இரோம் ஷர்மிளா (ஓர் உண்மை அமைதிப்போராளி).
உண்ணா விரதம் என்பது இன்று அரசியல் ஆதாயத்திற்க்காக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாக தான் பயன்படுகிறது என்பது கசப்பான ஒரு உண்மை, உலக அளவில் எங்கும் காணாத முன்று மணி நேர உண்ணா விரதம், அதுவும் சகல வசதிகளுடன்,....தினம் தினம் ஒரு உண்ணா விரதங்கள் ஆனால் இவை எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம்......! ஏழு நாள்கள் உண்ணாவிரதம், பன்னிரண்டு நாள்கள் உண்ணாவிரதம் என்று ஆரம்பிப்பதும் பின் காலபோக்கில் அவை மறைந்து போவதும் வாடிக்கையாகி விட்டன.......... ஒரு பக்கம் அண்ணா ஹசாரேயின் 12 நாள்கள் உண்ணா விரதத்திற்கு உலக அளவில் அதரவு தெரிவிப்பதும், மற்றொரு பக்கம் மணிப்பூர் மாநிலத்தில் இரோம் ஷர்மிளாவின் 12 வருட உண்ணா விரதத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாததும் வியப்பு அளிக்கிறது... யார் இந்த இரோம் ஷர்மிளா? எதற்காக இவர் 12 ஆண்டுகளாக போராடுகிறார்? இவர் அருணாச்சல் பிரதேஷம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ,நாகலாந்து ,திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் [Armed Forces (Special Powers Act 1958)] திரும்ப பெற வேண்டும் என்பது தான் இவரின் ஒரே கோரிக்கை....