'டொராண்டோ' நூல் வெளியீடும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்...

இந்தப் புகைப்படத்தை ஒருமுறை பாருங்கள். இதிலுள்ளவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால் இவர்கள் எவ்விதம் முகமூடி (Face Mask) அணிந்திருக்கின்றார்கள் என்பதை. எத்தனைபேர் 'முகமூடி'கள் அணிந்திருக்கின்றார்கள் என்பதையும் கவனியுங்கள். அருகருகில் நெருங்கி நின்று எவ்விதம் சமூக இடைவெளியைப் பேணுகின்றார்கள் என்பதையும் அவதானியுங்கள். நான் நினைக்கின்றேன் இவர்கள் 'ட்ரம்பின்' ஆதரவாளர்களென்று.. :-)
தற்கொலை - தடுப்பதற்கான முயற்சி
தப்பித்தலுடன் தொடர்பான ஒரு செயற்பாடே தற்கொலை எனலாம்.
தற்கொலை என்பது அந்த நேரத்திலான ஒரு முடிவாக இருப்பது மிகவும் அரிதாகும். பத்துப் பேரில் எட்டு பேர் தற்கொலை செய்துகொள்வதற்கான எண்ணம் இருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிகளைச் சிலருக்கோ அல்லது பலருக்கோ காட்டியிருப்பார்கள் என்கிறது ஆய்வு. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், தற்கொலை என்பது மனக்கிளர்ச்சியிலான ஒரு செயலாகத் தோன்றலாம், ஆனால் அது எழுந்தமானமானதொரு நிகழ்வல்ல, அது ஒரு செயல்முறை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தற்கொலையைப் பற்றிப் பேசுவதற்குப் பொதுவில் நாங்கள் எவருமே விரும்புவதில்லை. அத்துடன், எங்களுக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் அந்த முடிவுக்கு ஒருபோதும் வரமாட்டார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஆனால், எங்களுக்குத் தெரிந்தவர்களும் தற்கொலையைத் தெரிவு செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இருப்பினும், தற்கொலை ஒரு களங்கம் என்ற உணர்வு அல்லது அது அவமானம் தரும் ஒரு செயல் என்ற கருத்துப்பாடு எங்களைச் சங்கடப்படுத்துவதால் அதைப் பற்றி நாங்கள் அதிகம் கலந்துரையாடுவதில்லை. அதனால், ஒருவர் உணரும் வலி பற்றியோ அல்லது அவருக்குத் தேவையான உதவி பற்றியோ வெளிப்படையாகப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.
தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென ஒருவர் முடிவெடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உண்மையில், அந்தக் காரணங்கள் பற்றிய ஒருவரின் உணர்வுகள்தான், அந்தக் காரணங்களைவிட மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. குறித்த வலியைத் தொடர்ந்து தாங்கமுடியாது அல்லது நிச்சயமற்ற வாழ்வைத் தொடரமுடியாது என்பதின் அடிப்படையில் எழும் நம்பிக்கையின்மை, கையலாகதன்மை மற்றும் விரக்தி போன்ற தீவிரமான உணர்வுகளால் தற்கொலைதான் தீர்வென முடிவெடுப்பவர்கள் ஆட்கொள்ளப்படுகிறார்கள். வேறு சிலருக்கு சில வகையான மனநோய்களின் தாக்கம் தற்கொலை செய்வதற்கான தூண்டல்களைக் கொடுக்கக்கூடும். அப்படியான தூண்டல்களை குரல்களாக அவர்கள் கேட்கக்கூடும், அல்லது விம்பங்களாகப் பார்க்கக்கூடும்.
தீயில் பூத்த மலர்

- தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் மோகன் அருளானந்தம் (இவர் மட்டுநகரைச் சேர்ந்தவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் என்னுடன் கட்டடக்கலை பயின்ற சக மாணவர்களிலொருவர். அவர் தன்னுடைய 83 ஜூலைக் கலவர நினைவுகளை அவரது வலைப்பதிவான 'Closetoheartweb'இல் ஆங்கிலத்தில் The Journey Begins என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார். அதனை எனக்கும் அனுப்பியிருந்தார். அதன் தமிழ் வடிவமிது. 'தீயில் பூத்த மலர்' என்னும் தலைப்பில் வெளிவருகின்றது. தமிழில் பதிவு செய்வதன் மூலம் பலர் அறிய வாய்ப்புள்ளதால் தமிழாக்கம் செய்துள்ளேன். இதற்கான ஓவியத்தினை வரைந்திருப்பவர் கிறிஸ்ரி நல்லரட்ணம். - வ,ந.கி -
அது ஒரு சனிக்கிழமை. 23 ஜூலை 1983. பத்திரிகைகள் பின்வரும் செய்தியினை வெளியிட்டிருந்தன: "வட மாகாணத்தில் 13 இராணுவத்தினர் மறைந்திருந்து தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டனர். உடல்கள் திங்கட்கிழமை கொழும்புக்குக்கொண்டு வரப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. "
இந்தத் தலைப்புச் செய்தி முப்பது வருடங்கள் நீடிக்கப்போகின்ற சமூக யுத்தமொன்றை உருவாக்கும் விதையொன்றினை விதைத்துள்ளது என்பது பற்றி நாங்கள் எவ்விதம் கருத்தையும் அச்சமயம் கொண்டிருக்கவில்லை. இந்தத் தனிச் சம்பவம் எங்கள் அனைவரின் வாழ்க்கையையும் கடுமையாக மாற்றப்போகின்றது என்பதை நாம் உணர்ந்திருக்கவில்லை.
வழக்கமாக உயிர்த்துடிப்புடன் விளங்கும் எம் அயலில் கனத்த அமைதி குடிகொண்டிருந்தது. என்னாலும், மனைவியாலும் நித்திரைகொள்ளக்கூட முடியவில்லை. நாங்கள் அனைவரும் விளிம்பில் இருப்பதுபோன்ற நிலையற்ற சக்தி அல்லது உணர்வு காற்றில் பரவிக்கிடந்தது. ஏதோவொன்று சரியில்லையென்பதை எங்களால் உணரமுடிந்தது. ஆனால் அடுத்த நாள் நாங்கள் விழித்தெழுந்தபோது வழக்கமான ஆரவாரம் எங்கள் வீதியில் மீண்டிருந்தது. எல்லாமே வழமைக்குத் திரும்பியதைப்போல் தெரிந்தது. வழக்கம்போல் நானும் வேலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகிப் புறப்பட்டேன். ஆனால் என் மனைவி முதல் நாள் செய்தி ஏற்படுத்திய பாதிப்பு நீங்காத நிலையில் வேலைக்கு விடுமுறையெடுத்திருந்தார்.
இன்று நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்

நவம்பர் 19 , சர்வதேச ஆண்கள் தினமாக வருடாவருடம் கொண்டாடப்படுகின்றது. சமூகத்தினதும் குடும்பத்தினதும் மேம்பாட்டுக்குச் சிறுவர்களும் ஆண்களும் வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக சர்வதேச ஆண்கள் தினம் உள்ளது.
எதிர்மறையான விடயங்களில் கவனம்செலுத்துவதன் மூலம், வேண்டத்தகாத அந்த விடயங்களின் அதிகரிப்புக்கு வழிகோலுவதை விடுத்து, நேர்மறையான பண்புகளில் கவனம்செலுத்துவதன் மூலம் நல்ல விடயங்களை ஊக்குவிப்பது எப்போதுமே சிறப்பானது. அவ்வகையில் முன்மாதிரிகள் மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குதல், சென்ற வருட ஆண்கள் தினத்தின் கருப்பொருளாக இருந்தது. இவ்வருடக் கருப்பொருளாக ஆண்களின் நல்வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல் அமைந்திருக்கிறது.
ஆண்களின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களிடையே அதிகரித்திருக்கும் தற்கொலைகளையும், அவர்களின் வேலையிடங்களில் நிகழும் இறப்புக்களையும் தடுப்பதற்குமான வழிவகைகளைக் கண்டறியலாம். மற்றும் அவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
'தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு'
அழகப்பா பல்கலைக்கழகம்'காரைக்குடி-.9.10.20
என்னை,அழகப்பா பல்கலைக்கழகம்,தமிழ் பண்பாட்டு மையம் நடாத்தும்,'சிறு தெய்வ வழிபாடுகள்' பற்றிப் பேச அழைத்த மதிப்புக்குரிய முனைவர் திரு.மா.சிதம்பரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.அத்துடன்,கல்லூரி துணைவேந்தர் பேராசிரியர்,திரு, நா.இராஜேந்திரன் அவர்களுக்கும்,பல்கலைக்கழக இணைப் புரவலர் பேராசிரியா,திரு.;ஹா.குருமல்லேஷ் அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர், முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை அவர்களுக்கும், வந்திருக்கும் முனைவர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த ஆய்வுக்குப் பல பதிவுகளின் துணை மட்டுமல்லாமல், ஒரு சில நல்ல மனங்களின் உதவியும் கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமே. இலங்கையின் மேற்கு, வடக்கு பகுதிகளின் சிறு வழிபாடு பற்றிய ஆய்வுக்கு, எனது இலக்கிய நண்பர் திரு. பத்மநாப ஐயர் அவர்கள்,இலங்கை நூலகத்திலுள்ள பதிவுகளை எடுத்துத் தந்துதவியதற்கு மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இலங்கையின் கிழக்கில் உள்ள சிறு தெய்வ வழிபாடு பற்றி தகவல்களைத் தந்த,திரு.கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ்,நீலாவணை இந்திரா என்போருக்கும் ,எனது நன்றிகள்.
இக்கட்டுரையில்,'சிறுவழிபாடுகள்' பற்றி,வட தமிழகம், தென் தமிழகம், இலங்கையில் மேற்கு.வடக்கு. கிழக்கு. மலையகம் உட்பட்ட பகுதிகளிலுள்ள சிறு தெய்வ வழிபாடுகள், நம்பிக்கைகள் என்பன சொல்லப் படுகின்றன.அத்துடன், இங்கிலாந்தில் ஒருகாலத்திலிருந்த சிறு தெய்வ வழிபாடுகள் பற்றியும் ஒரு சில சிறு தகவல்களும் பதிவாகியிருக்கின்றன.
மானுடவியல் பார்வையில்,சிறுதெய்வ வழிபாடுகள் என்பது,அந்தத் தெய்வங்களை வழிபடும் மக்களின் நம்பிக்கைகளின் பிரதி பலிப்புகளாகும் என்று சொல்லப் படுகிறது.அவை,மக்கள் வாழும் இடங்கள்,மிருகங்கள்,குன்றுகள்,நதிகள்,காலநிலை,மனித கைவேலைகள்,போன்றவற்றில,தங்களைப் பாதுகாக்கும்,'கடவுள்த்'தன்மை இருக்கின்றன என்பதை அவர்கள் நம்புவதாகும். இவை அவர்களுக்குப் புரியாத இயல்நிலை அதாவது சுப்பர் நட்சுரல்,அல்லது கடவுள்த் தன்மையிருப்பதாக நம்பி வழிபடுகிறார்கள்.இதை' மானுடவியலாய்வாளர்கள்' அனிமிசம்' என்றழைப்பார்கள்.
'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.
- சென்னை எதிராஜ் பெண்கள் கல்லூரிக்கு அர்ப்பணித்த, ஆங்கிலச் சொற்பொழிவின் தமிழ்ப் பதிவு.13.7.20 -
என்னை இந்த அமைவுக்கு அழைத்து எதிராஜ் கல்லூரி பேராசிரியை திருமதி அரங்க மல்லிகா அவர்களுக்கும்,இங்கு என்னை அழைப்பதற்கு முன்னோடியாகவிருந்த முன்னாள் முனைவர் திருமதி பிரேமா ரத்தினவேல் அவர்களுக்கும் நிகழ்வுக்கு வந்திருக்கும் மாணவிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள். இன்று,கோவிட் 19 கிருமியின் கொடிய தாக்கத்திலிருந்து தப்புவதற்கு, உலகத்தின் 200க்கும் மேலான தொகையுள்ள நாடுகளின்,உலக மக்களின் சனத் தொகையான 7.8 பில்லியன் மக்களில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டுக் கிடக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மனிதர்கள், காட்டுவாசிகளாக இருக்கும்போது கூட இப்படி வாழ்ந்திருக்க மாட்டார்கள்.அவர்கள் பாதுகாப்பு காரணமாகக் கூட்டமாகக் குகைகளில் வாழ்ந்திருப்பார்கள்.மிருகங்களிடமிருந்து தப்பி வாழவும் மனித இனத்தின் பாதுகாப்புக்காவும் அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் அளவிடமுடியாத விஞ்ஞான அறிவு பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கும் இக்கால கட்டத்தில்,கண்களுக்குத் தெரியாத எதிரியான கொரோணா வைரசால், மனிதர்கள் மந்தைகளாகப் பூட்டப்பட்ட வீடுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களிற் சில ஆண்கள் நாகரீகமற்ற காட்டுவாசிகளைவிடக் கேவலமாகப் பெண்களிடம் நடந்து கொள்வது பல மனித உரிமை ஸ்தானங்களின் கவனித்திற்கு எடுக்கப் பட்டிருக்கிறது.
கோவிட்-19 தாக்கத்தில் முதலாவது நோயாளி, சீனா நாட்டின் வூஹான் மகாணத்தில் 2019 மார்கழி மாதத்தில் அடையாளம் காணப்பட்டார்.அன்றிலிருந்து,இன்றுவரை இந்த உலகம் இதுவரை காணாத, அனுபவிக்காத ஒரு கொடிய நோயின் பல்விதமான தாக்கங்களால்; மக்கள் துயர்படுகிறார்கள்.
அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் (1945 – 2019) நினைவுகள்!
நினைவு தினம் இம்மாதம் 11 ஆம் திகதி
இலங்கையில் வடக்கே உடுவில் – மானிப்பாய் பங்குகளில் சமயப்பணிகளில் ஈடுபட்டுவந்த தம்பதியர் சாமிநாதர் குருசாமி பத்திநாதன் - செலின் அன்னரத்தினம் பத்திநாதன் ஆகியோரின் புதல்வனாகப் பிறந்த ஜேம்ஸ் அவர்கள் பிறந்த கதையும் பின்னாளில் அவர் வணக்கத்திற்குரிய மதகுருவாக வளர்ந்த கதையும் சுவாரசியமும் ஆன்மீகமும் உணர்ச்சியும் கலந்திருப்பது.
1945 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அருட் தந்தை ஜேம்ஸ் அவர்கள் தனது முதல் திருப்பலியையும் பிரசங்கத்தையும் மானிப்பாய் பங்கிலுள்ள மல்வம் தேவாலயத்திலேயே நிகழ்த்தினார். இந்த புனித நிகழ்வு 1970 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 06 ஆம் திகதி நடந்தது. சுமார் அரைநூற்றாண்டு காலத்தின் பின்னர், கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம் இதே காலப்பகுதியில், யாழ்ப்பாணம் பெருந்தேவாலயத்தில் (Cathedral) அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல், அவரது குடும்ப அங்கத்தவர்கள், ஊர்பொதுமக்கள், வணக்கத்துக்குரிய பிதாக்கள் புடைசூழ கண்ணீர் அஞ்சலியைப்பெற்றது. அவரது குடும்பத்திலிருந்து எதிர்பாராத சூழ்நிலையில் குருத்துவம் கற்கச்சென்று, தங்கு தடையின்றி இறைபணியைத் தொடர்ந்து, மக்களுடனேயே வாழ்ந்து, அவர்கள் பணியே மகேசன் பணியென அன்புருவாக வாழ்ந்தவரின் வாழ்வும் பணிகளும் முன்மாதிரியானவை.சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தமது முதலாவது பிரசங்கத்தை நடத்தியது முதல், கடந்த ஆண்டு, மக்களிடமிருந்து நிரந்தர ஓய்வுபெற்று இறையிடம் தன்னை ஒப்படைக்கச்சென்ற காலம் வரையில் நிகழ்ந்த சம்பவங்கள், சமயப்பணிகளுடன் மாத்திரமல்லாமல், நாட்டு நிலைமையுடனும் விடுதலைப்போராட்டங்களுடனும் இரண்டறக்கலந்தவை. இவற்றைப்பிரித்துப்பார்க்க இயலாது.
லண்டனில் தமிழ் மொழிக் கல்வி'
ஒரு மனிதனின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஆரம்ப சக்தியாயிருப்பது அவனுடைய மொழியாகும். இந்த மாபெரும் அடிப்படையில் அவனுடைய அடையாளம்,அறிவு, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம்,இசை நாடகம் போன்ற விழுமியங்கள் கட்டமைக்கப் படுகின்றன,வளர்கின்றன.காலக் கிரைமத்தில் அவனுடைய மொழி சார்ந்த ஆக்கங்கள் அவனுடைய பாரம்பரியத்தின் சரித்திமாகின்றன.
அது மட்டுமல்லாமல்,ஒரு மனிதனின்,உடல்,உள.அறிவியல்,சமூக,ஆத்மீக வளர்ச்சியுடன் மொழி வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு குழந்தையின் மொழிவளர்ச்சியின் ஆரம்பம் அந்தக்குழந்தை தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பிக்கிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். தனக்குப் பரிச்சயமான ஒலிகளை, குழந்தை தனது தாயின் வயிற்றிலிருக்கும்போதே அடையாளம் காண்கிறது. குழந்தை தனது தாயின் வயிற்றில் உண்டாக்கும் முதல் அசைவைக் கொண்டாட வளைக் காப்பு வைபம் மூலம் குழந்தைக்குத் தாயின் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் நல்லொலியை ஆரம்பித்தவர்கள் எங்கள் மூதாதையர்.
குழந்தை பிறந்ததும் அதன் மொழி வளர்ச்சி மொழியற்ற வித்தியாசமான ஒலிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.பின்னர் குழந்தை சார்ந்த நெருங்கிய சூழ்நிலையில் உள்ள குடும்பத்தினரிடமிருந்து பல்வகையான ஒலிகளின் படிமம் சார்ந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது.
அதன் நீட்சி குழந்தை மிகச் சிறுவயதில் மற்றக் குழந்தைகளுடன் விளையாடிப் பழகும்போதும், அன்னியர்களுடன் பழகும்போதும் தொடர்கிறது.அதன் பின்னர் குழந்தையின் கல்வி பாடசாலையில் ஆரம்பிக்கும்போது,அந்தக் கல்வி குடும்பம், சமுகம், தாண்டி, ஒரு நாட்டின் கல்வியற் கோட்பாடுகளின் கட்டுமானங்களுடன் நீட்சிபெறுகிறது.
படகர்களின் வாய்மொழி வழக்காறுகளில் சூழலியல் சிந்தனைகள் – 1 (பாவம் போக்கும் (கருஹரசோது) இறப்புச் சடங்கில் சூழலியல் சிந்தனைகள்)
வாய்மொழி வழக்காறுகள் மானுட வாழ்வின் அறிவின் சேகரமாகும். அவை பெரும் தலைமுறை தொடர்ச்சியினைக் கொண்டவை. வாழ்வியல் சூழலோடு பிணைந்து நிற்கின்ற இந்த வழக்காறுகள் அவர்தம் வாழ்வியல் விழுமியங்களையும் பறைசாற்றுபவை. அர்த்தப்பட்ட வாழ்வினை அர்த்தப்பட வேண்டிய வாழ்விற்குக் காட்டாகக்கூறி நெறிப்படுத்துபவை. அந்நிலையில் நீலகிரி படகர் இன மக்களின் இறப்புச் சடங்கு சார்ந்த “கரு ஹரசோது” எனும் பாவம் போக்கும் சடங்கில் இடம்பெறும் வாய்மொழி வழக்காறுகளில் நிலவும் சூழலியல் சிந்தனைகள் இம்மக்களின் சூழலியல் அறிவினையும், பாதுகாப்பினையும் புலப்படுத்துபவையாக அமைகின்றன.
படகர்களின் வாழ்வியல், வழிபாட்டு நிலையைவிட இறப்புச்சடங்கியலுக்கே அதிகமான முக்கியத்துவம் அளிக்கின்றது. மறுபிறப்பு மற்றும் பேய்களின் மீதும் நம்பிக்கையில்லாத இம்மக்கள் இம்மையுலகிலிருந்து பிரிந்துச் செல்கின்ற ஆன்மா மறுமையுலகத்தில் தம் முன்னோர்களுடன் உறைவதாக நம்புகின்றனர். இந்நிலையில் இம்மையுலகில் பிரியும் ஆன்மாவினையும், அவ் ஆன்மா உற்ற உடலையும் புனிதப்படுத்துவது இவர்களின் முக்கியமான இறப்பியல் சடங்காகும். அதனுள்ளும் இறந்த உடலினைக் கிழக்குநோக்கி கிடத்தி பாவம்போக்கும் ‘கரு ஹரசோது’ எனும் சடங்கு மிகவும் இன்றியமையானதாகும்.
சர்வதேச ஆண்கள் தினம்

குறிப்பாகச் சமூகத்தினதும் குடும்பத்தினதும் மேம்பாட்டுக்குச் சிறுவர்களும் ஆண்களும் வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக சர்வதேச ஆண்கள் தினம் உள்ளது. எதிர்மறையான விடயங்களில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றின் அதிகரிப்புக்கு வழிகோலுவதை விடுத்து, நேர்மறையான பண்புகளில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றை ஊக்குவிப்பது எப்போதுமே சிறப்பானது. அவ்வகையில் முன்மாதிரிகள் மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குதல், இந்த வருட ஆண்கள் தினத்தின் கருப்பொருளாக இருக்கிறது.
ஆணாதிக்கத்தால் உருவாகும் பல்வகையான பிரச்சினைகளுக்கெல்லாம் சமூகமே அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பதை எப்போது நாங்கள் அனைவரும் உணர்கிறோமோ, அப்போதே இதற்கான தீர்வும் உருவாகும் என்பதே யதார்த்தமாகும்.
அவதானிப்பு, பிரதிபண்ணல், மற்றும் முன்மாதிரி ஒன்றைப் பின்பற்றல் என்பனவே சமூகத்தில் நிகழும் கற்றலின் தோற்றுவாய்களாக அமைகின்றன என்கிறார் உளவியலாளர் Albert Bandura. குழந்தைப் பருவம் முதல் அவரவர் பாலினத்தின்படி, அவர்களது சகாக்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அவர்கள் செயல்படவேண்டிய வழிவகைகளைப் பற்றிச் சிறுவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அடிப்படையில் ஆண் ஒருவன் தைரியசாலியாக இருக்கவேண்டும் எனவும், பெண்கள் எப்போதும் அழகாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் எனவும் சமூகம் அவர்களுக்குக் கற்பிக்கிறது.
பெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்
பல்வேறு கனவுகளுடன் திருமணபந்தத்தில் இணைபவர்கள் தங்களின் கனவுகளுக்கேற்ற வாழ்க்கை ஒன்று அமையாதபோது அதைச் சகித்துவாழக் கற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஒருவரை ஒருவர் இம்சிக்காமல் பிரிந்துகொள்கிறார்கள். இதுதான் சகமனித நேசிப்பு இருப்பவர்களின் செயலாக இருக்கிறது. ஆனால், சுயநலமிக்கவர்களோ தாம் அழிந்தாலும் பரவாயில்லை, கூடவாழவந்தவர் அழியவேண்டுமென்ற தன்முனைப்புடன் செயற்படுகிறார்கள். உலகளவில், கொலைசெய்யப்பட்ட பெண்களில் சுமார் 40 சதவீதமானோர் அவர்களது முன்னாள் அல்லது தற்போதைய துணைவரினாலேயே கொல்லப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு. இப்படி நிகழ்த்தப்படும் இந்தப் படுகொலைகளில் பெரும்பாலானவை அந்தப் பந்தத்தைப் பெண் உடைக்கும்போது அல்லது அவ்வாறு செய்வதற்கான தனது விருப்பத்தை அறிவிக்கும்போதே நிகழ்கின்றன, என்கிறார் Aaron Ben-Zeév Ph.D.
பெண்களின் கொலைகளுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் அவை இரண்டு பொதுவான அனுமானங்களைப் பகிர்ந்து கொள்கின்றன:
(1) பெண் தன்னுடைய உடைமையென கருதும் ஆணின் மனப்பாங்கு. அதனால் பெண் மீது பாலியல்ரீதியான பொறாமையும் கோபமும் அந்த ஆணுக்கு உருவாகிறது.
(2) பெண்ணின் மீது ஏற்கனவே ஆண் நடாத்திய வன்முறைகளின் உச்சக்கட்டமாக கொலை நிகழ்கிறது
மீண்டும் சேர்தலுக்கான வழி இல்லையென்று உணரும்போது அந்தப் பெண் மீதான ஆணின் கோபமும் பொறாமையும் மிகவும் தீவிரமடைகின்றன, கொலைசெய்யும் திட்டம் உருவாகிறது. தெளிவாகத் திட்டமிட்டே அந்த ஆண்கள் இந்தக் கொலைகளைச் செய்கின்றார்கள். இப்படியான கொலைகளுக்கு முன்பாக அத்தனை பெண்களும் அந்த ஆண்களால் பின் தொடரப்பட்டிருக்கிறார்கள், விரும்பத்தகாத செய்திகளை அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார்கள், உடமைகளை இழந்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்தக் கொலைகளை எதிர்பாராத செயல்கள் எனக் கூறமுடியாது. ஆண் கட்டுப்பாட்டை இழப்பதால் அல்லது ஆணின் மனநிலை பாதிக்கப்படுவதால்தான் இவை நடக்கின்றன என்றும் கூறமுடியாது. இந்தக் கொலைகளில் பெரும்பாலானவை நன்கு திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே செய்யப்படுகின்றன. தன்னை அழித்தாலும் பரவாயில்லை மற்றவரை அழிக்கவேண்டுமென்ற மனநிலையையின் உக்கிரமே இங்கு காணப்படுகிறது என்ற ஆய்வை நிரூபிக்கும் ஒரு கொலையாளியின் வாக்குமூலத்தை நான் நேரடியாகவே கேட்டிருக்கிறேன்.
வாழ்வாதாரக்கல்வியும்......வாழ்வியல் திறன்களும்.....
அறிமுகம்
"கல்லா மாந்தர் இல்லா நிலையை
காலம் தான் தந்திடுமா!
பெற்றவர் உற்றவர் மற்றவர் போற்றிடும்
மாற்றம் தான் வந்திடுமா!
கற்றவர் பெற்றிடும் கற்பனைப் பெட்டகத்தை
திறன்கள் தான் வளர்த்திடுமா!
கற்றவை பெற்றவை காகிதமாகிவிடுமா!
காலத்தால் கலை நயக் காவியமாகிவிடுமா!"
மனித வாழ்வில் உடல், உள்ளம், உணர்வு ஆகியவற்றை நலமாக வைத்துக்கொள்ளுத்ல் வேண்டும். நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்ளுதல் தற்காலத்திற்கு இன்றியமையானதாகும். பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து வருகின்ற மாணவர்களிடத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான குணங்கள் இரண்டறக் கலந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்மறையான குணங்களை நேர்மறையாக மாற்றிடத் தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு, திட்டமிடுதல் போன்றவை தேவையானதாகும். சுயக் கட்டுப்பாடு, தன்னை அறிதல் மற்றும் நுண்ணறிவுடன் கூடிய சிந்தனை மூலம் ஆரோக்கியமான குணநலன்கள் உருவாகிடும். மாணவர்களின் நிறைகளையும் குறைகளையும் அடையாளம் கண்டு, ஆசிரியர் அவற்றை எடுத்துரைக்கும் போது அவர்களுடைய குறைகள் யாவும், நிறைகளாக மாற்றிட இயலும். என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம், எவ்வாறு ஊக்கப்படுத்தலாம் என்பதனை ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் மாணவர்களின் நலனை உற்று நோக்கி, அதன் பின்பு அறவுரைப் பகர்தல் அவசியமாகின்றது.இதன் மூலம் மாணவர்கள் தம் கருத்தையும் எண்ணங்களையும் தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் பண்பை வளர்க்க உதவிடும். இதனை செயல்படுத்திடவும், மாணவர்களிடத்து நடைமுறைப் படுத்திடவும் ஒவ்வொரு ஆசிரியர்களும் வாழ்வியல் திறன்களைக் குறித்து அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.
வாழ்வியல் திறன்கள்
கல்வியானது உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர்வதாகும். மனித வாழ்வில் கல்விக் கற்கும் காலமே வசந்தமானது. இதனை கற்பவர் உணர்வதில்லை என்பதே நிதர்சனம். திறன்கள் வெளிப்படாதவரை வாழ்வில் வெளிச்சமில்லை எனலாம்.அறியப்பட்டத் திறன்கள் அறிவினை வலுப்படுத்திட உதவும் என்பதில் ஐயமில்லை. ‘வாழ்க்கைத் திறன்கள்’ என்னும் கல்வி ஏற்பாட்டினை ,நான்கு முக்கியக் காரணிகள் நிர்ணயம் செய்பவையாக உள்ளன. அவையாவன,
1. தன்னை அறிதல்.
2. துணிந்து உரைத்தல் மற்றும் மறுக்கும் திறன்.
3. பகுத்தறியும் திறன்.
4. தொடர்புகொள்ளும் திறன்.
இத்தகைய வாழ்வியல் திறன்கள் எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்கு வலிகோலுகின்றன. ஆனல் இன்றைய கல்வி இத்தகைய திறன்களை நிறைவேற்றிடுமா என்பது இமாலயக் கேள்வியாக உள்ளது. நல்லாசிரியர் இத்தகையத் திறன்களை மாணவர்களிடையே அளவிட்டு, மதிப்பீடு செய்வதும், சிறப்பாக மாணவர்களிடையே வளர்ப்பதும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.
பெண்ணின் முதன்மைக் கடமை
இந்தியச் சமூகத்தில் பெண் கடமைகளின் உருவம். சுயநலமில்லாமல் அன்போடு அனைவரையும் பாதுகாப்பது அவள் இயல்பு. அதுவே அவளது கடமையும் கூட. பெண் என்பவள் தனக்காக வாழ்பவள் அல்ல. திடீர் உறவினர் வருகையால் உணவு பற்றவில்லையா? பெண் தனக்கான உணவைத் தியாகம் செய்வாள். அவளுக்கு உடல் நலம் இல்லாவிட்டாலும் மற்றவர்களைக் கவனித்து சேவை புரியும் ‘தியாகி’ அவள். அவ்வாறு நீளும் சேவையின் பொருட்டு, தான் காலம் தவறி உண்ணும் இயல்பும் உடலையோ மனத்தையோ பராமரிக்க முடியாமல் வேலைகளின் அழுத்தத்தில் தன்னை மறந்தே போவதும் பெண்ணின் குணம். சிறந்த பெண்மணி மேற்கண்ட இயல்புகள் கொண்டிருப்பாள். அதாவது மேற்கண்ட இயல்புகளைக் கொண்டிருந்தால்தான் ‘சிறந்த பெண்மணி’ என்ற பட்டம் கிடைக்கும். தன்னைப் பற்றியும் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் சிந்திக்கும் பெண்ணை நம் சமூகம் அவ்வளவு மரியாதையுடன் பார்ப்பதே இல்லை. அவள் பொறுப்பற்ற, சுயநலமான, அன்பின் உருவம் அல்லாத, சமயங்களில் குடும்பத்திற்குத் தகுந்தவள் கிடையாது என்று கூட முத்திரை குத்தப்படுகிறாள். உண்மையில் பெண்ணின் உடல்நலம் அதிமுக்கியமானது. அவள் நலமாக இருக்கும் வரைதான் மற்றவர்களைப் பேணிப்பாதுகாக்க முடியும்.
ஒவ்வொரு பெண்ணையும் அவளுடைய பெரிய சொத்து எது என்று பட்டியல் இடச் சொன்னால் அவளது குடும்பம், குழந்தைகள், உறவுகள், விலை கொடுத்து வாங்கக் கூடிய உயிரற்ற பொருட்கள் என்று நீளுகின்ற பட்டியலில் அவள் உடல் என்ற ஒன்று இருக்கக் கூடுமா என்பது சந்தேகமே. ஆனால் பெண்ணுக்கு அவளது உடல்நலம் தான் ஆகப் பெரிய உடைமை. பெண்களுக்கு இந்த அறிவையும் உணர்வையும் தருவதில், புரிய வைப்பதில் நம் மொத்த சமூகமும் தவறிவிட்டது என்பதுதான் உண்மை. அதற்குப் பல விதமான சமூக, பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதை விடக் கொடுமை, தன் உடல் பற்றி எந்த வித அக்கறையும் காட்டாமல், தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் கவனித்துக் கொள்வதே சிறந்த பெண்ணின் இயல்பு என்றும் பாடம் சொல்லி மனத்தில் பதித்தும் இருக்கிறது.
சரிவிகித உணவும் உடற்பயிற்சியும் மேல்தட்டு மக்களுக்கே உரியவை என்ற தவறான புரிதலும் நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.
சர்வதேச மகளிர் தினம் ‘இதுதான் நேரம்’

தொனிப்பொருள்
2018 ஆம் ஆண்டின் மார்ச் எட்டாம் திகதியில் நடைபெறும் சர்வதேசப் பெண்கள் தினத்திற்கான தொனிப்பொருளாக ‘இதுதான் நேரம்’ (வுiஅந ளை ழெற) அமைகின்றது. கிராமிய நகர்ப்புறச் செயற்பாட்டாளர்கள் பெண்களின் வாழ்வில் மாறுதல்களைக் கொண்டுவருகிறார்கள். இந்த ஆண்டின் சர்வதேச பெண்கள் தினமானது முன்னர் என்றும் இல்லாத வகையில் உலகெங்கிலும் பெண்களின் உரிமைகள், சமத்துவம், பெண்களுக்கான சமூகநீதி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களின் பின்னணியில் இடம்பெறுகின்றது.
பாலியல் தொந்தரவுகள், பெண்களின் மீதான வன்முறைகள், பெண்களுக்கெதிரான பாகுபாடு என்பன பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகாக இடம்பெற்று வருகின்றன. உலகெங்கிலும் பொது அரங்குகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிப் பேசப்பட்டு வருகின்றன. இந்த அநீதியான நிலை மாற வேண்டும் என்ற உணர்வு முன் என்றுமில்லாத வகையில் வெடித்துக் கிளம்பியவண்ணம் உள்ளது. ஆண்களும் பெண்களும் சமத்துவமாக நடாத்தப்படும் ஒரு ஒளி நிறைந்த எதிர்காலத்தை நோக்கி மக்கள் அணிதிரண்டு வருகின்றனர். உலகின் மிகப் பெரும் தலைநகரங்களில் எல்லாம் பெண்களின் ஆர்ப்பாட்டங்கள் உணர்வு பூர்வமாக நடைபெற்று வருகின்றன. பாலியல் வன்முறைகளுக்கெதிராக இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து சாதாரண கிராமங்கள் வரை பெண்கள் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.
இலங்கையில் பெண்களின் போராட்டம்
மன்னாரைத் தளமாகக்கொண்டு செயற்பட்டு சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், பாலியல் சமத்துவத்துக்காவும், பெண்களுக்காகவும் அயராது போராடி வரும் திருமதி ஷெரீன் அப்துல் சறூர் அவர்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவருக்கு லண்டனில் இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதையும் பெருமையோடு இத்தினத்தில் பாராட்டுகின்றேன்.
இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் தங்களின் வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கூறி இடம்பெற்று வரும் நீண்ட எதிர்ப்புப் போராட்டங்களின் முன்னணியில் பெண்களே அணிதிரண்டுள்ளனர். காணாமல் போன தங்களின் கணவர்களுக்காகவும், புதல்வர்களுக்காகவும் வீதிகளில் நின்று காணாமல் போனோரின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டும், சுலோகங்களைக் கோசித்துக் கொண்டும் பெண்களே நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். கணவன்மாரை இழந்த நிலையிலும் அவர்கள் அங்கவீனர்களாகிப்போன நிலையிலும் பெண்களே குடும்பச் சுமைகளைத் தங்கள் தோளில் சுமந்து வருகின்றனர்.
கிராமிய விளையாட்டு “கிளித்தட்டு”
“ஆலையிலே சோலையிலே ஆலம் பாடிய சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுக்கியடிக்கப் பாலாறு “என்பது கிராமத்து நாட்டார் பாடல் . கிராமிய விளையாட்டுக்கள் மிகவும் மகிழ்வூட்டுவன. உடல் நலத்தைப் பேண மிகவும் உகந்தன. கிளித்தட்டு கிராமிய விளையாட்டுக்களில் மிகவும் புகழ்வாய்ந்தது. தமிழ் மக்களிடையே எல்லாக் கிராமங்களிலும் கிளத்தட்டு விளையாடப் பட்டுவந்துள்ளது. கிட்டி புள்ளு, வாரோட்டும், எல்லைக் கோடு, மல்யுத்தம், குடோரி, நாயும் புலியும், ஆடும் புலியும் போன்ற விளையாட்டுக்கள் சிறார்களால் விளையாடப்பட்டு வந்துள்ளன. கிறிக்கற், எல்லே, ஆதாரப்பந்து, வலைப்பந்து, கூடைப்பந்து, உதைபந்து போன்றன அறிமுகப் படுத்த்பபட்ட பின்னர் கிராமிய விளையாட்டுக்கள் அருகிப்போகத் தொடங்கியுள்ளன. முன்னர் கிராமங்களில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும் நகர் புறத்துப் பிள்ளைகள் இத்தகைய பண்டைய விளையாட்டுக்களை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வர் இப்போது இப்படிப் பார்ப்பதற்குக் கூட பாரம்பரிய விளையாட்டுக்கள் கிடைப்பது அரிதாகிப் போய்விட்டன. இவ்வாறான பாரம்பரிய வியையாட்டுக்களில், கிளித்தட்டு அல்லது தாச்சி மிகவும் பிரபலமான, சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு. அருகிவரும் இந்த விளையாட்டைப் பற்றி அறிந்து கொண்டு நாமும் விளையாடி மகிழ்வதற்குஇந்த விளையாட்டுப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம.
எங்கள் மண்ணுக்கே சிறப்பான விளையாட்டுக்களில் ஒன்றான “கிளித்தட்டை” சிறுவர் முதல் பெரியோர் வரை வயது, பால் வேறுபாடின்றி எல்லோருமே விளையாடி மகிழலாம் .சில கிராமங்களில் இதனை “யாட்டு ”அல்லது ‘தாச்சி ‘ என்றும் அழைப்பார்கள். தாச்சி என்பது நடுவரைக்குறிக்கும் சொல்லாகும். கிளித்தட்டுக்கு நடுவர் மிக முக்கியமானவர். இரண்டு குழுக்களுக்கிடையே இந்த விளையாட்டு இடம்பெறும்.
பண்டைய காலத்தில் கிராமத்துப் ;சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிளித்தட்டை விரும்;பிப் பார்ப்பார்கள். இது ஆண்களுக்கு உரிய ஒரு விளையாட்டாகக் கொள்ளப்பட்டு வந்தது. இன்று இந்த விளையாட்டு பலருக்கும் தெரியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. தென்பது ஆச்சரியம்தான். கிளித் தட்டு விவசாயிகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாகும் .நெல் விதைத்த காலங்களில் வயலில் நெல் மணிகளைப் பொறுக்க வரும் கிளிகளை, கமக்காரன் வரம்புகளில் ஓடிக்கலைத்து வயலைக் காப்பதையே இந்த விளையாட்டுக் காட்டி நிற்கிறது. காப்பவர்- கமக்காரனாகவும்,புகுவோர்-கிளிகளாகவும் தட்டுக்கள் (பெட்டிகள்)- வயல் நிலங்களாகவும் கோடுகள்- வரம்புகளாகவும் பாவனை செய்யப்படுகின்றது.
குளோபல் தமிழ்ச் செய்தி (மீள்பிரசுரம்) : பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பிய காலத்தில் இலங்கையில் உருவான முதலாவது பெண் பொறியியிலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்.

அதி வணக்கத்திற்குரிய வல்பொல ராஹூல தேரர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையில் பௌத்த மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு ஆயத்தமானார். இந்த கட்டடம் அமைக்கப்படும் மண் மற்றும் கட்டட நிர்மான தொழில்நுட்பம் தொடர்பில், இளம் பெண் பொறியியலாளரிடம் இது குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
‘நாயக்கத் தேரரே இந்த இடத்தில் மரத்திலான பயில்கள் கீழ் இறக்காமல் கட்டிட நிர்மானம் செய்யக் கூடாது. அது கட்டடத்தின் ஆயுட்காலத்தை பாதிக்கும்’ என தனக்கு கிடைக்கப் பெற்ற மண் மாதிரியை பரிசோனை செய்த பெண் பொறியியலாளர் கூறினார். ‘அத்தனை பெரிய செலவினை செய்ய முடியாது. எனினும் இந்த கட்டடத்தை நிர்மானிக்க வேண்டும் அல்லவா’ என ராஹூல தேரர் கூறினார். இந்த சம்பாசனை நடைபெற்ற போது ராஹூல தேரரின் உறவினரான சித்தாலபே நிறுவனத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொடவும் பிரசன்னமாகியிருந்தார். ‘எனினும் மற்றுமொரு முறை காணப்படுகின்றது எனினும் இந்த முறை இலங்கையில் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என அந்த இளம் பெண் பொறியியலாளர், நாயக்க தேரரிடம் கூறினார்.
‘அம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்னவென்று’ என விக்டர் ஹெட்டிகொட இந்த சம்பாசனையில் இணைந்து கொண்டு கூறினார்.
‘ ஒட்டு மொத்த கட்டடத்தின் அத்திவாரத்தையும் ஒன்றாக நிர்மானிக்காது பகுதி அளவிலான அத்திவாரங்களின் ஊடாக நிர்மானிக்க முடியும். இவ்வாறு செய்தால் ஓர் இடத்தில் தாழிறங்கினாலும் ஒட்டு மொத்த கட்டடத்தையும் பாதிக்காது, புனர்நிர்மானப் பணிகளும் இலகுவில் செய்ய முடியும் என தனது புதிய தொழில்நுட்பத்தை பெண் பொறியியியலாளர் விபரித்தார்.
அதி வணக்கத்திற்குரிய ராஹூல தேரர் இந்த புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டடத்தை நிர்மானிக்க இணங்கியிருந்தார். சகதி மிக்க மண்ணில் கட்டிட அத்திவாரத்தை போட்டால் பாரியளவில் செலவாகும். எனினும் இளம் பெண் பொறியியலாளரின் யோசனைக்கு அமைய நிர்மானம் செய்ததனால் பாரியளவு செலவு குறைக்கப்பட்டது.
பாரதியாரின் பெண் விடுதலைச்சிந்தனைகள்
- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் செல்வி மதுபாஷினி பாலசண்முகன் நிகழ்த்திய உரை. இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் சிறந்த புள்ளிகளைப்பெற்றவர். மொனாஷ் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது பயிலும் இவர், மெல்பனில் நடைபெற்ற இளம் எழுத்தாளர் விழாவில் நடைபெற்ற போட்டியில் சிறந்த இளம் எழுத்தாளருக்கான விருதையும் பெற்றவர். ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபாடும் ஆர்வமும் மிக்க மதுபாஷினி பாலசண்முகன், தமிழ் இலக்கியத்திலும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்திவருபவர். -முருகபூபதி -
"நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்"
பாரதியார் எழுதிய புதுமைப்பெண் பாடலில் இருந்து சில வரிகள் இவை. சுப்ரமணிய பாரதி 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் புரட்சிக் கவிதை எழுதிய கவிஞர் மற்றும் சுதந்திர வீரர் ஆவார். பண்டைத் தமிழ் வரலாற்றையும் பாரதப் பண்பாட்டினையும் நன்கு அறிந்திருந்த பாரதி, நாட்டின் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலையைக் கண்டு மனம் வெதும்பினார், வேதனைப் பட்டார். பெண் விடுதலைக்காக எழுச்சி மிகுந்த பாடல்களை பாடினார்.
பாரதியார் தமது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்ணுரிமைக் கருத்துகளை அவருக்கே உரித்தான கவியழகோடும், அழுத்தத்தோடும், வீராவேசத்தோடும், படிப்போரின் மற்றும் கேட்போரின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் கனல் தெறிக்க எழுதினார்.
நான் உங்களுடன் உரையாடவிருப்பது பாரதியாரின் பெண் விடுதலைக் கருத்துகளைப் பற்றி. உப தலைப்புகளாக, பாரதியார் சமூக சீர்திருத்த வாதத்தை, முக்கியமாக பெண் விடுதலையை ஆதரித்த காரணம், அவரது பெண் விடுதலை வாதம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் அவற்றுக்கு உதாரணமான பாடல்கள் என்பன பற்றிக் கலந்துரையாட உள்ளேன்.
பெண்ணியல் இலக்கியம்: பெண்ணுரிமைகளும் வெல்வழி வரலாறும்
மார்ச் மாதம்; 8-ம் திகதி. சர்வதேச மகளிர் தினம் எங்கும் சம்பிரதாயமாகக் கொண்டாடப் படுகின்றது. ஆனால் இன்றுகூட உலக நாடுகள் எவற்றிலும் பெண்களையும் ஆண்களையும் எம் சமுதாயங்களும் அரசாங்கங்களும் வேலை செய்யும் இடங்களிலோ இல்லங்களிலோ பொதுஇடங்களிலும் நிகழ்ச்சிகளிலுமோ சரிசமமாகக் கருதுவதும் இல்லை> நடத்துவதும் இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் என்னவெனில் இன்றும் எஞ்சியுள்ள ஆணாதிக்கமே. பெண்களின் உதாசீனப் பிரயாசைக் குறைவும் இன்னொரு காரணமாக இருக்கலாம் என்பதையும் நாம் மறுக்க முடியாது.
கீழைத் தேசங்களாகிய ஆசிய நாடுகளில் ஆண் பெண் வேற்றுமை மிகக் கூடுதலாக இன்னும் நிலைக்கிறது. ஒரு கொடூரமான உதாரணம்: இந்திய இந்துப் பெண்கள் கணவன்மார் இறந்து அவர்களுடைய சடலம் எரியும் பொழுது மனைவிமாரையும் நெருப்பில் வீழ்ந்து மாளச் செய்கிற வழக்கம் இன்னமும் உண்டு. இதைச் சில காலமாக அரசாங்கம் சட்ட முறையாக நிறுத்தி வந்தாலும் ஒருசில கிராமங்களில் இப்பொழுதும் இந்த அநியாயம் குறைந்த அளவில் எனினும் நடக்கவே செய்கிறது. மேலும் அங்கு பலர் தம் மனைவிமாரை அடிமைகளாகக் கருதி மனிதப் பிறவிகளைப் போல் நடத்துவதே இல்லை. எனினும் மேல் நாட்டாரின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் பெண்களை நடத்தும் வகையையும் அறிந்து மேலும் கல்வி மேம்பாட்டாலும் அரசாங்கக் கட்டுப் பாட்டினாலும் இவ்விதமான அநீதிகள் குறைந்து கொண்டு வருவது ஒரு நற்செய்தியே.
2008இல் ஒக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 1.3 பில்லியன் தொகை வறுமையில் வாழும் உலகமக்களில் நூற்றுக்கு 70-வீதம் பெண்களே எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்குக் காரணம் பெண்களுக்கு இன்றும் மனிதஉரிமைகள் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்பதே. அத்துடன் ஆண்கள் பெண்களைக் கீழ்த் தரமாகக் கருதி வேலை வீடு பணம் முதலியவற்றில் பூரண சமத்துவம் மறுக்கப்படுகிறது. மேலும் உலகில் தொழில் செய்பவர்களில் பெண்ணினம் மூன்றில் இரு பங்காக இருந்தாலும் உலகின் வருமானத் தொகையில் நூற்றுக்கு 10-வீதமான வருமானத்தையே பெறுகிறார்கள். அரை மில்லியனுக்குக் கூடிய பெண்கள் கர்ப்பத்திலும் பிள்ளைப் பேற்றிலும் மரணம் அடைகிறார்கள். உலகின் அரசாங்க சபைகளில் பெண்கள் நூற்றுக்கு சராசரி 14-வீதம் இடத்தைத் தான் கைப்பற்றி இருக்கிறார்கள்.
உலகில் குடும்பங்களில் மிகக்கூடியதாக முக்கியமாக ஆண்களின் தாக்குதலால் காயப்படுவதும் மரணமடைவதும் பெண்களே. இவை ஆராய்ச்சிப் புள்ளிவிவரங்கள்.
வயோதிபத்திலும் இலட்சிய வாழ்க்கை
முன்னுரை
வயோதிப காலம் என்பதை, நாம் எம் நடைமுறை வாழ்வின் ஊதிய-நோக்கு வேலைகள், தொழில்கள், உத்தியோகங்களிலிருந்து விடைபெறும் 65-வயதின் பின்னர் நடத்தும் வாழ்க்கை எனக் கருதலாம். இந்தியாவிலும் இலங்கை யிலும் இருந்து வெளிவரும் புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் 50-வயதுக்கு மேற்பட்டோரை எல்லாம் வயோதிபர் எனக் குறிப்பதை 2011இலும் பலதடவை கண்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளில் மலேரியா, நீரிழிவு, தொற்று நோய்கள், பிள்ளைப் பேற்றினில் குழந்தைகளும் தாய்மாரும் இறத்தல், போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் போரினாலும் மனிதரின் சராசரி வாழ்க்கை 40-வயதுக்குக் கிட்டியே இருந்ததை அவர்கள் இன்றைய புதிய சூழ்நிலையிலும் மறக்க மறுக்கின்றனர். உலகின் மேற்குப் பாதியில் வசிக்கும் எம்மவரின் கோணத்திலிருந்து, ஆனால் உலக மக்கள் எல்லோருக்குமே பலன்படும் பாணியிலேயே இக்கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது.
மனித வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்ன?
இது ஒரு முக்கியமான அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கு மனச் சுத்தியுடன் தம் சொந்தச் சூழ்நிலைக்கு ஏற்பச் சிந்தித்துத் தெளிந்த பதில் பெறுவோர் எந்த வயதிலும் வாழ்க்கையில் இன்பமும் அமைதியும் காணலாம். ஆனால் வயோதிபரின் கோணத்திலிருந்தே இன்று இப் பொருளை ஆராய் கிறோம். என் சிந்தனையின் படி, வயோதிபரின் இலட்சியக் குறிக்கோளாவது: இயற்கை அன்னை எமக்குத் தந்துள்ள உயிரையும் உடம்பையும் அவளே திரும்ப எடுக்கும் நிமிடம் வரை கவனமாகப் பாதுகாத்து, முடியுமான வரை இன்பமாக வாழ்ந்து கொண்டே எமது குடும்பத்தினர், அயலார், சமூகத்தினர் போன்றோருக்கு இயலுமானவரை உதவிக் கொண்டு இன விருத்தியுடன் உலக அபிவிருத்தியையும் ஊக்கி, இயற்கைமாதாவையும் எம்மெம் ஆண்டவரையும் துதித்துப் பேணிக் கொண்டு ஆறுதலாக வாழ்வதே, என்பதாகும்!
திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் துறையினரின் தடைகள்!
‘தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தடை’ எனப் பொருள்படும் செய்திகள் 18.12.2015ஆம் திகதியன்றும் அதன் பின்னரும் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் கவலையை வெளிப்படுத்திய எண்ணற்ற மக்களுக்கு, கோணேஸ்வரம் கட்டுமானப் பணிகள் சார்ந்த உண்மைகளைக் கூறவேண்டிய கடப்பாடு காரணமாக இந்த அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக சமர்ப்பிக்கிறோம்.
கோணேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீராக்க வேண்டி திருகோணமலை மக்கள் சட்ட ரீதியாக எடுத்துக்கொண்ட அயராத முயற்சியினால், உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோரால் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில், நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக நாம் தெரிவு செய்யப்பட்டு, 17.01.2010ஆம் திகதியன்று ஆலய நிர்வாகத்தினை பொறுப்பேற்றுக் கொண்டோம்.
ஆன்மீகத் தேடலுக்குரிய அதிர்வு பூரணமாய் அமையப்பெற்றது இப்புனிதத் தலம். இந்துக்களின் புண்ணிய பூமி. பல்லின மக்களும் பயபக்தியுடன் சேவிக்கிற சேத்திரம். எம்மை நம்பி தெரிவு செய்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு உண்மையாய் இருப்பதும், நன்நெறியும் தூய்மையும் நேர்மையுமிக்க நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கி தொன்மைமிகு ஆலயத்தின் இருப்பினைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறையினரிடம் முறையாகக் கையளிப்பதும் எமது தலையாய கடமை என்பதை உணர்ந்து செயலாற்றத் தொடங்கினோம்.
நாம் பொறுப்பேற்றுக் கொண்ட போது “நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலை, 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆலய பிரதேசத்தை புனித நகராக்கக் கோரிய எமது மக்களின் வேண்டுகோளை அரசு நிராகரித்த வரலாறு, பிரட்றிக் கோட்டையில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம், ஆலயத்தின் தூய்மையை பாதிக்கும் வகையில் அண்மித்த வழித்தடத்தில் அமைக்கப்பட்ட ஐம்பதிற்கும் அதிகமான தற்காலிக் கடைகள்” போன்ற நிதர்சனங்களை கருத்தில் வைத்துக் கொண்டு, எமது ஆலய திருப்பணிகளை மிக நிதானமாக, அதே நேரத்தில் தளராத தொலைநோக்கோடு மேற்கொண்டோம்.
பிரித்தானியாவில் தமிழ் கற்றலும் கற்பித்தலும் - ஓர் அவதானிப்புக் குறிப்பு!
மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலைப் பேணுவதற்கு மொழி அவசியமாகின்றது. அவர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனவே மொழி ஆளுமையென்பது ஒருவரது இருப்பைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு குழந்தை வயிற்றில் உள்ள போது கேட்கும் மொழி தாயினது உரையாடல்களேயாகும். பின்னர் அக்குழந்தை தவழ்ந்தும் நடந்தும் வளர்ந்தும் வரும் போது, கேட்டும் பேசியும் படித்தும் தனக்கான ஒரு மொழியில் ஆளுமை பெறுகின்றது.
இவ்வகையில் புலம்பெயர் சூழலில் எமது தாய்மொழிக் கல்வியென நாம் கொள்ளும் தமிழ்மொழி, தாயகத்தில் கற்கப்படுவதற்கும் கற்பிக்கப்படுவதற்கும் உள்ள முறையில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. ஏனெனில் சுற்றுச் சூழலும் அதன் அமைவியலும், சுற்றமும் உறவுகளும் தருகின்ற அனுபவங்களும் குடும்ப உரையாடல்களும் தமிழ் மொழியாக இருக்கும் சூழலில் உள்ள குழந்தை தான் பேசிப் பழகிய மொழியில் எழுத வாசிக்க தொடங்குவது அதனது சிந்தனையைப் பல்வேறு வழிகளில் தூண்டுவதாக அமையும். ஆனால் புலம் பெயர் சூழலில் வாழ்கின்ற பிள்ளைகள் வீட்டில் தாய் தந்தையுடன் தமிழ் மொழியைப் பேசிக்கொண்டும் தொலைக்காட்சியிலும் வீட்டிற்கு வெளியேயும் வேறொரு மொழியோடு ஊடாடிக் கொண்டும் தமிழ் மொழியை கற்கத் தொடங்குவது சிரமமேயெனினும் பெரும்பாலான பிள்ளைகள் விருப்புடனேயே தமிழைக் கற்கத் தமிழ்ப்பாடசாலகளுக்கு வருகின்றனர்.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்களின் வருகையும் தொடர்பாடலும் கீழைத்தேச நாடுகளில் ஆங்கிலேய ஆட்சி இருந்த காலத்தில் இருந்தே இடம்பெற்றுள்ளது. இலங்கையில் பணியாற்றச் செல்பவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் வண்ணம் தனியார் வகுப்புகள் இடம் பெற்றுள்ளதாக Aberdeen Press and Journal பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளதாக மு.நித்தியானந்தன் தனது கூலித் தமிழ் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ( தமிழ் போதிக்கப்படும்! கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்பவர்களுக்கான பயிற்சி! அபர்டீன் வகுப்பு தயார்!)
ஆனால் அக்காலத்தில் ஈழத்தில் இருந்து பிரித்தானையாவிற்கு வந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பித்துக் கொடுப்பதைக் காட்டிலும் ஆங்கில மொழிக் கல்வியைப் போதித்து ஆங்கிலச்சமுகத்திலும் தம் உறவுகளுடனும் தமக்கான மதிப்பைப் பெறுவதிலேயே குறியாக இருந்தனர்.
பாடசாலை செல்லும் மாணவருக்கான பாலியற் கல்வி (ஒன்ராறியோ பாடத்திட்டத்தில் பாலியற் கல்வி)
“மிக ஆரோக்கியமான தொடர்புறுதல் விளக்கம் மிகுந்த உள்நோக்கத்தோடு உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்தப் பரப்பினுள் கற்பவை அவர்களது எல்லாவித தொடர்புகொள்ளலுக்கும் பொருந்துவதாகும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் (மற்றும் அவர்கள் வளர்ந்தவர்களாக குறிப்பிடத்தக்க காதல் விருப்புக்கள்) அல்லது பங்காளர், துணைவர், துணைவி அல்லது மனைவி என்பவர்களோடு எதிர்காலத்தில் அன்புவைக்கவும் பயன்படுத்தக்கூடியதாக அமையும்.” என பாலியற் கல்விபற்றி ஒன்ராறியோ கல்வி அமைச்சு ஒரு எழுத்துமூல அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாலியற் கல்வி என்றவுடன் பலபெற்றோர்கள் ஏதோ தேவையற்ற அல்லது பிள்ளைகளைத் தவறான வழிகளுக்கு இட்டுச் செல்லும் கல்விமுறை என எண்ணுகின்றார்கள். பாலியற் கல்வி என்பது உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்ற எண்ணக் கரு பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அல்லது அப்படியான கருத்து பரப்பப்படுகின்றது. பேசாப்பொருளைப் பிள்ளைகளிடம் பேசக் கல்வி அமைச்சும் பாடாசாலைகளும் முற்படுவதாக கருதப்படுகின்றது. பாலியல் கல்வியைப் பாடசாலைகளில் புகட்டுவதற்குப் பல பெற்றோர்கள் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் உள்ளனர். சமய அடிப்படை வாதிகள் பாலியற் கல்விக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று …
“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”, என்றார், வள்ளலார். எமது உறவுகள், எம்முடன் உண்மையாகவிருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் நாம், அந்த உறவுகளுடன் உண்மையாக இருக்கின்றோமா? நேர்மை என்ற சீரிய வாழ்க்கைப் பெறுமானத்தை எமக்குள் விதைப்பதற்காக சீராளனும் பூபாலனும் முலாம்பழம் விற்ற கதை எமது கீழ் வகுப்புப் பாடத்திட்டத்தில் (இலங்கையில்) சேர்க்கப்பட்டிருந்தது, அது வெற்றி பெற்றிருக்கின்றதா? இவை பற்றிய சிந்தனைகளைத் தூண்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
“காதலர்கள், துணைவர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் அல்லது மேலதிகாரிகளுக்கு நாங்கள் உணர்வதை, நினைப்பதை அல்லது செய்வதைச் சொல்லாமலிருக்கும்போது, ஒருவகையான மனச் சிறையில் நாங்கள் அடைபட்டுப் போகின்றோம்”, என்கிறார், உளவழி மருத்துவர் (psychotherapist) Dr. Brad Blanton. மேலும், பொய் சொல்வதே, மனிதர்களின் மனத்தகைப்புக்கு முக்கியகாரணமாக இருக்கிறது எனக் குறிப்பிடும் இவர், இந்த மனத்தகைப்பிலிருந்து விடுபடுவதற்கு, ‘முற்றாக உண்மையாயிருத்தல்’ ( Radical-Honesty) cஎனும் செயல்முறையைப் பின்பற்றுதல் சிறந்ததொரு வழியாக அமையும் எனப் பரிந்துரைக்கின்றார்.
திருகோணமலையில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி!
- பேரன்புடையோர்க்கும், ஊடக நண்பர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும், இனமான செயல்பாட்டாளர்களுக்கும்! நீங்கள் பணியாற்றும் - நீங்கள் அறிந்த தெரிந்த ஊடகங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், பரிச்சயமானவர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். -நன்றி- நாங்கள் இயக்கம் -
திருகோணமலை மாவட்டத்தில் போரின் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியாமல், குடும்ப பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான வாழ்வாதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மூதூர் கிழக்கில், கடற்கரைச்சேனை மற்றும் சேனையூர் கிராமங்களைச்சேர்ந்த பத்து மாணவர்களுக்கு பாடசாலைக்கற்றல் உபகரணங்களும், பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டுள்ள ஐந்து குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான நிதி ஆதாரமும், மூதூர் தெற்கில், வன்செயல்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெருவெளி கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து பாடசாலை செல்லும் பத்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அபலைப் பெண்ணுக்கு விடுதலை !
இலங்கையில் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறித்து, கண்டனத்தைத் தெரிவித்து முன்னர் பதிவிட்டிருந்தேன். அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அப் பெண்ணை விடுதலை செய்யக் கோரி மனு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது அந்த இளம் பெண்ணுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விரைவில் விடுதலையாகப் போகும் அவருக்காகப் பாடுபட்ட, எனது பதிவினைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும், இணையத் தளங்கள் எல்லாவற்றுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
02.04.2015



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









