”.

“கண்ணை தேய்காதீர்கள்...”

“ம்... ம்... இப்போது நுளம்பு சரியாகிவிட்டது”

“நீங்கள் சாப்பிடுங்கள்... அவர் சாப்பிட மாட்டார்... அவரது பற்கள் அவருக்கு பிரச்சனை... இனி இந்த பற்கள் சரிவராது... இதை வீசிவிட்டு புதிதாக இம்ப்ளான்ட் செய்ய வேண்டியுள்ளது... கண்டியிலேயே பிரசித்தமான பல் நிபுணர் கூறியுள்ளார், எனக்கு இம்ப்ளான்ட் செய்யலாம், கட்டணமின்றி என. எனக்கு தேவையில்லை... நான் கட்டியுள்ள பற்களே, நன்றாக இருக்கின்றன... அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை... ஆனால் கூறிவிட்டேன்... எனக்கு பதிலாக எனது கணவருக்கு இதை செய்துவிடுங்கள் என்று... இதுதான் நான் இந்த குழந்தைக்கு இம்முறை அளிக்கும் பிறந்த நாள் பரிசு. இரண்டு இலட்சம் செலவாகுமாம்... ஆனால், அந்த டாக்டரின் பிள்ளைகளுக்கு நான் படிப்பிப்பதால், அவர் கட்டணமில்லை என்கின்றார்”.

“இனி படுப்பதற்கும் முன் அனைத்தையும் கழுவி, இந்த குழந்தையும் தூங்கப்போட்டு... பிறகு வேதம் ஓதி வணங்கி – அப்பாப்பா, எத்தனையை செய்வது...”.

மேலும் படிக்க ...

ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், எதிர்வரும் வெள்ளி 12 April இரவு 8:45 மணிதொடக்கம் சூடான இலக்கியக் களம்.

விவரங்கள்
- தகவல்: ஆ.சி. கந்தராஜா -
நிகழ்வுகள்
10 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* படங்கள் ஒரு தடவை அழுத்துவதன் மூலம் தெளிவாகப் பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், எதிர்வரும் வெள்ளி 12 April இரவு 8:45 மணிதொடக்கம் சூடான இலக்கியக் களம். சிவ வரதன் நிகழ்ச்சியை தொகுத்தளிப்பார். களமாடுபவர்கள் ஆசி கந்தராஜா, பொன்ராஜ் தங்கமணி, ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி. பிற்பகுதி ஆட்டத்தில் நேயர்களும் கலந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க ...

பேரின்பப் பெருநாள் வாழ்த்து! - செ. சுதர்சன் -

விவரங்கள்
- செ. சுதர்சன் -
அரசியல்
10 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


01)
தலைப்பிறை கண்டார் அன்பர்;
தரணியே அன்பால் பொங்கும்
அலையருள் வீசல் கண்டேன்!
ஆதவன் 'அல்லாஹ்' என்றே
கலைக்குரல் எழுப்பி வானில்
கைகளைக் கூப்பல் கண்டேன்!
விலைமதிப் பில்லா நல்ல
வீரிய விரதம் வாழ்க!

02)
பள்ளியின் வாங்கு வானில்
பாடிய செய்தி கேட்டேன்!
அள்ளியே இன்ப வாழ்த்தை
ஆருயிர்த் தோழருக்கு,
கள்ளதில் வண்டு பாடும்
கவியதில் பந்தி வைத்தேன்!
தள்ளியே தாழ்வு போகத்
தளிர்த்தன உலகு எல்லாம்!

மேலும் படிக்க ...

நான் சந்தித்த ஆளுமைகள் : பேராசிரியர் ஆஷ்லி ஹல்பே (Ashley Halpe) & பிரிஜட் ஹல்பே (Bridget Halpe) (பகுதி ஒன்று) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
09 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆஷ்லி ஹல்பே (Ashley Halpe)  & பிரிஜட் ஹல்பே (Bridget Halpe)

மும்மொழிகளிலும் அந்த பெயர் பலகையை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அவர்களின் வீடு தனித்து ஒதுக்குபுறமாய், ஒரு மலைச்சரிவில் ரம்மியமாய் கிடந்தது.  வீட்டைவிட மலைச்சரிவில் அமைந்து கிடந்த அவர்களினது வீட்டுத்தோட்டம் அற்புதமாய் இருந்தது எனலாம். கிட்டத்தட்ட ஒருகால் ஏக்கரில், புல் வளர்க்கப்பட்டு, அதன் இடையில் செறிவான முறையில் பல்வேறு விதமான பூ மரங்களும், பழ மரங்களும் நடப்பட்டு அற்புதமான ஒரு சிறுசோலையாக தோட்டம் காட்சித்தந்தது. தங்களின் ஓய்வுகாலம் நெருங்கும் தருவாயில், வெறும் மலைச்சரிவாய் இருந்திருக்ககூடிய இவ்வரட்டு நிலத்தை இவர்கள் வாங்கியிருக்ககூடும். பின்னர், தங்களது கலை உணர்வுக்கேற்ப, தங்களின் கனவு இல்லத்தை இவர்கள் நிர்மாணிக்க திட்டங்கள் தீட்டியிருக்கக் கூடும். கனவானது, வீட்டினுள்ளும் நன்றாகவே பிரகாசித்துக் கொண்டிருந்தது எனலாம்.

பிரதான பாதையிலிருந்து விலகி அவர்களின் வீட்டுக்குச் செல்ல ஒரு சிறுபாதை. அதன் இரு மருங்கிலும் பூச்செடிகள் நடப்பட்டு, செல்லும் போதே உங்கள் கண்களை மலரால் உரசும்படி செய்திருந்தார்கள்.
உள்ளே நுழைந்த உடன் முதலில் வாயிலில் தோன்றுவது அவளது பியோனோதான். ஒடுங்கி சென்ற அவ்வறைக்கு அடுத்ததாக விரிந்து கிடந்தது அவர்களது உட்காரும் அறை. அங்கே இரண்டு பியோனோக்கள் காணப்பட்டன. இடப்புறமாய் ஒரு பியோனோ. பின்னர் அறையின் தூரத்து மூலையில் மற்றுமொரு கிராண்ட் பியோனோ.

இரண்டடி உயரத்தில் இருந்த அடுத்தகட்ட அறைக்கு செல்ல மூன்று படிக்கட்டுகள் இருந்தன. அப்படிகட்டுகள் சமையலறைக்கு, சாப்பாட்டு அறைக்கு, வாசிப்பறைக்கு, படுக்கை அறைக்கு, மாடிக்கு இட்டுசென்றன.

மேலும் படிக்க ...

பாரிஸ் மாநகரில் நடைபெற்ற 51 -வது இலக்கியச் சந்திப்பு..! - அசலை -

விவரங்கள்
- அசலை -
நிகழ்வுகள்
08 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரிஸ் மாநகரில் 51 -வது இலக்கியச் சந்திப்பு கடந்த சனி - ஞாயிறு (30 - 31 மார்ச் 2024) தினங்களில் சிறப்பாக நடைப்பெற்றது. புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள படைப்பாளிகள்,  இலக்கிய இரசிகர்கள்,  ஆர்வலர்களால் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகள் ஐரோப்பாவில் ஜேர்மனி,  பிரான்ஸ்,  லண்டன்,  டென்மார்க்,  நோர்வேஇ சுவிஸ் மற்றும் கனடாஇ இலங்கை எனப் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. கொரோனாக் காலத்தில் மட்டும் இலக்கியச் சந்திப்பு தடைப்பட்டிருந்தது. கடந்த வருடம் 50 -வது இலக்கியச் சந்திப்பு அனலைதீவில் நடைபெற்றது.

இலக்கியச் சந்திப்புக்கென நிரந்தர நிர்வாகக் குழு இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் இதனை நடத்துவதற்கெனப் பொறுப்பேற்றுக்கொள்பவர்கள் தங்களுக்குள் ஒரு  குழுவை அமைத்து இலக்கியச் சந்திப்புக்கான ஒழுங்குகளை மேற்கொள்வது வழமை. அந்த வகையில் 51 -வது இலக்கியச் சந்திப்பு பாரிஸ் மாநகரில் நடைபெறச் சிறப்பான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் படிக்க ...

லண்டனில் ‘சாஸ்வதம்’ பரதநாட்டிய நிகழ்வு! - நவஜோதி ஜோகரட்னம் , லண்டன். -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம் , லண்டன். -
நிகழ்வுகள்
08 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

‘சாஸ்வதம்’ உலகளாவிய பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி 2024இல் லண்டன் ‘பாரதிய வித்யா பவனில்’ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சென்னை ‘அபய்’ பரதநாட்டிய கலைஞர்கள் சங்கமமும் லண்டன், சலங்கை நர்த்தனாலயா’ நுண்கலைக் கூடமும் இணைந்து செயற்பட்ட இந்நிகழ்வை, நிறுவனர் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும் துணை நிறுவனர் பவித்திரா சிவயோகமும் நேர்த்தியாக முன்னெடுத்தமை பாராட்டுக்குரிய விடயம். இதன் அங்கத்தவர்களாக சஸ்கியா கிஷான் மற்றும் றூபேஷ் கேசியும் செயற்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலாநிதி கீதா உபாத்தியாயரும் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீமதிகள் அம்பிகா தாமோதரம், பாமினி சித்தரஞ்சன், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். பிரதம விருந்தினர் அவர்களுக்கு அந்நிகழ்வில் ‘சாஸ்வத கலா போஷக’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடவேண்டியதொன்றாகும்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்: நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி)

விவரங்கள்
- தகவல்: அகணி சுரேஷ் -
நிகழ்வுகள்
07 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் இலக்கியச் சந்திப்பு - “கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் ஆளுமையம்சங்கள் - பல்கோணப்பார்வைகள் "

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் -
நிகழ்வுகள்
05 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்ப்பதற்கு அறிவித்தல் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வாசிப்பு அனுபவப்பகிர்வு - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
05 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 851 1978 3516 | Passcode: 881566

மேலும் படிக்க ...

எழுத்தாளர் குகன் சங்கரப்பிள்ளையின் 'தாய்வீடு'க் கட்டுரை 'ஜாதி' - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் குகன் சங்கரப்பிள்ளை  'தாய்வீடு' பத்திரிகை - சஞ்சிகையில் அறிவியற் கட்டுரைகள்  எழுதி வருபவர். மார்ச் மாதத் தாய்வீடு இதழில் இவரது 'ஜாதி' என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனும் தனது முகநூற் பக்கத்தில் குறிப்பிட்டுக் கருத்துகள் கூறியிருந்தார். குகன் சங்கரப்பிள்ளையின் 'ஜாதி' என்னும் இக்கட்டுரை முக்கியமான கட்டுரை.  தலைப்பு சிறிது ஒட்டாமலிருக்கின்றது. நாம் நடைமுறையில் , பேச்சு வழக்கில் சாதி என்றுதான் குறிப்பிடுவது வழக்கம்.  சாதி என்றே கட்டுரையின் தலைப்பினை வைத்திருக்கலாம்.

             - குகன் சங்கரப்பிள்ளை -

நண்பர் குகன் சங்கரப்பிள்ளையினை எண்பதுகளிலிருந்து நானறிவேன்.  எண்பதுகளின் ஆரம்பத்தில் மொன்ரியாலில் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்த இளைஞர்களில் ஒருவராக, சமூக அரசியற் செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவரிருந்தார். அப்போதிருந்து அறிவேன்.  அக்கையெழுத்துச் சஞ்சிகையில்தான் எனது 'மண்ணின் குரல்' நாவல் தொடராக முதலில் வெளியானது. அதில் வந்த மண்ணின் குரல் நாவல், கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு பின்னர் நூலுருப்பெற்றது.

எப்பொழுது மெல்லிய புன்முறுவல் பூக்கும்  முகத்துக்குச் சொந்தக்காரர். ஒருபோதும் அவர் முகத்தில் கடும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாவங்களை நான் கண்டதேயில்லை.  இலத்திரனியற்துரையில் கல்வித்தகமை பெற்றவர். அத்துறையில் பணியாற்றி வருபவர்.

'ஜாதி' என்னும் தலைப்பிலான இக்கட்டுரை ஆய்வுக்கட்டுரை போன்றில்லாமல், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விபரிப்புகளை உள்ளடக்கிய கட்டுரையாக அமைந்திருப்பதால் , வாசிப்பவர்களை ஒரு கணம் அதிர வைக்கின்றது. சிந்திக்கவும் வைக்கின்றது. இவர் குறிப்பிட்டிருக்கும்    Caste: The Origins of Our Discontents  என்னு நூலை எழுதிய  Isabel Wilkerson முக்கியமான அமெரிக்க ஆபிரிக்க இனத்து ஊடகவியலாளர் , எழுத்தாளர் இவர். முதன் முதலில் புலியட்சர் பரிசினைப்பெற்ற அமெரிக்க - ஆபிரிக்கர் இவர். உலகத்து மானுடர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், கடவுளை நோக்கி வினவுதல் ஆகியவை இக்கட்டுரையின் ஏனைய சிறப்பம்சங்கள். கட்டுரையைக் கேட்பவர்களுக்குக் கொண்டு செல்வதில் ஆனந்தராணி பாலேந்திராவின் குரலும் சிறப்பாக உதவுகின்றது.

மேலும் படிக்க ...

இவளும் அவளும் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
05 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விமானம் தரையிறங்க ஆரம்பித்தது. மனமெங்கும் மகிழ்ச்சி வியாபிக்க, ஓங்கி உயர்ந்து நின்றிருந்த கட்டங்களையும் ஊர்ந்துகொண்டிருந்த வாகனங்களையும் யன்னல் கண்ணாடிக்குள்ளால் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள், பாமதி.

இருபது வருடங்களுக்கு முன், முதன்முதலாக ரொறன்ரோவுக்கு வந்திருந்த அந்தப் பொழுது மீண்டும் அவளின் நினைவுக்கு வந்தது. அவளின் கண்கள் சட்டென ஈரமாகின. மனம் சற்றுக் கனத்தது.

ஸ்பொன்சரில் அம்மாவைக் கனடாவுக்குத் தேவகி கூப்பிட்டிருந்தபோது பாமதிக்கும் அவளுக்கும் பல கனவுகள் இருந்தன. தன்னந்தனியனாகத் தங்களை வளர்த்து ஆளாக்கிவிட்ட அம்மாவைக் கண்கலங்காமல் கவனிக்க வேண்டும், குளிர்காலத்தின் கஷ்டம்கூடத் தெரியாமல், ஆறு மாதம் சிட்னியிலும், ஆறுமாதம் ரொறன்ரோவிலுமாக மாறிமாறி அவவை வைத்திருந்து, விரும்பியதெல்லாம் செய்துகொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், விதி வேறொரு பாதையை வகுத்திருந்தது. மனமெல்லாம் சிலிர்க்க அம்மாவைச் சிட்னியில் வரவேற்பதற்குப் பதிலாக, அழுதழுது வீங்கிய கண்களுடன், வானம்கூட இருண்டுபோயிருந்த ஒரு நாளில், அம்மாவுக்கு விடைகொடுப்பதற்காக பாமதி ரொறன்ரோவுக்கு வந்திருந்தாள். ரொறன்ரோவில் அவள் தங்கியிருந்த அந்தப் பத்து நாட்களும் தேவகியும் அவளும் அம்மாவைப் பற்றியே மீளவும்மீளவும் கதைத்துக் கதைத்து மறுகினர்.

மேலும் படிக்க ...

உலக சிறுவர் புத்தக தினமும் , குழந்தை இலக்கியமும்! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்கினேஸ்வரா -
சிறுவர் இலக்கியம்
04 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனையோட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது. -

உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் பிறந்த நாளே உலக சிறுவர் நூல் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய வேகமான வாழ்க்கையின் நகர்வில் மனிதர்களிடமிருந்து மறைந்து வரும் பழக்கவழக்கங்களில் ஒன்று வாசிப்பு பழக்கம். சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பத்திரிகைகளையோ அல்லது நல்ல நூல்களையோ காசுகொடுத்து வாங்கி வீட்டில் படிப்பவர்களை விட நூலகங்களுக்கு சென்று படிப்பவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.

ஆனால் இன்று இணைய வளர்ச்சியின் காரணமாக அந்த நூலகங்களுக்கு செல்லும் பழக்கம் கூட மறைந்துவிட்டது. இப்போதெல்லாம் ஒவ்வொரு ஊரிலும் நூலகங்கள் இருக்கின்றதா என்பதே சந்தேகம்தான். வாசிப்புதான் ஒரு மனிதனை பூரணமாக்க கூடியது. முடிந்தளவு நல்ல நூல்களை வாசிப்பதும், நமது எதிர்கால குழந்தைகளுக்கும் அந்த வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவும் அவசியமாகும்.

சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. IPPY ஐ.பி.பி.ஒய்., (இளைஞர்களுக்கான உலக புத்தக அமைப்பு) இத்தினத்தை கடைபிடிக்கிறது. புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில் ஏப்ரல் 2 ஆம் திகதி உலக சிறுவர் புத்தக தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. விக்கிமூலத்தில் நற்றிணைத் தரவு மேம்பாடு (E-content development for Natrinai resource in ta.Wikisource) - முனைவர் வா. காருண்யா & முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி -
  2. ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்'. வினோபா பாவேயின் பூதான இயக்கத்தூண்டுதலால் வெளியான முதலாவது தமிழ் நாவல்! - வ.ந.கிரிதரன் -
  3. புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ - வ.ந.கிரிதரன் -
  4. தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (3) - வ.ந.கிரிதரன்-
  5. புலம்பெயர் தமிழ் இலக்கியம்: 'பனியும் பனையும்'
  6. கவிஞர் கண்ணதாசன்: நவீன கணியன் பூங்குன்றனார். - வ.ந.கி -
  7. எழுத்தாளர் அகஸ்தியரைப் பின்தொடரும் புதல்வி பன்முக ஆளுமை நவஜோதி ஜோகரட்னம் ! - முருகபூபதி -
  8. தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (2) - வ.ந.கிரிதரன் -
  9. தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1) - வ.ந.கிரிதரன் -
  10. இலங்கை அரசியல்: முஸ்லீம் இனவாதமும் - இலங்கையில் தேர்தலும் - மன்சூரின் எடுகோள்களை முன்வைத்து ...! (இறுதிப் பகுதி) - ஜோதிகுமார் -
  11. இலங்கை அரசியல்: முஸ்லீம் இனவாதமும் - இலங்கையில் தேர்தலும் - மன்சூரின் எடுகோள்களை முன்வைத்து ...! (பகுதி இரண்டு) - ஜோதிகுமார் -
  12. ஆறு தசாப்த காலங்களுக்கும் மேலாக அயர்ச்சியின்றி இயங்கும் ஆளுமை கலைஞர் க. பாலேந்திரா ! - முருகபூபதி -
  13. இலங்கை தினகரனுக்கு இம்மாதம் 92 வயது ! தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தினகரனின் வகிபாகம் ! - முருகபூபதி -
  14. அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முதல் காலாண்டு நிதிஉதவி பெற்ற கிழக்கு மாணவர்கள். - முருகபூபதி -
பக்கம் 37 / 115
  • முதல்
  • முந்தைய
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • அடுத்த
  • கடைசி