வந்தனை செய்ய வேண்டும்
அந்தமின்றியென்னை எழுத வைக்கும்
அந்தரங்கமேதும் இல்லை பகிரங்கம்.
அந்தரிப்போர் யாருக்கும் குரலெழுப்பும்.
இந்தளவு என்றில்லையெவ்வளவும் எழுத
சிந்தனை கிழிக்கும் பேனா.
உந்துதலீயும் பிறர் கருத்துகள்.
எந்திர வில் போன்றது.
ஐந்தெழுத்துத் தொடங்கி ஆதரவு
கொந்தளிக்கும் பிரச்சனைகள் அரிய
சந்தக் கவிகள் என்று எத்தனையோ..
சிந்தனை கிழிக்கும் பேனா.
நீதிமன்றத் தீர்ப்புக் கிழிக்கும் ,
சாதிவெறி கிளப்புதலும், தீர்விடுதலும்,
வாதிடலும், வாஞ்சையான சிந்தனைகளும்
மோதி முட்டுதலும் ஒரு
தாதி போலவும் தீப்பொறியிட்டு
கோதுவதுமான இராசாங்கம் இந்தச்
சிந்தனை கிழிக்கும் பேனா.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.