
வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி
பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=lY4GiyAL1rs
முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு
நினைவுச் சின்னம்.
முள்ளிவாய்க்காலில் தர்மம் அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.
அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?
முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
முள்ளிவாய்க்கால் ஆறறிவின் சிற்றறிவு!
முள்ளிவாய்க்கால் நாகரிகத்தின் அநாகரிகம்.
முள்ளிவாய்க்கால் சிந்திக்கும் மனிதரின் சீரழிவு.
ஆனால், இனி
முள்ளிவாய்க்காலின் மவுனம்
சுதந்திர வேட்கையின்,
தர்ம நாட்டத்தின் புரட்சிக்கீதம்.
முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியின் எழுச்சி.
நந்திக்கடலோரத்துக் கலங்கரை விளக்கம்.
இனி ஒளியூட்டும். வழி காட்டும்.
முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









