பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பதிவுகள் இணைய இதழ்

எழுத்துலக எழுச்சி எஸ்.பொ !

E-mail Print PDF

எஸ்.பொ

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து - சிறுகதை, நாவல் ,விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு.அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.  இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள்.அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார்.இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்க லாம் என எண்ணத்தோன்றுகிறது.

பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டு விடுவார்கள்.ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார்.இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன.இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படா நிலையும் காணப்பட்டது.ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார்.எப்படியும் எழுதுவார்.எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார்.எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம்.

பொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார்.படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள்.1961 ஆம் ஆண்டில் " தீ " என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது.இப்படியும் எழுதுவதா ? இது ஒரு எழுத்தா ? இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோ தான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது.

" தனது பலவீன நிலைகளில் செய்வனவற்றையும் அனுபவிப்பனவற்றையும் சொல் லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்பட வேண்டும் ? " என்று எஸ்.பொ. வே தீயின்
முன்னுரையில் எழுதுவதை நாம் உற்று நோக்குதல் வேண்டும்.

இந்த நாவலை எஸ்.பொ இன்று உயிருடனிருந்து மீண்டும் எழுதினாலும் வேறு மாதிரியாக எழுதியிருக்க மாட்டார்.காரணம் அதுதான் அவரின் எழுத்தின் சத்திய ஆவேஷம்.வேஷம் தரித்து அவரால் எழுதமுடியவில்லை.முகமூடி அணிந்து எழுதுவதையும் அவர் தனதாக்கிக் கொள்வதில்லை.

எஸ்.பொ ஒரு தனித்துவமான படைப்பாளி.இவர் தனது எழுத்தில் அகலக்கால் பரப்பினாலும் - ஒவ்வொருதுறையின் அகத்தையும் புறத்தையும் உணர்ந்தே செயற்ப ட்டிருக்கின்றார்.

இலக்கியத் திறமையைப் பொறுத்தவரை எஸ்.பொ தன்னை ஒரு மன்னனாகவே நினைத்துக்கொள்ளுகின்றார்.சந்தர்ப்பத்துக்கு ஏற்றவிதத்திலும்,கதைகளுக்கு ஏற்றவிதத்திலும் தனது எழுத்துநடையினை மாற்றக்கூடிய வல்லமை மிக்கவராக விளங்கினார்.ஈழத்திலிருந்த மற்ற எழுதாளருக்கு இல்லாத இந்தத்திறமையினை எஸ்.பொ பெற்று விளங்கினார் என்பதே அவரின் தனித்துவம் எனலாம்

" வீ " இல் இடம்பெறும் பதின்மூன்று கதைகளுமே இந்திய தமிழ் எழுத்தாளருக்கே ஒரு சவாலாக அமைந்திருக்கிறது." ஈழத்தில் நடைபெறும் இலக்கிய முயற்சிகளின் வண்ணத்தையும் வகையையும் அறிய விரும்புந் தென்னகத்தாருக்கு , " வீ " யைக் கலாசாரத் தூதுவனாக அனுப்பிவைக்கலாம்  என்று - வீ யின் அணிந்துரையில் இரசிகமணி கனக.செந்திநாதன் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

இரசிகமணியும் எஸ்.பொ வும் வடக்கும் தெற்குமாயிருப்பவர்கள்.எஸ்.பொ வை விமர்சிக்கும் இரசிகமணிக்கே தனது வீ யை அனுப்பி அதற்கு அணிந்துரை கேட்ப தென்றால் எவ்வளவு துணிச்சல் வேண்டும்.இரசிகமணியே எஸ்.பொ வின் புத்தகப்பார்சல் வந்தததும் திகைத்துவிட்டாராம் என்று அணிந்துரையில் குறிப்பிடுகிறார். எழுத்தையும் அதன் திறத்தையும் மதிக்கும் நயத்தகு நாகரிகம் இரசிகமணியிடம் நிறைந்து இருந்ததாலும் - எஸ்.பொ வின் "வீ " யின் எழுத்துப் புதுமையும் அந்தப் படைப்புக்கு இருந்ததாலும் மிகச்சிறந்த அணிந்துரை இரசிகமணியிடமிருந்து வந்துசேர்ந்தது.இதுதான் எஸ்.பொ என்னும் எழுதாளனின் ஆளுமையாகும்.

பிரச்சனைக்குரிய எழுத்தாளர் எனப் பெயர்வாங்கியவர்தான் எஸ்.பொ. எழுதப்போனால் பிரச்சனை , பேசப்போனால் பிரச்சனை, என்றிருந்தாலும் அவரின் பேச்சையும் எழுத்தையும் இரசிக்கக்கூட்டம் பெருகியது என்றுதான் சொல்லலாம்.

எஸ்.பொ வின் எழுத்தில் ஒரு நையாண்டியும் கிண்டலும் இளயோடும்.இது அவரின் பேச்சிலும் கலந்துநிற்கும்.இதனால் அவர் அருகில் செல்லவவே பலர் அச்சப்
படுவதுமுண்டு.

இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு அவர்தயங்குவதில்லை.அவரின் வேலைகாரணமாகவும் இந்த இயல்பு வந்திருக்கலாம்.

ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக, ஆங்கிலத்துறை விரிவுரையாளராக அதன் தலைவராக என கல்விசார் துறைகளில் நீண்டகாலம் எஸ்.பொ பணியாற்றிறி இருக்கின்றார்.நீண்டகாலம் கிழக்கு மாகாணத்தில்இவர் இருந்திருக்கிறார்.

பணியாற்றிய காலத்திலும் இவர் அதிகாரிகளுக்குப் பயந்து நடங்கியதும் கிடையாது .மனதுக்குப் பிடித்ததைச் செய்வார்.தலையிட்டால் நியாயப்படுதுவார். ஆனால் எதற்கும் வளைந்து நெளிந்துபோகும் நிலையை அவர் விரும்பாமலே இருந்தார்.இதனால் அவருக்கு வந்த பதவிகளும், வரவிருந்த பதவிகளுமே நிலைக்காமலேயே காணப்பட்டது.எது எப்படியிருந்தாலும் எழுதுவதைமட்டும் எஸ்.பொ நிறுத்தவே இல்லை.

குடும்பத்தில் பல துன்பங்கள் வந்துசேர்ந்து எஸ்.பொ வே இல்லாமால் ஆகிவிடுவாரோ என்னும் நிலையினையும் புறந்தள்ளி தமிழையே சுவாசித்து தமிழிலே மீண்டும் பல புதிய படைப்புகளை அளித்தார் என்பது மிகவும் முக்கிய மான விஷயம் எனலாம்.

எஸ்.பொ.வின் நனைவிடை தோய்தல் தமிழிலக்கியத்தில் ஒரு புதுவரவாகும். " தீ " எழுதிய பொழுது கையாண்ட எழுத்துக்கு மிகுந்த துனிச்சல் வேண்டும்.சொல்லலாமா ? விடலாமா? என்று தயங்காமல் சொல்லுவது யாவர்க்கும் ஏற்றதாக இருப்பதில்லை. ஆனால் எஸ்.பொ மட்டும் இவற்றையெல்லாம் தாண்டி துணிந்து சொல்லியே விடுவார்,இதைத்தான் அவரின் தீயில் காண்கின்றோறோம்

ஆனால் அவரின் " நனைவிடை தோய்தல் " அப்படியானதன்று.புலம்பெயர்ந்து சென்றாலும், புதுவசதிகள் கிடைத்தாலும், பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணையும் அங்கு இருந்த வாழ்க்கை முறைகளையும் எப்படி மறக்கமுடியும் ? மறக்கத்தான் மனம் வருமா ? என்னும் ஒரு நிலையினை வெளிப்படுத்தும் வண்ணம் புனையப் பட்டதுதான் இப்புதிய முயற்சியாகும்.

பேனை கிடைத்துவிட்டால் எழுதிவிடலாம் என எண்ணுகின்றவர்களுக்கு மத்தியில் எழுத்தையே தவமாக்கி எழுத்திலே புதுமைகண்டு எழுத்துக்குள் வாழ்ந்தவர்தாதான் எஸ்.பொ எனலாம்.

இவர் சாதாரணமாக எழுதவிரும்பாமல் - புதிதாக அதாவது பரிசோதனைகள் புகுத்தி எழுதவிரும்பினார்.அவ்வழியில் செயல்பட்டவேளை விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளானாலும் விடாது செயற்பட்டார். எஸ்.பொ. என்னும் முத்திரையினை பதித்தும் நின்றார்.

கூட்டு இலக்கிய முயற்சிகள் தோன்றவேண்டு மென்னும் ஆர்வத்துடன் எஸ்.பொ உழைத்துவந்தார். முதன் முதலாக ஐந்து எழுதாளர்களை சேர்த்து " மத்தாப்பு " என்னும் குறுநாவல் வீரகேசரியில் வெளியிட்டமையும், நவரசங்களைச் சித்திரிக்கும் " மணிமகுடம் " என்னும் நாவலும் வீரகேசரியில் பிரசுரமாகியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தான் எழுதும் விஷயங்கள் பத்திரிகைகளில் பிரசுரமானால் போதும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் சேர்ந்து கொள்ளுபவராக எஸ்.பொ ஒருபொழுதும் விளங்கியதில்லை. அவரின் எழுத்தை அவர் மிகவும் நேசித்தார்.அவர் தனது எழுத்தில் தனக்கு விரும்பியதை தந்து நின்றார்.பரிசோதனைகளை தமிழிலக்கியப் பரப்பில் பரவவிட்டார்.அதற்குத்தானே ஆகுதியாகியும் நின்றார்.

ஈழத்து இலக்கிய வரலாற்றை எழுதப்புகுவார்கள் எஸ். பொ வை விட்டுவிட்டு எழுதமாட்டார்கள். அந்த அளவுக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்த எழுத்து ஆளுமையாக எழுத்தின் எழுச்சியாக எஸ்.பொ விளங்குகிறார் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Thursday, 01 December 2016 00:41  


'

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றம்/ நோக்கம்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

கட்டுரைகள்: கடந்தவை

கடந்தவை 1

கடந்தவை 2

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)



'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

Yes We Can




வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்

 

' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

THANK YOU!

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

மதுரைத் திட்டம்

மதுரைத்திட்டம்

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

படிப்பகம்

உலக வானொலி