சர்வதேச மட்டத்தில்மாதா மாதம் தவறாது நடத்தி வரும் போட்டி இது இம் மாதம் (ஜூலை )மாதம் நடாத்தப்படுகின்ற கவிதைப் போட்டிக்கு கவிதை ஆர்வம் உள்ளோர்களிடம் இருந்து கவிதைகளை எதிர்பார்க்கின்றோம் தரமான ஒரு கவிதை தெரிவு செய்யப் பட்டு அதற்க்கு (கவிஅருவி )சான்றிதழும் ஒரு சிறப்புக் கவிதை தெரிவு செய்யப் பட்டுஅதற்கு (கவித்தீபம் )சான்றிதழும் வழங்கி வருகின்றோம் இன்னும் வெற்றி பெற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுவருகின்றது. ஏற்கனவே நாம் நடத்திய கவிதைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மலிக்காபாரூக் ,கவியன்பன் கலாம் , முத்துப் பாலகன் ,ஆயிசா பாரூக் சைலஜா ராகவன் ஆகியோர்களும் இலங்கையை சேர்ந்த ராஜ கவி ராகில் கலைமகன் பைரூஸ் கலா நெஞ்சன் சாஜஹான் போன்றோ வெற்றி பெற்று சான்றிதழ்களும் பெற்று உள்ளார்கள் போட்டிக்கு வரும் 03 கவிதைகள் தெரிவு செய்யப் பட்டு ஆண்டின் இறுதி மாதத்தில் தடாகம் அமைப்பினால் கவிதை நூலும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளது எனவே கவிதைகளில் ஆர்வம் உள்ளவர்கள் 30/07/2013 செவ்வாய்கிழமைக்கு முன்னர் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம் சாதி மதம் சார்பான கவிதைகளை அனுப்ப வேண்டாம் கவிதைகள் எதுவானாலும் சரியே ( தலைப்பு இல்லை )விரும்பிய தலைப்பில் எழுதி அனுப்பலாம் உங்களது கவிதைகள் வந்து சேர வேண்டிய ஜிமெயில் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தயவு செய்து போட்டிக்காக கவிதைகள் அனுப்பவர்கள் யாராக இருந்தாலும் தமது அறிமுகம் முகவரி புகைப்படம் தொடர்பு இலக்கம் ஆகியவற்றை கண்டிப்பாக அனுப்பி வைக்கமாறு அன்போடு வேண்டுகின்றோம் நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , அமைப்பாளர் , தடாகம் கலை இலக்கியகல்வி கலாசார சமூக அபிருத்தி சர்வதேச அமைப்பு ./ இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.