இந்தியப் பே(போ)ரரசு
"மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு எடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக் கண்ட இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள்....." இந்த அதிகார வர்க்கத்தின் குரல் வந்தது ஈழத்தில் இருந்து அல்ல. இந்தியாவிலிருந்து இந்திய மக்களுக்கு எதிராக வந்தக் குரல்தான் இது. பிஜப்பூரின் காவல்துறை அதிகாரி தனக்கு கீழ் பணி புரியும் காவல்துறைக்கு வயர்லஸ் மூலமாக பிறப்பித்த உத்தரவு... அதிகாரியின் பெயர் டி. எஸ். மன்ஹர்.