பிரித்தானிய அரச குடும்பத்தினரின் 'Megxit'
பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகப் பிரித்தானியப் பத்திரிகைகளிற்சில ஹரியின் மனைவிக்கு எதிராகத் தொடரும் இனவாதம் கலந்த பதிவுகள்தான் இளவரசர் ஹரி தனது மனைவியுடனும் குழந்தையுடனும் பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து பிரிந்து போவதற்குக் காரணம் என்பதைப் பிரித்தானிய பத்திரிகைகளின் அரசகுடும்பம் பற்றிய தகவல்களை ஆழமுடன் அணுகும் அத்தனைபேரும் புரிந்து கொள்வார்கள்.
தனது பன்னிரண்டாவது வயதில் தனது அருமைத்தாயான இளவரசி டையானா அகாலமாக இறந்ததற்கு பத்திரிகை நிருபர்களின்; மனிதத் தன்மையற்ற செயற்பாடுகளே காரணம் என்பது இளவரசர் ஹரியின் ஆதங்கம் என்பது பலருக்குத் தெரியும்.