பதிவுகள் முகப்பு

“ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்”: உலக அரசியலை புரிய வைக்கும் நூல்! - தீபச்செல்வன் -

விவரங்கள்
- தீபச்செல்வன் -
நூல் அறிமுகம்
27 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத் தமிழர்கள் தம்மை பாலஸ்தீன மக்களுக்கு ஒப்பானவர்களாக கருதிக்கொள்ளுகின்ற ஒரு நிலை இருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவானதொரு போக்கு ஈழத்தில் நெடுங்காலம் நிலவுகிறது. அதேவேளை தமக்கென்று ஒரு நாடற்ற நிலையில் இஸ்ரேலை உருவாக்கிய இஸ்ரேலியர்களிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டென்ற பார்வையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

இந்த சிக்கலான அரசியலை புரிந்துகொள்ள ஜீவநதி பதிப்பகத்தின் 351 ஆவது வெளியீடாக ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய 'ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகி உள்ளது.

உலக அரசியல் சார்ந்த விடயங்களை நாம் அதிகமும் கற்றுக்கொள்வது இன்றைய உலக அரசியலின் போக்கை புரிந்து கொள்ளவும் 'ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் உதவும் என இந்நூலின் முன்னுரையில் எழுத்தாளர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க ...

நினைவு கூர்தல்: 'தேடகம்' சிவம்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'தேடகம் சிவம்' 'நெல்லியடி சிவம்' என்றறியப்பட்ட சமூக, அரசியற் செயற்பாட்டாளர் கணேசமூர்த்தி சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் ஏப்ரில் 27.  இவரது மறைவு எதிர்பாராதது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் ஏற்படுத்திய பாதிப்புகளும் இவரது மறைவுக்கு ஒரு காரணம் என்று அறிகின்றேன்.

'தேடகம்' அமைப்பினை நிறுவியவர்களில் ஒருவர். அதன் சஞ்சிகையான 'தேடல்' சஞ்சிகையின் ஆசிரியராகவுமிருந்தவர். மாற்றுக்கருத்துகளின் அவசியத்தை நன்குணர்ந்து செயற்பட்டவர். இலங்கையில் இருந்த காலத்திலேயே சமூக, அரசியற் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.  மார்க்சியவாதியான இவர் சீனசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்டவர். தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்.

மேலும் படிக்க ...

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற  மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான சுதா குமாரசாமியைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது  1988இல் வெளியான அவரது கவிதைத்தொகுப்பான 'முடிவில் ஓர் ஆரம்பம்' பற்றிக்குறிப்பிட்டார். அவ்விதம் குறிப்பிடுகையில் 'கனடாவில் வெளியான முதலாவது கவிதைத்தொகுப்பாக இருக்குமென்று தான் நினைப்பதாக' அவர் குறிப்பிட்டிருந்தார்.

கனடாவில் வெளியான முதலாவது  தனிக்கவிதைத்தொகுப்பாக அது இருக்கக் கூடும்.  சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' தொகுப்பிலுள்ள கவிதைகளின் எண்ணிக்கை 15.   

கவிதைகளையும் உள்ளடக்கி வெளியான முதலாவது தொகுப்பென்றால் அது ஜனவரி 4, 1987இல் வெளியான எனது தொகுப்பான 'மண்ணின் குரல்' நூலே. அது கட்டுரைகள், சிறு நாவலான மண்ணின் குரல் மற்றும் கவிதைகள் உள்ளடக்கி வெளியான தொகுப்பு.  அது எனது எட்டுக் கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளது.  அவை:

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி : வவுனியா – கம்பகா மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி : வவுனியா – கம்பகா மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையுடன் புலமைப்பரிசில் உதவியை பெற்றுவரும் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு இவ்வாண்டும் வழங்கப்பட்டது.

கடந்த வாரங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாகவும், அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு , அங்கிருக்கும் மாணவர் கல்வி நிறுவகத்தின் ஊடாகவும், மலையகத்தில் - நுவரேலியா மாவட்டத்தில் மலைய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாகவும் இவ்வாண்டின் முற்பகுதிக்கான நிதியுதவிகள் இந்தப்பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வதியும் தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க ...

ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்' - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்' (The Old Man and The Sea) உலக இலக்கியத்தில் முக்கியமான நாவல். இது ஒரு விரிந்து பரந்த நாவலல்ல. சிறியதொரு நாவல். இந்நாவல் ஹெமிங்வேயிற்கு புலியட்சர் பரிசைப் பெற்றுத்தந்தது. நோபல் பரிசினையும் பெற்றுத்தந்தது. ரொபின்சன் குரூசோ, மோபி டிக் போன்று கடலுடன் சம்பந்தப்பட்ட நாவல் மட்டுமல்ல , அவற்றைபோல் மானுட இருப்பின் குறியீடாக விளங்குமொரு நாவல்.

இந்நாவலில் வரும் சண்டியாகோக் கிழவன் மறக்க முடியாத பாத்திரம். இந்நாவல் முதுமையைப்பற்றிப் பேசுகிறது. நட்பைப் பற்றிப் பேசுகிறது. பாசத்தைப் பற்றிப் பேசுகிறது. சக உயிர்களைப்பற்றிப் பேசுகிறது.  உயிர்களின் விடா முயற்சி பற்றிப் பேசுகிறது. இயற்கையைப்பற்றிப் பேசுகிறது. மானுட இருப்பு பற்றிப் பேசுகிறது. ஹெமிங்வேயின் நடை சிறப்பு மிக்கது.ம் தனித்துவமானது. வாசகர்களைக் கட்டிப்போட்டு விடுவது.

மேலும் படிக்க ...

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                     = பட்டாணிச்சுப் புளியங்குளம்  -

மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட்டுப்பகுதி ஒற்றையடிப்பாதையுடன் கூடியதொரு பகுதி. சில வீடுகள் , நெசவு சாலை, பண்ணையுடன் கூடிய இயற்கை வளம் மலிந்த பகுதி. அப்பகுதியில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. படுக்கையில் படுத்திருந்தபடி வான் பாயும் ஒலி கேட்டுக்கொண்டிருப்பேன். விடிந்ததும் ஊரவர்கள் வான் பாயும் குளத்தைப் பார்க்கச் சென்று விடுவார்கள். நானும் சென்று பார்ப்பேன். வான் பாயுமிடத்தில் இரவெல்லாம் வெங்கணாந்திப்பாம்புகள் காத்திருந்து அவ்வழியால் சென்று விடும் விரால் மீன்களைப் பிடிக்குமாம் என்பார்கள். ஊரவர்கள் சிலரும் விரால்களைப் பிடிப்பார்கள். என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த குளம் பட்டாணிச்சுப்புளியங்குளம். இக்குளம் நிறைந்து வான் பாயும் காட்சியும் அத்தகையதே.

சிலப்பதிகாரத்தில் வரும் 'உழவரோதை மதகோதை உடைநீரோதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்தார்ப்ப' என்னும் வரிகளைக் கேட்கும் ,நினைக்கும் சமயங்களிலெல்லாம் கூடவே வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளமும் நினைவுக்கு வந்துவிடும்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் ஸ்ரீபதியின் 'பறவையாடிப் பழகு' - சிறுகதையில் பெண் நிலைப்பாடு - முனைவர். கு. செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர்கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- முனைவர். கு. செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர்கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
24 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச்சுருக்கம்

ஒரு சமூகமுன்னேற்றத்தின் வழிகாட்டியாக விளங்குவது பெண்நிலைப்பாடாகும். பொறுமையின் அடையாளமாகத் திகழும் பெண்கள். அமைதியான குணத்துடன், உணர்ச்சிகரமான சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல் மற்றும் கடினமான சூழ்நிலையை நம்பிக்கையுடன் கையாளும் திறன் போன்ற தன்மைகளை இயல்பாகப் பெற்றிருப்பதால் பெண்மையைப் போற்றுகின்றோம். அதோடு இல்லறம் நடத்துவதற்கு ஏற்றவளாகப் பெண்ணை உருவாக்கி வருகின்றோம். பலபாத்திரங்களாகப் பரிமாணிக்கும் பெண்ணினத்தை மதிப்புடன் பேணுவது நம் தலையாய கடமையாகும்.

முன்னுரை

மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்பார் கவிமணி. இந்த உலகில் கருவைத் தாங்கி, கல்லறை வரை உறவோடு உறவைப் பின்னிப்பிணைத்து இயக்கும் ஆற்றல் பெண்மைக்கு உரியதாகும். பஞ்சபூதங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தால்கூட, நற்சமூகத்தை வழிநடத்தும் சக்தி பெண் தான். அவளின் சாதனை அளப்பரியது. இத்தகு புனிதத்தன்மை வாய்ந்த பெண்ணின் நிலையை, “பறவையாடிப்பழகு” என்ற ஸ்ரீபதியின் சிறுகதை வழி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் படிக்க ...

ஈழமங்கை மு.நவகீதாவின் 'பேரிகை'' பற்றி... - அகணி சுரேஸ், கனடா -

விவரங்கள்
- அகணி சுரேஸ், கனடா -
நூல் அறிமுகம்
24 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உலக நூல் நாளில் ஒரு நூலினைப் படித்திட வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற ஏதுவாக அமைந்தது 'பேரிகை' என்ற நூல்.  ஈழமங்கை மு.நவகீதா இன் முதலாவது படைப்பாக 'பேரிகை' என்ற நூல் ஏப்ரல் 20, 2024 சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய 'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அன்றைய நாளில் வெளியிடப்பட்ட 15 நூல்களில் இந்த நூலும் இடம்பெற்றது. ஈழப் பெண்களின் வரலாற்றுப் பதிவாக உருவான சின்னஞ் சிறிய நூலாக 'பேரிகை' என்ற நூல் இருந்தது.  வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளராக, மேடை நிகழ்ச்சிகளில் சிறப்பாக நெறியாளுகை செய்பவராக மட்டுமே அறிமுகமான நவகீதா இப்பொழுது நூலாசிரியராக அறிமுகமாயுள்ளார்.  நூலில் காணப்படும் 'என்னுரை' மூலம் அவரது கல்விப் பின்புலம், தாய்மண்ணுடன் ஒன்றிய அவரின் மனவுணர்வு பற்றியெல்லாம் அறியும் வாய்ப்பையும் பேரிகை என்ற நூல் அறியத்தந்தது.

சிலநாட்களுக்குள் உருவாகிய நூலாக இருந்தாலும், அளவில் சிறிய நூலாக இருந்தாலும் சிறப்பான நூலாக நூலாசிரியர் எழுதியுள்ளார். வீரமிகு ஈழமங்கைகள் சிலரின் விபரங்களை அழகான, எளிமையான நடையில் தேடலுடன், நுண்ணிய பார்வையும் மேலிடத் தந்துள்ளார் நவகீதா.

நாங்கள் அனைவரும் அரிய பணிகளைச் செய்தால் புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாம் என்ற செய்தியை 'பேரிகை' சுட்டி நிற்கிறது.

மேலும் படிக்க ...

மறக்க முடியாத ஆளுமையாளர் சத்தியமூர்த்தி மாஸ்டர். - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                         - சத்தியமூர்த்தி மாஸ்டர். -

அராலி வடக்கில் வசித்த காலத்தில் எம் குடும்பத்துடன் நன்கு பழகியவர்களில் ஒருவர்.  ஆசிரியையான அம்மா மீது மிகுந்த மதிப்பையும், அன்பையும் வைத்திருந்தவர் இவர்.

ஆரம்பத்தில் கட்டுப்பெத்த தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் கற்றவர். அதன் பின் அமெரிக்கா சென்று பட்டப்படிப்பை முடித்தவர். இவ்விதமே நான் அறிந்திருக்கின்றேன். ஊர் திரும்பியவர் ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்று அதனையே தன் வாழ்க்கைத்தொழிலாகத் தொடர்ந்தார். சக மானுடர் மீது பேரன்பு கொண்டவர். அனைவரினதும் அன்பினையும் பெற்றவர்.

எனக்கு இவரைப்பற்றி நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது 1977 ஆம் ஆண்டின் நவம்பர் 30. அன்று ஶ்ரீதர் திரையரங்கில் நண்பர்களுடன்  'தாயைக் காத்த தனயன்' திரைப்படத்தை 'மாட்னி ஷோ'வாகப் பார்த்து மாலை வீடு திரும்பபோது இவர் எனக்காகக் காத்திருந்தார். நான் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது வந்த என்னை அரவணைத்தவாறு வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவ்விதம் செல்கையில் நான் அதிர்ச்சியடையாத  வகையில் என் அப்பா இறந்த செய்தியினைத் தெரிவித்து என்னை ஆறுதல் படுத்தினார்.

மேலும் படிக்க ...

வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் சர்வதேச புத்தக நாள் ! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்கினேஸ்வரா -
இலக்கியம்
23 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Modern Book Printing“, fourth sculpture (from six) of the Berliner Walk of Ideas on the occasion of 2006 FIFA World Cup Germany. Unveiling: 21 April 2006 at Bebelplatz between Staatsoper Unter den Linden and Alte Bibliothek

துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்பார் மார்ட்டின் லூதர்கிங். புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின், புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் என்பார் எங்கள் பாரதிதாசன்.

சர்வதேச புத்தக நாளை கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் (Catalonia) உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

சர்வதேச புத்தக நாள் (World Book Day ) என்பது வாசிப்பு, பதிப்பு, எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதற்கான தினமாகும். துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்பார் மார்ட்டின் லூதர்கிங்.

மேலும் படிக்க ...

மருதூர்க்கொத்தன் நினைவுகள்! ஏப்ரில் 19 அவரது நினைவு தினம் ! கண்டியில் இம்மாதம் நினைவுகளின் தேரோட்டம் நூல் வெளியீடு! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
23 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

                  - எழுத்தாளர் மருதூர்க்கொத்தன் -

பல படைப்பாளிகள் தமது இலக்கியப்பிரதிகளை எழுதும்பொழுது இயற்பெயரை விடுத்து புனைபெயர்களில் அறிமுகமாவார்கள். பலர் தமது பிறந்த ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தமக்குத்தாமே ஊருடன் இணைந்த புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள். பின்னாளில் அவர்களின் இயற்பெயரை பிறப்புச்சான்றிதழ் - பதிவுத்திருமண சான்றிதழ் - மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும். இலக்கிய வட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் புனைபெயரே நிலைத்துவிடும்.

கிழக்கு மாகாணத்தில் இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு எழுத்தாளர் இருந்தார் எனச்சொன்னால் எவருக்கும் தெரியாது. மருதூர்க்கொத்தனையா சொல்கிறீர்கள் என்று அவருக்கு மிகவும் நெருக்கமான சிலரே குறிப்பிடுவார்கள்.

கிழக்கு மாகாணத்தில் கல்முனைக்கு அருகாமையில் பெரிய நகரமும் அல்லாமல் சிறிய கிராமமாகவும் காட்சியளிக்காத கடலோர சிற்றூர் மருதமுனை. இந்த ஊரில் மருதூர் ஏ. மஜீத் - மருதூர்க்கனி - மருதூர் வாணன் என்ற பெயர்களில் எழுதியவர்களின் வரிசையில் முன்னோடியாக இருந்தவர் மருதூர்க்கொத்தன்.

1935 ஜூன் மாதம் 6 ஆம் திகதி அநுராதபுரத்தில் பிறந்த இஸ்மாயில் என்ற மருதூர்க்கொத்தன் ( இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் 89 ஆவது வயதை குடும்பத்தினருடனும் இலக்கிய நண்பர்களுடனும் கொண்டாடியிருப்பார். ) 2004 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 19 ஆம் திகதி மறைந்தார்.

மேலும் படிக்க ...

உலகப் புத்தக நாள் - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று, ஏப்ரில் 23,  உலகப்புத்தக நாள்.  என்னைப்பொறுத்தவரையில் வாசிப்பு என்பது என் மூச்சு போன்றது.  எனக்கு வாசிக்கத்தொடங்கியதிலிருந்து  ஒவ்வொரு நாளுமே புத்தகநாள்தான். எண்ணிப்பார்க்கின்றேன். வாசிப்பும், யோசிப்பும் அற்று ஒரு  நாள் கூடக் கழிந்ததில்லை.

ஆனால் வாசிப்புக்காக ஒரு நாளை ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரும்பாலானவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் , புரியாமல் வாழ்கின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்த இது போன்ற நாளொன்று அவசியமானது.

மானுடர்கள் வாசிப்பின் அவசியத்தை உணரவேண்டும்.  வாசிப்பு எத்தகையாதகவுமிருக்கலாம், ஆனால் அது தேவையான ஒன்று. புனைவாகவிருக்கலாம், அபுனைவாகவிருக்கலாம், கவிதையாகவிருக்கலாம் , இவ்விதம் எத்துறை சார்ந்ததாகவுமிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இன்று (ஏப்ரில் 22)  பிறந்தநாள்.  இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள். இலங்கைத் தமிழ்  இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர். சிறுகதை, கவிதை,நாவல் என இவரது இலக்கியப் பங்களிப்பு இருந்தாலும், முக்கியமான பங்களிப்பு இவரது சிறுகதைகளே என்பேன். இவரது சிறுகதைகள் பல தொகுப்புகளாக (மாற்றம் (1980), உலா (1992), சட்டநாதன் கதைகள் (1995), புதியவர்கள்- (2006),  முக்கூடல் - (2010), பொழிவு - (2016), தஞ்சம் (2018)) வெளியாகியுள்ளன.

இவரது கதைகளைப்பற்றி அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் ஏ.ஜே.கனகரத்தினா 'மென்மையான உணர்வுகளை கலை நயத்தோடும் மனித நேயத்தோடும் வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெறுவதால், ஈழத்துச் சிறுகதை உலகில் சட்டநாதன் தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார்' என்று கூறுவார்.

மேலும் படிக்க ...

தேவகாந்தனின் 'சகுனியின் சிரம்', 'இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியம்' நூல்களின் வெளியீடு!

விவரங்கள்
- தேவகாந்தன் -
நிகழ்வுகள்
21 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியவெளியின் “சட்டநாதன் புனைவுகள் : உரையாடல்” - இலக்கியவெளி -

விவரங்கள்
- இலக்கியவெளி -
நிகழ்வுகள்
21 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் ரொரன்றோ'வில் அவரது புனைவுகள் பற்றி இலக்கியவெளி நடாத்திய மெய்நிகர்க் கருத்தரங்கக் காணொளியை இத்தருணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். இவர்  யாழ் வேலணையில் பிறந்த இவர்  பூரணி காலாடிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஆசிரியராகவிருந்து ஓய்வு பெற்றவர்.  இலங்கை அரசின் சாகித்திய  மண்டல விருதினைத்தனது உலா சிறுகதைத் தொகுப்புக்காகப் பெற்றவர். இவரது நூல்கள் நூலகத்தளத்திலுள்ளன. அவற்றை வாசிப்பதற்கான  இணைப்பு.

மேலும் படிக்க ...

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
19 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது.  'சீர்மேவும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'சக்கரவர்த்தித் திருமகள்'.   ப.நீலகண்டனின் இயக்கத்தில் , ஜி.ராமநாதனின் இசையில், வெளியான  இப்பாடலை சீர்காழி கோவிந்தராஜன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பாடியிருப்பார்கள. இப்பாடலை எழுதியிருப்பவர் ஒரு நடிகர். இவர் அக்காலகட்டத்தில் பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார். 'கிளவுன் சுந்தரம்' (‘Clown’ M. S. Sundaram) என்றறியப்பட்டவர். இவரது புகைப்படங்கள் வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...

சிறுகதை : தப்பிப்பிழை ! - கடல்புத்திரனஂ -

விவரங்கள்
- கடல்புத்திரனஂ -
சிறுகதை
19 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"  எந்த​ நேரமும் கை கட்டப்பட்ட​ நிலையில் கிடப்பது போனஂற நிலையில் நாம் கிடக்கிறோம் . நம் பிறந்த​ மண் , தாய் மண் , தாய் நாடு , ஆனால் , அதிகாரம் பண்ண​ அனஂனியரான நபர்களே  எப்பவும் வருக்கிறார்கள் .  தாங்கள் வைச்சதே சட்டம் போல​ திரிகிறார்கள் . அதிகாரம்பண்ணுகிறார்கள் .  ,பாலஸ்தீனத்தில் ,  இஸ்ரேலியர்  ஆள்கிற கட்டளை முறை போனஂற ஆட்சியில் அகப்பட்டு இருக்கிறோம் .  " எனஂறு வேலவ​னஂ சொல்லிக் கொண்டு போக​ ," நில்லு , நில்லு  எனஂன  புதுக்கதை விடுகிறாய் ?"எனஂறு உருத்திரனஂ விளங்காமல்  கேட்டானஂ. இயக்கத்திறஂகு முதலே   , புதிய​ சந்தையில் இவனஂ தேனீர் குடிக்கச்செல்கிற கடைக்கு  .உருத்திரனும்  , நல்லவனும் ​ வாரவயள் .  அனஂறு பழக்கமாகிய​  நட்பு .   இவனுக்கே புலப்படாத​ ஒனஂறு தானஂ . வீரகேசரியில் லெபனானஂ பறஂறி எரிகிறது , அகதிகள் எம்மைப் போல​ பெருமளவில் சா...எனஂற செய்தியால் வீட்டிலே இருந்த அண்மையில் கிடைத்த  எஸ் . ராமகிருஸ்ணனஂ எழுதிய​ "நீதிக்குப் போராடும் பாலஸ்தீன மக்கள்" எனஂற சிறிய​  புத்தகத்தை  எடுத்து. ​ உயிரியல் படித்தவனில்லையா ,  அறிவதறஂகு    அட்டவணைப் படுத்தி விபரங்களை பறஂறிய குறிப்புகளை எடுத்த​ போதே இலங்கையிலும் கூட​  நிலவுவது ...அந்த  மாதிரியான  ஆட்சி முறை எனஂறு புரிந்தது. அரசியலில் பொது ,  நுண் நோக்குகள் என இருப்பது அதறஂகுப் பிறகே​ தோனஂறியது .   இதை அனஂறு ,  முல்லை பேசுற போது ..எனஂன பேசுகிறார்கள் என  சரிவரப் புரியவில்லை . இவர்கள் பாலஸ்தீனர்பிரச்சனைப் பறஂறித் தானஂ பேசியிருக்கிறார்கள் எனஂபது புரிகிறது  ​.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 37 : “நூல்களைப் பேசுவோம்”

விவரங்கள்
- தகவல்-அகில் -
நிகழ்வுகள்
19 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 |Passcode: 12345

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - “வைணவத் தமிழிலக்கியம்”

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் -
நிகழ்வுகள்
19 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

கனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
18 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை சித்திரை மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடா, மார்க்கத்தில் அமைந்துள்ள கலைக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சலங்கைப்பூசை என்று சொல்வதைவிட, எமது இளைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வாகவே இது இருந்தது.  “வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்பதற் கிணங்க  அகவை எட்டு நிரம்பிய அதிசா தனது மூன்று வயதில் இருந்து கலைக்கோவில் நடன ஆசிரியை நாட்டியக் கலாநிதி ஸ்ரீமதி வனிதா குகேந்திரனிடம் நடனத்தைச் சாத்திர முறைப்படி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

ரொறன்ரோவில் நூல்களின் சங்கமம் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
18 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை ‘நூல்களின் சங்கமம்’ என்ற புத்தகக் கண்காட்சி ஒன்று 635 மிடில்பீல்ட் வீதியில் உள்ள கனடா இந்து ஐயப்பன் ஆலய அரங்கில் நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வில் கட்டணம் எதுவுமின்றி இலவசமாகப் பார்வையாளர்கள் கலந்து கொள்ளமுடியும்.

காலை 10 மணிக்குத் தொடங்கி மலை 5 மணிவரையும் இந்தக் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. உங்களுக்கு வசதியான நேரம் நீங்கள் வந்து பார்வையிடவோ, நூல்களை வாங்கிச் செல்லவோ முடியும். கனடாவில் உள்ள சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் படைப்புக்களைக் காட்சிப் படுத்தவும், விற்பனை செய்யவும்  முன்வந்திருக்கிறார்கள். இதுவரை கனடாவில் உள்ள பிரபலமான 32 நூலாசிரியர்கள் தங்கள் நூல்களைக் காட்சிப்படுத்த முன்வந்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
17 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஐந்து:   இருப்பின்  புதிரொன்றும் , நங்கையுடனான சந்திப்பும்!

"நான் மாதவன். யுனிட் 203இல் வசிப்பவன்.  போஸ்ட்மன் தவறுதலாக உங்களுக்குரிய கடிதத்தை என் தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்று விட்டார். உள்ளே ஏதோ ஒருவிதமான அட்டை  , கடன் அட்டை அல்லது  வங்கி அட்டையாகவிருக்கலாம், இருப்பதுபோல் தெரிகிறது.  அதனால்தான் அதனைக்க் கொடுப்பதற்காக இங்கு வந்தேன்" இவ்விதம் ஆங்கிலத்தில் கூறினான் மாதவன். அத்துடன் கடிதத்தையும் அவளிடம் கொடுத்தான்.

அதற்கு அவள் பதிலாக , ஆங்கிலத்தில் "ஓ. மிகவும் நன்றி. இவ்விதம் நேரமெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதனை மிகவும் மதிக்கின்றேன். இன்னுமொன்று .. நீங்கள் கேரளக்காரரா? உங்கள் பெயர் அங்கு பிரசித்தமானது. அதிகமாகப் பாவிக்கப்படும் பெயர்களில் ஒன்று" என்று கேள்வியுடன் பதிலளித்தாள்.

"நான் கேரளக்காரன் அல்ல. தமிழ்நாட்டுக்காரனும் அல்ல. ஶ்ரீலங்கன். நீங்களும் ஶ்ரீலங்காவா" என்றான் மாதவன்.

இதற்கு அவள் இலேசாக முறுவலித்தபடியே "இல்லை, நான் தமிழ்நாட்டுக்காரி. தஞ்சாவூர்க்காரி. ஆனால் அம்மா ஶ்ரீலங்காக்காரி" என்றாள்.

இதைக்கேட்டதும் அவன் பதிலுக்கு முறுவலித்தபடி ' அப்போ நீங்கள் தமிழச்சி. உங்களுடன் தமிழிலேயே கதைக்கலாம்."

இதற்குப் பதிலாக "தாராளமாக' என்றவள் " தொடர்ந்து  "உள்ளே வாருங்கள். ஒரு கப் தேநீர் அருந்தலாம்"  என்றாள்.

பதிலுக்கு நன்றி கூறியபடி அவள் அவளது அபார்ட்மென்டினுள் நுழைந்தான்.  அது ஒரு படுக்கை அறையைக் கொண்ட அப்பார்ட்மென்ட். அவனுடையதை விடச் சிறிது பெரிதாகவிருந்தது. லிவிங்ரூமில் அவள் ஹோம் ஒபிஸ் உருவாக்கியிருந்தாள். வீட்டிலிருந்து வேலை செய்பவள் போலும்.

அவனை லிவிங் ரூமிலிருந்த சோபாவில் அமரக்கூறிவிட்டு, தேநீர் தயாரிக்கச் சென்றாள் பானுமதி.

"உங்களுக்கு எப்படி தேநீர் தேவை. சுகர் , மில்க் எப்படியிருக்க வேணும்" என்று  சமையலறையிலிருந்து  கேட்டாள்.

" எனக்கு 'டபுள் டபுள்' " என்றான்.

சிறிது நேரத்திலேயே தேநீருடன் வந்தாள்.  அவனுக்கும், தனக்குமாகத்  தயாரித்துக்கொண்டு வந்திருந்தாள். தேநீரை அருந்தியபடியே உரையாடலும் தொடர்ந்தது.

"நீங்கள் இங்கு  ஸ்டுடெண்டாக வந்தனீங்களா?"

"ஆமாம். மூன்று வருடக் காலேஜ் படிப்புக்காக வந்தேன். படிப்பு முடிந்து நிரந்தர் வசிப்பிட உரிமைக்கு விண்ணப்பித்து, இப்பொழுது வேலை பார்க்கிறேன்."

"ஏந்த ஃபீல்டிலை வேலை செய்கிறீர்கள்?"

"ஐடியிலைதான் வேலை பார்க்கிறேன்.  'வெப் ஹொஸ்டிங்' கம்பனியொன்றில் டெக்னிகல் சப்போர்ட், வெப் அட்மின் ஆக வேலை பார்க்கிறேன். ரிமோட் வேலைதான்."

அப்பொழுதுதான் அவன் அவளது மேசைக்கருகிலிருந்த் புக் ஷெல்ஃபைக் கவனித்தான்.  வானியற்பியல், கலை, இலக்கியம் பற்றிய ஆங்கில , தமிழ் நூல்கள் பல அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அவதானித்தபோது ஆச்சரிய உணர்வுகள் அவன் முகத்தில் படர்ந்தன.

மேலும் படிக்க ...

நியூசிலாந்து ஊடகத்திற்கு எழுத்தாளர் முருகபூபதி வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: நியூசிலாந்திலிருந்து எழுத்தாளர் சிற்சபேசன்

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
16 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேர்காணல்: "கருத்து முரண்பாடுகள், ஒருவரின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடலாகாது நியூசிலாந்து 'நியூசிலாந்து தமிழ் மையம்' ஊடகத்திற்கு   எழுத்தாளர்  முருகபூபதி வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்:    நியூசிலாந்திலிருந்து  எழுத்தாளர் சிற்சபேசன்

https://youtu.be/QmZYXkR17e8?si=b0UR1Ua6QE38ZQ33

பேர்த் மாநகரில் நூல் வெளியீடு! - ஐங்கரன் விக்னேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்னேஸ்வரா -
நிகழ்வுகள்
16 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* படத்தை இரு தடவைகள் அழுத்தித் தெளிவாகப் பார்க்கவும்.

மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் (Perth) மாநகரில் கலாசூரி இ.சிவகுருநாதனின் ஊடக பணியை கௌரவிக்கும் முகமாக ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூல் வெளியிடப்படவுள்ளது.

தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ. சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி சனிக்கிழமை மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் மாநகரில்
நடைபெறவுள்ளது.

தினகரன் பத்திரிகையில் நீண்ட காலம் பிரதம ஆசிரியராக பணியாற்றிய, கலாசூரி இ.சிவகுருநாதன் மிக இலகுவான மொழியில் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் கருத்துக்களை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. அவரின் நினைவாக இந்நூல் வெளியீடு, ஹில்வியூ இன்டர்கல்ச்சுரல் கம்யூனிட்டி சென்டர் மண்டபத்தில், 01/06/2024 மாலை 3.30 முதல் 5.30 வரை நடைபெறும். 1 ஹில் வியூ பிளேஸ், பென்ட்லி, மேற்கு அவுஸ்திரேலியா. (Hillview Intercultural Community Centre, 1 Hill View Place, Bentley, Western Australia) எனும் முகவரியில் நடைபெறும்.

மேலும் படிக்க ...

நூல் மதிப்பீடு: முருகபூபதியின் 'இலங்கையில் பாரதி' - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நூல் அறிமுகம்
16 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எமது அண்டை நாடான பாரத தேசத்தில் பிறந்த மூவர் நமது இலங்கையில் தங்களது சிந்தனைகள் , செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள். அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர். அவர் இலங்கைக்கு வந்தாரோ, இல்லையோ, அவரது உபதேசங்கள் இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன், அவரது அரசியல் கருத்து போராட்ட வழி முறைகள் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியது.

உண்ணாவிரதம், அகிம்சை வழி, கடையடைப்பு என இங்கும் தமிழர், சிங்களவர் என இரு இனத்தவரும் அத்தகைய போராட்ட வடிவங்களை முன்னெடுத்தார்கள். ஆனால், இலங்கைக்கு வராதபோதிலும் பட்டி தொட்டி எங்கும் தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படுபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

மற்றைய இருவரிலும் பார்க்க, இவர் ஒரு விடயத்தால் முக்கியத்துவமாகிறார்.

கௌதம புத்தரை இலங்கை, கடந்த 75 வருடங்களாகத் தேர்தல் அரசியல் சரக்காக மாற்றியதுடன், இனக்கலவரம் , போர் என மூலப்பொருளாகப் பாவித்து பெரும்பான்மையான சிங்கள அரசியல்வாதிகள், அவரது கீர்த்தியை அபகீர்த்தியுடைய வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

அதேபோன்று தமிழ் அரசியல்வாதிகள் காந்தியின் கொள்கைகளை தங்களது சுயநலவாத அரசியலுக்குப் பாவித்தார்கள். போதாக்குறைக்கு ஆயுதத்தில் நம்பிக்கை வைத்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்சென்னையில் உண்ணாவிரதமுமிருந்தார். அவரது தளபதியான திலீபன் இந்திய அமைதிப்படைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இவற்றை மன்னிக்க முடியும். ஆனால், வன்னியில் அவர்களின் சித்திரவதை முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவருக்கு காந்தி என்ற பெயரை வைத்திருந்தார்கள்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. நூல் அறிமுகம்: அருந்ததி ராயின் ‘பெருமகிழ்வின் பேரவை’ நாவல் குறித்து… - தேவகாந்தன் -
  2. தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (4) - வ.ந.கிரிதரன்-
  3. எழுத்தாளர்களின் ஓவியங்கள் கண்காட்சி - சுப்ரபாரதிமணியன் -
  4. கனடாவில் சூரியனைத் தேடிய பயணம் - குரு அரவிந்தன் -
  5. சித்திரைத் திருநாள் சிறப்பாக மலர்கிறதே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  6. விக்கிமூலத்தில் (Wikisource) ஐங்குறுநூற்றுத் தரவு மேம்பாடு! - முனைவர் ம. மைதிலி & முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
  7. தேவகாந்தனின் கனவுச்சிறை : அறிமுக உரை! - அருண்மொழிவர்மன் -
  8. தேவிபாரதியின் நிலமொழியில் இயன்ற ‘நீர்வழிப்படூஉம்’ நாவல் - தேவகாந்தன் -
  9. நான் சந்தித்த ஆளுமைகள் : பேராசிரியர் ஆஷ்லி ஹல்பே (Ashley Halpe) & பிரிஜட் ஹல்பே (Bridget Halpe) (பகுதி இரண்டு) - ஜோதிகுமார் -
  10. ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், எதிர்வரும் வெள்ளி 12 April இரவு 8:45 மணிதொடக்கம் சூடான இலக்கியக் களம்.
  11. பேரின்பப் பெருநாள் வாழ்த்து! - செ. சுதர்சன் -
  12. நான் சந்தித்த ஆளுமைகள் : பேராசிரியர் ஆஷ்லி ஹல்பே (Ashley Halpe) & பிரிஜட் ஹல்பே (Bridget Halpe) (பகுதி ஒன்று) - ஜோதிகுமார் -
  13. பாரிஸ் மாநகரில் நடைபெற்ற 51 -வது இலக்கியச் சந்திப்பு..! - அசலை -
  14. லண்டனில் ‘சாஸ்வதம்’ பரதநாட்டிய நிகழ்வு! - நவஜோதி ஜோகரட்னம் , லண்டன். -
பக்கம் 50 / 129
  • முதல்
  • முந்தைய
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • அடுத்த
  • கடைசி