கத்தரி வெயில் கொளுத்தோ கொளுத்தென கொட்டிக் கொண்டிருக்க, ரகு சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஓரமாய் பேருந்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான். மூன்று புறங்களிலும் பேருந்து கிழக்கு, மேற்கு, தெற்காக முப்புறங்களிலும் சென்றுகொண்டிருந்தன. ரகு வடக்கிலிருந்து வருகின்ற ஒவ்வொரு பேருந்தை எல்லாம் உற்றுநோக்கிக்கொண்டிருந்தான். ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாய்கொண்டே போயிருக்க. அவன் உடல் முழுவதும் வியா்வைத் துளிகள் வெளிவரத் தொடங்கின. கதிரவனின் தாக்கம் அளவுக்கதிமாகவே போய்க்கொண்டிருந்தது.
சற்றுநேரம் கழித்து திருச்சியிலிருந்து கரூா் செல்லக்கூடிய PRT தனியார் பேருந்து ஒன்று வந்தது. அப்பேருந்து வருவதை அறிந்த ரகு பேருந்தினை உன்னிப்பாகக் கவனித்கொண்டே இருந்தான். பேருந்து முன்புறம் கண்ணாடியை ஒட்டியே ஒரு மங்கை ஒருத்தி உட்காந்திருந்தாள். அவளைக் கவனித்துக்கொண்டே முன்புறம் ஏறலாமா, பின்புறம் ஏறலாமா என்று எண்ண்ணிக்கொண்டே ஒரு வழியா பின்புற படிக்கட்டில் ஏறினான்.
பேருந்தில் ஏறிய பின்னா் கடைசி சீட்டுக்கு முன்னாடி சீட்டுல இடம் இருந்தும் உட்காராமல் நின்று கொண்டே இருக்கின்றான். ரகுவின் தோழா்கள் புதியதாய் ஆடை எடுத்து கொடுத்ததை உடலுக்கு ஏற்றவாறு நன்றாக தைத்து ஒரு புதுமையான தோற்றத்தில் இருந்தான். ஆள் பாதி ஆடை பாதி என்னும் பழமொழிக்கு ஏற்றவாறு பெண்களுக்கே பிடித்தமான பிங்க் கலா்ல சட்டைய உடுத்திக்கொண்டு, அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆபீசர் போல இருந்தான்.
பேருந்தில், கண்ணாடி முன்னாடி உட்கார்ந்திருந்த அவள் பேருந்து செல்லும் எதிர்திசையை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த பெண்ணை ரகு முதலில் பார்த்தான், தலையை கீழேபோட்டான். அவளும் பார்த்து பார்க்காத மாதிரி இருந்தாள். மீண்டும் அவளை ரகு பார்க்கின்றான், பார்த்த மறுகணமே மீண்டும் தலையை கீழே போட்டுவிடுகின்றான். பிறகு மனதை தைரியமாக வைத்துக்கொண்டு பார்க்கின்றான்.
அப்பொழுது ரகுவிற்கு ஓா் எண்ணம் உதயமானது. என்னவென்றால் வகுப்புத் தோழி வினோத்தீ ரகுவிடம் ஒரு பெண்ணை வச்சக்கண்ணு வைக்காம தொடா்ந்து பார்த்துகிட்டே இருந்தா எந்த பெண்ணாக இருந்தாலும் மடக்கிடலாம்னு சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் ரகுவும் தொடா்ந்து இரண்டு முறை மூன்று முறை பார்த்துக்கிட்டே இருந்தான். அவளும் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தவள் அவனை தொடா்ந்து பார்க்கத் தொடங்குகின்றாள்.
ரகுவுக்கு ஓா் எண்ணம் நாம் ஏற்கனவே படித்த கல்லூரியில் இருந்த தீபா போலவே இருக்கிறாளே! அவள் தீபா தான் என்று நினைத்து தொடா்ந்து பாரத்துக்கொண்டிருந்தான். இதற்கிடையில் பேருந்தில் நடத்துனா் அங்கும் இங்குமாக அலைந்து டிக்கெட் டிக்கெட் என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் ரகு அவளை மட்டும் பார்த்துக்கொண்டே வருகின்றான். அப்பொழுது அவன் மனதிற்குள் ஓா் எண்ணம் இவள் இம்புட்டு அழகாக இருக்கிறாளே நம்முடைய வாழ்க்கைத் துணையாக வருவதற்கு சம்மதிப்பாளா என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருக்க தீடீரென்று நடத்துனா் விசில் அடித்து 'ஜீயபுரம் வந்துடுச்சு இறங்குரவங்க இறங்குப்பா', பேருந்து நின்ற பிறகு இறங்கியவா் போக ஒரு சிலர் ஏறத்தொடங்கினா். பின்னா் பேருந்து நகரத்தொடங்கியது. இதற்கிடையில் பேருந்தில் உட்காருவதற்கு சீட் இருந்தும் ரகு உட்காராமல் அவளையே பார்த்துக்கொண்டே வருகின்றான். அவளும் ஓயாமல் பார்த்துக்கொண்டே வருகின்றாள்.
ரகு நம்முடன் அறிமுகமான தீபாவாயிருந்தால் மில்லுக்கேட்டில் இறங்கிவிடுவாள் என்று எண்ணினான். பேருந்தில் ஓயாமல் பாட்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் ரகு அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவளை மட்டுமே விழிகளோடு விழிகள் மோதிக்கொள்ளும் அளவிற்குத் தொடா்ந்து பார்த்துக்கொண்டே பேருந்தில் பயணிக்கின்றான், அதே போல அவளும் சலைக்காமல் தொடா்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாள், ரகுவுக்கோ என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப்போய் பார்கின்றான். நமக்கெல்லாம் இந்த மாதிரி அழகான பெண் வாழ்க்கைக்கு ஒத்துவருமா என்ற எண்ணமும் தோன்றுகின்றது. அதோடு மட்டுமல்லாமல் இம்புட்டு அழகா இருக்குறா இதுவரைக்கும் யாரையாவது காதலிக்கமாவ இருக்கபோற என்று நினைத்துக்கொள்கின்றான். ரவின் மனசு இருந்தாலும் சும்மா விடல அவளை தொடா்ந்து பார்த்துக்கொண்டே இரு என்று சொல்லுகின்றது. அவள் உட்கார்ந்திருப்பதோ பேருந்தின் முன்புறம் ரகுவோ பேருந்தின் பின் படிக்கட்டுப் பக்கம் ஆனால் இருவரும் விடாமல் பார்த்துக்கொண்டே பயணிக்கின்றனா்.
பேருந்து ஓட்டுநர் நல்ல அனுபசாலி போல பேருந்தை அவா் ஓட்டிய விதமோ எப்பப்பா…. வார்த்தையில் விவரிக்க இயலாது. திருப்பராய்த்துரை, பெருகமணி, மில்லுக்கேட் என்று மிக வேகமாக ஊரைக்கடந்துவந்தார். மில்லுக்கேட்டும் வந்தது ஆனால் அவள் இறங்கவில்லை, சரி பெட்டவாய்த்தலையில் இறங்குவாளோ என்று பார்த்தா அங்கும் அவள் இறங்கவில்லை. அடுத்த பேருந்துநிலையம் ரகுவோடைய ஊரு மருதூா் தான். ஆனால் அவள் அந்த ஊருகிடையாது. பெட்டவாய்த்தலையில் இருந்து மருதூருக்கு இருபது நிமிடம் பேருந்து பயணிக்க வேண்டும்.
அந்த நிமிடங்கள் தோறும் மனம் பட்டபாடு இருக்கே அப்பப்பா என்வென்ன சொல்ல மனம் தவியா தவிச்சிருச்சு அப்படி தவித்த மனதோடும் அவளை விடாமல் பார்த்துக்கொண்டே வந்த வேளையில் கண்டெக்டா் விசில் அடித்து மருதூர் வந்துடுச்சு எல்லாம் இறங்குப்பானு சொன்னதும் ரகுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியாம ஏதோ ஒன்றை தொலைத்து விட்டது போல மனம் பரிதவிப்போடு இறங்குகின்றான். அப்பொழுது ரகு தன் மனதிற்குள் “அவள் இன்று இரவு முழுவதும் தூங்கிய மாதிரி தான்” என்று நினைத்துக் கொண்டே பேருந்தில் இருந்து இறங்குகின்றான்.
பேருந்து நிறுத்தத்தில் ரகு இறங்கினானே தவிர ரகுவின் மனம் இறங்கவில்லை. பெயா் தெரியாத அவளின் நினைவுகளோடு வீட்டை நோக்கிச் சென்றான். வீட்டிற்குச் சென்றாலும் அவளின் நினைவு ரகுவின் மனதை விட்டு விலகவில்லை. தொடா்ந்து அவளின் முகம், அவளின் கண், அவள் தொடா்ந்து பார்த்த அந்த பார்வை ரகுவின் நெஞ்சில் ஆழமாகவே பதிந்து விடுகின்றது. அதனால் அன்று இரவு முழுவதுமே ரகுவிற்கு தூக்கம் வராமல் தவிக்கின்றான். இனி அவளை பார்ப்போமா அவள் எந்த ஊர், அவள் பெயா் என்ன வென்று தெரியாமல் விழிபிதுங்கி போய் பித்தன் போல மனதிற்குள்ளே உளறிக்கொண்டே இருக்கின்றான். அவளை நினைத்து நினைத்து எதையோ இழந்ததை போன்றும், புதியதாய் தோன்றிய போதும் ரகுவி்ன் உள்ளத்தில் மாறி மாறி நினைவலைகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன.
அதற்கு அடுத்த நாள் தோ்வு என்பதால், கல்லூரிக்குச் சீக்கிரமாகச் சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்லூரிக்கு சென்றான். சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவன் மிக விரைவாக கல்லூரி கேட்டை அடைந்தவுடன் கொஞ்சம் பொறுமையாக நடந்து செல்கின்றான்.
அப்பொழுது பின்னால் இருந்து வந்த ஒரு பெண் ரகுவை சற்று மெதுவாக உரசி செல்கிறாள். உரசி செல்வதோடு மட்டுமில்லாமல் அவள் கையில் கல்லூரி அடையாள அட்டையின் நாடாவை கையில் தொங்கவிட்டு ஏதோ சொல்ல வருவதை சொல்ல வந்தவள் போல சொல்லாமல், ஒரு விதமான தயக்கத்தோடு நடந்து செல்வதைக் காண்கின்றான்.
பின்னா் ரகு நெஞ்சுக்குள் நேற்று அவளை PRT பேருந்தில் அல்லவா பார்த்தோன் இப்பொழுது இங்கே போகிறாளே ஒரு வேளை இவளும் இந்த கல்லூரியில் படிப்பவளோ..? என்று நினைத்துக்கொண்டு பரீட்சைக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்கின்றான்.
பரீட்சை எழுதும் இடத்தில் நன்றாகவே பரீட்சை எழுதிக்கொண்டிருந்த வேளையில் அவளுடைய எண்ணம் நெஞ்சிற்குள் உதயமாக ரகுவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவியா தவித்துப்போகின்றான். அந்த அளவுக்கு நேற்றைய பொழுதில் இருவருக்கும் விழிக்குள்ளே உரையாடல் போய்க்கொண்டிருந்தன.
ஆனால் இருவருக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒரே கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு முன்பு வரை ஒருவரை ஒருவா் நேரில் பார்த்ததுக் கூட கிடையாது. ஆனால் விழிகளின் மோதல்களில் மாட்டிக்கொண்டார்கள். இந்ந நிகழ்வு தானாக அமையவில்லை இறைவன் ஏற்படுத்திய தருணம் என்று இருவருமே அறிந்திருக்க மாட்டார்கள்.
அன்றைய நாள் பரீட்சையை எழுதி முடித்தவுடன் அடுத்தநாள் பரீட்சைக்கு படிக்க வேண்டும், என்ற ஆா்வத்தில் சீக்கிரமாக கல்லூரியை விட்டு வழக்கமான சத்திரம் பேருந்துநிலையத்திற்கு அருகில் கரூா் பஸ் வரும்மிடம் நோக்கி செல்கின்றான். ஆனால் இம்முறை ரகுவின் நண்பனான இருதயராஜ் கூடவே பேருந்து நிலையத்திற்கு வந்து ரகுவை பஸ்சில ஏற்றிவிடுவதற்காக வந்தான். இருவரும் பஸ்சுக்காக காத்திருந்த வேளையில் அவளும் வந்தாள். ஆனால் இருவரும் ஏற்கனவே பார்த்துக்கொண்ட நிகழ்வு இருதயராஜ்க்கு தெரியாது.
கரூா் நோக்கி செல்லக்கூடிய பேருந்து ஒன்று வந்தது இருவரும் அதில் ஏறி பயணிக்கத் தொடங்கினோம். நேற்றைய பொழுதுபோலவே அவளை மறுபடியும் பார்த்துக்கொண்டே செல்கின்றனா். இருவருக்கும் PRT பேருந்து மேல் அவ்வளவு பிரியோமோ தெரியவில்லை இவர்களின் சந்திப்பெல்லாமே அந்த பஸ்சில தான். இது போல ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டே சென்றது.
மனசுல தோனுனத அப்பொழுதே சொல்லமா பரிட்சையை காரணம் காட்டி பரிட்சை முடிந்தவுடனே அவகிட்ட பேசிக்கலாம்னு நாட்களை நாளுக்குநாள் ரகு ஒத்திப்போட்டுக்கொண்டே போறான். இதற்கிடையில் ஒவ்வொரு நாட்களிலும் அவன் மனசுல நினைச்ச அடுத்த நிமிடமே அவள் கண்முன்னே காட்சி தருவாள் அந்த அளவுக்கு இருவருக்கும் மானசீகமான உறவை இறைவன் வலுபடுத்திக்கொண்டே சென்றான்.
ரகுவின் தோழிகளில் டெல்மா நன்றாக பேசக்கூடியவள். டெல்மா எப்பொழுதும் ரகுவை பாசத்தோடு அண்ணா அண்ணா என்றே அழைப்பாள் இருவருக்கும் ஒரு சிறந்த அண்ணன் தங்கை பாசத்தோடு பழகிவந்தார்கள். இருவரும் வகுப்பறையில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது டெல்மாவின் தோழி பிரியா எங்கள் வகுப்பறைக்குள் அவ்வப்பொழுது வந்து வந்து செல்வாள் அவளும் ரகுவிடம் நன்கு அறிமுகமாகி நன்றாகவே பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் பிரியா வேறொரு துறையை எடுத்துப்படித்துக்கொண்டிருந்தாள்.
ஒரு நாள் இடைவேளையின் பொழுது டெல்மாவும் ரகுவும் வகுப்பறைக்குள் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்த வேளையில் பேருந்தில் பார்த்த பெண் இருவரையும் கடந்து செல்கிறாள். இதற்கிடையில் டெல்மா தொனதொனவென பேசிக்கொண்டிருக்க அதை ரகு காதில் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிரு்தான். சற்று சும்மா இருமா கொஞ்சம் நேரமாவது அவளை பார்க்க விடு என்று சொல்கின்றான்.
அவள் தலைநிறைய கனகாம்பரம், மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு அவள் தோழிகளோடு வேகமாக செல்வதைப் பார்க்கின்றான், அவள் எங்கே போய்க்கொண்டிருக்கின்றாள் என்பதை தொடா்ந்து கவனிக்கத் தொடங்குகின்றான். அப்பொழுது பிரியா ரகுவிடம் அண்ணா அவங்க IT டிப்பார்ட்மெண்ட் னா அப்படினு சொல்லும்பொழுது உடனே என்ன IT டிப்பார்ட்மெண்டானு ஆச்சிரியத்தோடு சொல்விட்டு, மீண்டும் அவளை பார்த்துகிட்டே இருக்கான்.
அவள், அழகுக்கு ஏற்றவாறும், உடலுக்குகேற்றவாறு உடை நாகரிகத்தோடும் மிகவும் நலினமானத் தோற்றத்தோடு இருப்பாள். ரகுவுக்கு அவளை பார்க்கும்பொழுதெல்லாம் மனதில் ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சி ஊற்றெடுத்துக்கொண்டேயிருந்தது. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துறனும் தெரியாமல் முழியாய் முழிக்கின்றான், மனசுக்குள் குழம்பியே தவித்துக் கொண்டிருக்கின்றான்.
அவள் ரகுவைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு ஏக்கத்தோடு பார்ப்பதைப்போல பார்த்துவிட்டுச் செல்வாள். ரகுவிற்கு எப்படி பேசுவது என்ன பேசுவது என்பது புரியாமல் அவளை பார்த்து ரசித்து ரசித்து மனதில் ஆசைகளை வளா்த்துக்கொள்கின்றான். அவளும் இவன் எப்பொழுது வந்து நம்மிடம் பேசுவன் என்ற ஏக்கத்தையும் கவலையும் கண்களில் காட்டிவிட்டே செல்வாள்.
ஒரு நாள் ரகுவும் துளசியும் கல்லூரி சிற்றுண்டிக்கு எதிர்புறத்தில் பேசிக்கொண்டிருந்தனா். அப்பொழுது வெண்ணிற ஆடையோடு பார்ப்பதற்குத் தேவதை மாதரியே வந்தவள் ஓரு மரத்தின் அடியில் நின்றுகொண்டு ஒரு ஐந்து நிமிடம் ரகுவைப் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுவிட்டவாறே செல்கின்றாள்.
அதைக் கவனித்த ரகுவோ இவள் எங்கேதான் போறா என்னதான் பன்னுறா என்று பார்த்துக்கிட்டே இருக்கான். அவள், அவள் தோழி, நண்பர்களோடு குழுவாக சோ்ந்து பரீட்சைக்கு படிப்பதற்காகச் சென்றாள். ஆனால் அவள் ரகுவைப் பார்த்துவிட்டுச் சென்ற அந்தநிமிடம் முதல் அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தன்தோழிக்கு எந்த உதவியானாலும் செய்துகொடுக்கும் குணம் உடையவன் ரகு. அதனால் தன் தோழிகளுக்கு படிப்புத் தொடா்பான அனைத்துத்தேவைகளும் செய்துக்கொடுப்பான். துளசிக்கு புராசட் ஒா்க் பற்றி எதுவும் தெரியாது. ரகுதான் சொல்லிக்கொடுப்பான். துளசிக்கு மட்டும்மல்ல அவனின் தோழிகளான, ராதிகா, டெல்மா, வினோத்தீ ஆகிய அனைவருக்கும் சொல்லிக்கொடுத்து இப்படி செய்யுங்கப்பா என்று அவ்வப்பொழுது வழிநடத்துவான்.
அன்று ரகுவும் துளசியும் ஒரு தோ்வு அறைக்கு முன்னே இயல்பாக பேசிக்கொண்டும், துளசிக்கு புராசட் ஒா்க்ல வேலைசெய்து கொண்டு இருக்கின்ற வேளையில், ரகு நினைக்கின்றான் அவளுக்கு தற்பொழுது தோ்வு நடந்துகொண்டிருக்கின்றது. ஒரு வேளை இந்த தோ்வு அறையில் எழுதுவாளோ ..! என்று எண்ணிக்கொண்டே தன் தோழிக்கு உதவி செய்து கொண்டிருந்த அவ்வேளையில் உடனே தோ்வு முடிந்தற்கான மணி ஒலி அடிக்க….
ரகு, தோ்வு அறையில் இருந்து வெளியே வருகின்ற ஒவ்வொரு நபரையும் பார்க்கத் தொடங்குகின்றான். அவள் வருவாளா..? அவள் வருவாள். அவள் வருவாளா…? அவள் வருவாள் என்று மனதோடு உறவாடிக் கொண்டே இருக்கின்றான். சிறிது நேரம் கழித்து அவள், அவள் தோழி மற்றும் நண்பா்களோடு மாடி படிக்கட்டுகளில் இருந்து மெல்ல மெல்ல ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கி வந்துகொண்டிருந்தாள்.
கல்லூரியில் ஏராளமானோர் இருப்பதால் அந்த அளவுக்கு கூட்டம் அதிகம், சட்டென்று உடனே வெளியே வரவும் இயலாது. அவள் மெல்ல மெல்ல வருவதை ரகுவும் பார்க்கின்றான். சற்றுநேரத்தில் அவளும் ரகுவைப் பார்க்கின்றாள். அவள் உடனே ரகுவின் கவனத்தை தன் மேல் படுகின்ற அளவுக்கு தன் பேச்சின் ஒலி மூலம் ரகுவின் பார்வையை தன் மேல் முழுவதும் படவேண்டும் என்பதற்காக தன் தோழிகள், நண்பா்களுடன் உரக்க உரையாடுகின்றாள்.
ரகுவும் அந்த உரக்க ஒலியில் அவளின் பார்வயைில் திசை திருப்புகின்றான். அவளையே பார்த்துக்கொண்டிருக்கின்றான். உடனே அவள் அங்கும், இங்கும் மாக ஓடி ஓடித் தன் நண்பர்களுக்கு ஏதோ சொல்லுகின்றாள். ரகு உடனே இவள் அவனிடம் என்ன சொல்லுகின்றாள். அவன் தான் நான் பார்த்த பையனோ என்று சொல்லுகின்றாளோ…? அல்லது நான் காதலிக்கின்ற பையனோ என்று சொல்லுகின்றாளோ…? என்று ரகு நெஞ்சுக்குள் நினைத்துக்கொள்கின்றான்.
அப்படி நினைத்துக் கொண்டிருந்த அவ்வேளையில் அவளின் நண்பா் ஒருவன் ரகுவை நோக்கி மிகுந்த மகிழ்ச்சியோடு ஒடி வருகின்றான். ரகுவுக்கோ மனதில் ஒரு விதமான படபடப்பு, ஒரு வித மான மகிழ்ச்சி இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள்ளே உரையாடிக்கொண்டிருக்கின்றான். அவளின் நண்பன் ரகுவை நெருங்கி வர வர என்ன சொல்லியிருப்பாளோ…! ஏது சொல்லியிருப்பாளோ…! என்று அந்த குறுகிய நிமிடங்களில் பல விதமான யோசனைகள் ஒடிக்கொண்டிருந்தன. அப்படி ஓடிக்கொண்டிருந்த வேளையில் அவளின் நண்பன் ஏதோ ஒரு பையன் பேரை கூப்பிட்டு டே நில்லுடா… டே நில்லுடா … சத்தத்துடன் கூப்பிட்டுக்கொண்டே ஓடிவிட்டான்.
ரகு, அவள் தோ்வறைக்கு வெளியே செய்த அந்த நிகழ்வினை நினைத்து நினைத்துப் பார்த்து ஏன் அவள் இப்படிச் செய்தாள், எதற்காகச் செய்தாள் என்று மனதிலே குழம்பிக்கொண்டே இருக்கின்றான்.
இப்படியே பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடிக்கொண்டிருந்தன. எப்பொழுதும் கண்ணெதிரே இருந்தவள் திடீரெண்டு பல நாட்கள் காணவில்லை. ரகுவின் மனதிற்கு ஒருவிதமான ஏக்கம், பதற்றம், வருத்தம் எல்லாம் தென்படத்தொடங்கின. ரகுவிற்கும் படிப்பினை முடித்துவிட்டு வெளியேறிய தருணம் வந்துவிடவே இனிமேல் அவளைக் காண இயலாது என்று எண்ணி மனதிற்குள் புழுங்கிக்கொண்டு வெளியேறுகின்றான்.
இதற்கிடையில் அங்கேயே தன்னுடைய ஆராய்ச்சிப் படிப்பினை தொடர வேண்டும் என்பதற்காக பல வழிமுறைகளில் ஈடுபட்டிருந்தான். அதனால் முன்பு போல் கல்லூரிக்குச் செல்லாமல் எப்பொழுதுதாவது ஒரு நாள் தான் செல்வான். அப்பொழுதெல்லாம் அவளின் நினைப்பு வந்து கொண்டேயிருக்கும். ஆனால் அவளை காண்பது அரிதாகவே இருந்தது. அப்பொழுது தான் புரிந்துது அவளுக்கும் புராசட் ஒா்க் இருந்தது.
அவளும் காலேஜ்ல இருந்து சாய்ங்காலம தான் போற என்பதை தெரிந்து கொண்டு ரகுவும் சாய்ங்காலம் அவள் போகக் கூடிய பேருந்திலே போய் எந்த ஊருனு கண்டுபுடிச்சுடலாம்னு எண்ணி வழக்கமான பேருந்து நிறுத்தில் காத்துக்கொண்டிருந்தான்.
அப்படிக்காத்துக்கொண்டிருக்க நிமிடங்கள் ஓடின, நேரங்கள் கடந்தன, வெகுநேரமாகியும் அவளை காணவில்லை. அந்த நாளில் ரகு ஒரு வேலையாக வெகுதொலைவு செல்லவேண்டியிருந்தது. அதுவும் அவள் செல்லும் வழியில் தான். ஆனால் அவள் வரவில்லையே என்ற ஏக்கத்தோடு பேருந்திலே சென்றுகொண்டிருக்கின்றான். இதற்கிடையில் அவளைக் காணாத அந்த நிமிடம் முதல் ரகுவின் மனதிற்குள் மிகப்பெரிய போராட்டமே நடைபெற்றது.
அவள் இந்த ஊரா இருப்பாளோ…? அந்த ஊரா இருப்பாளோ….? என்ற ஏக்கத்தோடும் பரிதவிப்போடும் பேருந்திலே குழம்பிய நிலையில் ஒரு விதமான பரிதவிப்பில் பயணிக்கின்றான். ஏனென்றால் இன்று எப்பாடியாவது அவளிடம் பேசிவிடவேண்டும் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிதான் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தான். ஆனால் ரகுவின் நேரமோ என்னவோ தெரியவில்லை..
ரகு, கரூரில் இறங்கி ஒரு பேருந்தில் ஏறி உட்காந்திருக்கின்றான். அப்பொழுது அவளின் நினைப்பு ரகுவுக்கு அதிகமாகவே வருகின்றது. ரகுவின் உடலில் பல விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. நெஞ்சிற்குள் ஒருவிதமான படபடப்பு அதிமாகிக்கொண்டே போகின்றன. அதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு வெள்ளைத்தாளை எடுத்து எழுதத்தொடங்குகின்றான். அவ்வெள்ளைத்தாளில் எழுதுகோலால் கிறுக்கப்பட்ட கீறல்கள் எல்லாம் கவிதையாக வெளிவரத்தொடங்குகின்றன.
ரகு , அந்த வெள்ளைத்தாளில் எழுத எழுத அவள் கண்களிலிருந்து சாரை சாரையாய் வெளிவந்த அந்தக் கண்ணீரே அவள் மேல் வைத்திருந்த காதலை அவனுக்குள் வெளிப்படுத்தின. அந்த கண்ணீர் சிந்தும்பொழுது அவனுக்குள் ஏற்பட்ட வலி, அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், யாரிடமும் சொல்லமுடியாமல் தவியா தவித்தபொழுது உணா்கின்றான் ரகு தன் காதலின் ஆழத்தையும் அவள் மேல் வைத்திருந்த அலாதியான காதலையும் அறிந்துகொள்கின்றான். அந்த காகிதத்தில் எழுதப்பட்ட வரிகள் சாதராணமானது அல்ல அந்த அளவிற்கு ரகுவின் இதயத்திலிருந்தும், அவன் துடித்துடித்துகொண்டிருந்த காதலின் வலியிலிருந்தும் வந்தாகும்.
ஆம்… ரகு எழுதிய வரிகளில்..
ஒவ்வொரு நாளும்
ஆயுதம் ஏந்தாமலே
வீழ்த்திச் செல்கிறாள்
மௌனத்தில்..
ஓா்
ஆழிப்பேரலை
மனதிற்குள்
ஆவேசமாய்
அழைத்தது
பெயா் தெரியாமலே
நீந்தத் தெரியாமல்
முழ்கிப்போகின்றேன்
கடலைக்குள்.
இலவுகாத்தக்
கிளிபோல
ஒவ்வொரு நாளும்
காத்திருக்கின்றேன்
வருகைக்கு
கிளிபோலவே
பெரும்பேராட்டம்
ஏமாற்றம்
நாழிகை தோறும்.
தன் காதலின் வலியை கவிதை மூலம் எழுத ஆரம்பிக்கின்றான். ஆனால் அப்பொழுது ரகுவுக்குத் தெரியாது கவிஞன் ஆவானென்று. அதற்குப் பிறகு அவன் காண்கின்ற காட்சி எல்லாம் தன் நெஞ்சில் பதிந்த சுவடுகளாவும், வடுக்களாகவும் மாற்றிக்கொண்டு தொடா்ந்து கவிதை மழையாக எழுத ஆரம்பிக்கின்றான்.
ரகு ஒவ்வொரு முறையும் கவிதை எழுதும்பொழுதெல்லாம் அவனுடைய பேராசிரியரிடம் காட்டித் திருத்தம் பெற்றுக்கொள்வான். அப்படி ஒரு நாள் அவா் திருத்தம் செய்து தருகையில் 'தம்பிக்கு இப்பொழுது தான் காதல் மலா்ந்திருக்கு போல' என்று நகைச்சுவையாக பேசுகின்றார். பின்னா் 'தம்பி மனசுல என்னதோனுதோ அப்படியே எழுது', 'நீ நல்லாத தான் எழுதுற' என்று மென்மேலும் உற்சாகப்படுத்தினார்.
ஒரு நாள் கல்லூரி சிற்றுண்டியில் பேராசிரியா்கள் எல்லாம் ஒன்று கூடி தேநீா் அருந்திக் கொண்டிருக்கையில் ரகுவின் பேராசிரியா் தம்பி இந்த தலைப்புல ஒரு கவிதை எழுதிக்கொடு என்று சொன்னது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. ரகுவிற்கு நல்லா கவிதை வருது என்று பிற பேராசிரியா்களிடம் ரகுவை அடையாளப்படுத்தியும் வைக்கின்றார்.
ஊருக்குள் ரகு மிகவும் அமைதியாக இருக்கக்கூடியவன் இருக்கும் இடம் தெரியாது அந்த அளவுக்கு பணிவானவன். அந்த ஊரிலே அதிகம் படிக்கக் கூடியவன். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக் கூடியவன். அந்த ஊரிலே ரகுவைப்போல யாரும் வரமாட்டாங்க என்று ஊா் மக்கள் எல்லாம் மெச்சிக்கிற அளவுக்கு இருப்பான். அந்த ஊரில் உள்ள சிறுவா்கள் ரகுவை பையா பையா என்றே அழைப்பார்கள்.
ஒரு நாள் அந்த ஊரில் உள்ளவருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் 'மாப்பிள்ளைத் தோழா்கள், உறவினா்கள் எல்லாம் ரகுவை அழைத்து போஸ்டருக்கு ஒரு நல்ல கவிதையா எழுதிக்கொடுப்பா' என்று கூற… ரகுவும் உடனே ஒரு கவிதை எழுதித்தருகின்றான்.
திருமணம் நடைபெற்ற நாளில் அந்த போஸ்டா்ல இருந்த கவிதை படித்தவா்கள் எல்லாம் யாருப்பா இந்த கவிதையை எழுதுனது.. கவிதையில் வார்த்தைகள், சொல்லாடல்கள் எல்லாம் புதுமையாகவும் வியப்பாகவும் இருக்கின்றதே படித்தவா்களெல்லாம் பாராட்டிப்போயினார்கள்.
இதைக்கேட்ட ரகுவுக்கோ மென்மேலும் எழுதவேண்டும் என்று தோனவே ரகுவும் மனசுக்கு பட்டதெல்லாம் எழுத ஆரம்பிக்கின்றான். இந்த மாதிரி ஒரு எண்ணம் ரகுவுக்கு விதைத்தவள் அவள்.
ஒரு நாள் கல்லூரி இடைவேளை நேரம் அந்நேரத்தில் ரகு தன் வகுப்பறைக்கு வெளியே தன் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கின்றான். அப்பொழுது கல்லூரி முதல்வா் அலுவலகம் செல்லும் பாதையில் ஒரு சிலா் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்க….
அதைக் கவனித்த ரகு அந்த கூட்டத்தில் உள்ளவா்களை கவனிக்கின்றான். அதில் ஒரு பெண்ணைப் பார்க்கின்றான். இதுவரைக்கும் அவன் உள்ளத்தில்தோணாத ஒன்று அன்றைக்கு தோன்றியது ஆம் அவளைப் போன்று ஒரு பெண் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று நினைத்து முடிகின்றான். அந்நேரத்தில் அவள் திரும்பி பார்க்கின்றாள். ரகுவுக்கு உடனே ஆச்சரியம் அவன் ஏற்கனவே பார்த்துகிட்டு இருந்த பெண் தான் அவள். அந்த எண்ணம் அவனுக்குள் தானாக தோன்றியது அதே நேரம் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த பெண்ணாக இருப்பாள் என்று ரகுவுக்குத் தெரியாது…
இருவரின் காதல் இப்படியே போய்க்கொண்டிருந்தன. நாட்களும் மாதங்களும் கடந்து கொண்டே சென்றன. முடிவில்லா பயணமாய் தொடர்ந்து கொண்டே சென்றது இருவரின் மனதில் அவரவரின் நினைவுகள்…
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.