பதிவுகள் முகப்பு

நிகழ்வுகள்: அன்புச் சகோதரரின் அருமையான அரங்கேற்றம் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
நிகழ்வுகள்
23 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முகக்கவசம் களைந்து முறுவலுடன் சபை விளங்க அன்புச் சகோதரரின் மிருதங்க  அரங்கேற்றம் மெல்பேண் மாநகரில் றோவில் பாடசாலை மண்டபத்தில் 17-04-2021 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. மேடை அலங்காரம் யாழ்மண்ணை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது. மேடையின் முகப்பு கோவில்களின் மண்டபங்களில் காணப்படும் யாளியினைக் கொண்டதாய் வண்ணமாய் ஜொலித்தது. மேடையின் பின் அணியாகப் பெரியதாய் எம்பெருமான் சிவனின் உருவம் அழகான வண்ணத்தில் ஆசி வழங்குவதாய் மிளிர்ந்தது. பின்பக்கமாக அரங்கின் இரு மருங்கும் வாழவைக்கும் வாழைகள் வைக்கப்பட்டிருந்தன.வாழைகளின் நடுவில் பச்சையினைவெளிப்படுத்தும் பாங்கான செடிகள் பக்குவமாய் அழகினை மெருபடுத்தி நின்றன. மேடையின் முன்னே மங்கலாமாய் மஞ்சள் நிற மலர்கள் வட்டமாய் கோலமிட கோலத்தின் நடுவே - தேவ சபையில் சிவனினாரின் திருநடனத்துக்கு லயத்தைக் கொடுத்து மிருதங்கம் முழங்கும் நந்தியெம்பெருமானின் வெண்கல வடிவம் வைக்கப்பட்டிருந்தமையினப் பாராட்டியே ஆக வேண்டும்.விநாயகப்  பெருமானும் , கல்வித்  தெய்வமான கலைமகளும் மங்கல விளக்குகள் மத்தியில் மேடைக்குக் காவலாய் , அரங்கேற்றத்துக்கு அரணாக வைக்கப்படிருந்தமை பக்தியின் பரவசத்தை நல்கியது எனலாம்.

மேலும் படிக்க ...

தமிழ்மொழிச் செயற்பாட்டகம்: மருதூர்க்கொத்தன் (1935 - 2004) - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
23 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கவிதை: ஓட்டகங்களை விட.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
21 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


ஒட்டகங்கள் பாலைகளைக் கண்டு
துவண்டு விடுவதில்லை;
தளர்வதில்லை.
வீசும் மணற்காற்றுகளைக் கண்டு
அஞ்சுவதில்லை.
நீர் தேக்கி, நீண்ட தொலைவுகளை நாடிப்
பயணிப்பதில் அதிக பிரியம் கொண்டவை
அவை.
உளப்புயல்கள் வீசியடிக்கையிலெல்லாம்,
நினைவுச் சுழல்களுக்குள் சிக்கும்போதெல்லாம்,
அகக்கடலில் படகுகளையிழந்து
நீச்சலடிக்கையிலெல்லாம்
நான் ஒட்டகங்களை நினைப்பதுண்டு.
ஒட்டகங்களைப்போல் நானிருக்க வேண்டுமென்று
நினைப்பதுண்டு.
எவை கண்டும் தளராத
அவை பற்றி அவ்வேளைகளில் சிந்திப்பதுண்டு.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 372: வண்ணநிலவனும் , கி.ராஜநாராயணனும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் வண்ணநிலவன் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்குக் கிடைத்த தமிழக அரசின் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை சிறிது அதிகமென்று கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கி.ராஜநாராயணின் படைப்புகள் எவையும் ஞானப்பீட விருது பெறும் தகுதி உள்ளவை அல்ல என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வண்ணநிலவனின் மேற்படி கூற்று சிறிது ஏமாற்றத்தினை அளிக்கின்றது. . அவ்விதம் அவர் கூறுவது அவரது உரிமை. ஆனால் அவ்விதம் அவர் கூறிய தருணம் உரிய தருணமல்ல. என்னைப்பொறுத்தவரையில் தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்குத்தான் இதுவரையில் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை கிடைத்துள்ளது. எழுத்தாளர் பிரபஞ்சனுக்குப் புதுவை அரசு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குக்களை நடத்தியது. தற்போது தமிழக அரசு எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதையினை நடாத்தியுள்ளது.

இருவருமே எழுத்தையே வாழ்வாகக்கொண்டவர்கள். இருவருமே தமிழக , இந்திய அரசுகளால் வழங்கப்படும் அனைத்து விருதுகளுக்கும் உரித்துடையவர்கள்.

தமிழ் எழுத்தாளர்களுக்கு இவ்விதமான உரிய மரியாதை கிடைக்கும்போது அது வரவேற்கப்பட வேண்டியதொன்று. காழ்ப்புணர்வுடன் எழுத்தாளர் வண்ணநிலவனைப்போல் கருத்துகளைக்கூறுவது நல்லதல்ல.

மேலும் படிக்க ...

கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி - ஜெயமோகன் -

விவரங்கள்
- ஜெயமோகன் -
இலக்கியம்
20 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பற்றி எழுதிய விரிவான கட்டுரையிது. நன்றியுடன் அவரது வலைப்பதிவிலிருந்து மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள். -


1

கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம் ‘ நாவலின் முடிவை நினைவிருக்கிறதா ? கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும் காலம். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று வயது முதிர்ந்து பழுத்து உதிரும் நிலையில் இருக்கும் , இரு நூற்றாண்டுகளைக் கண்ட, தொட்டவ்வாவிடம் கேட்கிறார்கள். வெள்ளைக்காரன் பெண்களை பலாத்காரம் செய்கிறானா, கொள்ளையடிக்கிறானா என்று அவள் கேட்கிறாள். இல்லை என்று சொல்கிறார்கள்.அப்படியானால்  அவர்களை நாம் வரவேற்போம், அவர்களுடன் சேர்ந்துகொள்வோம் என்று அவள் பதில் சொல்கிறாள்.

நமது சுதந்திர இந்தியாவில் எழுதப்பட்ட பெரும்பாலான கதைகளில் சுதந்திரப்  போராட்டத்தின் விளைவாக உருவான இலட்சியவேகம், வெள்ளைய ஆட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவற்றைக் காண்கிறோம். அதன் பிறகு வந்த ஆக்கங்களில் இலட்சியவாதத்தின் சரிவை , அதன் விளைவான சமூக வீழ்ச்சியின் சித்திரத்தைக் காணமுடிகிறது. கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் ஆகியவை முதல் வகை. ‘பொய்த்தேவு ‘ [க நா சுப்ரமணியம்] முதல் ‘ ஒரு புளியமரத்தின் கதை வரை நாவல்கள் பெரும்பாலும் வீழ்ச்சியின் சித்திரத்தை அளிப்பவை. ஆனால் இரு போக்குகளிலும் இருந்து விலகி கோபல்ல கிராமம் ஒரு தனியான பார்வையை அளிக்கிறது .

மேலும் படிக்க ...

பா.வானதி வேதா இலங்காதிலகம் *டென்மார்க்) கவிதைகள் நான்கு!

விவரங்கள்
- பா வானதி . வேதா. இலங்காதிலகம், டென்மார்க். -
கவிதை
18 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



1. நான்

அகக்கிண்ணம் நிறைந்து வழிவதால்
கனிந்த பார்வையின் கண்ணொளி வீச்சை
மனச்சுரங்கத்தில் சேமித்து வைக்கிறேன்
கடற்காற்றில் கன்னம் சிலிர்க்கிறது.
கப்பற் பாய்களை நினைவுபடுத்தும்
ஓப்பரா மண்டபக் கூரை. அதன் படிகளில் நான்.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு : கரிசல் இலக்கிய பிதா கி. ராஜநாராயணன் ( 1922 -2021 ) விடைபெற்றார் ! வாழும்போதே பலராலும் கொண்டாடப்பட்ட இலக்கிய ஆளுமை ! மழைக்கும் பாடசாலைப்பக்கம் ஒதுங்காதிருந்து பல்கலைக்கழக விரிவுரையாளரானவர் ! - முருகபூபதி -

விவரங்கள்
-முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
18 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலை, இலக்கிய, சினிமா, அரசியல் துறைகளைச்சேர்ந்தவர்களாலும் வாசகர்கள், இலக்கிய மாணவர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்ட கி. ரா என்ற கி. ராஜநாராயணன் மறைந்தார் என்ற செய்தி கவலையை தந்தாலும், அவர் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து, நூறாண்டுகளை அடைவதற்கு இன்னமும் ஒருவருடம் இருக்கும் நிலையில் தமது 99 வயதில் எம்மிடமிருந்து விடைபெற்றிருப்பது சற்று தேறுதலைத்தருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் அவரது பிறந்த தினத்தின்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்கூறியபோது, அவரது அருமை மனைவி கணவதி அம்மாவும் இருந்தார்கள். அந்த அம்மையாரும் கடந்த 2019 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். இருவரையும் முதல் முதலில் 1984 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் ஒரு கோடை காலத்தில்தான் அவர்களின் இடைசெவல் கிராமத்து இல்லத்தில் சந்தித்தேன்.

அவரது கிடை குறுநாவலை 1970 களில் ஶ்ரீமதி லக்‌ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தமது வாசகர் வட்டத்தின் வெளியீடாக வரவாக்கிய அறுசுவை நூலில் படித்திருந்தேன். அன்று முதல் எனது பிரியத்திற்குரிய படைப்பாளியானவர் கி.ரா. அவர்களைத் தேடிச்சென்ற அனுபவம் பசுமையானது. சிலவருடங்களுக்கு முன்னர் பிறந்ததின வாழ்த்துக்கூறியவாறு பேசியபோது, “ உங்கள் வயசு என்ன..? “ என்று கேட்டார். சொன்னேன். உடனே அவர், “ சரிதான் இன்னுமொரு திருமணம் செய்யிற வயசுதான் “ என்றார். இவ்வாறு கேலியும் கிண்டலுமாக பேசவல்லவர் அவர். திருநெல்வேலி பிராந்திய எழுத்தாளர்கள் அனைவருக்கும் மட்டுமல்ல பொதுவாக அனைத்து எழுத்தாளர்களுக்குமுரியது இந்த இயல்பு.

மேலும் படிக்க ...

கவிதை: நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே! - செ. சுதர்சன் –

விவரங்கள்
- செ. சுதர்சன் –
கவிதை
18 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


யுகமாய் எழுந்த பெருங்கனவொன்றை...
நீல மிடற்றில் செம்பட்டி சூடி,
நிகரில் சூதில் நிணக்கூழ் நயக்கும்,
ஆண்பாற் பேய்மகள் ஊழி விழுங்கிற்று!

யுகமே யுகமே எங்கெரியுற்றாய்!
வானிடை எகிறிப் பாய்ந்தெழு கொடியே,
வருபகை மடித்த மார்பெழு புகழே,
ஏனிடருற்றாய்! எங்கெரியுற்றாய்!

மூதின் முல்லைப் பெருங்கடல் அன்னாய்!
முள்ளிவாய்க்காற் சிறுமணற் கும்பிகாள்!
முடிவைக் கரைத்த நந்திக்கடலே!
மனத்துள் மண்ணை மகிழ்விற் சுமந்து,
களப்பெருஞ் சுரவழி நடைநின்றொழுகி,
நன்றென நின்றவர் நாடு பாடினர்.
காதம் நான்கின் வழிகளுந் தொலைய
கந்தகக் களிறால் எறிந்து வீழ்த்திக்
காடே ஆற்றாக் காடு பாடினை.

மேலும் படிக்க ...

கவிதை: நினைவு கூர்வோம்! நிர்மாணிப்போம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
18 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவாக..

முள்ளிவாய்க்கால்
ஒரு
நினைவுச்சின்னம்.
மானுட கோரத்தை
மானுடச் சோகத்தை
மானுடருக்குக் காட்டுமொரு
சின்னம்.

முள்ளிவாய்க்காலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

மேலும் படிக்க ...

வாழ்நாளில் பெரும்பகுதியை ஆராய்ச்சித் துறைக்கே அர்ப்பணித்த பேராசிரியர் வி. சிவசாமி! - வி. ரி. இளங்கோவன் -

விவரங்கள்
- வி. ரி. இளங்கோவன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
18 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாழ்நாளில் பெரும்பகுதியை ஆராய்ச்சித் துறைக்கே அர்ப்பணித்துச் சமஸ்கிருதத்துறைக்கும், நுண்கலைத்துறைக்கும் சிறந்த பங்களிப்பு வழங்கியவர் பேராசிரியர் வி.சிவசாமி. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமஸ்கிருதத் துறைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் வி. சிவசாமி வெளியிட்டுள்ள ஆய்வு நூல்களிலும், வெளியிட்ட கட்டுரைகளிலும், அவரது ஆராய்ச்சித் திறமை நன்கு புலப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். தாம் விரும்பிய முறையில் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று பார்க்கின்ற சந்தர்ப்பங்களையும், பெரும் பொருட் செலவுகளோடு கூடியதாக உரிய வாய்ப்புகளையும் பயன்படுத்திப் பல நாடுகளைப் பார்க்கும் சந்தர்ப்பங்களையும் தியாகம் செய்து சமஸ்கிருதத் துறையையும், அதனோடு தொடர்பான கலைகள் குறிப்பாக நுண்கலைகள், வரலாறு ஆகிய துறைகளில் மட்டுமன்றி இசை, பரதநாட்டியம், சிற்பம் முதலிய துறைகளிலும் பெரிதும் அபிமானமுள்ள இவர் நூல்களையும், கட்டுரைகளையும் எழுதித் தமது ஈடுபாட்டினைப் புலப்படுத்தியுள்ளார் எனப் பாராட்டுகள் பெற்றவர்.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: பெருந்தேவியின் 'ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்' - தங்கம் -

விவரங்கள்
- தங்கம் -
நூல் அறிமுகம்
17 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குட்டிக்கதைகள் அடங்கிய புனைவு ஒன்றை நீண்ட காலத்திற்குப் பின்பு வாசித்திருக்கிறேன். புனைவுகள், நாவல்களை நான் வாசிப்பது மிகவும் குறைந்து போயிற்று இப்போது. எல்லோரையும் போலவே நேரம் ஒரு அரும்பொருளாகிவிட்டிருந்தது எனக்கும். ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் புத்தகத் தெரிவு தற்செயலானதுதான்.

உண்மையில் நேரம் இருக்கிறதா, வரிசையாக அமர்ந்திருக்கும் வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வாசிக்க பயனுள்ளதா என மனம் மிக நுண்ணிய செக்கன்களைக் கணக்கிட்டு முடிவு செய்து, தமிழ்தானே என்று ஆதரவுக்கரம் நீட்டி வாசித்து முடித்ததுதான் ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் புனைவுகளின் தொகுப்பு.

ஐம்பத்தியொரு நுண்கதைகளை உள்ளடக்கிய இந்தப்புனைவு கிண்டிலின் மூலம் எனக்கு வாசிக்க கிடைத்தது. முதற்பதிப்பு ஆவணி 2020 இல் மின்னூலாக வெளிவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த நூல் சென்னை, பெசனட் நகரிலுள்ள சஹானா பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளது.

இந்த புனைகதைக்களுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் பெருந்தேவி. அழகிய அட்டையும், வாசிப்பு ஆர்வத்தை நீடிக்க வைக்கும் எழுத்தின்( Font) தேர்வும் நன்றாக இருக்கின்றன. இடையிடையே வரையப்பட்டிருக்கும் கோட்டுச்சித்திரங்கள் கூட பொருத்தமாக இருக்கின்றன. இதனை பேப்பர் புத்தகமாக கையில் வைத்து வாசித்திருந்தால் நன்றாக இருக்கும் போலவும் தோன்றியது.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி சஞ்சிகை இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 5: “ஈழத்துச் சிற்றிதழ்கள்” - தகவல்: அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
17 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல் : “பிரபஞ்சத்தின் மகாவிந்தை - கருந்துளைகள் (அறிவியல் தொடர் - 1)” - ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
17 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ZOOM வழியான , 6வது தொடர் கலந்துரையாடல்: எஸ். பொன்னுத்துரை எழுத்தாளர் , பதிப்பாளர் (1932 - 2014) - தகவல்: எம்.பெளசர் -

விவரங்கள்
- தகவல்: எம்.பெளசர் -
நிகழ்வுகள்
16 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம் : ஜீவநதி – ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழ்! இருபது ஆண்டுகால நாவல்களின் அறிமுகத்தை விமர்சனப்பாங்கில் பதிவுசெய்யும் அரிய முயற்சி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
13 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் நாவல் நூற்றாண்டு காலம் 1976 இல் வந்தபோது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவர் இலக்கிய விமர்சகர் பேராசிரியர் கைலாசபதி இரண்டு நாட்கள் ஆய்வரங்குகளை நடத்தினார். அக்காலப்பகுதியில் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூறாண்டு பிறந்துவிட்டது என்ற தகவல் தமிழகத்திற்கும் தெரியாதிருந்தது. அப்போது அங்கே முதல்வராக இருந்தவர் பல நாவல்கள் எழுதிய கலைஞர் கருணாநிதி. பின்னாளில் சிட்டி சுந்தரராஜனும் சோ. சிவபாதசுந்தரமும் இணைந்து தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதினார்கள். அதற்கு முன்பே, இலங்கையில் கலாநிதி நா. சுப்பிரமணியன் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலையும் வீரகேசரி பிரசுர நாவல்கள் பற்றிய மதிப்பீட்டு நூலையும் எழுதிவிட்டார். ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி என்ற நூலை சில்லையூர் செல்வராசன் 1967 ஆம் ஆண்டளவில் எழுதி வெளியிட்டுள்ளார். கைலாசபதியும் 1968 இல் தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலை எழுதியதையடுத்து, தமிழக விமர்சகர் வெங்கட் சாமிநாதன், அதற்கு எதிர்வினையாற்றி மார்க்ஸீயக் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற விமர்சனத்தை நடை இதழில் எழுதினார்.

அதனை இலங்கையில் பூரணி காலாண்டிதழ் மறுபிரசுரம் செய்ததையடுத்து, பேராசிரியர் நுஃமானும் அதற்கு நீண்ட எதிர்வினையை மல்லிகையில் தொடராக எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாக மு. பொன்னம்பலமும் மல்லிகையில் ஒரு கட்டுரையை எழுதினார். சில பதிப்புகளைக்கண்டுள்ள கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூல் கடந்த 2018 ஆம் ஆண்டிலும் மற்றும் ஒரு பதிப்பினைக்கண்டது. இந்த புதிய பதிப்பினை காலச்சுவடு வெளியிட்டது. நூலகர் நடராஜா செல்வராஜா, ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு என்ற விரிவான நூலை கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

இத்தகைய இலக்கிய வரலாற்றுப்பின்னணியுடன் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி மாத இதழ், தனது 150 ஆவது இதழாக ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழை 475 பக்கங்களில் பெறுமதி மிக்க ஆவணமாகவே வெளியிட்டுள்ளது. அதன் உள்ளடக்கமும் கனதியும் பிரமிப்பைத்தருகிறது. அதற்காக உழைத்த ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். மொத்தம் 107 தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்கள் இச்சிறப்பிதழில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

உதவிகளும் வறுமை ஒழிப்பும்! உலகில் இலங்கையின் அனுபவம்!

விவரங்கள்
- தகவல்: பாலநந்தினி பாலசுப்ரமணியம் -
நிகழ்வுகள்
12 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அஞ்சலி: சமூக,அரசியற் செயற்பாட்டாளர் நவரஞ்சன் (கோண்டாவில்) மறைவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று ஒரு துயரம் நிறைந்த நாள். எதிர்பாராத தகவலொன்றினை நண்பர் சிவா கந்தையா 'மெசஞ்சர்' வாயிலாக அனுப்பியிருந்தார். நண்பர் குணபாலனும் தொலைபேசியெடுத்து அறியத்தந்திருந்தார். அவருடன் தொடர்பிலிருந்த நண்பர் கிருஷ்ணாவும் அறியத்தந்திருந்தார். நண்பர் நவரஞ்சனின் (கோண்டாவில்) மறைவு பற்றிய செய்தி. நம்ப முடியவில்லை. நேற்றிரவு கூட எட்டு மணியளவில் முகநூலில் பதிவிட்டிருக்கின்றார். செய்தியைக் கேட்டபோது மன அழுத்தம், கொரோனாத் தொற்று நோய்த்தனிமை இவையெல்லாம் இன்னும் எத்தனைபேரை நம்மிடமிருந்து பிரிக்கப்போகின்றதோ என்ற எண்ணமே மேலெழுந்தது. கூடவே அவரை முதன் முதலில் சந்தித்த காலகட்ட நினைவுகள் எழுந்தன. நாட்டை விட்டு நீங்கி, அமெரிக்காவில் ஒரு வருடம் அலைந்து திரிந்து, 'கல்வியங்காடு கண்ணன்' என்னும் நண்பருடன் மொன்ரியால் வழியாகக் கனடாவுக்குள் வந்தபோது கண்ணன் மூலம் தற்காலிகமாக மொன்ரியாலில் கோண்டாவில் சுந்தரி (சிவா ஸ்டோர்ஸ் சுந்தரலிங்கம்) , ரஞ்சன் போன்றோர் வசித்து வந்த அபார்ட்மெண்டில் தங்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளைக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் சுந்தரியும் அவரது நண்பர்களும். சுந்தரி, நவரஞ்சன், குணபாலன், ஜெயந்தி (உரும்பிராய்), கஜன் , குகன் என்று இளைஞர்கள் பலர் உத்தியோகபூர்வமாகக் கழகத்துக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அக்காலகட்டத்தில் மொன்ரியாலிலிருந்து 'புரட்சிப்பாதை' என்னும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.  நவரஞ்சன் அச்சஞ்சிகை வெளிவருவதற்காகக் கடுமையாக உழைத்தவர்களிலொருவர். இலட்சியக் கனவுகளுடன், எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இயங்கிக்கொண்டிருந்த நவரஞ்சனின் முகம் இப்பொழுதும் நினைவில் பசுமையாக காட்சியளிக்கின்றது.

மேலும் படிக்க ...

அறிந்து கொள்வோம்: கேலிச்சித்திரக்காரர் அவந்த ஆர்டிகல (Awantha Artigala)! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் முக்கிய கேலிச்சித்திரக்காரர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் அவந்த ஆர்டிகலா.  'டெய்லி மிரர்', 'அத்த' ஆகிய பத்திரிகைகளில் வெளியாகும் அவரது கேலிச்சித்திரங்கள் தனித்துவமானவை. முக்கியமானவை. மிகுந்த வரவேற்பைப்பெற்றவை. சமூக,அரசியல் நிகழ்வுகளை படைப்புத்திறமையுடன், சமுதாயப்பிரக்ஞையுடன் விமர்சிப்பவை.

இலங்கை பல கேலிச்சித்திரக்காரர்களைக் கண்டுள்ளது. விஜேரூபகே விஜேசோமா (.Wijerupage Wijesoma)  அவர்களில் புகழ்பெற்ற கேலிச்சித்திரக்காரர். அவரது கேலிசித்திரமே அவந்தா ஆட்டிகல முதன் முறையாக , அவர் சிறுவனாகவிருந்த சமயம் எதிர்கொண்ட கேலிச்சித்திரம்.

பின்னர் விஞ்ஞானத்துறையில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவர் அதனை உதறிவிட்டு முழுநேரமாகக் கேலிச்சித்திரக்காரராக இயங்கத் தொடங்கி விட்டார். இலங்கையின் முக்கிய கேலிச்சித்திரக்காரர்களிலொருவராக அவர் தன்னை அடையாளப்படுத்திவிட்டார்.

மேலும் படிக்க ...

பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவாக.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் பிறந்த தினம் மே 10!

பேராசிரியர் கா.சிவத்தம்பியை நான்  முதன் முதலில் அறிந்துகொண்டது அவரது 'தமிழில் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்' ஆய்வு நூல் மூலம்தான்.  தினகரன் வாரமஞ்சரியில்  அவர் எழுதி வெளியான கட்டுரைகளின் தொகுப்பே அந்நூல். தமிழ்ப்புத்தகாலய வெளியீடாகத் தமிழகத்தில் வெளியானது. அவ்விதம் தமிழகத்தில் மேற்படி நூல் வெளிவரக் காரணமாகவிருந்தவர் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் என்பதை நூலுக்கான முன்னுரையில் பேராசிரியரே கூறியுள்ளார்.

இந்நூல் எனக்கு எவ்விதம் கிடைத்தது என்பதும் என் வாழ்வில் சுவையானதோர் அம்சம். ஏழாம் வகுப்பு மாணவனாக , மட்டக்களப்பில் நடந்த அகில இலங்கைத் தமிழ்த்தின விழாவில் கட்டுரை எழுத வவுனியா மகா வித்தியாலய மாணவனாகச் சென்றிருந்தேன். அதில் எனக்குக் கிடைத்த முதற் பரிசுக்காகக் கிடைத்த நூல்களிலொன்றுதான் மேற்படி நூல்.

அக்காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை பற்றிய ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் எழுதிய பலரும் தவறாது பாவித்த நூல்களிலொன்று இந்த நூல்.

இதன் பின்னர் என் வாசிப்பின் வளர்ச்சியினூடு இவரது கட்டுரைகள், நூல்களை வாசித்து வந்துள்ளேன். இவரது அறிவாற்றலில் மிகவும் மதிப்பு வைத்துள்ளேன். ஆனால் இவரது பிற்காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் இவரது நிலை தளும்பியதையும், சிலவற்றில் சில விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதையும் அவதானித்திருக்கின்றேன். முழுமதிக்கறைகளாக அவற்றை நான் அணுகுவேன்.

இவரை நான் ஒரு தடவை நேரில் சந்தித்துள்ளேன். நண்பர் ஒருவருடன் எண்பதுகளின் ஆரம்பத்தில் 'நுட்பம்' சஞ்சிகைக்காகக் கட்டுரை பெறுவதற்காகச் சந்தித்துள்ளேன். கட்டுரை தருவதாக உறுதியளித்தார். அச்சமயம் பேராசிரியர் கைலாசபதியையும் சந்தித்தேன். அவரும் குறிப்பிட்டதொரு தினத்தில் தருவதாக உறுதியளித்ததுடன் அத்தினத்தையும் தனது குறிப்பேட்டில் எம் முன்னால் வைத்தே குறித்துக்கொண்டதையும் அவதானித்தேன். குறித்த தினத்தில் பேராசிரியர் கைலாசபதி கட்டுரையினைத்தந்தார். பேராசிரியர் சிவத்தம்பியின் கட்டுரை கிடைக்கவேயில்லை.

மேலும் படிக்க ...

சிறுகதை: பொற்கூண்டுக்கிளிகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுகதை
10 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தாயகம் (கனடா) பத்திரிகையில் மணிவாணன் என்னும் பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதத்தொடங்கினேன். 'கணங்களும், குணங்களும்' என்னும் பெயரில் வெளியான சிறு நாவலே அவ்விதம் எழுதிய முதற் படைப்பு. அதன் பின்னர் சிறுகதைகள் சில (ஒரு விடிவும், ஒரு முடிவும், பொற்கூண்டுக்கிளிகள், ஒட்டகங்கள், மழையில் சில மனிதர்கள், இன்னுமொரு கதை) மணிவாணன் என்னும் பெயரில் தாயகம் பத்திரிகையில் வெளிவந்தன. இங்குள்ள 'பொற்கூண்டுக்கிளிகள்' கனடாவில் வசிக்கும் முதியவர்களின் வாழ்வு பற்றியது. இதுவரையில் வெளியான எனது தொகுப்புகள் எவற்றிலும் வெளிவரவில்லை. இச்சிறுகதை தாயகம் பத்திரிகையாக தொடங்கிய காலகட்டத்தில் எண்பதுகளின் இறுதியில் வெளியானது. சில திருத்தங்களுடன் இங்கு மீண்டும் வெளியாகின்றது.  -


மகன் ராம்குமார், மருமகள் தமயந்தி, மகள் வதனா எல்லோரும் வேலைக்குப் போய்விட்டார்கள். இனி அவர்கள் மாலையில்தான் வருவார்கள்.  ராஜதுரையார் அது மட்டும் அப்பார்ட்மெண்டில் தனியாகத்தான் இருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் செல்லம்மா மட்டும் இருப்பாளென்றால் அவருக்குத்தான் எவ்வளவு துணையாக இருக்கும். ம்... மகராசி நேரத்தோடு போய்ச் சேர்ந்து விட்டா..

'இந்தப்பாழாய்ப்போன சிங்கள, தமிழ் பிரச்சினை மட்டும் இல்லையென்றால் .. உவங்கள்  ஆமிக்காரன்ற கரைச்சல் மட்டும் இல்லையென்றால் அவர் கனடாவுக்கு விசிட் பண்ணிவிட்டுப் போயிருப்பார். இந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் அங்கென்றால் கந்தையா வாத்தி இருக்கின்றார் அரட்டையடிப்பதற்கு.. இல்லாவிட்டால் அது இதென்று பொழுது போய்விடும்.

என்ன மாதிரி உற்சாகமாக, துடிப்புடன் திரிந்துகொண்டிருந்தார். அந்தத் துடிப்பு, கம்பீரம் , உற்சாகம் எல்லாமே வடிந்து விட்டன. புதிய சூழல் எவ்வளவு தூரம் அவரை மாற்றி விட்டது. அங்கு அவருக்குச் செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இங்கு....

இங்கு இவருக்கு என்ன குறை?

அன்பான பிள்ளைகள், பண்பான மருமகள், வேளை வேளைக்குச் சாப்பாடு, எல்லாமே இலகுவான வகையில் செய்யும்படியான வசதிகள்..வருத்தமென்றால் 'ஓகிப்' இருக்கிறது. .. டாக்டர் இருக்கிறார்... டி.வி.யைத்திருப்பினால் வகை வகையான நிகழ்ச்சிகள்.. அடிக்கடி உடனுக்குடன் ஊர்ப்புதினங்களை அறியத்தமிழ்ப் பத்திரிகைகள்.. தொலைபேசிச் செய்திகள்....

மேலும் படிக்க ...

அனைவருக்கும் அன்னையர்தின வாழ்த்துகள்!

விவரங்கள்
Administrator
சுற்றுச் சூழல்
09 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
அன்னையின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
 
 
அற்புதம்! இந்தக் கரடியன்னை தன் குழந்தைகளுடன் வீதியைக் கடக்க முற்படுகையில்தான் எத்தனை எத்தனை தடைகள்! குழந்தைக்கரடிகளின் குழந்தைத்தனத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து, எத்துணை பொறுமையாக இந்த அன்னை வீதியைக் கடக்கின்றது.
அன்னையின் முயற்சி வெற்றியடையும் வகையில் பொறுமை காத்த மானுடர்களுக்கும் நன்றி!
 
https://www.youtube.com/watch?v=ho3IFJiBzrY

தொடர் நாவல் : கலிங்கு (2006 -10) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
09 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


10

லாம்பு கொளுத்த இன்னும் நேரமிருந்தது. மேற்கு மூலையில் சூரியன் அழுந்திச் செல்ல, கிழக்கு மூலையிலிருந்து கிளம்பி மேலே பரந்துகொண்டிருந்தது இரவு. பகலைச் சந்திக்கும் புள்ளியை இரவு கடக்கும் கணம் அது. பார்த்துக்கொண்டே சங்கவியிருக்க இரவு புள்ளியைத் தாண்டிற்று ஒரு பாய்ச்சலாக. நிலா தோன்றியிருக்க வேண்டிய நேரம். ஆனால் அதன் சுவடுகூட தெரியாதபடி வானத்தை மேகம் மூடியிருந்தது. எந்த நாளுமில்லாத ஒரு இருண்ட திரைபோல் வானத்தில் அது தொங்கிக் கொண்டிருந்தது. மடியில் கார்த்திகாவை இருத்தி வைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து ஒரு ஸ்தம்பிதத்தில்போல் மேற்குப் பார்த்தபடி இருந்தாள் சங்கவி.

மின்மினிகள் பறந்து இரவின் முழுமையைச் சொல்லிச் சென்றன.

மேலே இருளும், பூமியில் நிசப்தமும் நிரம்பி வழிந்தன.

எதிர் வீட்டுக்காரர் நல்ல சனங்கள். அவர்களும் போய்விட்டிருந்தனர். வீடு இருண்டு கிடந்தது. அம்மா, பாட்டி, அப்பா, தாமரையக்கா எல்லாரும் நல்லவர்கள். தாமரையக்காவின் தம்பி செழியனை ஆறு மாதங்களுக்கு முன் இயக்கம் வந்து தாய், தமக்கை, பாட்டி அத்தனை பேர் முன்னிலையிலும் வீட்டுக்கொருவர் என்ற கணக்கில் அவனைப் போருக்கு இழுத்துச் சென்றது. கையிலே துவக்கு இருக்கிறபோதும் எதிரியை அவன் சுடுவானாவென சந்தேகப்படும்படி அவனது முகம் அந்தளவு பிள்ளைமைத் தனத்தோடு இருந்திருந்தது. ஊரிலே நடப்பது தெரிந்திருந்த தாயும் தந்தையும் கல்யாணமொன்றைச் செய்துவைக்க  அவனை நான்கு மாதங்களாகக் கெஞ்சினார்கள். வடிவான பெட்டை, பதினாறுதான் வயது, பொத்திப் பொத்தி வைத்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் வீட்டிலே, அவளது ஒரு தமையனும், ஒரு தமக்கையும் இயக்கத்தில் இருப்பதால் போராளியாக வலுக்கட்டாயமாய் இயக்கத்தில் சேர்க்கிற பிரச்னையில்லாமல் இருக்கிறார்கள், அவளுக்கும் சம்மதமாயிருக்கிறதென என்ன அவர்கள் சொல்லவில்லை? தனக்கே பதினாறு வயதுதானாகிறது, ஓ.எல். எழுதியதும் ஏ.எல். படிக்கவேண்டும், கம்பஸ் போகவேண்டுமென்று விடாப்பிடியாக அவர்களது கெஞ்சல்களை செழியன் மறுதலித்திருந்தான். ஒவ்வொரு தெரிந்தவர் உறவினர் வீடாக கொஞ்சக் கொஞ்ச நாட்கள் ஒழித்தும் வைத்தார்கள். அவன் வீடு வந்திருந்த ஒருநாள் அதிகாலையில்  வந்து அவனை இயக்கம் பிடித்துப் போய்விட்டது. அந்த வீட்டிலே மூன்று நாட்கள் விடாத அழுகையொலி கேட்டது. சோகம் மீறுகிற அளவில் அவனது தாய்க்கு ஒப்பாரியாகவே வந்தது. தாமரைதான், வில்லங்கமாய்க் கூட்டிப்போயிருந்தாலும், களத்தில் நிக்கப்போகிறவன்மேல் ஒப்பாரி வைக்கக்கூடாதென அவளை அடக்கிவைத்தாள். அப்போது அவள் கொஞ்சம் தெளிந்திருந்தாள். ஆனாலும் கண்ணீர் நிற்காதவளாகவே இருந்தாள். அதற்குள் சகலதையும் விட்டுவிட்டு அவர்கள் சொந்த மனை நீங்கிவிட்டார்கள்.

வெளிக்கிடுவதற்கு முன் தாமரையக்கா வந்து சங்கவியைக் கேட்டிருந்தாள். ‘சனமெல்லாம் ஓடிக்கொண்டிருக்கு, சங்கவி. நீயும் பாக்கிறாய்தான?’

மேலும் படிக்க ...

ஆய்வு: இலக்கியங்கள் போற்றும் விருந்தோம்பல்! - முனைவர் மூ.சிந்து -

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -
ஆய்வு
09 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

பண்டைத் தமிழரின் வாழ்க்கை நிலையை எடுத்தியம்பும் இலக்கியக் காலக் கண்ணாடியாகத் திகழும் இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றும் மனிதனது வாழ்வின் பல்வேறு நிலையை வெளிக்காட்டுவதாகவும், தனி மனிதன் தன்னுடைய வாழ்விற்குத் தேவையான இனிய, இன்னாத செயல்களை அழகுற எடுத்தியம்பும் உயிரோட்டத்துடன் கூடிய இலக்கியமாக அமைகின்றது. இத்தகைய தன்மை கொண்ட இலக்கியமானது மனிதனோடு ஒன்றிணைந்து இயங்கும் நிலையைக் காணலாம். அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், புலவர்கள், மக்கள் எல்லோரும் தனக்கென வாழாது பிறர்க்காக வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், தன்னைத் தேடி வந்த புலவர்கள், விருந்தினர்கள் ஆகியோரை உபசரிக்கின்ற முறையையும் இலக்கியங்கள் பறைசாற்றும் நிலையைக் காணலாம். சங்க இலக்கியம் தமிழர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்பது மிகையாகாது. அவற்றுள் உணவு முறைகளைப் பற்றிய கருத்தினைத் தொகுக்கும் களமாக அமைகிறது.

தமிழர்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த சிறப்பிற்குரியது தொல்காப்பியம். பெண்களுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாக விருந்தோம்பல் அமைந்தமையை,

“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோர்மாண்புகள்” (தொல்.1102)

தொல்காப்பியர்சுட்டுகிறார்.

விருந்து

‘விருந்து’ என்ற சொல் புதுமை என்ற பொருளைத் தருகிறது. ‘ஓம்பல்’ என்ற சொல் பாதுகாத்தல், சிறப்புச் செய்தல் முதலிய பொருள்களில் வழங்கப்படுகிறது. எனவே, விருந்தோம்பல் என்ற சொல் தம் இல்லம் தேடி வரும் புதியவர்களுக்கு உணவு அளித்துச் சிறப்பு செய்த நிலமையைக் குறிக்கும்.

மேலும் படிக்க ...

நோர்வேயில் சிறுவர் கதைகள் நூல்களான நண்பர்கள்,வசந்தாவும் மாறனும் மற்றும் அவந்திகாவின் பள்ளி நாள் நூல்கள் வெளியீடு! - யோகராணி கணேசன் -

விவரங்கள்
- யோகராணி கணேசன் -
நிகழ்வுகள்
09 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

17.04.2021 அன்று மாலை 6 மணிக்கு நண்பர்கள், வசந்தாவும் மாறனும் மற்றும் அவந்திக்காவின் பள்ளி நாள் ஆகிய மூன்று சிறுவர் சிறுகதைகள் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டது. தற்கால கொரோணா சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு இணைய முற்றத்தில் Team செயலியூடாக அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அனுசரணையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: இளங்கோவின் ‘மெக்சிக்கோ’: இன்றைய காலத்தின் நாவல்! - எஸ்.கே.விக்னேஸ்வரன் -

விவரங்கள்
- எஸ்.கே.விக்னேஸ்வரன் -
நூல் அறிமுகம்
07 மே 2021
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜீவநதி இதழின் நாவல் சிறப்பிதழில் வெளிவந்த (150ஆவது இதழ்)  எழுத்தாளர் இளங்கோ  எழுதிய ‘மெக்சிக்கோ’ என்ற நாவல் பற்றிய எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் கட்டுரை. -


இளங்கோவின் ‘மெக்சிக்கோ’ நாவல் பற்றி ஜீவநதியின் 150 வது இதழுக்கு ஒரு விமர்சனம் எழுதமுடியுமா என்று இதழாசிரியர் பரணீதரன் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார். அந்த இதழ்  ‘ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழாக’  வரப்போவதாக வேறு குறிப்பிட்டிருந்தார். அதிகம் யோசிக்காமல் அவருக்கு ஓம் என்று பதில் போட்டுவிட்டேன். ஆனால் நாட்செல்லச் செல்ல ஒருவகைத் தயக்கம் எழத் தொடங்கியது. நான் இதுவரை காலத்தில் எப்போதாவது ஒரு நாவல் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறேனா, எழுதியவை எல்லாமே வெறும் அனுபவக் குறிப்புகளாக அல்லது அறிமுகக் குறிப்புகளாகத் தானே இருந்திருக்கின்றன. அப்படி இருக்க என்ன துணிவில் இந்த நாவலுக்கு மட்டும் எப்படி விமர்சனம் எழுத ஒப்புக் கொண்டேன்?. பேசாமல் ஒரு அனுபவ அல்லது அறிமுகக் குறிப்பை எழுதி அனுப்பிவிடலாமோ என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.

இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட நாவலை மீண்டுமொருமுறை திரும்ப வாசித்தேன். இரண்டாவது வாசிப்பின் போது நாவலுள் இன்னமும் அதிகமாக உட்செல்ல முடிந்தது உண்மைதான். ஆயினும் விமர்சனம் எழுதுவதற்கான உந்துதல் எளவில்லை. ஆனால் இப்போது இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்திலிருந்து சரியாக இரண்டு நாட்களுக்கு முதல் இளங்கோ தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். சிறிது காலத்துக்கு முன் எழுதப்பட்டதென அவர் குறிப்பிட்டிருந்தாலும், இப்பதிவை நான் இப்போதுதான் முதலாவதாக வாசித்ததாக நினைக்கிறேன். அந்தப் பதிவில் அவர் எழுதியிருந்த ஒரு விடயம் என்னை சற்று நின்று திருப்பி வாசிக்க வைத்தது. அவர் எழுதியிருந்தார்:

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. படித்தோம் சொல்கின்றோம்: நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி! மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் ! - முருகபூபதி -
  2. Open Call: Translators from South Asia! - Kanchana Priyakantha -
  3. வைரவிழாக் காணும் தேசபாரதி! கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் எடுக்கும் பாராட்டு விழா!
  4. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்! - தகவல்: 'ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
  5. அஞ்சலி: நாட்டுப்புறப்பாடகரும்,, நடிகருமான டி.கே.எஸ். நடராஜன் (23 ஜூலை 1933 – 5 மே 2021) மறைவு! - ஊர்க்குருவி -
  6. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு உடுமலை நாராயண கவி இலக்கிய விருது! - தகவல்: சுப்ரபாரதிமணியன் -
  7. தொடர் நாவல்: ஒரு கல் கரைந்தபோது (1) - ஶ்ரீராம் (நெல்லை, வீர்வநல்லூர்) -
  8. தமிழகத்தேர்தல் முடிவுகள்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி! - ஊர்க்குருவி -
  9. ஆய்வு: பழங்குடிகள் போற்றும் இயற்கையறம்! - முனைவர் செ. துரைமுருகன் -
  10. ஆய்வு: அக்க பக்க (நீலகிரி படகர்களின் வாழ்வியல் பரிணாமமும் பரிமாணமும்)! - முனைவர் கோ.சுனில்ஜோகி -
  11. அந்தரங்கம் (சிறுகதைகள்) நோயல் நடேசன் நூல் விளக்கம்
  12. ரூபா! - ஶ்ரீரஞ்சனி -
  13. கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் 'இலையுதிர்கால நினைவுகள்' மற்றும் 'வசந்த காலம் 1971' - வ.ந.கிரிதரன் -
  14. உணர்வால், புகழால் எங்கும் நிறைந்திருக்கிறார் ஜெயகாந்தன்: ஏப்ரில் 24 - பிறந்த நாள் கருத்தரங்கில் ஆளுமைகள் புகழாரம்
பக்கம் 121 / 128
  • முதல்
  • முந்தைய
  • 116
  • 117
  • 118
  • 119
  • 120
  • 121
  • 122
  • 123
  • 124
  • 125
  • அடுத்த
  • கடைசி