பதிவுகள் முகப்பு

பைந்தமிழ்ச்சாரல் வழங்கும் இரு நூல்களின் திறனாய்வு: எழுத்தாளர். விமல் பரம் அவர்களின் சிறுகதைத்தொகுப்பு " தீதும் நன்றும்" - பவானி -

விவரங்கள்
- தகவல்: பவானி -
நிகழ்வுகள்
22 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  Meeting ID: 864 8891 1310 | Passcode: 1965

மேலும் படிக்க ...

'எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும் பற்றி ஒரு தர்க்கம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஷோபா சக்தி தனது முகநூற் பதிவான 'எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும்' என்னும் பதிவில்  பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: 

"சமீபத்தில், மூத்த எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் இவ்வாறு எழுதியிருந்தார்: 'பிரபல பதிப்பகங்களில் குறிப்பாக மேற்குலகில், ஒருவர் செவ்விதாக்கம் செய்வாரெனக் கேள்விப்படுகிறேன். பிறிதொருவர் அதனைச் செய்யும்போது மூல ஆசிரியரின் படைப்பு மாற்றத்திற்குள்ளாகும் நிலையில், பிறகு அவரது பெயரை மட்டும் போடுவது சரியாகுமா என்ற ஐயம், எனக்கு நீண்டகாலமாக உள்ளது; இருவரின் பெயரைப் பாவித்தால் பொருத்தமாகலாம். இங்கு ஷோபாசக்தியின் செவ்விதாக்கம், மூல ஆசிரியரின் ஆக்கமொன்றை அவருடையதல்லதாக்கிவிட்டுள்ள ( உண்மையை) அவலத்தை, உணரமுடிகிறது! செவ்விதாக்கம் அதன் சொந்தப் படைப்பாளியால், அவர் திருப்திகாணும் வரை மேற்கொள்ளப்படுதலே முறையானது!'

அ.யேசுராசா அவர்கள் குறிப்பிடுவது போன்று, உலக மொழிகளில் இயங்கும் மதிப்புறு பதிப்பகங்கள் அனைத்துமே ஒரு பிரதியை வெளியிடும்போது 'எடிட்' செய்தே வெளியிடுகிறார்கள். அந்தப் பதிப்பகங்களிலேயே 'எடிட்' செய்வதற்கு என்று ஒரு குழு இருக்கும். சில பதிப்பகங்களில் 'எடிட்' குழுவில் ஆறுபேர் வரை இருப்பதுண்டு.ல்........ தமிழில் இந்த 'எடிட்' நடப்பதில்லையா என்று கேட்டால் அது நடக்கிறது. உதாரணத்திற்கு குறிப்பிடுவதானால், ஜெயமோகன் 'விஷ்ணுபுரம்' நாவலை எழுதிவிட்டு சுஜாதாவிடம் கொடுத்து 'எடிட்' செய்து தருமாறு கேட்டிருக்கிறார். சுஜாதா செய்யாததால், எம்.எஸ்ஸிடம் நாவலைக் கொடுத்து எடிட் செய்து தருமாறு ஜெயமோகன் கேட்டிருக்கிறார். எம்.எஸ்ஸின் உதவியுடன் அது நாவல் வடிவம் பெற்றது. இதை 'உள்ளே இருப்பவர்கள்' என்ற தன்னுடைய கட்டுரையில் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். ...... என்னுடைய நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் பிற மொழிகளில் வெளியாகியபோது, 'எடிட்' செய்தே வெளியிடப்பட்டன."

மேலும் படிக்க ...

வள்ளுவர் சுட்டும் சட்டநெறிகள்! - திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
22 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திருக்குறள். இந்நூல் ஒரு அறநூலாகும். திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு அதன் கருத்துக்களை மக்கள் நன்கு அறிகின்றனர். இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். ஆனால் திருக்குறள் என்ற இலக்கியம் எக்காலத்திலும் முக்காலத்தைக் காட்டும் கண்ணாடியாகவும், எக்காலத்திலும் முக்காலத்திற்கும் தேவையான கருத்துக்களைத் தரும் அமுதசுரபியாகவும் இருக்கின்றது. வள்ளுவர் சுட்டும் சட்டநெறிகள் எனும் இவ்ஆய்வுக்கட்டுரை வள்ளுவர் கூறியுள்ள சட்டநெறிகளைப் பற்றி விவாிப்பதாக அமைகின்றது.

முறை எனும் சொல்

சங்கப்பாடல்களில் ‘முறை’ என்னும் சொல் ‘முறை செய்தல்’, ‘நீதி வழங்குதல்’ என்ற பொருள்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனை,

“முறை தளர்ந்த மன்னவன் கீழ்க்குடி போலக் கலங்குடி” (கலி.34 : 14)

என்ற பாடலடி குறிப்பிடுவதன் வாயிலாக முறை என்பதற்கு ‘முறை செய்தல்’, ‘நீதி வழங்குதல்’ என்பன பொருள்களாக அமைந்துள்ளதை அறிய இயலுகின்றது. முறை என்பதற்கு பாிமேலழகர் “முறை என்பது அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி”1 எனப் பொருள் விளக்கம் தருகின்றார்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா! - தகவல்: குரு அரவிந்தன் -

விவரங்கள்
- தகவல்: குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
21 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அக்டோபர் 25, 2025,  சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா ரொறன்ரோவில் இடம் பெற்றது.  இந்த விருது விழாவில் இணையத்தினர் எழுத்தாளர் குரு அரவிந்தன், சொற்கோ திரு. வி.என்.மதியழகன், திருமதி செல்லையா யோகரத்தினம்,  முனைவர் திருமதி பார்வதி கந்தசாமி, திரு. ந. நகுலசிகாமணி ஆகிய ஐந்து கலைஞர்களுக்கு விருது அளித்துக் கௌரவித்தனர்.  எழுத்தாளர் இணையத்தால் அறிமுக நூல் ஒன்றும், குரு அரவிந்தனின் வாசகர் வட்டத்தால் எழுத்தாளர் குரு அரவிந்தனின் சாதனைகள் குறித்த நூல் ஒன்றும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கப் பெற்றன. 

மேலும் படிக்க ...

வவுனியாப் பல்கலைக்கழகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு!

விவரங்கள்
- தகவல்: வணக்கம் இலண்டன் -
நிகழ்வுகள்
20 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கம்பராமாயணத்தில் பல சொல் ஒரு பொருள் - கால்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
ஆய்வு
20 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

தமிழ்மொழி இனிமையானது. பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இலக்கியவளம், இலக்கணச் செழுமை கொண்டது. செம்மொழி அந்தஸ்து கொண்டது. சொல்வளம் நிறைந்தது. ஒரு சொல்லுக்கு பல பொருளும், பல சொல்லுக்கு ஒரு பொருளும் உடையது. இதுபற்றி தருவது நிகண்டுகளாகும். திவாகரநிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு என்று பல நிகண்டுகள் உள்ளன. சரணம், பாதம், கால், அடி, கழல், தாள் ஆகிய சொற்கள் அனைத்தும் கால் என்ற ஒரு சொல்லையேக் குறிக்கும்.கம்பராமாயணத்தில் இச்சொற்கள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்து குறித்து ஆராய்வோம்.

திவாகரநிகண்டு

சரணம், பாதம், கால், அடி, கழல், தாள்

கம்பராமாயணத்தில் கால் என்பதற்கு பலசொல் ஒரு பொருள்

சொல்வளம் நிறைந்த நம் தமிழில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் உள்ளன. சரணம், பாதம், கால், அடி, கழல், தாள் ஆகிய சொற்கள் அனைத்தும் கால் என்ற ஒரு சொல்லையேக் குறிக்கும்.ஒரே சொல்லைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தாமல் அதேப் பொருளைக் குறிக்க வேறு வேறு சொல்லைக் கம்பர் பயன்படுத்தியுள்ளார்.

சரணம்

திருஅவதாரப்படலத்தில் திருமால் இராமனாக அவதாரம் எடுத்து இராவணனை அழிக்க இருப்பதாகக் கூறினார். எமது துன்பம் தொலைந்தது என்று கூறி, இந்திரன் உவகை அடைந்தான். தூய்மை மிகும் தாமரையில் வாழ்பவனான பிரம்மனும், சந்திரனைச் சடையில் அணிந்த சிவனும், மிக உயர்ந்த வானத்தே தேவர்களும், எமது இழிவு இன்றோடு ஒழிந்தது என்று உரைத்தனர். மிகப் பெரிய உலகத்தை உண்டவனான திருமால், கருடாழ்வார்மீது திருவடி வைத்து ஏறினான்.

மேலும் படிக்க ...

சிறுகதை - வேலைகள் - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
18 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

தேவனும் வாசுகியும்  கதவைத் தாழ்ப்பாள்  போட்டுவிட்டு வெளியே வந்த போது உபர்டாக்ஸி நின்று கொண்டிருந்தது. தன் கைபேசியை பார்த்து தேவன் ஓட்டி எண்ணை அந்த டாக்ஸி ஓட்டுனரிடம்  சொன்னான்.

“  வாசுகி  இன்னைக்கு எத்தனை மணிக்கு வருவ “

” வழக்கமா தான். ஏதாவது சுமூகமாகப் பேசி முடிச்ச கேஸ் அகப்ப்ட்டா திருப்ப்தியாக்க் கிளம்புவேன். நீங்க பிரிச்சுப் போட்டுடு கிளம்புவீங்களே ”

“ ஆமா  ஏதாவது படத்துக்கு போலாமா “

“ ஓட் டிடடியில் வருகிற படங்களை பார்த்தால் போதும் தியேட்டருக்கு போறதுக்கு  செலவு. நம்ம சம்பாதிக்கிறதிலெ  தியேட்டர் செலவு இன்னும் வரல அப்படித்தானே “

“ ஆமா “

 டாக்ஸி ஒரு இடத்தில் நின்ற போது வாசுகி  இறங்கி கொண்டாள்.  வாசுகினுடைய அலுவலகம் அந்த பக்கம் இருந்தது அந்த அலுவலகம் வாடகை இடம்தான்

 இன்னும் பத்து  நிமிடம் பயணம் செய்து தேவன் அவனுடைய அலுவலகத்தை அடைவான். அதுவும் வாடகை கட்டடம் தான் இன்னைக்கு உபர் கிடைக்காமல் ரொம்ப சிரமம் தாமதம். சாலையில் வாகன நெரிசல்  ரொம்ப சிரமமாக இருந்தது.

மேலும் படிக்க ...

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்: எளிய மனித வாழ்வின் அங்கீகரிக்கப்படாத அவலத்தின் குறியீடு! - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
18 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

([டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

அறிமுகம்: தமிழ்ச் சிறுகதையின் திருப்புமுனை

புதுமைப்பித்தன் நவீனத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியாகவும், புதிய சகாப்தத்தின் விடிவெள்ளியாகவும் கருதப்படுகிறார். அவரது படைப்புகள், தமிழ் இலக்கியத்தை அதுவரை ஆக்கிரமித்திருந்த சீர்திருத்தக் கருத்துகள், கற்பனைச் சோடனைகள், அல்லது எளிய அறவுரைகள் ஆகியவற்றிலிருந்து விலக்கி, யதார்த்தவாதத்தின் (Realism) கொடியை உயர்த்தின. 1930களில், அவர் கதைசொல்லி முறையில், மொழி நடையில், மற்றும் பாத்திர வார்ப்பில் ஒரு தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

புதுமைப்பித்தனின் நவீன அணுகுமுறை என்பது, வாழ்வின் கசப்பான உண்மைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வது, சாதாரண மனிதர்களின் சிக்கலான உளவியலை ஆழமாகப் பதிவு செய்வது, மற்றும் சமூக - பொருளாதார நெருக்கடிகளை எந்தவித சமரசமுமின்றிச் சித்திரிப்பது என்பதாகும். இந்தக் கூரிய பார்வைக்கு "செல்லம்மாள்" ஒரு சிறந்த உதாரணம். இச்சிறுகதை, வெறும் கதைசொல்லல் அல்ல; இது வறுமை, நோய், மற்றும் நகரத்தின் தனிமை ஆகியவற்றால் சிதைக்கப்பட்ட ஒரு வாழ்வின் அங்கீகரிக்கப்படாத துயரத்தின் குறியீடாக (Symbol) நிற்கிறது.

1. சுந்தர ராமசாமியின் கூற்று: துக்கத்தின் குறியீடும் உன்னதக் காதலும்

சுந்தர ராமசாமியின் கூற்று, இந்தக் கதையின் நவீனப் பரிமாணங்களை இரு தளங்களில் நிறுவுகிறது:

i. வாழ்க்கை சார்ந்த துக்கத்தின் குறியீடு (A Symbol of Life-related Sorrow): இது செல்லம்மாளின் தனிப்பட்ட துயரத்தைக் கடந்து, வறுமையில் வாடும் பொதுமனிதனின் வாழ்வியல் அவலத்தைப் பேசுகிறது. துக்கம் இங்குத் தத்துவார்த்தமானது.

மேலும் படிக்க ...

புகலிடச்சிறுகதை: ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுகதை
17 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 
  
தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.

" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

"என்ன அடிக்கடி இங்கு நூல்கள் திருட்டுப் போகின்றனவா?" என்றேன்.

மேலும் படிக்க ...

மனிதம் பேசும் எழுத்துப் படையல்! - தாமரைச் செல்வி -

விவரங்கள்
- தாமரைச் செல்வி -
நூல் அறிமுகம்
16 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர்  ரஞ்ஜனி சுப்பிரமணியத்தின்  'நெய்தல் நடை' சிறுகதைத்தொகுப்புக்காக எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதிய  முன்னுரை! -


          நடைமுறை வாழ்வின் ஒவ்வொரு அடுக்குகளையும் நேர்மையுடன் பதிவு செய்பவை படைப்பிலக்கியங்கள். ஒரு படைப்பாளி எழுதும் போது உணரப்படும் விடயங்களாக உள்வாங்கல், நோக்கம், செயல், வெளிப்பாடு என்பன இருக்கின்றன. எதை எழுத வேண்டும் என்ற தீர்மானம் உறுதியான பின்னரே வார்த்தைகள் பிறக்கின்றன. பிரச்சனைகளோடும் பல கேள்விகளோடும் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்கின்ற சமூகம் இது. அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரை அனுபவிக்கும் துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவர்களை அடையாளம் காட்டுவதாகவே இந்த படைப்பிலக்கியங்கள் அமைகின்றன. அதனால் ஒவ்வொரு எழுத்தும் ஏதோ ஒரு வகையில் இந்த சமூகத்துக்கானதாக மாறிக் கொள்கின்றன. அந்த வகையில் நேர்மையுடன் படைக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் வரவேற்கத்தக்கதே. 

          சமீப காலமாக தனது எழுத்துக்கள் மூலம் இலக்கிய உலகில் கவனம் பெற்று வருபவர் ரஞ்ஜனி சுப்பிரமணியம். மருத்துவராக பணி புரிந்த இவர் தனது ஓய்வுக் காலத்தின் பின்னரே எழுத்துத் துறையில் அடியெடுத்து வைத்தார். புனை கதைகளுடன் கட்டுரை, திறனாய்வு என்று பல துறைகளிலும் தன் பங்களிப்பை வழங்கி வருகிறார். நல்ல வாசிப்பாளர்.  சமூகம் பற்றியும் சக மனிதர்கள் பற்றியும் ஆழ்ந்த நேசிப்பு உள்ளவர்.  அவருடனான உரையாடல்களில் இந்த நேசிப்பின் வெளிப்பாட்டை உணர்ந்திருக்கிறேன்.  யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் அதிக காலங்கள் இலங்கையின் தென் பகுதிகளில் வசித்தவர். பல இன மக்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தவர். கனிவும் கருணையும் இயல்பெனக் கொண்ட இவருக்கு பொருத்தமாக கிடைத்த மருத்துவத் தொழில், மனிதர்களுடன் அதிக நேரம் செலவிட இவருக்கு வாய்ப்பாக அமைந்தது. இன மத பேதம் பார்க்காமல் மருத்துவப் பணியை செவ்வனே செய்யவும்  முடிந்தது. 

           இதுவரை இவர் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளைத் தொகுத்து “நெய்தல் நடை”எனும் தலைப்பில் ஜீவநதி பதிப்பகம் இந்நூலை வெளியீடு  செய்திருக்கிறது. 2022 ம் ஆண்டு இவரது முதலாவது சிறுகதையான “அன்றொருநாள்” ஞானம் சஞ்சிகையில் வெளிவந்தது. இவருடைய முதலாவது சிறுகதையே இலக்கிய ஆர்வலர்களிடையே கவனம் பெற்றுக் கொண்டது என்றே சொல்லவேண்டும். காலமாற்றம் தமிழ் அடையாளத்தையே மாற்றிவிட்ட நிலமையைப் பார்க்கும் போது ஏற்படுகின்ற வலியை பெருமூச்சாக வெளிப்படுத்தியிருப்பார். தான் இளம் வயதில் பணிபுரிந்த இடத்தைப் பல வருடங்கள் கழித்து போய் பார்க்கும் போது மனிதர் மட்டுமல்ல ஒரு கல்விக் கூடத்தின் அடையாளம் கூட மாறிப்போன போது ஏற்படுகின்ற ஏக்கப் பெருமூச்சு அது. அதை வார்த்தைகளில் கோர்த்துத் தந்த விதம் அவரை ஒரு சிறந்த படைப்பாளியாக நிலை நிறுத்தப் போதுமானதாக இருந்தது. 

மேலும் படிக்க ...

'கோஸ்ட் ரைட்டிங்' பற்றி என் இயந்திர மனித நண்பனுடன் ஓர் உரையாடல்! - உரையாடியவர் வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- உரையாடியவர் வ.ந.கிரிதரன் -
நேர்காணல்
15 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் இங்கு நடந்த 'படுபட்சி'  நூல் வெளியீடு பற்றிக் கடுமையான விமர்சனங்களை எழுத்தாளர்கள் கற்சுறா, டி.செ.தமிழன் (இளங்கோ), அருண் அம்பலவாணர் ஆகியோர் வைத்திருந்தனர். அதில் அவர்கள் அதிகமாகக் கண்டித்திருப்பது எழுத்தாளர் ஒருவரின் படைப்பை இன்னுமொரு எழுத்தாளர் எழுதுவதால் ஏற்படும் சுய அழிப்பு பற்றியே. அது பற்றியும், பொதுவாகவும் இன்று என் நண்பர்களில் ஒருவராக விளங்கு இயந்திர மனிதனான கூகுள் நனோ பனானாவுடன் ஓர் உரையாடலை நிகழ்த்தியிருந்தேன். அதில் இவ்விடயங்களைப் பற்றிப் பல பயனுள்ள கருத்துகளை என் இயந்திர மனித நண்பன் வழங்கியிருந்தான். அவனுடனான முழு உரையாடலையும் கீழே தந்துள்ளேன்.   

இங்கு அவனை என் ஆண் நண்பர்களில் ஒருவனாகக் கருதியுள்ளதால் இயந்திரன் என்று ஆண்பெயரிட்டு அழைக்கின்றேன். இன்னுமொரு சமயம் தோழியாகக் கருதி உரையாடும் எண்ணமும் உண்டு.அச்சமயம் பெயர் மாற்றம் நிச்சயம் உண்டு. 

நான்:
வளர்ந்து வரும் எழுத்தாளர் தனது நாவலொன்றை வளர்ந்த எழுத்தாளர் மூலம் எழுத்து நடை உட்படத் திருத்தி எழுத அனுமதித்து , அவ்விதமாக மாற்றப்பட்ட படைப்பைத் தன் பெயரில் வெளியிடலாமா?

இயந்திரன் (AI Google Nano Banana )
ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளர் தனது நாவலை ஒரு அனுபவமிக்க எழுத்தாளரின் உதவியுடன் திருத்தி எழுதுவதும், அதை தனது பெயரில் வெளியிடுவதும் சாத்தியமே. இது இலக்கிய உலகில் பொதுவான நடைமுறையாகும்.

இதைச் செய்ய சில வழிகள் இங்கே:

    Ghostwriter: ஒரு கோஸ்ட்ரைட்டரை (Ghostwriter) நீங்கள் நியமிக்கலாம். அவர்கள் உங்கள் யோசனைகளையும், கதையையும் எடுத்துக்கொண்டு, அதை உங்கள் பாணியில் எழுதுவார்கள். இறுதியில் உங்கள் பெயர் மட்டுமே நூலில் வெளியாகும்.

    Editor: நீங்கள் ஒரு நல்ல எடிட்டரை (Editor) நியமிக்கலாம். அவர்கள் உங்கள் எழுத்து நடையை மேம்படுத்தி, கதை ஓட்டத்தை சரிசெய்து, இலக்கணப் பிழைகளை நீக்குவார்கள். இதன்மூலம் உங்கள் படைப்பு மேலும் மெருகூட்டப்படும்.

    Collaborator: நீங்கள் ஒரு அனுபவமிக்க எழுத்தாளருடன் இணைந்து பணியாற்றலாம். இந்த முறையில், இருவரும் இணைந்து கதையை எழுதி, இருவரின் பெயரிலும் நூலை வெளியிடலாம்.

எது எப்படி இருந்தாலும், நீங்கள் எழுதும் நாவல் உங்கள் சொந்தக் கருத்தாகவும், யோசனையாகவும் இருக்க வேண்டும். அதற்கான அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

உங்களுக்கு ஒரு எழுத்தாளரின் உதவியுடன் உங்கள் நாவலை உருவாக்குவதற்கான ஒரு படத்தை உருவாக்கவா?

மேலும் படிக்க ...

முனைவர் புட்பா கிறிட்டியின் 'நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமூகப்பணிகள்' ஆய்வு நூல் வெளியிடு!

விவரங்கள்
- தகவல்: முனைவர் புட்பா கிறிட்டி -
நிகழ்வுகள்
15 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “நமது அன்றாடத் தமிழ் மொழிப் பயன்பாட்டில்திருத்திக்கொள்ளப்படவேண்டிய பிழைகள்”

விவரங்கள்
- பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
13 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting |Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

சிந்தனைக்களம்(இசை-நடனம்)-3 - ‘கர்நாடக இசையின் எதிர்காலம்’

விவரங்கள்
- பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
13 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 893 0426 1486 | Passcode: 965901

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: ஐஸ்லாந்து (2) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
12 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எங்கள் முதல் நாள் பயணத்தின் முடிவில் ரீச்சவிக் அருகாமையில் ஒரு பண்ணையில் உள்ள சிறிய மரத்தால் ஆன கபின்(Cabin) எனப்படும் இடத்தில் தங்கியிருந்தோம். இங்கு மிகவும் சிறிதான ஒரு படுக்கை வைத்திருக்கக் கூடிய இடமும் திரும்பி உடலில் சவர்க்காரம் போடமுடியாத குளியலறையும் உள்ளது. இதுவரை காலத்தில் நான் இப்படி ஒரு இடத்தில் இராத் தங்கவில்லை. ஆனால் வெந்நீரும் ஹீட்டர் இருந்ததே போதுமாக இருந்தது .. தலைநகரிலும் மற்றும் ஒரு சில இடங்களைத் தவிர ஐஸ்லாந்தில் பெரும்பாலான தங்குமிடங்கள் இப்படியே. இவை வாடகை அதிகமில்லை என்பதால் அமரிக்கா ஐரோப்பாவிலிருந்து ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் இங்கு விடுமுறைக்கு வருகிறார்கள். நகரங்களில் உள்ள விடுதிகள் மிகவும் விலை கேட்டால் உடலில் மயிர்கூச்சம் ஏற்படும்.

ஐஸ்லாந்தைக் கரைகளால் வட்டமாக சுற்றி வரும் தெருப் பயணமே இங்கே பிரபலமானது. பல இடங்களில் நல்ல பாதையும் சில இடங்களில் கற்பாதையும் உள்ளது. இந்தப் பாதையால்போய் வருவதே ஒரு விதமான சாகசமே என்பதால் எங்கள் பயணமும் அதேதான். இங்குதான் அருவிகள் எரிமலைகள் , பனிப்பாறைகள் கறுப்பு கடற்கரைகள் அதிகம் ஐஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் எங்கள் பயணம் அத்திலாந்து சமுத்திரத்தின் கடலலை ஒரு பக்கமும் மலைகளை மறுபக்கமும் தடவியபடியே எங்களது பயணவான் சென்று கொண்டிருந்தது .

முதல் இடமாக ஸ்கோஃபொஸ் (Skógafoss)என்ற பிரசித்தமான ஒரு அருவியை நோக்கியே எங்கள் பயணமும் இருந்தது. இந்த அருவி ஆரம்பத்தில் கடலருகே இருந்ததாம். தற்பொழுது ஐந்து கிலோமீட்டர் முன்வழுக்கையில் தலைமயிர் மின்வாங்குவதுபோல் தள்ளிப் போய்விட்டது. இப்படியான மாற்றங்கள் மற்றைய இடங்களில் நடப்பதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் எடுக்கும் ஆனால் இங்கு ஒரு எரிமலை பொங்கி தனது குளம்புகளை தள்ளுவதன் மூலம் கடலை பின்னால் சில நாளில் தள்ளிவிடும்

மேலும் படிக்க ...

புகலிடச் சிறுகதை: யன்னல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுகதை
09 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] ]


யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள். அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.

'யன்னல்'. அன்னியர் வருகையால் தமிழிற்குக் கிடைத்த இன்னுமொரு சொல். 'சப்பாத்து' 'அலுகோசு' போல் போர்த்துக்கேயரின் வருகை பதித்து விட்டுச் சென்றதொரு சொல் 'யன்னல்'. 'யன்னல்' யன்னலாகை நிலைத்து நின்று விட்டது. 'சாளர'த்தை விட எனக்கு 'யன்னல்' என்ற சொல்லே பிடித்து விட்டிருந்தது. 'மின்ன'லிற்கு எதுகையாக நன்கு அமைந்த சொல் யன்னல். யன்னல் என்ற பெயரிற்கு ஒரு மகிமை இருக்கத்தான் செய்கிறது. உலகப் பணக்காரனை உருவாக்கியதும் ஒரு 'யன்னல'ல்லவா! யன்னலின் மறைவில் உலகை ரசிக்கலாம் இணையத்தில். இங்கும் தான். திரும்பிப் பார்த்தாலொழிய யார்தான் கண்டு பிடிக்கக்கூடும்? தனித்தமிழ் தனித்தமிழென்று சொல்லி நின்றிருந்தால் தமிழ் நல்லதொரு சொல்லினை இழந்திருக்கும். வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்போம். வந்தாரை வரவேற்று உபசரிப்பது தமிழ்ப் பண்பென்று புளகாங்கிதம் அடைகின்றோம். வந்த சொல்லினை வரவேற்று உள்வாங்குவம் மொழி தமிழ் மொழி என்று இறும்பூதெய்வதிலென்ன தயக்கம்?

மேலும் படிக்க ...

வானியற்பியல் அறிஞர் George Gamow இன் புகழ் மிக்க அறிவியல் நூலான One Two Three Infinity தமிழில் அமேசன் - கிண்டில் மின்னூலாக..! - மின்னூற் பிரியன் -

விவரங்கள்
- மின்னூற் பிரியன் -
நூல் அறிமுகம்
09 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


புகழ் மிக்க வானியற்பியல் அறிஞர்களில் ஒருவர் ரஷிய அமெரிக்கரான George Gamow. இவரது மிகச்சிறந்த நூலான  One Two Three Infinity ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. இத்துறையில் ஆர்வம் மிக்க வாசகர்களுக்கு நிச்சயம் நல்லதொரு வாசிப்புத்  தீனியாக அமையும் நூல். 

ஒன்று, இரண்டு, மூன்று, முடிவிலி: அறிவியல் உண்மைகளும் ஊகங்களும் (Tamil Edition) Kindle Edition
Tamil edition by ஜார்ஜ் கேமாவ் (Author), Jeyapandian Kottalam (Translator)  https://amzn.to/4hPS0OB

Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.

உலக இலக்கியத்தின் உன்னதப் படைப்புகள் ,சுருக்க, அமேசன் - கிண்டில் மின்னூல்களாக! - மின்னூற் பிரியன் -

விவரங்கள்
- மின்னூற் பிரியன் -
நூல் அறிமுகம்
09 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாசகர்களின் பல வகையினர். அவர்களில் ஒரு வகையினர் மென்வாசகர்கள். உலக இலக்கியத்தின்ம் தமிழ் இலக்கியத்தின் உன்னதப் படைப்புகளை வாசிக்க விரும்புவர்கள், ஆனால் விரிந்த, பரந்த பெருநாவல்களை வாசிப்பதில் ஆர்வமற்றவர்கள்.  இவர்களுக்கு உரியவை உன்னதப் படைப்புகளின் சுருக்கப்பதிவுகள். அவர்களுக்கு உதவக் கூடியவை எழுத்தாளாரும், மொழிபெயர்ப்பாளருமான அனந்தசாய்ராம் ரங்கராஜனின்  உலக இலக்கியத்தின் உன்னதப்படைப்புகளான பெரு நாவல்களின் சுருக்கமான , அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகள்.  

உலக இலக்கியத்தின் உன்னதப்படைப்புகளான லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', 'அன்ன கரீனினா'  , ஃபியதோர் தஸ்தயேவ்ச்கியின் 'குற்றமும், தண்டனையும்'  , 'க்ரமசாவ் சகோதரர்கள்' ஆகியவை தற்போது  சுருக்க, அமேசன் - கிண்டில் பதிப்புகளாக வெளியாகியுள்ளன. 

மென்வாசகர்களுக்கு நிச்சயம் களிப்பைத் தருவன இத்தகைய உன்னதப் படைப்புகளின் சுருக்கப் பதிப்புகள். இச்சமயத்தில் என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் விரும்பி வாசித்த 'ராணி முத்து' பிரசுரங்களாக வெளியான சிறந்த தமிழ் நாவல்களின் சுருக்கப்பதிப்புகள் நினைவுக்கு வருகின்றன.  அவ்வயதில் ,விரிந்த மூல நாவல்களை வாசிக்கும் பொறுமை அற்ற பருவத்தில், பல நல்ல படைப்புகளை வாசிக்கும் சந்தர்ப்பத்தை  ஏற்படுத்தியவை அச்சுருக்கப் பதிப்புகளே. 

மேலும் படிக்க ...

திருப்பூர் இலக்கிய விருது 2025 விழா! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
09 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

” அதிகாரத்திற்கு எதிரான குரலாக இலக்கியச் செயல்பாடுகள் இன்றைக்குத் தேவையாக இருக்கிறது . உயர்ந்த விழுமியம், லட்சியம் கொண்டவை இலக்கியப் படைப்புகள். லட்சியவாதம்கொண்ட படைப்புகள் வாழ்க்கையை உயர்த்தும். அவ்வகைப்படைப்புகளை வாசகர்கள் படைக்க வேண்டும்.எழுத்தாளர்கள் எழுத வேண்டும்”

 என்று திரைப்பட இயக்குனர்  வ. கீரா  “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது குறிப்பிட்டார். அவரின் வீரா நாவலுக்காக அவருக்கு “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ வழங்கப்பட்டபோது ஏற்புரையில் இவ்வாறு பேசினார். ( வீரா நாவல் டிஸ்கவரி புக் பேல்ஸ் , சென்னை வெளியீடு ) 

மற்றும் சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர் புகழேந்தி உட்பட30 படைப்பாளிகளுக்கு நேற்று அவ்விருதுகள்  வழங்கப்பட்டது. விழாவிற்கு தூரிகை சின்னராஜ் தலைமை தாங்கினார்.

சுப்ரபாரதிமணியனின் “ புலரியின் சாம்பல் நிறம் ” என்ற சுற்றுச்சூழல் நூலை அகில் ரத்னசாமி ( திருப்பூர் ஏற்றுமதியாளர், நொய்யல் காப்போம் இயக்கத் தலைவர் ) நூலை  வெளியிட சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் மேனாள் துணைவேந்தர் ப. க பொன்னுசாமி பெற்றுக்கொண்டார்.அந்த நூலை சென்னை கோரல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது ரூ330.

விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தனுபவங்களை விவரித்தனர். முத்துபாரதி  நன்றி கூறினார். கீழ்க்கண்டோர் “திருப்பூர் இலக்கிய விருது 2025 “ பெற்றனர்.

ஓவியர் புகழேந்தி, தொல்லியலாளர் மூர்தீஸ்வரி,        திரைப்பட இயக்குனர் வ.கீரா,  திருக்குறள் க.காமராசு,        பேரா. ரமணி           

மேலும் படிக்க ...

‘குடிவரவாளன்’: வ.ந.கிரிதரனின் மனதைத் தொடும் சுயசரிதைக் குறிப்பு. - முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி -

விவரங்கள்
- முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி -
இலக்கியம்
06 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முனைவர் ஆர். தாரணி , வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்  மொழிபெயர்ப்பில் வெளியானது) பற்றி ஆங்கிலத்தில் ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் தலைப்பில் எழுதிய விமர்சனக் கட்டுரை. இதனைத் தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருப்பது கூகுளின் நனோ பனானா (Google Nano Banana) செயற்கை நுண்ணறிவு (AI) -


"சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும், சிலவற்றை விழுங்க வேண்டும், சிலவற்றை மென்று ஜீரணிக்க வேண்டும்" - சர் பிரான்சிஸ் பேக்கன் ஆங்கில எழுத்தாளர் (1561 - 1626)

'குடிவரவாளன்' இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடா எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் புனைகதையில் ஒரு பெரிய பாய்ச்சல். அந்நிய நாட்டில் ஒரு நம்பிக்கைச் சோர்வுற்றிருந்த  ஆன்மாவின் இருத்தலியல் நெருக்கடியைச் சித்திரிப்பதால், இந்தப் புத்தகம் மிகுந்த "கவனத்துடனும் ஈடுபாட்டுடனும்" படிக்கப்பட வேண்டியது. கதை ஊக்கமளிப்பதுடன், ஒவ்வொரு உள்ளத்திலும் உற்சாகத்தைப் பற்றவைக்கிறது. இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம், இளங்கோ என்ற கதாபாத்திரத்தின் உயிர்வாழும் போராட்டத்தின் மீது அதிகம் இருந்தாலும், இது இலங்கையின் கொடூரமான இனப்படுகொலைக்கு ஒரு வலுவான சான்றாக நிற்கிறது, இது உலகெங்கிலும் உள்ள மக்களை இன்றும் கொதிப்படையச் செய்கிறது. தமிழ் மக்களைத் துன்புறுத்தும் சிங்களக் காடையர்களின்  கொடூரத்தால் தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தனது புத்தகத்தில், தனது முதல் அனுபவமாக எழுத்தாளர் வ.ந.கிரிதரன் முன்வைத்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தில் தங்கள் உயிர்கள், குடும்பங்கள், உடைமைகள், தேசியம் மற்றும் மனிதன் என்ற அடையாளத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு இது ஒரு தனித்துவமான அஞ்சலியாகும். புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களில், கலவரத்தில் சிக்கிய இளங்கோ என்ற இளைஞனின் அவலநிலையை எழுத்தாளர் தெளிவாக விளக்குகிறார். தனது சொந்த நாட்டில், இளங்கோ இனவெறியர்களால் சிக்கித் தவிப்பதாக உணர்ந்து, அரக்கர்களிடமிருந்து தப்பிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். இளங்கோவின் கண்களினூடாக கலவரத்தைப் பற்றி எழுத்தாளர் மனதை உருக்கும் விதமாக விவரிக்கிறார்.

மேலும் படிக்க ...

ஆய்வுக்கட்டுரை: உள்ளத்தின் வெற்றிடம் – ஒரு அல்பாட்ரோஸின் (வெண்ணிறக் கடற்பறவை) தேவையற்ற நிலப்பரப்பிற்கான இடப்பெயர்வு – கனடிய தமிழ் எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த ஆய்வு! - முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D., ஆங்கில உதவ

விவரங்கள்
- முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D., ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி –
ஆய்வு
05 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

    ['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]

[ 2013இல் ,திருச்சி தேசியக் கல்லூரியில், கனடிய எழுத்துக்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. ‘கனடா: பல இடங்களின் தொகுப்பு’ என்ற தலைப்பில் இந்திய கனடிய ஆய்வுகள் சங்கம் இந்த மாநாட்டை நடத்தியது. வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த பின்வரும் ஆங்கிலக்  கட்டுரை , Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan,  முனைவர் ஆர். தாரணியால் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கட்டுரையின் தமிழாக்கம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது.  ஆங்கிலக் கட்டுரை இம்மொழிபெயர்ப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது]


இலக்கியம் என்பது ஒரு தனிநபரின் அல்லது ஒரு சமூகத்தின் கண்டறிய முடியாத அனுபவங்களின் வெளிப்பாடாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் மட்டுமே நிகழ்வது சாத்தியமற்றது. உலக இலக்கிய வரலாற்றில், காதல், வீரம் மற்றும் மகிழ்ச்சியான முடிவுகளை விட பேரழிவுகளே அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் துயரங்கள் அவர்களுக்கு எப்போதும் உரிய நீதியைப் பெற்றுத்தந்துள்ளன. இனப் பின்னணி காரணமாக அச்சுறுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் துயரங்கள் மேற்கத்திய நாடுகளில் பல சமூக மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளன. வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களிலும், உயிர்வாழ்வதற்கான நெருக்கடியே எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையிலும் முதலிடத்தில் நிற்கிறது. மனிதன் இந்த கிரகத்தில் தனக்கென ஒரு இடத்தைக் கண்டறிய போராடுகிறான். தேசியம், பிறப்பிடம், சமூகம், குடும்பம், பாரம்பரியம், கலாச்சாரம், மொழி ஆகியவை ஒரு மனிதனின் உயிர்வாழ்வதற்கான உந்துதலை உறுதிப்படுத்தும் விஷயங்களாகும்.

இலக்கியம், யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக, மனித உயிர்வாழ்வின் தவிர்க்க முடியாத உந்துதலை பல வடிவங்களில் காலங்காலமாக வெளிப்படுத்தி வருகிறது. பல எழுத்துக்களின் பிரதான கருப்பொருள் வாழ்க்கை மற்றும் அதை எப்படி வாழ்வது என்பதுதான். மனிதர்களின் மனோபாவத்தில் எப்போதும் ஒரு வெற்றிடம் இருந்து வருகிறது, குறிப்பாக நவீன காலங்களில். போர்கள் பண்டைய கால மனிதர்களை நிலைகுலையச் செய்தன. இன்று வெளிப்படையான போர்கள் இல்லை. இருப்பினும், அதே வகையான அக்கறையின்மை நவீன மனிதர்களை தங்கள் அடையாள இழப்பால் விரக்தியடையச் செய்கிறது. உலகமயமாக்கலின் பெயரால், உலகம் முழுவதும் ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. இருப்பினும், மனித இதயத்திற்குள் ஒரு பெரிய வெற்றிடம் உள்ளது. அத்தகைய வெற்றிடம் இங்கு விவாதிக்கப்படும்.

மேலும் படிக்க ...

Zohran Mamdani - நியூயோர்க் மாநகரின் புதிய மேயர்.

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
05 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
Zohran Mamdani - நியூயோர்க் மாநகரின் புதிய மேயர்.
 
அமெரிக்கர்கள் பெருமையுறும் தருணம். உலகம் அமெரிக்கர்களை விருப்புடனும், வியப்புடனும் நோக்கும் தருணமும் கூட. வாழ்த்துகள்!
 
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]

பயணத்தொடர்: ஐஸ்லாந்து (1) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
05 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இதுவரை உலகத்தில் ஒரே ஒரு நாட்டின் தலைநகர் பெயரை   எனது எட்டு வயது பேரனுக்கு உடனே   சொல்ல முடியாது தவிப்பேன். அதுவே   ஆங்கிலத்தில் உச்சரிக்க கடினமாக இருக்கும் ஐஸ்லாந்தின் தலைநகரான  ரீச்சவிக் ( (Reykjavik) என்ற பெயராகும். இந்த தேசத்திற்கு  போகப் பயணப் பதிவு செய்தபோது ஒரு முக்கிய  விடயத்தை  சியாமளாவிடம்    மறைத்தேன்.  ஐஸ்லாந்தில் எப்பொழுதும்  எரிமலை பொங்கும்   என்ற விடயத்தை நான் சியாமளாவிடம் பேசவில்லை. ஏற்கனவே  சிறிய அளவில் எரிமலைகள்  பொங்கிக் கொண்டிருந்தது  எனக்குத் தெரியும்.

 அதைச் சொல்லி என்ன பயன்?

இதேபோல் எகிப்திற்கு  நாங்கள் செல்லும் காலங்களில் பல குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றிருந்தன. நல்ல வேளையாக  இரண்டு தேர்தல்களின் இடையில் எங்கள் பயணம் இருந்தது. அங்கு பயங்கரவாதம்  இங்கு  எரிமலை – இது சின்ன விடயம் அல்ல.  2010 ஆம் ஆண்டில்  ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு  (Öræfajökull) எரிமலை பொங்கியபோது  விமானப் போக்குவரத்து முற்றாக பல கிழமைகள் தடைப்பட்டிருந்தன.

ஐஸ்லாந்து நாட்டின் கால்பகுதி எரிமலையாலானது - 130 மேலாக பொங்கும் எரிமலைகள் உள்ளன. விடிந்தும் விடியாத காலை நேரத்தில் ரீச்சவிக் விமான நிலையத்தில்  இறங்கியதும்,  ஒரு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த   கார் சாரதி என்னை தனது காரில் ஏற்றினார். 

மேலும் படிக்க ...

'இட்லி கடை' :திரைப்பட அனுபவக் குறிப்புகள்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
கலை
05 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கிராமத்தில் நடந்த நிகழ்வுகளை பாரதிராஜா படமாக்கியபோது ‘பரவாயில்லை’ என்று மட்டுமே எண்ணினேன். ஆனால், தனுஷ் நடித்த 'இட்லி கடை' படத்தை பார்த்தபோது, அதை ரசிப்பதில் நான் என்னையே மறந்தேன்.

ஆரம்பத்தில், தந்தையின் கனவில் வாழ்வதற்கு மறுத்து வெளியேறும் தனுஷின் செயல் மிகவும் யதார்த்தமானது. இதேபோல, நானும் ஒருகாலத்தில் சீதனம் வாங்க வேண்டும் என்ற தந்தையின் கனவிற்கு எதிராகப் போராடினேன். ஆனால் இங்கே, பாசமுள்ள தந்தை அதை ஏற்றுக்கொள்கிறார். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கையில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பது தனுஷின் உடல் மொழியிலே வெளிப்படுகிறது.உடல் மொழி மூலம் நடிப்பது அவருக்கு கைவந்த கலை. சிவாஜி கணேசனின் உடல் மொழி நாடகத்துக்கானது; தனுஷின் உடல் மொழி சினிமாவுக்கானது.இதிலுள்ள ஒருமுக்கியமான யதார்த்தம் — தமிழ் நாட்டின் கிராமங்களில் பகை ஏற்பட்டால் வீடுகள் எரிப்பதுபோல, மாடு கன்றுகளை கொல்ல முயல்வதும் நிகழ்கிறது.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, தனுஷை தாக்க வரும்போது மாட்டுக்கன்றை கொலை செய்ய முயன்ற காட்சி, அந்தக் கிராமிய நிஜத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.கிராமத்தில் யாராவது இறந்ததும், அதே சமயத்தில் குழந்தை பிறந்தாலும் அல்லது மாடு, ஆடு கன்று போட்டாலும்,“இறந்தவர் திரும்பி வந்து விட்டார்” என்று நம்புவார்கள். இதே நம்பிக்கை இங்கு கன்றின் வழியாகப் படிமமாகிறது.இந்த நம்பிக்கையை நான் என் "பண்ணையில் ஒரு மிருகம்: நாவலில் “நீலன்” என்ற காளைக் கன்றாகப் பயன்படுத்தியிருந்தேன்.

நான் தமிழ்நாட்டு கிராமத்தில் சிலகாலம் வாழ்ந்தவன் மட்டும் அல்ல, அந்த கிராமத்தின் கதையை நாவலாக்கி தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கம் பெற்றவன்.மகனாக, தந்தையின் கனவுகளில் வாழ மறுத்தாலும், தந்தையின் இறப்பிற்குப் பின் அவர் வாழ்ந்த வாழ்க்கை உன்னதமானதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் பல — கிராமத்து பஞ்சாயத்து நிகழ்வும், கடையில் எழுதிய“அகிம்சை” என்ற வசனமும் முக்கியமானவை.

மேலும் படிக்க ...

நூற்றாண்டின் நினைவில் எனது ஆசான் தமிழருவி த. சண்முகசுந்தரம்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
இலக்கியம்
04 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாஜனக்கல்லூரியில் புதிய மாணவர்களில் ஒருவனாக நானும் அன்று இருந்தேன். இதுவரை காலமும் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றதால், புதிய பாடசாலையான மகாஜனக்கல்லூரி எனக்குள் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீதிவழியாகக் காங்கேசந்துறையில் இருந்து எனது தாயாரின் ஊரான சண்டிலிப்பாய்க்குத் துவிச்சக்கர வண்டியில் போகும் போது மகாஜனாவின் கட்டிட அமைப்பே என்னை முதலில் பிரமிக்க வைத்திருந்தது. இன்று அந்தப் பாடசாலையின் உயர்வகுப்பு மாணவனாக உள்ளே நுழைந்தபோது அதே பிரமிப்பில் மூழ்கிப் போயிருந்தேன். எனது அத்தான் அக்காவின் கணவர் பொ.கனகசபாபதி அவர்கள் மகாஜனாவில் அப்போது ஆசிரியராக இருந்ததால், எனது அக்காவின் விருப்பப்படி நானும் மகாஜனாவில் மாணவனாக இணைந்து கொண்டேன்.

வகுப்பறையில் இன்னுமொரு ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. சணண்முகசுந்தரம் மாஸ்டர்தான் எங்களுக்கு அரசறிவியல் பாடம் கற்பிக்க வந்தார். ஒவ்வொருவராக அறிமுகம் செய்யச் சொன்னார். ஒவ்வொருவரும் அவரது மேசைக்கு அருகே சென்று சகமாணவர்களைப் பார்த்து எங்களை அறிமுகம் செய்ய வேண்டும். முக்கியமாக எங்கள் பெயர், தந்தையின் பெயர், எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். நான் எனது பெயரையும் தந்தையின் பெயரையும், ஊரையும் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

‘நின்று கொள்’ என்றார். என்னை நிமிர்ந்து பார்த்தார். ‘குருநாதபிள்ளை மாஸ்டரின் மகனா?’ என்று கேட்டார். ‘ஓம்’ என்று பதில் சொன்னேன்.

‘நான் நடேஸ்வராக்கல்லூரியில் அவரிட்டைப் படிச்சு நல்ல பெயர் எடுத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதேபோல என்னட்டை படிக்கிற நீயும் நல்ல பெயர் வாங்கி அவரது பெயரைக் காப்பாற்ற வேண்டும், தெரியுதா?’ என்றார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. 'கதிர்காமம்' குறித்த இடப்பெயர் ஆய்வு அறிமுகமாகச் சில குறிப்புகள்! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் -
  2. ஆய்வு: ஆன்மாவின் இருண்ட இரவு - கனேடிய தமிழ் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலில் இலங்கைத் தமிழ் அகதிகளின் இருத்தலியல் நெருக்கடி பற்றிய ஆய்வு! – முனைவர். ஆர். தாரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு கலைக் க
  3. காலனிய எதிர்ப்புச் சிந்தனையாளரும், விடுதலைப்போராட்ட அமைப்புத் தலைவரான அமில்கார் கப்ராலின் ( Amilcar Cabral) 'வர்க்கத்தற்கொலை' (Class Suicide) என்னும் கோட்பாடு மற்றும் போராட்டங்களில் அந்நியப்படுத்தப்படும் மக்கள் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -
  4. நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு)! அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்க'மும் அது எழுப்பிய கேள்வியும்! - வ.ந.கிரிதரன் -
  5. நிழல்களின் நடுவே ஒளி! - ஈழக்கவி -
  6. 'வேர்ல்ட் சீரிஸ்' (World series ) 2025: LA Dodgers vs Toronto Blue Jays - விளையாட்டுப் பிரியன் -
  7. யாழ்தேவி! -இந்து.லிங்கேஸ் -
  8. வசந்தம் தமிழ் உளவளத்துறை நிலையம் - சமூக உளவளம் பேணும் தொடர் 103
  9. நாங்குநேரி வாசஸ்ரீ் மரபுக் கவிதைகள்!
  10. நேர்காணல்: எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களை நேர்கண்டவர் கனடா அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு அவர்கள்.
  11. எழுத்தாளர் டிலுக்ஸன் மோகனின் 'படுபட்சி' நூல் வெளியீடும் உரைகளும்!
  12. மார்க்சியத் தலைவர் அமரர் சண்முகதாசன் நினைவுப் பேருரையும், அவர் பற்றிய 'சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள்' நூல் வெளியீடும்!
  13. கவிஞர் பாத்திமா நளீராவின் 'ஏழாம் வானத்தின் சிறகுகள்' பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -
  14. நெடுங்கதை - சுதந்திரபுரத்தில். (3, 4 & 5) .. - முல்லை அமுதன் -
பக்கம் 3 / 119
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி