13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்
சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் - இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை - இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. ஒருவிதத்தில் இந்த மீறல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க வாக்குறுதி மீறல் அரசியல் தீர்வு தொடர்பானது. சிறீலங்கா அரசு பல ஆண்டுகளாக அதிகாரப் பரவலாக்கல் முறைமையின் கீழ் அதிகாரம் சிறீலங்காவில் வாழும் எல்லா மக்களுக்கும் இடையில் ஒப்புரவான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் என வாக்களித்திருந்தது. அய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் அவர்களோடு சேர்ந்து சனாதிபதி இராசபக்சே போர் முடிந்த மே 2009 இல் விடுத்த கூட்டறிக்கையில் அரசியல் தீர்வு தொடர்பாகப் பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தார். அதில் "13 ஆவது சட்ட திருத்தம் நடைமுறைப் படுத்தப்படும்" என்பது ஒன்றாகும்.
போர் முடியு முன்னர் அனைத்துக் கட்சி சார்பாளர்கள் குழு (அகசாகு) மற்றும் அகசாகு க்கு உதவியாக சனாதிபதியால் யூலை 11, 2006 இல் நியமிக்கப்பட்ட பன்முக வல்லுநர் குழுவின் தொடக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு சனாதிபதி உரையாற்றும் போது: