இவர்களால்
சபிக்கப்பட்ட நிலத்திலும்
மலர்கிறது
ஈரம் தோய்ந்த
இரவுகளை உரியும்
இத்யாதிகள்
கசியும்
பின்னிரவின் பனித்துளியில்
ஆல்கஹால் நிரப்பப்பட்டு
கணையம்
காதல் மொழிந்து தான்
கிடக்கிறது
காதல்
காமம்
இல்லுஷன்
இன்னபிற கிளர்ச்சியில்
ஆர்கஸம் கொண்டு
உடல் அதிர்வடைகிறது
உஷ்ணம்
உயிர்மை தத்துவம்
உரோமத்து கிளர்ச்சியில்
கனன்று சாம்பலாகும்
பெருவானம்
வருடிச்சென்ற
கூர் நகங்களில்
திட்டுத் திட்டாய்
ஒட்டிக்கொண்ட
காதல் படிமம்
யாவும்
கலெய்டெஸ்க்கோப்பில்
உருமாறும்
காதலும்
இன்னபிறவும்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.