இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும் இந்த வரையறைக்குள் அடங்கிவிடும் என்பதில்லை. ஆற்றல் வாய்ந்த கலைஞர்கள் இத்தகைய வரைவிலக்கணங்களை மீறியபடியே, புதுவிதமான அம்சங்களைக் கொண்ட சிறந்த படைப்புகளை அவ்வப்போது உருவாக்கி வருகின்றனர். வரைவிலக்கணங்களெல்லாம் பொருந்தி இருந்துவிடுவதனால் மட்டும், ஓர் இலக்கியப்படைப்பு சிறந்ததாக இருக்குமென்றுமில்லை. இலக்கணங்களெல்லாம் பொருந்தியிருந்தும் அதில்   உயிர் இல்லையாயின் - வாசகரின் மனதைப்பிணிக்கும் கலைத்தன்மை இல்லையாயின் – அதிற் பயனேதுமில்லை. இதனூடாக, இலக்கிய வடிவங்களிற்குத் திட்டவட்டமான வரையறைகளைக் கொடுக்கமுடியாதென்பதையும்,  அவற்றின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை புரிந்துகொள்ளலாம் என்பதையுமே, நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இங்கு நாம் எடுத்துக்கொண்டிருக்கும் சிறுகதை  என்ற இலக்கியத்துக்கும் இது பொருந்தும்.   

இவ்வாறு தனது அங்குமிங்குமாய்… நூலில் எழுத்தாளர் அ. யேசுராசா மறைந்துவிட்ட எழுத்தாளர் அ.செ. முருகானந்தனின் மனித மாடு சிறுகதைத் தொகுப்பினை முன்வைத்து எழுதியிருக்கும் விமர்சனக்குறிப்பின் தொடக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

அண்மையில் கனடா ரொறன்றோ தமிழ்ச்சங்கம் இணையவழியில் நடத்திய கலந்துரையாடலில், அங்கே வதியும் இலக்கிய திறனாய்வாளர் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள்   அழகியல் நோக்கில் தமிழிலக்கியம் என்ற தலைப்பில் நீண்டதோர் உரையை நிகழ்த்தியபோது, யேசுராசாவின் அங்குமிங்குமாய் … நூல்தான் நினைவுக்கும் வந்தது. யேசுராசாவும்  இந்த நூலில் ஆங்காங்கே எம்மவர் படைப்புகள் குறித்து எழுதும்போது இந்த அழகியல் விடயத்தையும் தூவிச்சென்றுள்ளார். மொத்தம் 75 பதிவுகளைக்கொண்ட இந்த நூல், ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் போக்குகளையும் இனம் காண்பித்தவாறு, மொழிபெயர்ப்பு, ஓவியம், இசை, திரைப்படம், பயணங்கள், அவதானிப்புகள், நூல் விமர்சனங்கள் மற்றும் யேசுராசாவுக்கு மிகவும் பிடித்தமான கலை, இலக்கிய ஆளுமைகள் குறித்தெல்லாம் பேசுகின்றது. அத்துடன்  அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட கால கட்டத்தின்  ஈழத்து இலக்கிய வரலாற்றினையும்  யேசுராசா தனது பாணியில்  நினைவூட்டியிருக்கின்றமையால்,  அதனை வாசிக்கும்போது கடந்த காலங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன.

யேசுராசா, சிறுகதைப்படைப்பாளி, விமர்சகர், தொகுப்பாளர், பதிப்பாளர், இதழாசிரியராக இயங்கிய அனுபவம் மிக்கவர். அத்துடன் கலா ரசிகர்.  கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருபவர்.  அலை, கவிதை, தெரிதல் முதலான இதழ்களை வெளியிட்டவர். யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான திசை வார இதழின் துணை ஆசிரியராகவும் இயங்கியிருப்பவர். எனவே,  யேசுராசா கலை, இலக்கிய உலகில் கற்றதும் பெற்றதும் அநேகம்.  

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி யாழ். குருநகரில் பிறந்திருக்கும் இவர்,  இம்மாதம் தனது 76 ஆவது பிறந்த தினத்தை நெருங்குகிறார்.

கலை, இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு அவசியம் என்பதில் உறுதியானவர்.  

சிலசமயங்களில் அவரது பதிவுகளில் அறச்சீற்றத்தையும் காணமுடியும்.  அங்குமிங்குமாய்… நூலில் அவரது ஐந்து பக்கங்களுக்கு விரியும் என்னுரையிலும் யேசுராசாவின் அறச்சீற்றத்தை காணமுடிகிறது. ஒரு காலத்தில்  இவருடன் நல்ல நண்பர்களாக திகழ்ந்த சிலரும்,   இந்த அறச்சீற்றத்தை சகிக்க முடியாமல்  இவரிடமிருந்து ஒதுங்கிச்சென்றுவிட்ட  துயரத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. முன்னர் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் அவதானித்தேன். பின்னர் புகலிட தேசத்திலிருந்தும் ( அவுஸ்திரேலியா ) பார்க்கின்றேன். ஆனால், யேசுராசா அதற்கெல்லாம் மனதளவில் அலட்டிக்கொள்ளாமல், தொடர்ந்தும் கலை, இலக்கியத் தேடலுடன் இயங்கிக்கொண்டேயிருப்பவர்.

கருத்துப்பகைமை தனிப்பட்ட பகைமையாகிவிடுவது மிகுந்த கவலையை  எனக்குத்தந்திருக்கிறது என்பதையும் வலியுடன் சொல்லிக்கொள்கின்றேன்.

              - எழுத்தாளர் அ.யேசுராசா -

யேசுராசா,  ஈழத்து இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை என்பதே எனது அபிப்பிராயம்.  அவர் தனது அறச்சீற்றத்தை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு,  படைப்பிலக்கியத்துறையில் இணைந்துள்ள புதிய தலைமுறையினருக்கும் இனி வரவிருப்பவர்களுக்கும் திறனாய்வு – விமர்சனம் – மொழிபெயர்ப்பு –  ஆவணப்படுத்தல் முதலான துறைகளில் ஆதர்சமாக திகழவேண்டும் என்பதும்  எனது தாழ்மையான வேண்டுகோள்.  யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியில் 2014 ஆம் ஆண்டு நடந்த நூலக தினம் நிகழ்வில் யேசுராசா நிகழ்த்திய உரையுடன் அங்குமிங்குமாய்… நூலின் உள்ளடக்கம் தொடங்குகிறது.  இதுபோன்ற  உரைகள்  வருடாந்தம் ஏனைய கல்லூரிகளிலும் இடம்பெறல் வேண்டும்.

வாசிப்பு அனுபவமும், படைப்பூக்கமும் அஞ்சலோட்டத்திற்கு ஒப்பானது.  இன்றைய தலைமுறை வாசகர்களும்  எழுத்தாளர்களும் ஒரு கால கட்டத்தில் பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களாயிருந்தவர்கள்தான். யேசுராசா,  தரமான இலக்கியபடைப்புகளையும், தனது பயணங்களையும் ஆழ்ந்து அனுபவிப்பவர். உடனுக்குடன் குறிப்புகளையும் எழுதி சேமித்து வைக்கும் இயல்புகொண்டவர் என்பதை அறிவேன்.  அந்த இயல்பை  அங்கிங்குமாய்…. நூலின்  402 பக்கங்களிலும் காணமுடிகிறது.

மொழிபெயர்ப்பும் கவிதையும், அங்குமிங்குமாய் இணையுங் கதைகள், தமிழைப் பேணுவது யாரின் கடமை, செவ்விதாக்கம் பற்றி, தமிழ் ஊடகங்கள் பற்றிச் சில அவதானங்கள் முதலான கட்டுரைகள் எனது வாசிப்பு அனுபவத்தில் மிகுந்த கவனத்தை பெற்றிருந்தன. அதனால், ஏனைய பதிவுகளும், குறிப்புகளும் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதல்ல அர்த்தம்.

தனக்கு பிடித்தமான சில இலங்கை – இந்திய இலக்கிய ஆளுமைகள் குறித்தும் நினைவுப்பதிவுகளை எழுதியிருக்கிறார்.

விருதுகள் பற்றி யேசுராசா எழுதியிருந்த குறிப்புகள் சுவாரசியமாகவிருந்தன.

  கலைஞர் – எழுத்தாளர் சமூகப்பொறுப்பு உள்ளவர், சிறுமைகண்டு பொங்குபவர், கலகக் குரல் எழுப்புபவர், சமூகத்தின் வழிகாட்டி , காலத்தை பதிவுசெய்பவர், சத்தியதர்சி, சுயமரியாதை மிக்கவர் என்றெல்லாம் பெருமைப்படுத்திச்சொல்லப்படுகிறது. நமது கலை, இலக்கியச் சூழலில் இவற்றின் உண்மைப்பெறுமானம் எப்படி இருக்கிறது என்பதைத் திறந்த மனதுடன் ஒருவர் நோக்கும்போது, ஏமாற்றந்தரும் நிலைமை . ( பக்கம் 275 ) என்று தனது ஆதங்கத்தையும் யேசுராசா வெளிப்படுத்தியிருக்கிறார்.

என்ன செய்வது நண்பரே?!

வனாந்தரம் எப்படி இருக்கும்..? அதனை சோலையாக்குவதும் மனிதர்கள்தான்.  அம்மனிதர்களும் ஏமாற்றங்களை சந்தித்திருப்பார்கள் !  சோலைகளிலும் ஏமாற்றங்கள் வரலாம். பொறுத்துக்கொள்ளுங்கள்.  கடந்து செல்வோம். உங்களது பிறந்த தின காலத்தின்போது  ( 30 டிசம்பர் )   உங்கள் நூல்  பற்றி வாசகர்களுக்கு தெரிவிக்கும்  அறிமுகத்துடன் வாழ்த்துக்கூறுகின்றேன்.

அங்குமிங்குமாய்  பிரதிகளுக்கு:

அலை வெளியீடு, இலக்கம் 01,  ஓடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம், இலங்கை.  

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.




Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here