Channel 4: Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes
In 2011 Channel 4 exposed damning evidence of atrocities committed in the war in Sri Lanka. Jon Snow presents this powerful follow-up film, revealing new video evidence as well as contemporaneous documents, eye-witness accounts, photographic stills and videos relating to how exactly events unfolded during the final days of the civil war. The film forensically examines four specific cases and investigates who was responsible. The four cases include: the deliberate heavy shelling of civilians and a hospital in the 'No Fire Zone'; the strategic denial of food and medicine to hundreds and thousands of trapped civilians - defying the legal obligation to allow humanitarian aid into a war zone; the killing of civilians during the 'rescue mission'; and the systematic execution of naked and bound LTTE prisoners - featuring new chilling video footage of a 12-year-old boy who has been brutally executed. This painstaking investigation traces ultimate responsibility up to the highest echelons of the chain of command, asking questions of both President Rajapaska and his brother, the Defence Secretary. View The Video

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரின் 12 வயதுடைய மகன் ஆகியோருக்கு நீதி விசாரணைக்குப் புறம்பான விதத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பிரிட்டனின் ஆவணக்காணொளியில் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதானது தனது அயலவர் தொடர்பான இந்தியாவின் நடு நிலைக் கொள்கைக்கு பரிசோதனையாக அமைந்திருக்கிறது என்று வோல்ஸ் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்திருக்கிறது. இந்தப் பத்திரிகையில் ரொம் ரைட் என்பவர் "கடும் விமர்சனத்தின் கீழ் இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை' என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சியின் காணொளியானது புதன்கிழமை (இன்று) வெளியிடப்படவுள்ளது. இறந்தவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சன்னக் காயங்களைக் காண்பிக்கும் ஒளிநாடா பிரதிமையை இந்தக் காணொளி கொண்டுள்ளது. மிக சமீபகமாக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தக் காணொளி பிரதிமையைக் கொண்டுள்ளது. இறந்த பையனின் புகைப்படத்தை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் நல்லிணக்க நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டதாக விமர்சித்துள்ளனர்.
12 மார்ச், 2012 - இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு மேற்கத்தைய நாடுகளோ அல்லது ஐநாவோ செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளன என்று அந்தப் போர் குறித்த விவரணப்படத்தை தயாரித்த பிரிட்டிஷ் தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இந்தப் போரில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல குற்றச்சாட்டுக்களை கசிந்த ஐநா ஆவணங்கள் மூலமும், அமெரிக்கத் தகவல் பரிமாற்ற கேபிள்களின் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் மூலமும், ஐநாவின் முன்னாள் மூத்த அதிகாரிகளின் செவ்விகளின் மூலமுமே தாம் உறுதி செய்ததாக '' இலங்கை போர்க்களம் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்'' என்ற அந்த விவரணப்படத்தின் தயாரிப்பாளரான கலும் மக்ரே கூறியுள்ளார். சர்வதேச சட்டங்களின் கீழ் அடிப்படை நியமமாக உள்ள இந்த பாதுகாப்பை வழங்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடப்பாடு என்று அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத்தின் மீதான உலகப் போர் என்ற மேற்கத்தைய செயற்திட்டத்தை ராஜபக்ஷ அரசாங்கம் பயன்படுத்தியதே இப்படியான போர்க்குற்றங்களை செய்வதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை விவாகாரம் தொடர்பாக ஐ நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது. பயங்கரவாத்த்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு நாடு எடுக்கும் போது அது, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாடுகள், அகதிகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் மற்றும் இது சம்பந்தமான பிற சட்டங்களுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவக் கூடும் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது. தொடர்புடைய விடயங்கள்கொலை, போர், மனித உரிமை சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடைபெற்றது மற்றும் பலவந்தமாக கடத்தப்பட்டு காணமல் போவது போன்றவை தொடர்பில் நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை வேண்டும் என்றும் வட பகுதியில் இருந்து படையினரை விலக்கிக் கொள்வதுடன் அதிகாரப் பகிர்வு அளித்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளை வரவேற்பதாகக் கூறும் அமெரிக்கா அதே நேரம் அக்குழு சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளது குறித்த விடயங்களை சரியாக ஆராயவில்லை என்று கவலைதெரிவித்துள்ளது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது. இந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள்; பெண்ணே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்பது அந்த காட்டுமிராண்டி மனிதர்களுக்கு தெரிந்திருந்தது. காலங்கள் சென்றன, ஆரம்ப கால நாகரிகங்கள் உருவாகின. மனித அறிவின் வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாழ் முறைகள் பெரும் மாற்றத்துக்குள்ளாயின. உற்பத்தியில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த மனித இனத்தில் தனியுடமைத் தோன்றிற்று, தற்கால குடும்ப முறையும் உருப்பெற்றது. இப்போது தலைமைப் பாத்திரம் பெண்களிடமிருந்து ஆணுக்கு மாறியிருந்தது. எனினும் பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் பங்கு பெற்றனர். உலகின் முதல் விஞ்ஞானியானாலும், முதல் விவசாயி ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர்.
[ மார்ச் 03, 2012 ] பிராந்திய அரசுகளின் பக்க பலத்துடன் கூடிய அனைத்துலகத்தின் உண்மையான முயற்சி இலங்கைத் தீவில் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும் சமூகங்களுக்கிடையே மீளிணக்கத்தைக் கொணர்வதற்கும் வழிவகுக்கும். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரரானது இலங்கையிலே போரின் கடைசிக் கட்டங்களில் இரு பகுதியினராலும் இழைக்கப்பட்டதெனச் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறச்செய்வதற்கு அனைத்துலகச் சமூகத்திற்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
Three years have passed since the Government of Sri lanka (GoSL) announced the end of the armed conflict, but to date it has not taken any steps towards a permanent political solution for the genuine grievances of the Eelam Tamil people. Eelam Tamils have been pursuing their just struggle for freedom for more than 60 years; part of that was an armed conflict. Recent years have witnessed some of the most horrendous crimes against humanity committed by Sri Lankan armed forces against the Tamils. The suffering has only strengthened the resolve of the people for justice. To symbolise the continuation of the struggle, and to coincide with the 19th Session of the UN Human Rights Council, three Tamil youths from Europe (Gracian from Switzerland, and Kajan and Selvin from France) have joined together to conduct a ‘walk for justice’ from Brussels to Geneva.
[February 1, 2012 Ottawa, Ontario] Prime Minister Stephen Harper today issued the following statement in recognition of Black History Month: "Every February, Canadians celebrate Black History Month by learning about and reflecting upon the legacy and accomplishments of black Canadians. “In conjunction with the 200th anniversary of the War of 1812, we are taking a special look this year at the important contributions made by black soldiers to the historic battles that helped define the country that Canada would ultimately become. "One of the heroes of the fight for Canada was a freed slave named Richard Pierpoint, who, in his late 60s, volunteered and served with distinction in a number of battles in the Niagara Peninsula. “Many of the former slaves and black Loyalists who fought on the Canadian side during the War of 1812 settled in places such as Nova Scotia and south-western Ontario, where they and their descendants formed communities that continue to enrich Canada to this day.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









