சத்யஜித் ராயின் கடைச்சிப்படம் இந்தப்படம். இந்திய - பிரெஞ்சுக் கூட்டுத்தயாரிப்பு. இது சத்யஜித் ராயின் 'அதிதி' சிறுகதையொன்றின் திரை வடிவம். இத்திரைப்படத்தின் இயக்கம், இசை, திரைக்கதை எல்லாவற்றையுமே மிகவும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் சத்யஜித் ராய். இத்திரைப்படத்துக்கு இந்திய மத்திய அரசின் விருதுகளுடன் , சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளும் கிடைத்துள்ளன. வங்காள நடிகர் உத்பால் தத் (Utpal Dutt) மிகச்சிறந்த நடிகர்களிலொருவர்.
இத்திரைப்படத்தில் பல வருடங்களுக்கு முன் இளம் வயதில் வீடு துறந்து, மேற்கு நாடுகள் பலவும் அலைந்து திரிந்து, மானுடவியலில் பட்டம் பெற்று அத்துறையில் ஊடகங்களுக்கு எழுதி வருபவராக விளங்கும் மனோமோகன் மித்ராவாக அவர் நடித்திருக்கிறார். பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் தன் மருமகள் வீட்டுக்கு விருந்தினராக, அந்நியராக வருகை தருகின்றார். அவரை அவர் உறவினர்கள் எவ்விதம் வரவேற்கின்றார்கள், உபசரிக்கின்றார்கள் , முடிவில் அவர் என்ன செய்கின்றார் என்பதை விளக்குவதுதான் திரைக்கதையின் பிரதான நோக்கம். அவரது நடிப்பும், அப்பாத்திரச்சிறப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. இவரது பாத்திரத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய முக்கிய எண்ணங்களிலொன்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது புகழ்பெற்ற நாவலான 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்' நாவலின் நாயகனாகப் படைத்த ஹென்றி என்னும் பாத்திரத்தை இத்திரைப்படத்தில் வரும் மனோமோகன் மித்ரா பாத்திரம் ஏற்படுத்திய தூண்டல் காரணமாகப் படைத்திருப்பாரோ என்ற எண்ணம்தான். இத்திரைப்படத்தின் முடிவும், அவர் எதற்காக வருகின்றார் என்பதற்கான முக்கிய நோக்கமும் அவ்விதமான எண்ணத்தை ஏற்படுத்தியது. நீங்களும் பார்த்துப்ப்பாருங்கள். முடிவு செய்து கொள்ளுங்கள்.
சத்யஜித் ரேயின் அகண்டக் (Agantuk- அந்நியன் - The Stranger) : https://www.youtube.com/watch?v=EfrOnQgEntk
இசை, இயக்கம், திரைக்கதை,, மூலக்கதை - சத்யஜித் ராய் | ஒளிப்பதிவு: பருன் ராக ( Barun Raha)
நடிகர்கள்:
Deepankar De
Mamata Shankar
Bikram Bhattacharya
Utpal Dutt ... Manomohan Mitra
Dhritiman Chatterjee
Rabi Ghosh
Subrata Chatterjee
Promode Ganguly
Ajit Bandyopadhyay