1. நகரம்-நரகம்
நகரத்தில் நாங்கள்
தொலைந்து கொண்டிருக்கிறோம்
சன்னல் திறவா
ஐப்பானிய கார்களில்
பறக்கும் சிங்கப்பூரர்களுக்கு
முகங்கள் முக்கியமில்லை
ரசித்தல் அகராதியில்
அகப்படாத வார்த்தை
*எம். ஆர். டி. கதவுகள்கூட
எங்களுக்கு அவசியமில்லை
இடைவெளி குறைந்தும்
தனிமை பழகிவிட்டது
சக மனிதர்களின்
உரையாடல் ஊடுருவல்கள்
காதுகளில் நுழையாதிருக்க
இயர்போன்ஸ் உதவி
இந்த ஊனம்
அங்கீகரிக்கப்பட்ட ஒன்றா?
அண்டை இல்ல
நட்பு விலகி
முகமில்லா முகநூல்
நண்பர்கள் பெருக்கம்
குழந்தைகள் தினத்திற்குகூட
மின்னஞ்சல் வாழ்த்து
மனிதனை நேசிக்கும்
மரபை மறந்துவிட்டோமா?
தொலைதல் அகராதியில்
நமது அடையாளம்
மறைக்கும் வார்த்தையா?
*எம். ஆர். டி.: பெருவிரைவு போக்குவரத்து (Mass Rapid Transit)
City-Nightmare By T. Durairajoo (Singapore)
We are losing ourselves
In the city
Travelling in Japanese cars
Bolted windows
To flying Singaporeans
Faces are immaterial
Joy is an expression
Mislaid in the Lexicon
MRT ingresses too
Not necessary
Despite reduced gaps
We are conditioned to solitude
To prohibit
Banters of fellow human beings
From intruding our ears
Earphones are an asset
Is this disability
A sanctioned one?
Departure of affiliation
With our neighbours
Proliferation of
Faceless facebook friends
Even Children Day greetings
Are forwarded through electronic mail
Have we forgotten the tradition of
Friendship with men?
Is loss in lexicon
A word that
Has cost our identity?
2. கலவரக் கறைகள்
தினம் உடல் உழைக்க
திங்களைக் காலண்டரில் தொலைத்தவன்
மனம் வலி பொறுக்க
உணர்வுகளைத் தூரத்தில் வைத்தவன்
கை நீட்டிய இடமெல்லாம்
சாலையோர மரம் வளர்த்தவன்
கால் பதித்த தடமெல்லாம்
சிமெண்ட் சித்திரம் எழுப்பியவன்
இம்சை(கள்) வசை பாட
கல்லாய் சற்றும் அசராதவன்
பலர் ஏறி மிதிக்க
உளைக்கு மட்டுமே அஞ்சி நின்றவன்
ஏன் கலவரக் கறைகளோடு இன்று
அடி வாங்கும் கல்லானாய்?
சிராங்கூன் சாலை கலவரம்
உன் வாழ்க்கைச் சுவரில்
வெறும் கறை ... கழுவி விடலாம் ...
மூழ்கி விடாதே!
சட்டம் இங்கு கலர் பார்ப்பதில்லை
மீறினால் மலர் வைப்பதில்லை
மது உன் மீது திணிக்கப்பட்ட கருப்பு கலர்
சுடுசொல் உன்மீது வீசப்பட்ட சிகப்பு கலர்
தன் மீது விழும் ஒவ்வொரு அடியும்
கறைபடுத்தாது ... சிற்பமாகப் பக்குவப்படுத்தும்
என்பது கல்லுக்குத் தெரியாது!
உனக்குமா புரியாது?
மது தரும் இன்பத்தால்
புத்தி பேதலித்துவிடாதே!
காணாதோர் வாதங்களைக் கேட்டு
மதியை அடகு வைத்து விடாதே!
வயிற்றுப் பிழைப்புக்காகக்
கயிற்றின்மேல் நடக்கும் நீ மூர்க்கமானவன் அல்ல
நிதானக்கோட்டை மீறியதால் சிறிய
நிலநடுக்கம் அவ்வளவுதான் … மறந்துவிடாதே!
முட்டவரும் முட்களையும்
முதுகில் குத்தும் நெருஞ்சிகளையும்
'புலி' முறத்தால் விரட்டிவிடு!
உன் திறத்தால் துரத்திவிடு!
சுடும் வார்த்தைகளால் துகிலுரிக்கும்
புல்லுருவிகளை உன் கவனத்தில் இருந்து ஒதுக்கிவிடு!
மு.வ. மொழிந்த தமிழனின் மானவுணர்வை
வானத்தில் விட்டு விடாதே!
என் தந்தை கடல் கடந்து வராதிருந்தால்
சட்டையில்லாத என் முதுகும் தோலுரிக்கப்பட்டிருக்கும்
கல்வி அரண் அணியாதிருந்தால்
சிகப்பு கலர் மையும் என்னைப் பதம் பார்த்திருக்கும்
கலவரக் கறை நீ உழைத்ததற்கான
அடையாளத்தை அழித்துவிடுமோ?
பிழைப்புத் தேடி வந்தவனா நீ
இல்லை இறப்பு தேடி வந்தவனா?
அக்கரையிலிருந்து வந்து … அடிக்கு அஞ்சாதே!
அது ஒருபோதும் உன்னைக் கறைபடுத்தாது!
விழுகின்ற ஒவ்வொரு அடியும்
பக்குவப்படுத்தும் உன்னை … மனித சிற்பமாக ...
(2013 லிட்டில் இந்தியா கலவரத்தில் காலாவதியான தமிழக தொழிலாளர்களின் சுயமரியாதையை தூக்கி நிறுத்தும் முயற்சி.)
Stains of Violence By T. Durairajoo (Singapore)
Days gone astray in the almanac
Beavering everyday battling with a gruelling schedule
Bearing the pain
He deposited his feelings in a distance
Planted roadside trees
When directed by his ‘boss’
Constructed ‘paintings’ in cement
Where he set his foot on
Not shaken by
Tunes of criticisms
Feared not those who stepped on him
But daily wages
Why have you become today
A boulder hammered to its death?
Little India riot
Is a stain on the wall of your life
A mere stain … can be washed out …
Do not sink in it!
Law here shows no neutrality
Violation may not be merited by a festoon
Alcohol has heaved ‘black’ colour on you
Harsh words have hurled ‘red’ colour on you
Every blow on a boulder
Produces no stain … but shapes it into a sculpture
Without the boulder knowing!
Don’t you understand?
Do not submit to your senses
Impelled by the pleasure of liquor!
Do not mortgage your intellect
Heeding the arguments of others!
Walking on a tight rope for subsistence
You are not a dissenter
Skirmish with a minor tremor that’s all
For crossing the line of endurance … Do not forget!
Drive off thorns
That stabs your back
Drive off the ‘tiger’ with the ‘muram’!
With your dexterity!
Circumvent entities which remove
Your dress of dignity!
Avoid letting Tamilians’ self-respect as identified by Mu. Va.
Into the sky!
If my father had not chosen Singapore as the homeland
My bareback would have met the same fate
If I had not been educated
The ‘red’ colour (stain) would have distressed me
Will the traces of violence
Erase your identity?
Are you in search of a livelihood
Or death?
Coming from the other side of the world … fear no blow!
It will never stain you!
Every blow
Will develop you … into a human sculpture (not a stain) …
T. Durairajoo
Singapore
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
About Durairajoo ....
He is a poet who has been writing for the last twenty years from Singapore. His first collection of tamil poems , 'Kathal Santhanggal' , was released in 1992 in Singapore. It was published by the National University of Singapore, Tamil Language Society. His second collection of poems, titled 'Cultural DNAs', a bilingual publication will be released in 2015. 'Early Modern Indonesian History' is a collection of history essays in English edited by him and published by the Archipelago Press, Editions Didier Millet in 1995. He is a regular contributor of poems and essays to several print and electronic platforms.