- முல்லைஅமுதன்

தேடுவாரற்றுக் கிடந்த
அடர்ந்த மணற்புதருக்குள்
இருந்து எடுத்துவந்தார்கள்.
முகம் சிதைந்திருந்தது.
உடல் அமைப்பைக்கொண்டு
அடையாளம் கண்டு
முடியாமல் இருக்கிறது என்றார்கள்.
அவசரவண்டியுடன்,
காவல்துறையினரும்
வருவதாக
பேசிக்கொண்டார்கள்.
ஆங்காங்கே குண்டுகள் பட்டு
குருதியின் அடையாளத்தையும் கண்டார்கள்..
கள்வனாக இருக்குமோ?

குழு மோதலிலும் இறந்திருக்கலாம்.
பணத்திற்காகவும்
கொன்றிருக்கலாம்.
எப்படி?
கிழிந்திருந்த
சட்டைப்பையிலிருந்து ஒருவன்
உருவி எடுத்தான்.
கவிதை..என்னை அடையாளப்படுத்தியது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்