ஆளுக்கொரு பெயர்வைத்து
அழைக்கிறோம் உன்னை
அவரவர்க்குத்தெரிந்தவழியில்
உயர்த்திப்பிடிக்கிறோம்
உன்னை
உன்னை நெஞ்சில் நிறுத்தி
வழிபடுவதைவிடுத்து
பெருமைபேசி பிதற்றுகிறோம்
வம்பை வளர்க்கிறோம்
வன்முறையில் இறங்குகிறோம்
எங்கேயும் நீ
முகம்காட்டியதில்லை
வணங்குதற்குரியவன்
வன்முறைக்குரியவனில்லை என்பதை
எப்போது
எடுத்துச்சொல்லப்போகிறாய்
தூணிலும் துரும்பிலும்
இருக்கும் உன்னை
எங்கோ இருப்பதாய் எண்ணி
நெடும்பயணம் செய்து
தரிசிக்கவருகிறோம்
இயற்கை இடர்களால்
எங்களையே இழக்கிறோம்
கண்மூடித்தனமாகக்
கண்டுகொள்ள நினைத்து
முட்டிமோதி
மூச்சை இழக்கிறோம்
உன்தரிசனம்
தட்சணையால்
முடிவுசெய்யப்படுகிறது
விலைபேசப்படுவது
நீயா?
நாங்களா?
தேர் இழுப்பது யார்
என்று
அடித்துக்கொள்கிறோம்
ஒருவரை ஒருவர்
அடித்துக்கொல்கிறோம்
அப்போதும் நீ
தேரிலிருக்கவே விரும்புகிறாய்
நாங்கள்
தேரிழுப்பதையே விரும்புகிறோம்
நாங்கள்
தேரிழுப்பதையே விரும்புகிறாய்!
சுயநலத்தின்
சுயம்பாய் இருக்கிறாய்
இறங்கிவந்து
யாரிழுத்தால் என்ன
யான்
எல்லார்க்குமுரியவன் என்று
மனம் இரங்கியதில்லை
இரக்கம் ஏதுமின்றி
மதத்தால் சாதியால்
அடிமைப்படுத்தினேன்
கொடுமைப்படுத்தினேன்
பழிவாங்கி
அறியாமையின்
அடையாளமாய் விளங்கினேன்
எல்லார்க்கும் பொதுவான நீ
சமாதானம் ஏன்
செய்துவைக்கவில்லை
சமரசம் ஏன்
செய்துவைக்க வரவில்லை
அங்கேயும் நீ
தலைமறைவாகிவிட்டாய்
அன்று யமுனையில்
அண்மையில்
கோதாவரியில்
நீராடவந்தவர்கள்
நெர்சலில் சிக்கி
மிதிபட்டு
27பேர் இறந்தனர்
என்னசெய்துகொண்டிருந்தாய்
நீ
அந்த
அப்பாவிகுடும்பங்களுக்கு
ஆறுதல் சொல்வது யார்?
பிரித்தாளும் சூழ்ச்சியைக்
கடைபிடிக்கும்
பிரிவினை வாதி நீதான்
குற்றத்தால்
குற்றவாளி
தலைமறைவாவதுண்டு
தலைமறைவானதால்
குற்றவாளியானவன் நீ
நீயே குற்றவாளியென்றால்
குற்றம் களையவும்
குறைதீர்க்கவும்
சற்றும் தகுதி
இல்லை உனக்கு
எங்கேயும்
இல்லாதவனாகவே இருக்கிறாய்
இருப்பவனாய் எண்ணி
இல்லாததையெல்லாம் செய்கிறோம்
ஒன்று
நீமுகம்காட்டி
முடித்துவை
இல்லையேல்
இல்லையென்று
முடிவெடுக்கவை
வழிகாட்டு…
பிச்சினிக்காடு இளங்கோ
ஆளுக்கொரு பெயர்வைத்து
அழைக்கிறோம் உன்னை
அவரவர்க்குத்தெரிந்தவழியில்
உயர்த்திப்பிடிக்கிறோம்
உன்னை
உன்னை நெஞ்சில் நிறுத்தி
வழிபடுவதைவிடுத்து
பெருமைபேசி பிதற்றுகிறோம்
வம்பை வளர்க்கிறோம்
வன்முறையில் இறங்குகிறோம்
எங்கேயும் நீ
முகம்காட்டியதில்லை
வணங்குதற்குரியவன்
வன்முறைக்குரியவனில்லை என்பதை
எப்போது
எடுத்துச்சொல்லப்போகிறாய்
தூணிலும் துரும்பிலும்
இருக்கும் உன்னை
எங்கோ இருப்பதாய் எண்ணி
நெடும்பயணம் செய்து
தரிசிக்கவருகிறோம்
இயற்கை இடர்களால்
எங்களையே இழக்கிறோம்
கண்மூடித்தனமாகக்
கண்டுகொள்ள நினைத்து
முட்டிமோதி
மூச்சை இழக்கிறோம்
உன்தரிசனம்
தட்சணையால்
முடிவுசெய்யப்படுகிறது
விலைபேசப்படுவது
நீயா?
நாங்களா?
தேர் இழுப்பது யார்
என்று
அடித்துக்கொள்கிறோம்
ஒருவரை ஒருவர்
அடித்துக்கொல்கிறோம்
அப்போதும் நீ
தேரிலிருக்கவே விரும்புகிறாய்
நாங்கள்
தேரிழுப்பதையே விரும்புகிறோம்
நாங்கள்
தேரிழுப்பதையே விரும்புகிறாய்!
சுயநலத்தின்
சுயம்பாய் இருக்கிறாய்
இறங்கிவந்து
யாரிழுத்தால் என்ன
யான்
எல்லார்க்குமுரியவன் என்று
மனம் இரங்கியதில்லை
இரக்கம் ஏதுமின்றி
மதத்தால் சாதியால்
அடிமைப்படுத்தினேன்
கொடுமைப்படுத்தினேன்
பழிவாங்கி
அறியாமையின்
அடையாளமாய் விளங்கினேன்
எல்லார்க்கும் பொதுவான நீ
சமாதானம் ஏன்
செய்துவைக்கவில்லை
சமரசம் ஏன்
செய்துவைக்க வரவில்லை
அங்கேயும் நீ
தலைமறைவாகிவிட்டாய்
அன்று யமுனையில்
அண்மையில்
கோதாவரியில்
நீராடவந்தவர்கள்
நெர்சலில் சிக்கி
மிதிபட்டு
27பேர் இறந்தனர்
என்னசெய்துகொண்டிருந்தாய்
நீ
அந்த
அப்பாவிகுடும்பங்களுக்கு
ஆறுதல் சொல்வது யார்?
பிரித்தாளும் சூழ்ச்சியைக்
கடைபிடிக்கும்
பிரிவினை வாதி நீதான்
குற்றத்தால்
குற்றவாளி
தலைமறைவாவதுண்டு
தலைமறைவானதால்
குற்றவாளியானவன் நீ
நீயே குற்றவாளியென்றால்
குற்றம் களையவும்
குறைதீர்க்கவும்
சற்றும் தகுதி
இல்லை உனக்கு
எங்கேயும்
இல்லாதவனாகவே இருக்கிறாய்
இருப்பவனாய் எண்ணி
இல்லாததையெல்லாம் செய்கிறோம்
ஒன்று
நீமுகம்காட்டி
முடித்துவை
இல்லையேல்
இல்லையென்று
முடிவெடுக்கவை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.