டால்ஸ்டாய் பற்றிய அறிமுகங்கள் (2) - ஜோதிகுமார் -

“அடிமைகளை கொண்டிருந்தால், இசையை நீங்கள் இன்னும் மெருகூட்டி இசைக்கலாம்…”
வாதத்துக்குரிய இவ்வரிகள் டால்ஸ்டாயினுடைது.
இப்பின்னணியில், இளையராஜா முதலானோர் சிற்சில சவால்களை முன்னிறுத்த செய்யலாம். ஆனால், யதார்த்த விதிகளை ஒட்டி பயணிக்கும் டால்ஸ்டாய், விடயங்களை சற்று ஆழமாகவே அணுகுவது போல் தெரிகின்றது. இங்குதான், கார்க்கியின் தேர்வும் முக்கியத்துவம் எய்துகின்றது.
அடித்தட்டு மக்களிடையே இருந்து வந்த விஞ்ஞானிகளை போற்றி புகழ்ந்திருக்கும் கார்க்கி, தன் இறுதி நூலான ‘கிளிம்மில்’ கூட இவ்விடயத்தை தொடாமல் இல்லை. ‘கிளிம்மில்’ காணப்படும், புத்திஜீவியின் வேர்கள் வித்தியாசப்பட்டிருக்கலாம். ஆனால், வேர்களை கார்க்கி, தொட்டு விசாரிக்கும் முறைமையும், காலத்துடன் அவர் பயணிப்பதும், இதன் பயனாக வெவ்வேறு வேர்களை அவர் தொடத்துணிவதும் தர்க்கபூர்வமாகின்றது.
இதற்கு உறுதுணையாக டால்ஸ்டாயின் சிந்தனைகளும் கார்க்கிக்கு பலம் சேர்த்திருக்கலாம்.
டால்ஸ்டாய் கூறுவார்:
“இசை மனித ஆத்மாவை அடக்கி, மந்தப்படுத்தி செயலின்மையை ஊக்குவித்து, போதையை ஏற்றுகின்றது… கத்தோலிக்க திருச்சபை, யாவரையும் விட அதிகமாய், இம்முக்கிய குணாம்சத்தை உணர்ந்ததாய் உளது…”


ஜூன் 1, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் (தாவீது அடிகள்) மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். 

குரு அரவிந்தனின் தாயகக் கனவுடன், சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும், பனிச் சறுக்கல், நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம் ஆகிய நான்கு கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள் பன்முக நோக்கில் திறனாய்வுக்கு உட்படுவதாக அமைகிறது.
வேடன் என்றால் என்வென்று யோசிபீர்கள், சங்க இலக்கியத்தில் வேட்டுவன் என்ற சொல் பாவனையில் இருந்திருக்கிறது. வேடன் என்றால் வேட்டையாடுபவன் என்றும் பொருள் படலாம். நான் இங்கே சொல்ல வந்தது ‘வேடன்’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு பாடகனைப் பற்றியது. இவர் பாடல்களையும் எழுதியிருக்கின்றார். இன்று எங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் சொல்லாகவும் இந்த வேடன் சொல் இருக்கின்றது.
சங்க இலக்கியங்களில் எளிமையான மொழி நடையும், கருத்தாழம் மிகுந்த பாடல்களையும் உடைய நூல் குறுந்தொகை. அழகான சொல்லோவியங்களாக அதன் பாடல்கள் இன்றும் படித்து இன்புறத்தக்கன. குறுந்தொகையில் பரணர் பாடல்களில் நடை உத்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
கண்டி தமிழ் மன்றம் வழங்கும் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பெருமாள் சரவணகுமார் பதிப்பில் உருவான தேசபக்தன் கோ. நடேசையரின் ஒற்றன் மற்றும் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா கண்டி யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள டெவோன் ஹோட்டலில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.






ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸிலிருந்து பாரிஸ் ஈழநாடு, தமிழன் ஆகிய இரண்டு வாரப் பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டிருந்தன.


வள்ளுவர் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு சமுதாயச் சிற்பி. மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் போன்று வாழவேண்டும் என்று விரும்பினார். அவர்கள் வாழ்ந்து சிறப்படைவதற்கு அறமே சிறந்த அடிப்படை என்று கண்டார். உலகம் பல சமுதாயங்களால் ஆனது என்றாலும் ஒவ்வொரு சமுதாயம் அச்சமுதாயத்தில் உள்ள எல்லாக் குடும்பங்களும் சமுதாயத்தின் நன்மைக்கு என அமைந்த அரசாங்கமும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்குமானால் உலகில் உள்ள எல்லா சமயங்களும் பிணக்கு இன்றி, பகையின்றி அன்போடும், நட்போடும் விளங்கும் எனவும் ஒரு குலம் போல் வாழும் எனவும் உணர்ந்தார். ஆகவே, ஒவ்வொரு நாடும் அதனைச் சார்ந்த குடும்பங்களும், சமுதாயமும், அரசாங்கமும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குலத்தார் போல் வாழ்வதற்கு திட்டமிட்டார். அத்திட்டமே திருக்குறளாக விளங்குகிறது. மறுபிறப்புச் சிந்தனைகள் குறித்த செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.


’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று பாவிக அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் பாவிக அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை தண்டியலங்காரத்தின் வழி ஆராய்வோம்.
