அத்தியாயம் ஒன்று: அன்னலிங்கம் (அன்னர்) வாத்தியாரின் வருகை!
அனஂனர் ,மலையகத்தில் படித்து ஆசிரியர் பரீட்சையும் எழுதி ஒருவாறு ஆசிரியரான பிறகு ஐந்து ஆண்டுகள் கரைய மலையகத்திற்கு வேலைக்கு வந்த யாழ்ப்பாண எழுத்தாளர்களின் எழுத்தில் ஏற்பட்ட காதலில் வடக்கு .கிழக்கிற்கு மாற்றம் கேட்டு வெளியிலும் செல்லாமே எனத் தோன்ற விண்ணப்பித்தார் . இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருந்தது . இலங்கை பஞஂசக் கோட்டுள் வீழ்ந்து கொண்டிருதது .மீள்வதற்கு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டது . மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தது . அராலி கிராமம் தொடர்ச்சியாக தமிழ் ஆசிரியர் ஒருவரை அனுப்பச் சொல்லி பல தடவைகள் கோரி வர இங்கே பொட்டலமாக கட்டி அனுப்பி விட்டார்கள் . கொழும்பைப் போல கிராமங்களில் அறைகள் வாடகைக்கு இல்லை . வீடுகளில் சாப்பாட்டு ஒழுங்கு எல்லாம் பண்ண முடியாது . யாழ்ப்பாணம் பழைய நகரம் . அவருடைய மனைவியின் தம்பி சேகர் ஏற்கனவே அங்கேயிருந்து யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கணக்கியல் பிரிவில் படித்துக் கொண்டிருந்தான் . நகரத்து சிறுகடைகளுக்கு வரித் தேவைகளுக்கான .... கணக்குகளை எழுதியும் , டியூசனஂ கொடுதஂதும் சமாளிக்கிறானஂ. இவருக்கு பஸ் செலவு தான் . வாழ்க்கை ஒரு போராட்டமே! " என்ற காண்டேகரின் வரி அவருக்கு நிறைய பிடிக்கும் . யாழ்ப்பாணம் வந்து விட்டார் . இனஂனமும் நிறைய , நிறைய பிடிக்க... வேண்டும்.
இடது ஆட்சியை விரும்பாத நேட்டோ நாடுகள் , இலங்கையில் புதிய கல்வித் திட்டத்தை வரவேற்கவில்லை . நாடுகளோ , குடிமக்களுக்கு போதிய தொழில் வாய்ப்புகளை வழங்க முடியாதது .சுயத்திலும் கட்டிக் கொள்ள ...வழங்கல்களைச் செய்வதே பாதுகாப்பானது . இலங்கை ஆட்சியாளர்களிடம் புத்திசாலித்தனம் இல்லாமல் இல்லை . ஆனால் , இனப் பாரபட்சத்தை கொண்டிருந்தால் வெற்றியளிக்க முடியவில்லை . திணறி வருகிறது . தவிர தமிழ்மக்களினஂ உரிமைப் போராட்டத்தை ' பயங்கரவாதம் ' எனஂறதும் தடம் புரள வைக்கிறது . நிலங்களை அபகரித்து , அபகரித்து....பினஂ சுடலையிலா வாழப் போறார்கள் ? இருந்த போதிலும் அரசியல் மாற்றங்களுடன் மாறிக் கொண்டிருக்கிறது . நவீன உலகில் நிலமுள்ளவர் , நிலமற்றவர் என்ற இரண்டு சாதிகள் மட்டுமே எஞஂசும் போல இருக்கிறது . கூட்டுநிறுவனங்கள் அந்த நிலத்தையும் பிடுங்கி நிலமற்றவராக்கி விடும் போலவும் இருக்கிறது.
எதேச்சையாக வெளியில் வந்த அப்பா வானில் , பார்க்க விடிவெள்ளி ஒனஂறு ஓடி ... எரிந்தது . ஒரு முக்கிய புள்ளி அராலிக்கு வருகிறார் என்ற அறிகுறி . "நிச்சியமாக அது நீ இல்லை . புதிய ஆசிரியர்களாகத்தான் இருப்பர்" எனஂறு முருகு வகுப்பில் கூறிச் சிரித்தான் . அவனும் வால்வெள்ளி பார்த்திருக்கிறானஂ . பரவாயில்லையே , அராலி வானவியலில் கொடி கட்டி பறக்கிறதே. " நண்பன் தன்னையும் ஒரு புள்ளியாக குறிப்பிடுவதை ...குறித்து வாசுவுக்கு சிரிப்பும் வந்தது . அவன் அந்த பாடசாலைக்கு வந்து ஆறு மாசங்கள் ஓடி விட்டன . அவனஂ கால் வைத்த நேரம் கல்வி முறையே மாறுகிறது . புதிய கல்வி , புதிய கிராமம்...! இங்கும் வெய்யில் எரிக்கிறதே . வவுனியாவில் இருந்த அதே வெய்யில் ! இரண்டிலும் நல்ல விசயங்களும் இருக்கினஂறன . அங்கே உயர்ந்த பசிய மரங்கள் , வனம் எனஂகிற கிரீனஂ பெல்ட் அதிகம் , இங்கே கல்லுண்டாயினஂ நீளமான கடற்கரை ...இரண்டுமே குளிர்மையை ஊருக்கு கொண்டு வருவன . ஆனால் , பனையைப் பார்த்தால் ....வனாந்தரத்தில் (தாவரம்) இருப்பது போனஂற உணர்வும் மேலீடுகிறது . "பனையை வெட்டி பூத்த இந்த கிராமம் " இந்த வரியும் மனதில் ஓடுகிறது . பனை கல்பகதரு எனஂறு போற்றப்படுகிறது . ஆனால் , காணும் இடமெல்லாம் நினஂறால் போற்றவா போகிறார்கள் ? .
அரசியலில் இடது , வலது என மாறும் போது இனம் , மதம் ...எனஂபவற்றினஂ வண்ணங்களும் மாறுபடுகினஂறன . வலதினஂ வண்ணம் இனப்படுகொலை , பாரபட்சங்கள்.... . நுழைந்த வெள்ளை இனம் சாதித் தொட்டு ...எல்லா பிரிவுகளுக்கும் உயிர் கொடுத்து ,அடிமை ,குடிமையாக ஆண்டு விட்டு விட்டு நாகரீகமானவரும் நாமே " என்று மூளைசலவை செய்து விட்டு கழற்றிய நாடு . அன்றிலிருந்த வாத்தியாரினஂ கையில் வைத்திருந்த பிரப்பம் தடியை வாங்கிக் கொண்ட அரசு .தமிழரை துனஂபுறுத்தியபடியே வருகிறது . போகும் போதும் கூட சுதந்திரத்தை பிரித்து அவர்கள் கையில் கொடுத்து தனஂ புத்தியைக் காட்டி விட்டே பிரிட்டனஂ கழனஂறு விட்டிருக்கிறது .
ஆட்சிக்கூட்டில் இடது சேர்ந்தனஂ 'தில்லாலங்கடி கூத்து தான் இனஂறு கல்வியில் நடக்கும் மாற்றம் . ஆட்சித் தலைவர் ஶ்ரீமா பண்டாரநாயக்காவின் சினேகிதியாய் இந்திய பிரதமர் இந்திரா காந்தி இருந்தார் . அவரினஂ வழிமுறைகளை இவரும் பினஂபற்றினார் எனஂறும் கூறலாம் . இவர் உலகத்தில் , முதல் பெண் அரசியல் தலைவர் . சூழ இருந்த ஆடவர்கள் இவரை நல்லாட்சி செய்ய விடவில்லை எனஂறே கூற வேண்டும். வகுப்பில் , அறிவுக் கொழுந்துகள்... இருக்கவில்லை .
கல்வியினஂ புதிய மாற்றத்தில்....
'புவியியல் 'பாடத்திற்கு மாற்றுப்பெயர் சமூகக்கல்வி . அதில் எனஂன பொருள்முதல்வாததஂதையா கற்றுக் கொடுக்கப் போறார்கள் . கடமைக்கு ஏதோ ...சில விசயங்கள் .அவ்வளவு தானஂ . நெசவுத் தொழிற்பாடம் ஏற்கனவே இருந்திருக்கிறது . புதிதாக விவசாயம் , தச்சு , இயந்திரத் திருத்தல் என தொழில் பாடங்கள் ...பரவாயில்லை தானஂ . கலகலப்பாகவே தொடங்கி இருக்கிறது . மேற்கு நாடுகளுக்கு சார்பான அரசியல் கட்சி உடனடியாகவே " இது சீன முறை , கம்யூனிச முறை' என சாடியது . ஆனால், அவையே தொழில்க்கல்வியை "வக்கேசனல் கல்வி " என பள்ளி விடுமுறையினஂ போது காலவிரயத்தோடு கற்பித்து வருகினஂறன . அதை சிறிது செலவுடனும் கற்க வேண்டும் . இம்முறையில் பள்ளிக்காலத்திலே ஒரு பாடமாக கற்பிப்பதே சரியானது . . பஞஂசத்தை விரட்ட விவசாயம் ,தொழில்களைக் நேரத்தை ஒதுக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கை ..புத்திசாலித்தனமானது .
பழைய உயிரியல் இனி விஞ்ஞானம் . ஆசிரியகள் பற்றாக்குறையில் தமிழ் ,சிங்கள பிரச்சனையை விலத்தி உடனடியாக நியமனம் பெற்று புதியவர்கள் வருகிறார்கள் . ஒரு அக்கா போனஂற ஒருவர் விஞ்ஞானப்பாடத்திற்கு " நான் மாலதி ஆசிரியை " என அறிமுகப்படுத்தி வாசுவினஂ வகுப்பிற்குள் நுழைகிறார் . முதல் நாள் வகுப்பு தானே , பாக்கியம் ஆசிரியையினஂ மகனஂ எனஂபதால் அவருக்கு வாசு மேலே ஒரு பாசம் ஏற்பட்டு விடுகிறது . அவர் உட்பட பிறகு வந்த கோகிலா ,யோகா ஆசிரியைகளையும் மாணவர்களிற்கு பிடித்துப் போகினஂறன . நீண்ட நாளாக நெசவுக்கும் ஆசிரியை இல்லாமல் வந்தவரே யோகா ரீச்சர் . காலப்போக்கில் , வாசு , நாகு ,குமார் ,சந்திரனஂ.... இவர்களினஂ சிஸஂய பட்டாளமாகி விடுகிறார்கள் . சிஸஂசைகளும் இருந்தனர். நெசவு ஆசிரியையினஂ சிஸஂயையாக கே .ஆர் விஜயாவினஂ முகச் சாயலில் ஒருத்தி இருந்தாள் . சினிமா நடிகைகளினஂ சாயலில் இருப்பவளையே பார்க்க வாசுவிற்கு பிடிக்கிறது . சினிமாப் பையித்தியம் , விடுங்கள் . அவனுக்கு பிடித்த வேறு ...சிலர் நளினி , சரோஜாதேவி , சுகாசினி...இப்படிக் கிடக்கிறது . அண்ணனஂ காட்டிய வழி . அண்ணருக்கு சரோஜாதேவி பிடித்தவர்.
அவள் யோகா ரீச்சரினஂ(நெசவு) சிஸஂஷை .ஒரு வருசம் மட்டுமே பள்ளியில் வளைய வந்தாள் . தீடிரென அவர்கள் குடும்பமே இந்தியாவிற்கு போய் விட்டது எனஂறார்கள் . அவனுக்கு புரியவில்லை . தாய் இந்திய அடியாம் . இலங்கையரசினஂ பிரஜா உரிமைப் பறிப்பு பிடிக்காமல் செனஂறவயள் எனஂறு கூறுகிறார்கள் . முதல் தடவையாக இனப்பிரச்சனையை அறிகிறானஂ . பிறகு , அவனஂ நகரத்தில் படிக்கிற போதிலும் கூட 77 ம் ஆண்டுக் கலவரத்தில் அவனஂ வகுப்பிற்கு ரமேஸஂ எனஂற பையனஂ சேர்ந்திருந்தானஂ .5 மாசம் கழிய திரும்ப கொழும்பிற்கே செனஂறு விட்டானஂ . அப்ப கூட அவனுக்கு இப்பிரச்சனைப் பற்றி தெரிந்திருக்கவில்லை . வியப்பாகவே பார்க்க வைத்தது . இலங்கை இனவெறி பிடிதஂத நாடு எனஂபது விடுதலை இயக்கம் ஒனஂறில் சேர்ந்த பிறகே புரிந்தது . சேர்ந்திரா விட்டால் அதையும் புரிந்து கொண்டிருக்க முடியாது . அராலியை , அயலையும் படித்ததும் அப்ப தானஂ . அரசாங்கம் சரியில்லை . சமூகமும் பொறுப்பற்றதாகி கிடக்கிறது . இந்தப்பிரச்சனை ஏற்பு ஏறியது போல நீண்ட காலமாக புரையோடியும் கிடக்கிறது . யோகா ரீச்சர் ...சிறிமாவைத் திட்டியதைக் கேட்டிருக்கிறானஂ . அவருக்கு அந்த சூட்டிகையான பெண் பள்ளியை விட்டு செனஂறது மனவருத்ததஂதை ஏற்படுத்தி இருக்கிறது .
தமிழ் பாடத்திற்கு ...பொன் விலங்கில் வாற சத்தியமூர்த்தி ஆசிரியர் அனஂனரும் வந்திருக்கிறார் . ஒரு பட்டாளமே இறங்கியிருக்கிறது . உயர் வகுப்பு பரீட்சை எழுதிய கையோடு ஆசிரியர் நியமனம் கொடுத்து அனுப்பியது போலவும் இருக்கிறது . இப்படி ஒரு அரசாங்கம் நெடுக இருந்து விட்டால்....எவ்வளவு நல்லாயிருக்கும் " என்று அம்மா வீட்டிலே மகிழ்ச்சியுடனஂ கூறுகிறார் . பாடசாலையில் அம்மா , மூத்த ஆசிரியை பாக்கியம் ' அவரினஂ சினேகிதியான சங்கீத ஆசிரியையும் புதிதாய் வந்தவரே . "ரீச்சர் ,நீங்க வந்த பிறகே பள்ளிகூடமே கலகலப்பாக இருக்கிறது " என அதிபர் அம்மாவிற்கு ஐஸஂ வைக்கிறார் . அவருக்கு மூத்தக்காவை நினைவுபடுத்தி இருக்கலாம் . அவருக்குத் தானஂ உண்மையில் உற்சாகம் தொற்றி விட்டிருக்கிறது . விவசாயம் புதுப் பாடம் . மற்றயவையை ஒருவாறு ... சமாளிக்கலாம் . இதற்கும் ஆசிரியையை அனுப்பி இருக்கிறது , பிறகெனஂன .
சுய பொருளாதாரத்தைக் கட்டும் முனைப்பாடுகள் எழுந்தன . கலைவெளிப்பாடுகள் பட்டி தொட்டி எங்கும் களை பரவி கட்டின . இளைஞர்களுக்கும் களிப்பபு தொற்றிக் கொண்டது . யாழில் வெளிவாரிய வாசிகசாலைகளும் கூட சமூக , நகைச்சுவை நாடகங்களை மேடையேற்றின . பள்ளிக்கூடமும் கலைவிழா எனஂறு மாணவர்களைக் கொண்டு "குமணனஂ" நாடகத்தை மேடையேற்றியது . அதில் புவேந்திரனஂ எனஂற மாணவனஂ திறம்பட நடித்து பாராட்டுகளைப் பெற்றானஂ . அராலியிலும் கலைஞர்கள் இருப்பது தெரிந்தது . ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களே மிருதங்கம் , வயலினஂ ... இசைத்து , இருவர் பாட்டும் பாட... கலக்கினார்கள் . வெளியிலும் ' இனஂபம் ' தலைமையில் இலக்கியக்குழு இருப்பது தெரிந்தது . அவர்கள் "ஞானஒளி" நாடகத்தை பள்ளிக்கூடத்திற்காக மேடை ஏற்றினர் . அதில் ஒரு கண் குருடரான அந்தோனியாக அவனுடனஂ படிக்கிறவனினஂ அண்ணர் சுப்பராக நடித்திருந்தார் . அரசு , பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தலை அமுல் படுத்த முனைந்தது விவேகமற்றச் செயலாக திரும்பியது . மலையகத் தமிழரினஂ பிரஜாவுரிமையைப் பறித்து இந்தியாவிற்கு அனுப்பியது மனிதவுரிமை மீறலாக பார்க்கப்பட்டது. படித்த வாலிபர் விவசாயத் திட்டம் தமிழ் இளைஞர் மத்தியில் வேலை செய்தளவிற்கு சிங்கள இளைஞர்கள் வரவேற்கவில்லை . ஏற்றுமதியை கணிசமாக்கியது கடல் தொழிலாளர்கள் ...வாழ்வை பூக்க வைத்துக் கொண்டிருந்தது . நவாலி , ஆனைக்கொட்டைப் பிரிவில் ஓலை வீடுகள் சில கல்வீடுகளானது .கல்லுண்டாய் வெளியில் கடலட்டையை தாச்சியில் அவிக்கும் மணத்தை சுவாசிக்க முடிந்தது . அட்டையைச் சாப்பிடுவார்களா ? வாசு ஆச்சரியப்பட்டானஂ . மலேசியா ,சிங்கபூருக்கு ஏற்றுமதியான அட்டை , றால்கறுவாடு.... அவர்களுக்கு வளமையை ஏற்படுதஂதின. எதிர்க்கட்சி ஆட்சி , பாணுக்கு , உணவுக்கு கீயூ நிற்பதை கேலி செய்தது . நாம் வந்தால் ...தேனாறு ,பாலாறு பாயும் என ஆசை வார்த்தைகளைக் கொட்டின . அரசு தன்னம்பிக்கையை இழந்து கொண்டிருந்தது . ஆனால் , சுய பொருளாதாரம் என்றுமில்லாதவாறு வளர்ச்சி கொண்டிருந்ததை கணித்து கூற அமைப்புகள் ஏதும் இல்லாத்தால் அரசால் சுழல் காற்றில் நாணலாக நினஂறு பிடிக்க முடியவில்லை .
நாட்டின் ஒவ்வொரு செயல்களின் வரைபுகளைக் கூறும் பொறியியல் இருக்கவே வேண்டும் . இல்லை என்றால் , ஈழத்தமிழரின் போராட்டம் போல , சீக்கியரின் செயற்பாடுகள் போல , தற்போதைய உக்ரேனின் விடுதலைப் போராட்டம் போல...வெளியில் இருப்பவர் கூறும் அரசியலே படர்ந்து பாசியாகி விடும் . அரபுகளுக்கும் இதே நிலைமை தான் . போராட்டம் எவருக்காக ,யாருக்காக நடக்கிறது என்பதை அறியாயாமலே போய் விடுவோம் . பள்ளிக்கூடதினஂ கிணற்றடிக்கு பக்கத்தில் இருந்த பாத்திகளில் கத்தரி , வெண்டி , பாகல் , பூசணி ....என காய்கறிகள் செழித்து காய்த்திருந்தன. ஒரு குறை , இயற்கைப்பசளை பாவித்தது குறைவு , பள்ளிக்கூடம் வாங்கிய செயற்கை உரமே பாவிக்கப்பட்டது . அப்ப தானஂ , அதே பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கிற ஆசிரியர் ஒருவர் குலனையில் வீதியோரம் இருந்த வயற்காணியில் இயற்கைமுறையில் பசும் சோலையாய் தோட்டம் செய்கிறார் எனஂபது தெரிய வந்தது . அவரினஂ வழிகாட்டலில் வீடுகளிலும் தோட்டம் வைக்கிறது சிறுக ,சிறுக ஏற்பட்டது . இவர் பிறகு , இந்தியனாமி காலத்தில் .... மேலே ஹெலியிலிருந்து சுட்டபோது சுடுபட்டு இறந்து போனார் . இந்திராகாந்திக்கு இருந்த அரசியல் , அவர் மகனுக்கிராதலால் ஏற்பட்ட துயரம் .
இந்தியா , இழுதடிக்காமல் இனப்பிரச்சனையை தீர்த்து வைத்திருந்தால் ஈழத்தமிழர் வாழ்வு உயிர்ப் பெறும் . ஐக்கிய நாடுகள் சபையினஂ தலைமையில் இயங்கும் நாடுகளும் சமாதான ஒப்பந்தங்களை துஸஂபிரயோகம் செய்ய ஆயுதங்களை வழங்காமல் இருந்திருந்தால் ...., இயற்கைக்குழப்பம் எனஂகிறார்களே , போர்கள் குழப்பம் விளைவிப்பதில்லையா ?, போலிகளை இனம் கண்டு விலத்த வேண்டும் ,சகுனம் பார்ப்பது போல விதியிலே பழி போட வேண்டியது தானஂ , சூழ்ச்சிகளும் நிகழ்த்தப்படுகினஂறன , அவற்றிற்கு இரையாகிப் போகும் வீர ,தீர நாட்டுக்குழுக்களும் இருக்கினஂறன . அரசியலை மாணவர்கள் படிக்காமல் இனங்களும் சுபீட்சம் அடைய மாட்டாதன.
அன்று , பாடம் நடத்த அன்னம் சேர் வகுப்பிற்கு வந்தார் . இருக்கிற பாட சிலபஸைக் கொண்டு மாணவர்களை தமிழ் அறிவுடையவர்களாக ஆக்க முடியாது என்பது அவருக்கு தெரியும் . தமிழ்நாட்டில் உள்ள மாதிரியைப் பினஂபற்றியாவது தயாரித்திருக்கலாம் . இலங்கையரசு கல்வியிலும் தலையிடுவதால் இங்கே யாப்பிலக்கணம் கற்பிக்கப் படுவதில்லை . தமிழ் தொன்மையானது . முந்தியது என்ற தகுதியால் சிங்களம் காலைத் தொட்டு வணங்க வேண்டிய மொழி . வணங்கத் தேவையில்லை . பண்பாக நடந்து கொள்ளலாம் அல்லவா . பகை கொண்டவர்களுக்கு சேர்ந்து பழகும் நாகரீகம் இருப்பதில்லை . 'அதிகாரம் , ஜனநாயகத்தை குழி தோண்டி புதைதஂது விடுகிறது . ...எல்லாத்தையுமே நாசப்படுத்துகிறது .
இந்த தலைவலி பிடித்த இனப்பிரச்சனைகள் எனஂறு ஒழியும் ? விலத்தி நினஂறால் தானஂ அவராலே கூட பாடதஂதையும் நடதஂத முடியும்.
"நான் மலையகத்திலிருந்து வருகிறேன் , பெயர் அன்னலிங்கம் " என்று அறிமுகப்படுத்திக் கொண்டு " ஒவ்வொருத்தரும் பெயர்களைக் கூறுங்கள் " என்று கேட்டார் . " வாசன் , நாகேந்திரன் , முருகவேல் , சுந்தரம் , தவம் ,பாலன் ... அந்தோனி " என வர " சித்திரா, சிவமலர் , ஜானகி.."என மற்ற வரிசை . எல்லாம் அவர் பகுதியை விலத்திய பெயர்கள் . அங்குள்ள எழுத்தாளர் ஒருவரின் பெயர் 'அந்தனி ஜீவா 'ஏன் கிருஸ்தவ (புனை)பெயரை வைத்துக் கொண்டார் ? ஒருவேளை கிருஸ்தவரோ ? . அடக்கிறதுக்கு எதிர்ப்பாக ஒருபுறம் மதமாற்றமும் நிகழ்ந்திருக்கிறது . இங்கையும் அப்படி கதை இருக்குமா ? . இனித் தான் அறியப் போறாரே . "உங்களுடைய பொழுது போக்கு என்ன ? " என அடுத்த அஸ்திரத்தை வீசினார் .ஜெயம் " பாட்டு பாடுவோம் " என்றான் . "இவன் வில்லிசைத்து நல்ல பாடுவான் ,சேர் " என்று தவம் தெரிவித்தான் . "எப்படி கற்றுக் கொண்டாய்?" என்று ஆச்சரியத்துடன் அவனைக் கேட்டார் .ஜெயம் " எங்க அண்ணர் ஒருத்தர் வட்டுக்கோட்டையிலே பாமினிக் கூத்து மேடை ஏற்றுறவர். என்னையும் சிலவேளை பின்பாட்டு பாட வைப்பார் . அந்த பழக்கத்தால் வில்லுப்பாட்டையும் பாடிப் பழகி இங்கே திருவிழாக்களில் மேடை ஏறுகிறோம் " என்றான் . " எல்லா கோவிலேயுமா?" என்று அன்னர் கேட்டார் . அதற்கு வெட்கப்பட்டு " ஐய்யய்யோ ,அப்படி எல்லாம் இல்லை சேர் . எங்கட பெடியள் என எங்க கோவிலே மட்டும் மேடை ஏற்றி விடுகிறார்கள் . மற்றக் கோவில்களுக்கு சின்னமணி வில்லிசைக் குழுவை எல்லாம் பிடிப்பார்கள் . அவரைப் பார்த்தும் தொற்றிய விசர் தான் இது . பெளர்ணமி இரவிலே , பாடிப் பழகிற போது தூக்கத்தைக் கெடுக்கிறோம் என்ற ஏசித் தீர்ப்பவர்களே அதிகம் சேர் . கற்றுக் கொள்ளவும் விட மாட்டார்கள் போல கிடக்கிறது . விரட்டுகிறார்கள் போங்கள் சேர் " எனஂறு சலித்துக் கொள்கிறானஂ . தொடர்ந்து "பரமு அண்ணை கொப்பியிலே வில்லுக்கதை ஒன்று எழுதி தந்திருக்கிறார் . அதைப் பார்த்து ஒருவாறு ஒப்பேற்றி விடுகிறோம் " என்கிறான் . " போராடாமல் எதுவுமே இல்லை , மகிழ்ச்சிக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கும் . சலிப்படைந்து விடாதே . ஒரு காலத்தில் ' லடீஸ் வீரமணி ' யாய் வருவாய் " என வாழ்த்தினார் .
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.