30.11.2019
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை
இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்
ராஜபக்சே அரசின் அதிகார வர்க்க, மக்கள் விரோதப் போக்கின் காரணமாகவே 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியடைந்து புதிய கூட்டணி அரசு ஏற்பட்டது. ஏற்பட்ட புதிய அரசு மக்களுக்கு அளித்த குறிப்பாக, தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதுடன், இவ்வாட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சேர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.
புதிதாக அமைந்துள்ள ராஜபக்சே அரசின் மீது தமிழர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு அடிப்படையற்றதல்ல. இந்நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது, வாழ்வாதாரங்கள் மேம்படுத்துவது இலங்கை அரசின் கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, கடந்த கால துயர வரலாறுக்கு முடிவுக்கட்டி மேற்கண்டவைகளை இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்சே அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. மேலும், தற்போது இந்தியா வந்துள்ள இலங்கை குடியரசுத் தலைவர் கோத்தபயா ராஜபக்சே அவர்களிடம் இந்திய அரசு தனக்குள்ள ராஜ்ஜிய உறவை பயன்படுத்தி தமிழர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை அரசிடம் உறுதி செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
- கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் -
Tamilnadu State Committee
P.R. Ninaivagam
No: 27, Vaidhyaraman Street
T.Nagar, Chennai - 600 017
Ph.: 044 + 24326800 / 900
Fax: 044 + 24341294
Email id: cஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Read: marxist.tncpim.org