தமிழில் மொழிபெயர்ப்பில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாரதியார். அவர் இராமாயணத்தை மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பின் வழியாக நமக்கு அரசியல், தத்துவப் பார்வையை ஊட்டினார். இன்றைய மார்க்சியத் தத்துவமும் ஜனநாயகக் கோட்பாடும் மொழிபெயர்ப்பில் கிடைத்ததுதான் .
நோக்கம்:
ஒரு செயலை நாம் எதற்காக செய்கிறோம், எந்த லட்சியத்திற்காக செய்கிறோம் என்று கருதுவதே நோக்கம். அந்த செயலின் நோக்கம் நிறைவேறி விட்டால் அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தினால் அதனைப் 'பயன் 'என்று கூறலாம்.
தமிழ்மொழியின் சிறப்பை சுப்பிரமணிய பாரதியார் "யாமறிந்தமொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்றும் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை எனக்கு செய்தல் வேண்டும் என்கிறார்.”1 ஒரு செயலை நாம் எதற்காக செய்கிறோம் என்று எந்த அளவு செய்கிறோம் என்று கருதுவதே நோக்கம். அந்த செயலின் நோக்கம் நிறைவேறி விட்டால் அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தினால் அதனைப் பயன் என்று கூறலாம். தமிழ்மொழியின் சிறப்பை சுப்பிரமணிய பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் மொழிபெயர்ப்பு முன்னோடியாகத் திகழ்ந்தவர் இன்றைய மார்க்சிய தத்துவமும் ஜனநாயக கோட்பாடும் மொழிபெயர்ப்பில் கிடைத்தது .
தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்றும் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை எனக்கு செய்தல் வேண்டும் என்கிறார். ஒரு செயலை நாம் எதற்காக செய்கிறோம் என்று எந்த அளவு செய்கிறோம் என்று கருதுவதே நோக்கம் அந்த செயலின் நோக்கம் நிறைவேறி விட்டால் அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தின அதனை பயன் என்று கூறலாம்.
தமிழ்மொழியின் சிறப்பு இயல், இசை, நாடகம் இம்மூன்றும் தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கின்றன. நம் பழைய இலக்கியங்களில் இதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் இது தொடர்பான வேற்று மொழி நூல்களும் நாம் தமிழ்மொழியில் மொழிபெயர்ப்புகள் கிடைத்தால் இத்துறைகள் சிறந்து விளங்கும் எனலாம். ‘அபிநய தர்ப்பணம்’ என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்த திரு.வீரராகவையன் சுட்டுகிறார். “தமிழ்நாட்டில் நாட்டியம் பயிலும் மாணவர்க்கு வடமொழி அபிநய தர்ப்பணத்தின் நேர் மொழிபெயர்ப்பான இந்நூல் இன்றியமையாததாக விளங்கும் என்ற எண்ணத்தாலும், தாய்மொழியிலுள்ள பழமையான இச்சிறந்த நூல் முற்றிலும் அழிந்து போகாமல் காப்பாற்றப்பட வேண்டுமென்ற கருத்தாலும் இது வெளியிடப் பெறுகின்றது”2 தமிழ் நாட்டில், நாட்டியக் கலை சிறந்து விளங்கி வருவதை நாம் அறிவோம் இந்நாட்டியக் கலைக்குரிய நூல்கள் “பழங்காலம் முதற்கொண்டு வடமொழியிலிருந்து பெயர்க்கப் பெற்றும், தமிழிலேயே யாக்கப் பெற்றும் கலைஞர்களால் கையாளப்பட்டு வந்தன. ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அந்நூல் போற்றுவாரற்றுப் போனமையால் அவற்றின் இருப்பே மறைவாகி, மாணவர்களும், ஆசிரியர்களும் பிறமொழி நூல்களை மட்டுமே கையாள வேண்டிய நிலை உண்டாயிற்று”3
புதிய புதிய நூல்களும் நம்முடைய மொழியில் எழுதப் படவேண்டும் மூத்தோரின் பெருமையை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் திறமையுள்ளவர்கள் வெளிநாட்டவர் புகழும்படி மொழிபெயர்ப்பில் வேண்டும் என்கிறார் நமது கவிஞர் இவ்வாறு இந்த சிந்தனைகளை மொழிபெயர்ப்பில் வாயிலாக நனவாகி கொண்டிருக்கின்றன மொழிபெயர்ப்பாளர் தனக்கென்று தனித்த நோக்கங்களையும் தனித்த நோக்கங்களைக் கொண்டு விளங்குகின்றன அவை அவையே அவை அவையே பொது நோக்கம் நிறுவன நோக்கம் தனிமனித நோக்கம் என்று வகைப்படுத்துகின்றனர்
பொது நோக்கம்
கருத்து வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளுதல், அறிமுகம் கொள்ளுதல் என்னும் இவையே மொழிபெயர்ப்பின் பொது நோக்கம். இந்த நிலையில் நாடுகளிடையே ஒரு நல்ல உறவினை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நிறுவனங்கள் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுகின்றன. அந்தவகையில் மேலைநாட்டு கோட்பாடுகளும் நவீன இலக்கியங்களும் நம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன எனலாம்.“சோஷலிஸ்ட் சகாப்தத்தின் வீரம் மிகுந்த சாதனைகளைச் சித்திரிப்பதே சோவியத் இலக்கியத்தின் குறிக்கோள். இடையறாது வளர்ந்தோங்கும் சோவியத் சமூகத்தின் வாழ்வை, புதிய மனிதனின் பண்புகளைச் சித்திரிப்பதே அதன் ஜீவநாடியாகும்”4 மேலும் “தமிழ்நாட்டில் நாவல் வளர்வதற்குள் மற்றநாடுகளில் பல வகைக் கதைகள் பெருகி வெளியாகி விட்டன. அவற்றைப் படித்த தமிழர், மொழிபெயர்க்கத் தலைப்பட்டனர். மொழிபெயர்ப்புக் கதைகள் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தன. ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யா, வங்காளி முதலிய மொழிகளின் கதைகளே பெரும்பாலும் தமிழர் கற்கும் கதைகளாக இருந்தன. அதனால், தமிழ் மொழியில் இந்தப் புதிய இலக்கிய வகை தனக்கென ஒரு வெற்றியோடு வளர்வதற்கு முன்பே பிறநாட்டுக் கதைகள் வந்து வழி வகுத்தன என்று கூறலாம். அவற்றின் செல்வாக்கே தமிழ் நாவல்களில் மிகுந்தது எனலாம்”5 மேலைநாட்டு நவீன இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதை மு. வரதராசனார் எடுத்துரைக்கின்றார்.
மொழி பெயர்ப்பின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று நாடுகளுக்கிடையே நட்புறவையும்,பிணைப்பையும் ஏற்படுத்துவது.ஏற்கனவே இருக்கின்ற நட்பை வலுப்படுத்துவது.புறவளர்ச்சி யை மட்டுமல்லாது அக உணர்ச்சியையும் வளர்த்த ஒரு பாலமாக அமைகின்றது.
இந்திய எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நோக்கம் இந்திய இலக்கியங்களுக்கிடையே ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.மொழி பெயர்ப்புகளினால் இலக்கிய ங்களுக்கிடையே ஓர் உறவை ஏற்படுத்த வேண்டுமென்ப தாகும்.தென்னிந்திய மொழிகள் புத்தகடிரஸ்ட் நூல் வெளியீட்டுத் திட்டத்தில், தென்னிந்திய மொழி நூல்களுள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மொழிபெயர்க்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது.
மொழிபெயர்ப்புகளினால் இலக்கியங்களுக்கிடையே ஒரு பரிவர்த்தனை அல்லது பரிமாற்றம் நிகழும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு பரிமாற்றம் நிகழும் போது இலக்கியங்களுக் கிடையே இருக்கின்றபொதுக் கூறுகளை அறிந்து கொள்ள முடிகின்றது.இவ்வாறு மேலும் பல நிறுவனங்களும் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுகின்றன.இவையே நிறுவன நோக்கமாகும்.
தனிமனித நோக்கம்
நிறுவனங்களோடு போட்டி போடும் போட்டி போட்டுக் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு தனி மனிதர்களும் மொழிபெயர்ப்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ற தனித்த நோக்கம் விலை கொண்டுள்ளன
முதல்முறை காணப்படும் அத்தனை வேகமும் ஆழ்ந்த கருத்தும் சொற்பொழிவு மொழிபெயர்ப்பில் அப்படியே கொண்டு வர இயலாது என்பதை எவராலும் மறுக்க முடியாது. காவியங்களை மொழிபெயர்ப்பு என்பது ஒரு சிறந்த நோக்கமாக கருதப்பட்டவை என்றும் கருதப்படுகிறது எடுத்துக்காட்டாக வால்மீகி ராமாயணம் தமிழில் அற்புத படைப்பாகும் மொழிபெயர்ப்பு நூல்கள் தோன்றுதல் நோக்கம் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளர் பொருத்த அளவில் வேறுபடுகின்றது ஒரு குறிப்பிட்ட தூண்டுகிறது.
கவிதை சிறுகதை நாவல் கட்டுரை என எல்லாவற்றிலும் சில படைப்புகளை தமிழாக்கம் செய்துள்ளார் பாவண்ணன். அவர் கூறுகையில் மொழிபெயர்க்க ஒரு படைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அப்படைப்பு வாசிக்கும் போது என் மனம் அடையும் அனுபவமே முதல் அளவுகோல் அடுத்த படைப்புகளில் வாசிப்பு தொடர்ந்து உருவாக்கிக்கொள்ளும் கேள்விகள் வழியாக அவளின் மேனி அழகை எப்படி புரிந்து கொள்ள முடியும். நான் நிகழ்ச்சிகள் இரண்டாவது அளவுகோல் நிறைவேற்றும் போது மட்டுமே என் முயற்சியை தொடங்குகிறேன் என்கிறார்.
மேலும் அவர் கூறும்போது நான் மகிழ்ச்சியாக பாத்திரங்கள் என் மனதில் சதா காலமும் இருப்பார்கள் என்னை முதிர்ச்சி கொண்டவனாகவும் மாற்றுகின்றன என்கின்றார். அக மொழிபெயர்ப்புப் பணியை ஏதாவது ஒரு பயன்பாட்டை நோக்கத்துடன்தான் செயல்பட்டு வருகின்றது. நாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்ப்பது இரண்டு சிறந்த படைப்புகளை மொழிபெயர்த்தல் 3 ஒவ்வொரு மொழிக்கும் மற்ற மொழிகளுக்கு அறிமுகம் செய்தல் மக்களின் பண்பாட்டை நமக்கு இனம் காட்டுதல் உயர்ந்த நூல்களை வெளியிடுதல் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குதல் உலகத்தின் தலைசிறந்த தலைவர்கள் வரலாறு எல்லோருக்கும் அறிவிக்கின்ற நோக்கத்தோடு செய்தல் அளவில்தான் மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொழிபெயர்ப்பின் ஆராய்ச்சிக்கு வழி வைக்கின்றது மற்ற மொழி இலக்கியத்தை பற்றி அறிய முடிகின்றது. அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்ள முடிகின்றது. இலக்கிய மொழிபெயர்ப்பு பணியினால் இலக்கியக் கதைகள் பிரதிபலிக்கின்ற பண்பாடுகளைக் இடையே ஒற்றுமையை கொண்ட ஒருமைப்பாட்டிற்கு வழிகின்றது. உலகத்தில் தலை சிறந்து விளங்கி அவர்களின் வரலாற்றை படிக்க செய்த பயனோடு அவர்களைப் போன்ற விலக்க முயற்சிக்க வேண்டும் என்ற லட்சிய உருவாக்குகின்றது.
எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதி சொன்னபடி வித் செல்வம் சேர்க்க வேண்டும் போன்ற ஊற்றெடுக்கும் வற்றாத கிணறு போன்ற கிழக்கு செல்வத்தைக் கொண்டு சேர்க்கும் அரிய பணி நம் தமிழ் இலக்கியத் தளத்தில் எப்போதையும்விட இன்றைய காலகட்டத்தில் முழுவீச்சில் நடந்து கொண்டிருப்பதாக படைப்பிலக்கியத்தின் பொருட்களை ஏற்றுக்கொள்ள ஏதுவாகிறது.
அடிக்குறிப்புகள்:
1. பாரதியார் கவிதைகள், வானவில் பிரசுரம், ப. 168.
2. வீரராகவையன், அபிநயதர்ப்பணம் முகவுரை III
3. வீரராகவையன், அபிநயதர்ப்பணம் முகவுரை V
4. க.சிவசங்கரன், வசந்த காலத்திலே, ப.3
5. மு.வரதராசனார், இலக்கிய மரபு, ப. 160
6. சு. சண்முக வேலாயுதம், மொழி பெயர்ப்பியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.