பதிவுகள் முகப்பு

'கதிர்காமம்' குறித்த இடப்பெயர் ஆய்வு அறிமுகமாகச் சில குறிப்புகள்! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் -

விவரங்கள்
- கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் -
ஆய்வு
04 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 

அறிமுகம்

ஓர் ஊர் அல்லது ஒரு தலம் அமைந்த இடம், அல்லது ஒரு தலம் குறித்த அதிகளவிலான இடப்பெயர் ஆராய்ச்சி, பல்வேறு நோக்குகளில் நடைபெற்றிருக்கும் எனில், அது ‘கதிர்காமம்’ என்பதற்கே என்பதை, இடப்பெயர் ஆய்வு பற்றிய ஈழத்து எழுத்துக்களை வாசித்தோர் நன்கு உணர்வர். ஈழத்தில், பல்லின பல்சமயச் சங்கமிப்பு நிகழும் இடங்களில், கதிர்காமம் முதன்மையானது. அதனால், அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில், அச்சொல் குறித்த அர்த்தப்படுத்தலும் அது குறித்த அவதானிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இப்பொருண்மை குறித்த அறிமுகக் கட்டுரையாகவே இது அமைகிறது. ஆகையால், ‘கதிர்காமம்’ என்பதன் இடப்பெயர் அர்த்தம் குறித்;து மொழி, பண்பாடு, சமயம் ஆகியவற்றின் நிலைநின்று, சுருக்கமாக விளக்க இக்கட்டுரை முயலுகிறது.

திருப்புகழிலா முதல் பதிவு?

குகதொன்மைப் பதியாகிய ‘கதிர்காமம்’ எனும் பெயர்க் காரணம் பற்றிப் பலரும் பலவிதமாக எழுதி வைத்துள்ளனர். பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள், “கதிர்காமம் என்ற தலப்பெயர் அருணகிரிநாதர் திருப்புகழிலேயே முதன்முதலில் இடம்பெறுகிறது” (2013:75) என்கிறார்.

வடமொழிக் கந்தபுராணத்து வீரமாமகேந்திர காண்டம், பதினெண் புராணங்களில் ஒன்றாகிய காந்தமகா புராணத்தில் வரும் தட்சிணகைலாச மான்மியம் முதலானவை இவ்விடயத்தில் முதலில் நமது கவனத்திற்குரியவை. அவற்றிற் பலவும் பேராசிரியர் குறித்த கருத்தைக் கூறும் காலத்துக்கு முன்னரேயே தமிழில் வெளியாகியவை.

மேலும் படிக்க ...

ஆய்வு: ஆன்மாவின் இருண்ட இரவு - கனேடிய தமிழ் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலில் இலங்கைத் தமிழ் அகதிகளின் இருத்தலியல் நெருக்கடி பற்றிய ஆய்வு! – முனைவர். ஆர். தாரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு கலைக் க

விவரங்கள்
– முனைவர். ஆர். தாரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு கலைக் கல்லூரி பெண்கள் –
ஆய்வு
03 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆங்கில ஆய்விதழான Scholarly International Multidisciplinary Print Journal’ (ஜனவரி - பிப்ரவரி 2017) இதழில் முனைவர் ஆர்.தாரணி எழுதிய வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான An Immigrant பற்றி (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) பிரசுரமான ஆய்வுக் கட்டுரையின்  ('The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan') என்னும் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இம்மொழிபெயர்ப்பைச் செய்திருப்பது  செயற்கைத் தொழில் நுட்பமான கூகுள் நனோ பனானா (Google Nano Banana). மொழிபெயர்ப்பை  இரண்டு நிமிடங்களுக்குள்  அது செய்தது. 


சுருக்கம்
வாழ்க்கையில் எந்தவொரு பயணமும் உலகெங்கிலும் உள்ள மனிதப் பயணிகளால் ஆனந்தமாகத் தேடப்படுகிறது. இருப்பினும், சில இனக்குழுக்களின் சில புலம்பெயர்வுகள், ஒரு விரும்பத்தகாத இயக்கத்தைத் தவிர, சில சமயங்களில் ஆபத்தான இயக்கங்களைத் தவிர, வேறு வழியில்லை. வசதியான இருப்புடன் எந்தவொரு மனிதனுக்கும் வாழ்க்கையும் பயணமும் கைகோர்த்து இனிமையாக செல்கின்றன. தாயகத்தில் வாழ்க்கை நிச்சயமற்றதாகி, ஒரு அன்னிய தேசத்திற்குள் நுழையும்போது மட்டுமே நெருக்கடி ஏற்படுகிறது. இலங்கைத் தமிழர்கள் அத்தகைய இனக்குழுக்களில் ஒருவர்.  தங்கள் நிலத்தில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையால் இருத்தலியல் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். எழுத்தாளர் வ.ந.கிரிதரன் இலங்கையில் ஒரு தமிழ் குடும்பத்தில் மற்றவர்களைப் போலவே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மனிதராகப் பிறந்தார். அவர் ஒரு எழுத்தாளராகவும், கட்டிடக்கலை பட்டதாரியாகவும், நிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் மீது மிகுந்த உணர்திறனுடன் வளர்ந்தார். இருப்பினும், அவரது நிலைமை அப்படியே இருக்கவில்லை, ஏனெனில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழர்களுக்கும் இடையிலான இன மோதலின் குழப்பங்களும் கொடுமைகளும் இருந்தன. பிழைப்பதற்கான ஒரே வழி, கனத்த இதயத்துடன் தாயகத்தை விட்டு வெளியேறி, ஒரு புகலிடத்தை நோக்கிச் செல்வதுதான். இந்த பயணம் எந்தவொரு மனிதனின் வாழ்விலும் மிகவும் பரிதாபகரமான ஒன்றாகும். அவரது துன்பங்கள் 'குடிவரவாளன்' நாவலில் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன, இதில் இளங்கோ என்ற கதாநாயகன் எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் பிரதிபலிப்பாகவே வாழ்கிறார்.

இந்த ஆய்வுக் கட்டுரை 'குடிவரவாளன்' நாவலின் கதாநாயகனின் இருத்தலியல் இக்கட்டை ஆராய முற்படுகிறது, அவருடைய தனிப்பட்ட அனுபவங்கள் உலகெங்கிலும் உள்ள அத்தகைய குடியேறிகளின் உடல், உளவியல், பன்முக கலாச்சார, இன, அரசியல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன.

முக்கிய சொற்கள்: கனேடிய-தமிழ் எழுத்தாளர், வ.ந. கிரிதரன், கட்டாய இடப்பெயர்வு, புலம்பெயர்வு, தமிழ் இனம், அகதிகள், விருப்பமில்லாத குடியேறி, அடையாள நெருக்கடி, அரசியல் புகலிடம்.

மேலும் படிக்க ...

காலனிய எதிர்ப்புச் சிந்தனையாளரும், விடுதலைப்போராட்ட அமைப்புத் தலைவரான அமில்கார் கப்ராலின் ( Amilcar Cabral) 'வர்க்கத்தற்கொலை' (Class Suicide) என்னும் கோட்பாடு மற்றும் போராட்டங்களில் அந்நியப்படுத்தப்படும் மக்கள் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                              - அமில்கார் கப்ரால் (Amilcar Cabral)

நேற்று  'நந்தலாலா' ஜோதிகுமார் அலைபேசியில் அழைத்து அண்மையில் எழுதிய எம்போராட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் பற்றிய நந்திவர்மப்பல்லவனின்  கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு அமைப்புகள் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டுப்போனமை முக்கிய காரணங்களிலொன்று. அது பற்றியும் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென்றார். இது பற்றி எம்மவர் யாரும் இதுவரையில் போதிய கவனம் செலுத்தவில்லையென்றார். அது  மிகவும் முக்கியமான கூற்று. நம் மத்தியில் யாராவது இவ்விடயம் பற்றி, அதாவது போராட்டத்தில் மக்களின்  அந்நியப்படுத்தல் பற்றி, அல்லது மக்களிடமிருந்து அமைப்புகளின் அந்நியப்படுத்தல் பற்றி அதிகமாக எழுதியதாக அல்லது கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

மக்களுக்காகவே எமது போராட்டம் என்று சூளுரைத்து ஆயுதம் தூக்கிய அமைப்புகள் அனைத்துமே , பின்னர் அவற்றின் செயற்பாடுகள் காரணமாக மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயின. மக்களைப் போராட்டத்த்திலிருந்து அந்நியப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டன. ஏன்?

அதிகாரம் மையப்படுத்தப்படுவது முக்கிய காரணங்களிலொன்று. ஆரம்பத்தில் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய அமைப்புகள், காலப்போக்கில் வளர்ச்சியடையும் போது , அவற்றின் அதிகாரம் அமைப்பின் ஒரு சிலரின் கைகளிலேயே குவிந்து கிடக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் அமைப்புகளின் முடிவெடுக்கும் அதிகாரம் சிலரின் கைகளிலேயே தங்கும்  நிலை ஏற்படுகின்றது. இதன் விளைவாக மக்களின் அபிலாசைகள் கட்சியின் நலன்களுக்காகப் புறக்கணிக்கப்படுகின்றன. மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்பட வேண்டிய போராளிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளாக மாறி  விடுகின்றனர்.  இது அமைப்புகளின் ஆரம்ப நோக்கங்களுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கும் நிலை. இவ்வாறு அமைப்புகளின் அதிகார வேட்கை காரணமாக மக்கள் போராட்டத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகும் நிலை உருவாகின்றது.

மேலும் படிக்க ...

நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு)! அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்க'மும் அது எழுப்பிய கேள்வியும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
01 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]

கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்கமும் அது எழுப்பிய கேள்வியும்

நான்:
நினைவின் வலிமை என்னை நீ உணர வைக்கும்.
நினைவின் வலிமை உன்னை நான் நினைக்க வைக்கும்.
நினைவின் வலிமையை உன்னைப்போல் 
நானும் நம்புவனடி கண்ணம்மா!
அதனால்தான் உதயத்தில் மறைந்து 
அந்தியில் முகம் காட்டும் மதியாகி
முறுவலித்தாய். இல்லையா கண்ணம்மா!
ஒளிக்கும் ஒரு வேகமுண்டு! 
ஒளி கடக்கும் தூரத்துக்குமொரு நேரமுண்டு.
ஆயின்,
மனவேகத்துக்கு ஓர் எல்லையுண்டா
கண்ணம்மா!
இருப்பின் எல்லையை நிர்ணயிப்பது
ஒளி! இலலையா கண்ணம்மா!
ஒளி எல்லை தாண்டிப் பயணித்தல் 
சாத்தியமுண்டாடி!
ஆனால்,
எண்ண வேகத்தைத் தடுக்கும் 
எல்லையென்று  ஒன்று உண்டா
என் கண்ணம்மா!
பிரபஞ்சங்கள் தாண்டிச் செல்வதை
அனுமதிப்பதில்லை ஒளி.
இல்லையா கண்ணம்மா?
ஆயின்,
எண்ணவேகத்தில் என்னால்
எத்தனை பிரபஞ்சங்களையும் தாண்டிப் 
பயணிப்பதைத் தடுப்பவர் எவருமுண்டா?
கண்ணம்மா! பதில் கூறடி 
என் செல்லம்மா?
சமாந்தரப் பிரபஞ்சங்களுக்குள் புகுந்து விளையாடும்
சாதனையை என்னால் சாதிக்க முடியுமடி
என்னால் என்றால் நம்புவதில் உனக்கு
ஏதும் தயக்கமுண்டாடி கண்ணம்மா?

கண்ணம்மா:
கண்ணா! ஒளியெல்லை தாண்டிச் செல்வது பற்றிக்
கூறினாய்.
ஒளி எல்லை தாண்டுமொரு வழி உண்டு தெரியுமா கண்ணா?

நான்:
ஒளியெல்லை தாண்டும் வழியுண்டா கண்ணம்மா?
களிப்பில் மூழ்குமென் நெஞ்சிற்கு உன் பதில்
காரணமாக இருக்கட்டுமடி கண்ணம்மா!
கூறு கண்ணம்மா!

மேலும் படிக்க ...

நிழல்களின் நடுவே ஒளி! - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
01 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]


இன்று, காசாவின் இருளில் 
ஒளி ஒரு பிரார்த்தனை போலே சுழன்றது— 
இல்லை, அது வெறும் சூரியன் அல்ல, 
ஒரு மூச்சு… 
தெய்வீக மென்மை கொண்ட ஒரு மீள்பிறப்பு.
 
நான் என் உள்ளத்தில் மண் களிமணியை 
உணர்ந்தேன்— 
அங்கே, குழந்தை ஓர் இறுக்கப்பட்ட ஓசை போல 
மௌனத்தைக் கிழிக்க முயன்றது.

மேலும் படிக்க ...

'வேர்ல்ட் சீரிஸ்' (World series ) 2025: LA Dodgers vs Toronto Blue Jays - விளையாட்டுப் பிரியன் -

விவரங்கள்
- விளையாட்டுப் பிரியன் -
நிகழ்வுகள்
01 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இறுதி வெற்றி: LA Dodgers - 5  Toronto Blue Jays 4

இன்று , நவம்பர் 1, 2025, மாலை எட்டு மணிக்கு  பேஸ் பால் விளையாட்டின் 2025 ஆண்டுக்குரிய 'வேர்ல்ட் சீரிஸி'ன் (World Series) இறுதிப்போட்டியான ஏழாவது போட்டி நடைபெறவுள்ளது.  இம்முறை களத்தில் இருக்கும் குழுக்கள் : லொஸ் ஏஞ்செல்ஸ் டொட்ஜர்ஸ் (Los Angeles) & டொரோண்டோ புளூ ஜேய்ஸ் (Toronto Blue Jays).

இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் இரு குழுக்களும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளதால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியாக  இந்த ஏழாவது போட்டி நடைபெறவுள்ளதால் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் பரபரப்பும், ஆவலும் பெருகியுள்ளன.

பேஸ் பாலின் முக்கிய அம்சம் அதன் Bases (முதலாவது பேஸ், இரண்டாவது பேஸ், மூன்றாவது பேஸ்   & ஹோம் பேஸ்) அதன் காரணமாகவே விளையாட்டு Baseball  என்றழைக்கப்படுகின்றது.

மேலும் படிக்க ...

யாழ்தேவி! -இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ் -
இலக்கியம்
31 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]

50 வருசத்திற்கு முந்தின கதையிது.மத்தியான வெயில் கொளுத்தி எரிக்கும்.மேனி பிசுபிசுக்கும்.சைக்கிளில் சென்று அலுவல்களை முடித்து வீடு திரும்புவதற்கிடையில் காற்றும்  வீசவில்லையென்றால் ஒரே எரிச்சலாயிருக்கும். அப்படியிருந்தும்,ஊருக்குள்ளால யாழ்தேவி கிழிச்சிக்கொண்டு போற வேகத்தில யாழ்.இந்து மகளிர் கல்லூரிக்குப் பக்கத்தில இருக்கிற ரெயில்வே கேற்றோட நிற்கின்ற அரசமர இலைகளும் பறக்கும்,அந்தக்காத்து வந்து முகத்திலயும்  அடிக்கும்.அப்போதுதான் இலேசா உடம்புக்குச் சுகமாயிருக்கும்.காற்றில் பறந்த மாசுபடாத புழுதியின் வாசமும் எம்மை ஒருகணம் வசப்படுத்திவிடும்.புகையிரத நிலையங்களுக்கு பக்கத்தில் இருக்கும் தேநீர்க்கடைகளுக்கு  முன்னால்  நிற்கின்ற பெரிசுகளிடம் கிடுகு வண்டில்காரர்  வந்து, 

"ரயில் கடவையைக் கடந்து யாழ்தேவி போயிற்றுதே?"என்று கேட்டு நேரத்தைக் குறிச்ச காலமது.யாழ்தேவியில் வருபவர்க்கென்றே ஒவ்வொரு கதையிருந்தது.

மேலும் படிக்க ...

வசந்தம் தமிழ் உளவளத்துறை நிலையம் - சமூக உளவளம் பேணும் தொடர் 103

விவரங்கள்
-தகவல்:ஜானகி பாலகிருஷ்ணன் -
நிகழ்வுகள்
30 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாங்குநேரி வாசஸ்ரீ் மரபுக் கவிதைகள்!

விவரங்கள்
நாங்குநேரி வாசஸ்ரீ் -
கவிதை
30 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டளைக் கலித்துறை

எழுத்து எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மொத்த எழுத்தெண்ணிக்கை 68. நிரையசையில் தொடங்குவதால் ஒவ்வொரு அடியிலும் ஒற்று நீங்கலாக 17 எழுத்துக்கள்.

அவனிவாழ் அவரும் இவரும்..
அவரா இவராய்? அவருமா இப்படி? என்றிடுவோர்
அவரும் இவரொடு வையகம் வாழ்பவர் என்றுணரார்வ்
அவரை அவராய் அறிந்து புரிந்தவர் நல்லுறவோர்
அவரை அறியாது அல்லவை கூறுவோர் புல்லராமே.

மேலும் படிக்க ...

நேர்காணல்: எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களை நேர்கண்டவர் கனடா அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு அவர்கள்.

விவரங்கள்
- தகவல்: குரு அரவிந்தன் -
நேர்காணல்
30 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கேள்வி: வணக்கம் குரு அரவிந்தன் அவர்களே, கனடாவில் இம்மாதம் தமிழ் இலக்கிய சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் உயர் விருது பெறும் உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாமா?

பதில்: வணக்கம், வாழும்போதே ஒருவரின் சிறந்த சேவைக்காகக் கௌரவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு கனடாவில் கடந்த 32 வருடங்களாக இலக்கியச் சேவையாற்றிவரும் எழுத்தாளர் இணையத்தினர் கனடாவின் உயர் விருதாக இதை அறிவித்திருக்கிறார்கள். என்னைப்பற்றி அறிமுகம் என்றால் இலங்கையின் வடபகுதியில் உள்ள காங்கேசந்துறையில் உள்ள மாவிட்டபுரம் எனது தந்தை அருனாசலம் குருநாதபிள்ளையின் ஊராகும். தாயார் இலக்சுமி சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை காங்கேசந்துறை நடேஸ்வரக் கல்லூரியில் கனிஸ்டபாடசாலை அதிபராகவும், காங்கேசந்துறை பட்டினசபை 2 ஆம் வட்டார பிரதிநிதியாகவும், பட்டினசபை முதல்வராகவும் பணியாற்றியவர். எனது கடந்தகால வாழ்விடங்கள் காங்கேசந்துறை, கொழும்பு, ரொறன்ரோ என்று சொல்லலாம்.

இலங்கையில் நடேஸ்வரக்கல்லூரி, மகாஜனக்கல்லூரி, பட்டயக்கணக்காளர் நிறுவனம் ஆகியவற்றில் கல்வி கற்று கொழும்பில் மகாராஜா நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றினேன். போரச்சூழல் காரணமாக கனடா நாட்டிற்கு 1988 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து இங்கும் கணக்காளராகவும், பகுதிநேர ஆசிரியராக ரொறன்ரோ கல்விச்சபையிலும் பணியாற்றுகின்றேன். எழுத்தாளரான மனைவி மாலினி அரவிந்தனும் கணக்காளராகவும், ஆசிரியராகவும் இங்கு பணியாற்றினார். இலங்கை வங்கியின் அதியுயர் முகாமையாளராக பணியாற்றிய திரு.கு. சிவகணநாதன் எனது மூத்த சகோதரர், மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி எனது மூத்த சகோதரியின் கணவர்,

மேலும் படிக்க ...

எழுத்தாளர் டிலுக்ஸன் மோகனின் 'படுபட்சி' நூல் வெளியீடும் உரைகளும்!

விவரங்கள்
- தகவல்- 'காலம்' செல்வம் -
நிகழ்வுகள்
28 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மார்க்சியத் தலைவர் அமரர் சண்முகதாசன் நினைவுப் பேருரையும், அவர் பற்றிய 'சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள்' நூல் வெளியீடும்!

விவரங்கள்
- தகவல்: பா.அ.ஜயகரன் (தேடகம்) --
நிகழ்வுகள்
28 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் பாத்திமா நளீராவின் 'ஏழாம் வானத்தின் சிறகுகள்' பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் பாத்திமா நளீராவின்  'ஏழாம் வானத்தின் சிறகுகள்' கவிதைத்தொகுப்பு அண்மையில் வெளியானது. யாவரும் அறிந்ததே.  இவர் ஊடகவியலாளரும் கவிஞருமான ஏ.எச்.சீத்திக் காரியப்பரின் மனைவி. எண்பதுகளிலிருந்து இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் மற்றும் வானொலியில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. இவரது முதற்கவிதையை வெளியிட்டது தினகரன் பத்திரிகை. 

இத்தருணத்தில் இவரது கணவரான கவிஞர் ஏ.எச்.சித்திக் காரியப்பரை ஒரு கணம் நன்றியுடன் நினைவு கூர்ந்திட விழைகின்றேன். எண்பதுகளில் தினகரன் பத்திரிகையில் வெளியான 'கவிதைச் சோலை'ப் பகுதியை நடத்திக்கொண்டிருந்தவர் அவர். அப்போது என் கவிதைகளுடன் , என் புகைப்படத்தையும் பிரசுரித்து நல்லதோர் அறிமுகம் தந்தவர் அவர். எனது கவிதைகள் சில அவர் நடத்திய கவிதைச் சோலையில் வெளியாகியுள்ளன. என் எழுத்துலகின் ஆரம்பக் கட்டத்தில் அவர் தந்த ஊக்கத்தை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வேன்.

மேலும் படிக்க ...

நெடுங்கதை - சுதந்திரபுரத்தில். (3, 4 & 5) .. - முல்லை அமுதன் -

விவரங்கள்
- முல்லை அமுதன் -
சிறுகதை
25 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

3.

.அதற்குப்பிறகு மாமாவில் நிறைய மாற்றங்கள் தென்பட்டன.அம்மா கவனித்தாளோ தெரியவில்லை.அவர் இப்போது நிர்வாணமாக குளிப்பதில்லை..

பூவரசம்பூக்களின் நிறத்தை ரசிப்பது போலிருக்கும்.

கிணற்றடி வாழைக்குத் தண்ணீர் போகட்டும் என்று மண்வெட்டியால் மண்ணைவெட்டி திருப்பிவிடுவார்.வீதியால் போகும் இளசுகள் பாட்டுப்பாடிக்கொண்டிருந்தார்கள்.

அறை ஜன்னலால் பார்க்கையில் அவரிடம் ஒரு வெட்கம் அதன் நிமித்தம் ஒரு நாகரீகம்,,,இங்கிதம்...உணரமுடிந்தது.மனிசனாக அவரை யாவரும் மதித்தாலே போதும்.துளசி இல்லையென்றானபின் வேறொரு மாலாவோ,சங்கரியோ கிடைக்கலாம்.ஒருத்திக்கு கணவன்..நாலு பேருக்கு ஒரு மனுசன்..மாமாவை விசரன்,,பைத்தியம் என்று சொல்லிவிடக்கூடாது...ஆனாலும் காரியக்காரன் என்று சொல்லிக்கொள்ளலாம்.அந்த நிகழ்விற்குப்பிறகு மாதம் ஒருக்கா சலூனுக்குப் போவார்..அடிக்கடி சேவ் பண்ணுவார். பெட்டியில் இருக்கும் சாரங்களை மாறி மாறி கட்டுவார். கிழிஞ்சதைக் கட்டியதை காணமுடியவில்லை.கள்ளன்..காமத்தை ஒழிச்சுவைச்சுக் கொண்டு...நான் மட்டும் என்னவாம்?....பயமும் கூடவே எழுந்தது... மாமா உளறிவிட்டால்..?

நினைவு அறுபட்டது..

மாலை ஆறுமணிக்கே தயாரானாள் சுகந்தி.அன்று ஞாயிற்றுக்கிழமை கடையில் கூட்டமில்லை.ஆதலினால் நேரத்திற்கே கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குப் போனார்கள்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா- 2025! - தகவல் - அகணி சுரேஷ் -

விவரங்கள்
- தகவல் - அகணி சுரேஷ் -
நிகழ்வுகள்
25 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கரூர் துயரும் , எழுத்தாளர் ஜெயமோகனின் 'சாமான்ய மக்களின் கும்பல்' மனநிலை பற்றிய கருத்தும் பற்றி.. - நந்திவர்மப் பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப் பல்லவன் -
அரசியல்
25 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
அண்மையில் கரூரில் நடந்த , தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் மக்கள் அகப்பட்டு உயிரிழந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கிடையில் நிலவும் கும்பல மனநிலை என்று ஒரு புதிய தத்துவத்தை, ஹிட்லரின் பாசிதத்தை உதாரணமாகக் காட்டி, எடுத்துரைக்கின்றார் எழுத்தாளர் ஜெயமோகன். அதற்குரிய யு டியூப் காணொளி
 
ஜெயமோகன் சொற் சித்தர். சொற்களை வைத்து விளையாடுவதில் வல்லவர். அவரது இவ்வுரையும் அத்தகையதுதான். தனக்கேரியுரிய சொற் சிலம்பமாடும் திறமையினை இங்கு அவர் பாவித்துச் சொற் சிலம்பம் ஆடுகின்றார். நடந்த மக்களின் அழிவுக்குக் காரணம் சாமான்ய மக்களின் கும்பல் மனநிலையே காரணமென்று கூறுவதன் மூலம் உண்மையை மூடி மறைக்கின்றார். அவர் இதனைத் திட்டமிட்டுச் செய்யவில்லை.அவர் தன் சுய தர்க்கச் சிந்தனையின் மூலம் அவ்விதமானதொரு முடிவுக்கு வந்து, அதனடிப்படையில் நடந்த அழிவுக்குக் காரண்மாகப் புதியதொரு தத்துவத்தை அல்லது கோட்பாட்டை முன் வைக்கின்றார். அவ்வளவுதான்.
மேலும் படிக்க ...

இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது? ஒரு பார்வை! - நந்திவர்மப் பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
25 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அரசியல் ஆய்வாளர் என்றறியப்பட்ட ஊடகவியலாளர் யதீந்திராவின் , இலக்கியா இணைய இதழில் வெளியான 'நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?' என்னும் கட்டுரையினை வாசித்தேன்.   இது ஓர் அரசியல் ஆய்வுக்கட்டுரை அல்ல. மேலோட்டமான சில உணர்வுகளை வெளிப்படுத்தும் பத்தி எழுத்து. இதில் இலங்கை ஒப்பந்தம் பற்றியும், 13ஆவது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிடுகின்றார்.  இருந்தாலும் நாம் ஏன் தோற்றுக்கொண்டேயிருக்கிறோம் என்பதற்குரிய முக்கிய காரணங்களை இக்கட்டுரையில்  காணவில்லை. 

இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது?

முக்கிய காரணங்கள்:

1. சக அமைப்புகளுக்கிடையிலான மோதலக்ள்.

2. இயக்கங்களுக்கிடையில் நிகழ்ந்த உட்பகையும், மோதல்களும்.

3. அமைதிப்படையாக நுழைந்தபோது வரவேற்ற இந்தியப் படையினருடனான மோதல்கள். மோதல்களுக்கான அடிப்படைக்காரணங்கள் எவையாகவிருந்திருந்தாலும், அவை கண்டறியப்பட்டு , முளையிலெயே கிள்ளி எறியப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யப்பட்டிருந்தால் அம்மோதல் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்றுவரை மாகாணசபை இயங்கிக்கொண்டிருந்திருக்கும்.

4. ஜனதிபதி பிரேமதாசவுடன் இணைந்து, 'நாங்கள் அண்ணன் தம்பிகள். அன்னியருக்கு இங்கென்ன வேலை? எம் பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்வோம்' என்று இயங்கியமை. 

5. தேர்தலில் மீண்டும்  இந்தியப்பிரதமராக ராஜிவ் காந்திவரவிருந்த நிலையில், இந்திய மக்களின் அமோக அவர் மீதான ஆதரவு உச்சத்திலிருந்த சமயத்தில்  அவரைப் படுகொலை செய்தமை.  இதற்குக் காரணங்கள் அக்கால உபகண்டச் சூழல், சர்வதேச சூழல், இவற்றின் விளைவாக சர்வதேச , உபகண்ட அரசியல் சக்திகள் தம் நலன்களுக்காக விடுதலைப்புலிகளைப் பாவித்ததானால் இக்கொலை நிகழ்ந்திருக்கலாம். அதே சமயம் புலிகளும் தம் நலன்களுக்காக இதைச் செய்திருக்கலாம். எது எப்படியோ? ராஜிவ் படுகொலை என்பது  2009இல் விடுதலைப்புலிகளை யுத்தத்தில் இலங்கை அரசு வெல்வதற்குரிய முக்கிய காரணமாக அமைந்து விட்டதை அரசியல் ஆய்வாளர்கள் எவரும் கவனிக்காமல் இருக்க முடியாது. இந்தப் படுகொலையைத் தொடர்ந்து இந்திய அரசின் இலங்கைத் தமிழர் மீதான அணுகுமுறை மாறியது.  இந்தியாவின் கடற்படை புலிகளுக்கு வந்திறங்கும் ஆயுதக்கப்பல்களை இலங்கை அரசு தொடர்ச்சியாகத் தாக்கி அழிப்பதற்கு மிகவும் உதவியாகவிருந்தது. 

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 53 : "எழுத்தாளர் சுதாராஜ் - பன்முக ஆளுமை" - தகவல்- அகில் -

விவரங்கள்
- தகவல்- அகில் -
நிகழ்வுகள்
24 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

    Join Zoom Meeting:  | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

மேலும் படிக்க ...

நாடகவியலாளர் பாலேந்திரா அவர்களின் 'பிரத்தியேகக் காட்சி ஏழு நாடகங்களும் பதிவுகளும்' நூல் அறிமுகமும், ஆனந்தராணி பாலேந்திராவின் 'அரங்க நினைவுகள்' நாடக ஆற்றுகை நிகழ்வும்

விவரங்கள்
- தகவல்: பாலேந்திரா -
நிகழ்வுகள்
24 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிறுகதை: கெடாக் கறி! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
22 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 


மயிர்கள் கருகும் வாசம். தலைமயிர் தீப்பிடித்துக் கொண்டதோ.

தலையில் போட்டிருக்கும் கைக்குட்டையும் கருகி சாம்பலாகியிருக்கும். வேகாத வெயில். தலையை வேகவைத்து விட்டதோ. 

கெடா கறிக்கான அலைச்சல். கெடா தலை கருகுவது போல் வாசனை மூக்கைத் துளைத்தது அவனுக்கு.

0

” அடுச்சாச்சா.. அடிக்கனுமா ”

”என்ன “

” கட்டிங்  அடிச்சாச்சா .  அடிக்கனுமா “

சுந்தரனை உலுக்கிவிட்டது அக்கேள்வி. சாதாரண விசயம்தான். ஆனால் கேள்வியாகக் கேட்கப்படும் போது புதிதாகி விட்டது. அவன் உடம்பை  உலுக்கி விட்டக் கேள்விதான்.

மேலும் படிக்க ...

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

விவரங்கள்
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
கவிதை
22 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1. பாட்டும் நானே பாவமும் நானே

கண்கள் தொலைதூரம் வெறித்திருக்க
ஒரு புருவம் மட்டும்ஏறியிறங்கியவாறிருக்க
அவ்வப்போது தலை யொரு ‘லெஃப்ட் ரைட் – லெஃப்ட் ரைட்
தாளகதிக்கதிக்கேற்ப இப்புறமும் அப்புறமும் திரும்பி
அரங்குளோரை விழிகள் துருவியவாறிருக்க
அழுந்த மூடிய உள்ளங்கைகள் இறுகிப் புடைத்திருக்க
அதியாபத்து அருகேகிக்கொண்டிருப்பதான பாவந்தாங்கிய
குரல் விட்டுவிட்டு சுதி உயர்ந்தும் தாழ்ந்துமோர் அபூர்வ தொனியில்
அதிரூபசுந்தரமென்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம்
அபத்தமென்று சொல்ல 
அவருக்குத்தான் வாய் வருமா இவருக்குத்தான் மனசு வருமா
அல்லது எவருக்கும்தான் தைரியம் வருமா?
அட அப்படியே துணிச்சலாகச் சொல்பவரைப் பாராட்டலாமென்றால்
அவரோ முன்னவர் செய்ததையே வேறொரு வழியில்
ஆலாபித்துக்கொண்டிருக்கிறார்.
முடிவுறாக் கச்சேரி நடக்கும் அரங்கம் சில நேரம் நிரம்பியும்
சில நேரம் வெறுமையாகவும்.
அவ்வப்போது பாடகர்களும் பக்கவாத்தியக்காரர்களும் 
ரசிகர்களும் மாறியவாறு.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல்: நினைவில் நிற்கும் தீபாவளி நினைவுகள்! - இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து.லிங்கேஸ் -
இலக்கியம்
21 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-ஊர் களைகட்டும்.மண் வாசனை  வாயூறும். அதுவே எங்களின் அன்றைய தீபாவளி! அம்மாவை இப்பவே அன்பாக நச்சரிக்கத் தொடங்கினால்தான் நான் விரும்பியது நடக்கும்."அம்மா இந்த முறைத் தீபாவளிக்கு 

புதுசா  'ரௌச'ரும் 'சேட்டு'ம் வாங்கவேணும் எப்ப காசு தருவீங்கள்?'சேட்‘எப்பவும் வாங்கலாம்.ஆனால்,ரௌசருக்கு துணியை இப்பவே வாங்கிக் கொடுத்தால்தான் ரெயிலர் தச்சுத் தருவார் அம்மா ".

' அப்பா மத்தியானம் சாப்பாட்டுக்கு வாற நேரத்தில,அதுவும் ஈர அடுப்பில கறியை வைச்சிட்டு அவதிப்பட்டு ஓடிக்கொண்டு நான் இருக்கேக்க,இப்ப என்னால முடிவு சொல்லேலாது.கொஞ்சம் பொறு'.

" என்னம்மா,நான் என்ன கேட்டாலும்,  உங்களுக்கு எப்பவும் அவசரம்தான்!கடைசியில நான்தான் ரெயிலர் தச்சு முடிக்க மட்டும்,அங்கேயே இருந்து சண்டைபிடிச்சு,அவரும் தச்சு முடிக்க இரவாகிவிடும்.அதற்குப்பிறகு வீடுவந்து சேர இரவு பத்து மணியாகிவிடும்.இப்படித்தான் போனவருசமும் "செல்ரன்"கடத்தி,கடத்தி என்ர ரௌசர கடைசியில அவர் தைச்சு முடிக்க நல்லா இருண்டுட்டுது."

' சரிசரி.எனக்கு எல்லாம் விளங்குது.அந்த மனிசன் நல்ல பசியில வரும்.கொஞ்சம் பொறுத்துக்கொள்.அவர் வந்து போன பிறகு எல்லாருமா சாப்பிட்டிட்டு கதைப்பம்.இந்தா உனக்குப் பிடிக்குமெண்டு இப்ப வடிச்ச கஞ்சியிருக்கு.அந்தச் சிரட்டையை எடுத்து,தலைப்பாலும் பிளிஞ்சு வைச்சிருக்கிறன்.அதிலயும் கொஞ்சத்தை விட்டுக்குடி'.

மேலும் படிக்க ...

என்னைக் கவர்ந்த வானொலி ஊடகவியலாளர் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' - 'கவரிமா' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் தொடர்ச்சியாகச் CMR 101.3 FM தமிழ் வானொலி நிகழ்ச்சியைக் கேட்பவன் அல்லன். ஆனால் ,அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது கேட்பதுண்டு. குறிப்பாகச் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' நிகழ்ச்சி என்னைக் கவர்ந்த ஒன்று. வெள்ளி இரவு 11 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடக்கும் நிகழ்ச்சி. ஒரு சொல்லைப்பற்றிய பொதுவான விபரத்தைத் தந்து விட்டு , நேயர்களைக் இரண்டு கேள்வி கேட்க விடுவார்கள். நேயர்களின் கேள்விகள் மூலம் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் இறுதியாக வரும் நேயர்கள் பெரும்பாலும் விடையினை ஊகித்து  விடுவார்கள். 

இந்நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் பல தடவைகள் வேறு முக்கிய வேலை ஏதாவது குறுக்கிடும்.அதை முடித்து விட்டு வருவதற்குள் நிகழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கும். விடை எதுவாகவிருக்கும் என்று சிறிது நேரம் விடையை அறிய வேண்டிய ஆவலில் மனத்தைத் தவிக்க வைக்கும் நிகழ்ச்சி.

இச்சொல்லாடல் நிகழ்ச்சியில் பல தடவைகள்  அதிக பாவனையில் இல்லாத பழந்தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் வகையில் பல அரிய  பாவனையில் இல்லாத சொற்களைத் தேர்ந்தெடுத்திருப்பார் வானொலிக் கலைஞர் செந்தில்நாதன்.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் இராவணனும் கயிலாயமலையும்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
21 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இராவணன், குபேரனுடன் போரிட்டு இலங்கை மற்றும் அவனுடைய புட்பகவிமானத்தையும் கைப்பற்றிக் கொண்டு அந்த விமானத்தில் ஏறி வெற்றிக் களிப்புடன் பறந்து வந்து கொண்டிருந்தான். அப்போது கயிலாயமலைக்கு அருகில் வரும்போது, நந்தியம்பெருமான் இராவணனிடம் இது சிவன் வாழும்பகுதி இங்கே பறக்கக்கூடாது என்று கூறினார். கோபம் கொண்ட இராவணன் சிவன்மேல் அதிக அளவு பக்தி கொண்டவன் என்றாலும், ஆணவத்தினால் அந்தக் கயிலாயமலை தனக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று எண்ணி, அதைப் பெயர்த்தெடுக்க முயன்றான். அதை அறிந்த சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் லேசாக அழுத்த, கைகளுடன் அவன் மலையின் கீழ் மாட்டிக் கொண்டான்.தன் தவறுஉணர்ந்த இராவணன் சாமகானம் பாட, அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு சந்திரகாசம் என்ற வாளும், ஆத்மலிங்கமும் பரிசளித்தார். சிவபெருமான் இருந்த மலையைப் பெயர்க்க எண்ணியதே தவறு. அந்த முயற்சியால் அவன் பல்லாண்டு காலமாகத் துன்பப்பட்டான். இறைவனின் பெருங் கருணையால் உயிரும் வாளும், ஆத்மலிங்கமும் பெற்றான் என்றாலும், ஊருக்குள் வந்து தான் கயிலாயமலையைப் பெயர்த்தேன் அதனை மெச்சியே சிவபெருமான் வாளும், ஆத்மலிங்கமும் தந்தார் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தான்.என்ன நடந்தாலும் அதனை மறைத்து இது தான் நடந்தது என்றே சொன்னால் மக்கள் நம்புவர் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.கம்பராமாயணத்தில் இராவணனும் கயிலாயமலையும் என்பதைக் குறித்து ஆராய்வோம்.

கலித்தொகை

இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையாளுடன் கயிலையிலே வீற்றிருந்தான். அப்பொழுது 10 தலைகளை உடையவனான அரக்கர்களின் தலைவரான இராவணன் காப்புப் பொழியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான். எடுக்க முடியவில்லை மலையின் கீழ் மாட்டிக் கொண்டு வருந்தினார்.

மேலும் படிக்க ...

திருப்பரங்குன்றம் முருகத்திருத்தலம்! - முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, -

விவரங்கள்
- முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, -
ஆய்வு
21 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


முன்னுரை

திருப்பரங்குன்ற திருமுருகத் திருத்தல வரலாறும் அதன் சிறப்பும் குறித்து இக்கட்டுரை விரிவாக ஆராயவுள்ளது. இதில் சங்க இலக்கியங்களில் திருபரங்குன்ற முருகன் திருத்தல வரலாற்று ஆதாரங்கள், கல்வெட்டுகளின் வழியான ஆதாரங்கள், வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைக்கும் தொல்லியல் ஆதாரங்கள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்ற வரலாறு

திருப்பரங்குன்றம் சங்க இலக்கியங்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில், தளிமழை பொழியும் தண் பரங்குன்றில்(மதுரை.263) தண்பரங்குன்று என்று சுட்டப்படுகிறது . இக்குன்றம் முருகன் குடியிருந்த இடமாக அகநானூறு,

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து (அகம்.59)

எனும் அகப்பாடல்கள் மருதன் இளநாகனாரின் பாடல் சூரபன்மனையும் அவன் சுற்றத்தையும் தொலைத்த ஒளி பொருத்திய வேலை உடைய முருகன் தண்பரங்குன்றில் உறைவதாகவும் சந்தன மரங்கள் மிக்க அந்தக் குன்றை நல்லந்துவனார் பாடியுள்ளதாகவும் கூறகின்றது. எருக்காட்டூர் தாயங்கண்ணனாரால் பாடப்பட்டுள்ள,

பல்பொறி மஞ்சை வெல்கொடி உயரிய
ஒடியாவிழவின் நெடியோன் குன்றத்து (அகம்.149)

எனும் பாடலில் மதுரைக்கு மேற்கிலுள்ள பரங்குன்று மயில் கொடியினை உயர்த்திய நெடியோனான முருகப் பெருமானின் இடமென்றும் அங்கு விழாக்கள் நிறைந்திருந்தன என்றும் தெரிவிக்கிறது.

பரிபாடலில் இடம்பெற்றுள்ள செவ்வேளைப் பற்றிய எட்டுப் பாடல்களில் ஏழு பாடல்கள் பரங்குன்றை முருகனின் உறை விடமாகக் எடுத்துரைப்பதுடன் அவர் கோயில் மலைமேல் இருந்ததையும் அதற்கு மதுரையிலிருந்து மன்னரின் பரிவாரங்களுடன் மக்கள் வந்ததையும் மலையின்மீது இருந்த முருகக் கோயில் வளாகத்தில் காமவேள் படைக் கொட்டில் ஒத்த எழுதெழில் அம்பலம் இருந்ததை,

எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் (பரி.28)

என்று உரைக்கின்றது. மேலும், குன்றத்துக் காட்சிகளையும் (பரி. செவ்வேள் 30-39), குன்றத்தின் சிறப்பியல்புகளையும் (40-50) விரிவாகப் பேசுகின்றது. திருப்பரங்குன்றத்தில் மக்கள் நிகழ்த்திய முருக வழிபாட்டு முறைகள் ஆகியனவும் சொல்லப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. நாங்குநேரி வாசஸ்ரீ் கவிதைகள் !
  2. தீபாவளித் திருநாள் சிறப்புடை நாளே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  3. எழுத்தாளர் மற்றும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் தமிழினியை நினைவு கூர்வோம்! - வ.ந.கிரிதரன் -
  4. நெடுங்கதை - சுதந்திரபுரத்தில்.. (பகுதி 2) . - முல்லைஅமுதன் -
  5. பாஞ்சாலி சபதத்தில் வாழ்வியல் கூறுகள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை(சுழற்சி – 2) ,குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
  6. தமிழ்ச் சொற் புணர்ச்சிக் குழப்பம் பற்றி , பேராசிரியர் எம்.ஏ.நுஃமானுடன் ஓர் உரையாடல்! - வ.ந.கிரிதரன் -
  7. கையொப்பக்கோட்பாட்டுப் பார்வையில் ஆனைவிழுங்கியும் சிலபெயர்களும்! - முனைவர் சி.தேவி, உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
  8. கனடா ரொறன்ரோவில் நவராத்திரி விழா! - சுலோச்சனா அருண் -
  9. இவர்கள் மகாத்மாக்கள் - என் வாசிப்புப் பகிர்வு! - ஶ்ரீரஞ்சனி -
  10. எழுத்தாளர் விமல் பரம் எழுதிய "தீதும் நன்றும்" சிறுகதைத்தொகுப்பு மீதான ஒரு திறனாய்வு! - பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து -
  11. ரவி அல்லது (பட்டுக்கோட்டை) கவிதைகள்!
  12. தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்' - வ.ந.கிரிதரன் -
  13. சென்னையில் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா!
  14. இந்தியப் பயணத்தொடர் (4) : காஷ்மீரில் ‘பீஸ்ட்’நினைவுகள்! - நடேசன் -
பக்கம் 4 / 119
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி