அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சமூக, அரசியல், மனித உரிமைச்செயற்பாட்டாளரும், அவ்வாறே கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவருபவரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் செயலாளருமான தோழர் லயனல் போப்பகேயின் அன்புத்துணைவியாருமான சகோதரி சித்ரா லயனல் போப்பகேயின் வாழ்வையும்பணிகளையும்சித்திரிக்கும் ஆவணப்படம்தான் Nun other than .

மெல்பன் Darebin Inter cultural centre இல் அண்மையில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்கு எனது இரண்டாவது மகள் பிரியாவுடன் சென்றிருந்தேன். அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான செல்வத்துரை ரவீந்திரனும் அவரது துணைவியார் திருமதி ஜெஸி ரவீந்திரனும் வந்திருந்தனர். எம்மைத்தவிர ஏனையோர் பிற சமூகத்தினர்தான்.

ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்து அருட்சகோதரியாக மாறி , மதம் சார்ந்த பணிகளுடன் சமூகப்பணிகளும் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் சீர்மியத் தொண்டராகவும் இயங்கிய சித்ரா, எவ்வாறு மனித உரிமை ஆர்வலராக மாறினார், மக்கள் விடுதலை முன்னணியின் பிரசித்திபெற்ற விடுதலைக்கீதம் இசை நிகழ்ச்சியில் ஒரு பாடகியாக இணைந்தார், அத்துடன், மனித நேயம் மிக்க புரட்சியாளரான தோழர் லயனல் போப்பகேயின் காதல் மனைவியானார், அதனைத் தொடர்ந்து 1978 – 1983 காலப்பகுதியில் இலங்கையில் தோன்றிய அரசியல் அடக்குமுறை நெருக்கடிகளை அவர் எவ்வாறு எதிர்கெண்டார் முதலான செய்திகளை Nun other than ஆவணப்படம் சித்திரிக்கிறது.

மனித உரிமை ஆர்வலரும் ஆவணப்பட இயக்குநருமான தோழர் கலாநிதி உதன் பெர்னாண்டோ இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதற்காக இவர் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார். பலரை நேர்கண்டு அவர்களின் கருத்துக்களையும் தொகுத்துள்ளார்.

ஒரு காலத்தில் இலங்கையில் மார்க்ஸின் பிதா என அழைக்கப்பட்ட பிலிப் குணவர்தனாவின் உறவினர்தான் சித்ரா. பிலிப்பின் புதல்வர்கள்தான் முன்னாள் அமைச்சர்கள் – முன்னாள் பிரதமர் இந்திகா குணவர்தனா, தினேஷ் குணவர்தனா ஆகியோர். எனினும் இவர்களின் நிழலில் சித்ரா தன்னை ஒரு ஆளுமையாக வளர்த்துக்கொள்ளவில்லை!

கத்தோலிக்க மதப்பின்னணியில் சமூகப்பணிகளையும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை போக்கும் சீர்மியப்பணிகளையும் மேற்கொண்டுவந்த இளம் யுவதியின் கனவுகள் எவ்வாறு இருநதிருக்கும் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும்.

கட்டிருக்கமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் சித்ராவின் வாழ்க்கைப்பயணத்தைப்பேசும் Nun other than ஆவணப்படத்தில் சில காட்சிகள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பல செய்திகளை சித்ராவின் உடன் பிறப்புகள் சொல்கின்றன.

தோழர் லயனல் போப்பகே அவர்களும் இதர தோழர்களான ரோகண விஜேவீரா, உபதிஸ்ஸ கமநாயக்க, மாரசிங்க, மருத்துவர் அத்துல, வாஸ் திலகரத்ன, சாந்த பண்டார, கலு மல்லி, கலு ஆராய்ச்சி, கெலி சேனாநாயக்கா , சோமவன்ஸ அமரசிங்க, மற்றும் தமிழ்த் தோழர்களான சிங்கமாப்பானர் , தங்கராஜா, கிருஷ்ண பிள்ளை, விக்கிரமசிங்கா முதலானோர் 1978 ஆம் ஆண்டின் பின்னரே எனக்கு அறிமுகமானவர்கள். இவர்களையடுத்து சித்ராவை எங்கள் மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்காரியாலயத்தில்தான் முதல் முதலில் சந்தித்தேன்.

அப்போது அவர் அருட்சகோதரிக்குரிய ஆடையுடன்தான் வருகை தந்தார். இனிமையான குரல்வளம் மிக்க இவர் கட்சியின் புகழ்பெற்ற விடுதலைக்கீதம் நிகழ்ச்சியில் இணைந்துகொண்டது இரசாயன மாற்றம்தான்.

இயல்பிலேயே இரக்க குணம் கொண்டிருந்த சகோதரி சித்ரா, தோழர் லயனல் போப்பகே இயற்றிய பாடல்களை பாடினார். அந்தப்பாடல்கள் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தன.

தோழர் கெலி சேனாநாயக்காவும் தனக்குத் தெரிந்த பல தகவல்களை இந்த ஆவணப்படத்தில் சொல்கிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர் 1978 முதல் 1983 வரையில் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளராக விளங்கிய தோழர் லயனல்போப்பகேயின் இயல்புகளினால் அவரைக்கவர்ந்த சித்ரா, இறை பணியிலிருந்து துறவறத்தை துறந்து இல்லறத்திற்கு பிரவேசித்தபோது எதிர்நோக்கிய அனுபவங்களையும் பேசுகிறார்.

1971 இல் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்த ஒரு இயக்கத்தின் உறுப்பினர் எனத் தெரிந்துகொண்டே, ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பிய மனித நேயவாதியை சித்ரா கரம் பற்றுகிறார்.

சித்ரா தொடக்கத்தில் அருட்சகோதரியாக சேவையாற்றியது எங்கள் நீர்கொழும்பூரில் இருக்கும் பெரியமுல்லை என்ற இடத்தில் அமைந்திருந்த குருமனைதான். வெலிக்கடை, மகசின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண் கைதிகளுக்காக சீர்மியத் தொண்டராகவும் சென்று வந்திருக்கும் சித்ரா, பின்னாளில் ( 1983 இன் பின்னர் ) தனது காதல் கணவர் லயனல் போப்பகே அவர்கள் தடுப்பு முகாமில் ஒரு மேசைக்காலில் கட்டப்பட்ட நிலையில் இருந்தபோது கைக்குழந்தையுடன் பார்க்கச்சென்றிருக்கிறார்

விதி வலியது என்பதை சித்ராவின் வாய்மொழிக்கூற்றின் மூலம் புரிந்துகொள்கின்றோம்.

தன்வசமிருந்த ஓரிண்டு சேலைகளையே அந்த தடுப்பு முகாம் பயணத்திற்கு மாற்றி மாற்றி அணிந்துசென்ற செய்தியை விரக்தி முறுவலுடன் சொல்கிறார்.

லயனல் – சித்ரா பதிவுத் திருமணம் 1981 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மிகவும் எளிமையாக ஒரு தோழரின் வீட்டில் நடந்தது. அதற்கு நானும் சென்றிருந்தேன். தோழர் ரோகண விஜேவீரா சாட்சிக்கையெழுத்து வைத்தார் ஒரு சாப்பாட்டுக்கடையில் பார்சல் உணவு வாங்கி பகிர்ந்து உண்டோம். இந்தககாட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறுகிறது. அதன் நேரடி சாட்சியான எனது குரலும் இடம்பெறுகிறது.

லயனல் – சித்ரா தம்பதியினருக்கு திருமணத்தின்போது சாட்சி கையொப்பம் இட்ட விஜேவீரா, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான விடயத்தில் லயனலுடன் முரண்பட்டதையடுத்து, லயனல் தனது பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகிவிடுவதாக கடிதம் எழுதி அனுப்புகிறார். ஆனால் அவ்வாறு அவர் கட்சியிலிருந்து விலகிச்சென்றதற்கு, கத்தோலிக்க பின்னணியிலிருந்து வந்த சித்ராதான் காரணம் என்று விஜேவீரா – சோமவன்ஸ தரப்பினர் அவதூறு செய்கின்றனர். எனினும் கணவர் லயனல் , பதவி விலகிய தகவலை அறியாமலிருக்கிறார்.

இந்தப்பெண் மனதளவில் எத்தனை துயரங்களை கடந்து வந்திருக்கிறார் என்பதை தத்ரூபமாக இந்த ஆவணப்படம் சித்திரித்திருக்கிறது.

தனது கதையை ஒரு புத்தகமாகவே எழுத முடியும் என்று இறுதியில் சொல்கிறார் சகோதரி சித்ரா லயனல் போப்பகே.

தோழர் லயனல் போப்பகேயின் கதை ஏற்கனவே புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்தப்புத்தகத்தை எழுதியவர் Michael Colin Cooke . இந்தப்புத்தகம் தற்போது சிங்கள மொழியிலும் வெளியாகியிருக்கிறது.

எமது காலத்தில் – இலங்கையில் தோன்றிய அரசியல் நெருக்கடியில் தொழிலாள விவசாய பாட்டாளி மக்களின் விடிவுக்காகவும் தோன்றிய ஒரு மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு பெண் சந்தித்த வலிகளை பேசும் இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கும் தோழர் கலாநிதி உதன் பெர்னாண்டோவுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்