இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா‘பெண்ணியம்.இலக்கியம்,ஊடகம்,சமூகம்’என்ற தலையங்கத்தில் காந்தி கிராமமப் பல்கலைத் துறைத் தமிழ்த் துறையினர் ஐந்து நாட்களுக்கு நடத்தும் இணையவழி சிறப்புத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் என்னைக் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்ட முனைவர் இரா பிரேமா அவர்களுக்கு நன்றி. அத்துடன் அறிமுக உரைதந்த போராசிரியர்.திரு பா ஆனந்தகுமார்,தமிழ்,இந்தியமொழிகள் அன்ட் கிராமியக்கலை புலம்.அவர்கட்கும்,நன்றியுரை சொல்லவிருக்கும் முனைவர்.மீ சுதா அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களான போராசிரியர்.வீ.நிர்மலராணி அவர்களுக்கும், இணையவழி ஒருங்கிணைப்பு செய்யும் உதவிப் பேராசிரியர் திரு சி.சிதம்பரம் அவர்களுக்கும் மற்றைய பேராசிரியர்கள்,பங்கெடுக்கும் ஆய்வாளர்கள், மாணவர்கள், யாவருக்கும் எனது மனமார்ந்த காலைவணக்கம்.

ஒரு நாட்டின் பெருமையும்,கலாச்சார மகிமையும் அந்த நாட்டில் பெண்களின் வாழ்க்கைநிலையும்,அவர்கள் வாழும் சமுதாயத்தில் அவர்களின் ஈடுபாடும்;சமுதாய மேம்பாட்டின் அவர்களின் பங்கும் எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. நான் நீண்டகாலமாப் புலம் பெயர்ந்து வாழுபவள். ஒரு தமிழ் எழுத்தாளர். பலர் தங்களை அடையாளப் படுத்துவதுபோல் நான் என்னை ஒரு பெண்ணிய பிரசார எழுத்தார் என்று அடையாளப் படுத்திக் கொள்வதில்லை. நான் ஒரு மனித உரிமைவாதி.; பல காரணங்களால் பல சமூகங்களில் ஒடுக்கப்பட்டவர்களாக வாழும் பெண்களைப் பற்றி. நிறைய எழுதியிருக்கிறேன். பெண்ணியத் தத்துவங்களும் கோட்பாடுகளும்; பல தரப்பட்டவை. அவை யாரால் எந்தக் குழுவால் முன்னெடுக்கப் படுகிறது என்பதைப் பொறுத்து அந்தக் கருத்தை ஆய்வு செய்யலாம். அவை,அந்தப் பெண்களி வாழும் சமூவாயத்தின்,சமயக் கட்டுப்பாடுகள், பாரம்பரிய நம்பிக்கைகளினதும்,கலாச்சாரக் கோட்பாடுகளின் தொடர்பாகும்.அவை,சிவேளைகளில் அந்தச் சமூகம் முகம ;கொடுக்கும் தவிர்க்கமுடியாத காணங்களால் மாற்றமடையலாம். அதாவது அரசியல் நிலை காரணமாகப் புலம் பெயர்தல்.தொழில் வளர்ச்சியின் நிமித்தம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்,காலனித்துவ ஆளமையின் அதிகாரம்,என்பன சில காரணங்களாகும்.

பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் உள்ள பெண்ணியக் கண்ணோட்டங்களும் கருத்துக்களும் ,இன்று பெரு வளர்ச்சியடைந்து கொண்டுவரும் நாடுகளில் பேசப்படும் பெண்ணியக் கருத்துகளும் வித்தியாசமானவை . அதற்குக் காரணம் இரு தளங்களும்; வெவ்வேறு சரித்திரப் பின்னணி, கலாச்சாரம், பாரம்பரியம்,பொருளாதார கல்வி நிலவரம் என்பனவற்றில் வித்தியாசமானவை. இவ்விடயங்களங் பற்றி மிக நீண்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இன்று எனது எழுத்துக்கள் பற்றி என்னைப் பேச அழைத்ததால் எனது எழுத்துக்களில் மட்டும் தொனிக்கும் மனித உரிமைகளின அடிப்படையிலான பெண்ணியக் கருத்துக்கள்பற்றி எனது கதைகளுடன் சார்ந்து அவ்வப்போது சொல்ல நேரிடலாம்.

நான் இங்கிலாந்து சென்ற சமயம் மேற்கு பெண்ணியப் போராட்டங்களின் மூன்றாம் அலையின் தொடக்கம் இங்கிலாந்தின் பல மட்டங்களில் விரிந்து கொண்டிருந்தது. முதலாவது அலை,அமெரிக்க சுதந்திரப் போராட்டம்,பிரான்சில் ஏற்பட்ட புரட்சி,என்பவற்றில் பெண்களின் பங்கு,அத்துடன், 19ம் நூற்றாண்டில் கடைசியில் பெண்களின் வாக்குரிமைப் போராட்;டத்துடன் ஆம்பித்து,அதன்பின் 1940ம் ஆண்டுகள் கால கடடத்தில் பெண்களின் தனித்துவ அடையாளத்திற்கான போராட்டமாக மாறிக் கொண்டிருந்தது.1949ம் ஆண்டு பிரான்சிய பெணபுத்திஜீவி சிமோன் டி பூவா எழுதிய ‘ செக்கண்ட செக்ஸ்’ என்ற புத்தகம் புதியதொரு பெண்ணியம் சார்ந்த விழிப்புணர்iயுண்டாக்கியிருந்தது. அத்துடன் அந்த அலையில்’காலனித்துவ ஆளுமைக்கெதிரான’ குரல்கள் ஒலித்தன.

60ம் ஆண்டுகளில் தொடர்ந்த வியட்நாம் போர் மனித உரிமை சார்ந்த பெரியதொரு அரசியல் விழிப்பை அமெரிக்கா தொடக்கம் தென்கிழக்காசியா வரையுண்டாக்கியிருந்தது. ஐம்பதாம் ஆண்டு நடுப்பகுதிகள் தொடக்கம் அமெரிக்காவில்’ கறுப்பு மக்களால்’ சிவில் றைட’; போராட்டங்கள் தொடர்ந்தன. 60ம் 70ம் ஆண்டு கால கட்டத்தில் பெண்ணியக் கண்ணோட்டம் பற்றிப் பல விதமான விழிப்புணர்வுகளும்,விவாதங்களும் பல பிரிவுகளும் உண்டாகின.

நான் லண்டன் சென்றபோது பெண்ணியம் மட்டுமன்றி உலக அரசியல்,பற்றிய ஒரு புதியபார்வை மேலெழுந்து கொண்டிருந்தது. அத்துடன், முதலாளிகளால், பெண்கள் அழகுப்போட்டி,அழகை மேம்படுத்தும் விளம்பரங்கள் போன்ற புதிய முதலீடுகளால் பெண் உடல் ஒரு வியாபாரப் பொருளாக மாறுவதை எதிர்த்த பல புத்திஜீவிகள் போராட்டத்தில் குதித்துக் கொண்டிருந்தனர்.

சமூக மாற்றங்கள் பற்றிய எனது கண்ணோட்டம் அக்காலத்தில் எனது கிராமம் படிப்பு,உத்தியோக அனுபங்களுடன் ஆரம்பிக்கத் தொடங்கியிருந்தது.

இங்கிலாந்துக்குச் செல்ல முன் எனது இளமைக்கால எழுத்துக்கள் பெண்களின் நிலை பற்றி மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த மக்களினதும் சமத்துவத்தை மேன்படுத்தும் கருத்துக்களை முன்னெடுப்பவைகளாகவிருந்தன. அதாவது,எனது எழுத்துக்களில் ஒலிக்கும் பெண்ணியம்; என்பது ஒடுக்கப் பட்ட ஒரு பெண் தன்னையும் விடுவித்து,தன்னைப்போல் ஒடுக்கப்பட்டமற்றவர்களின் விடுதலைக்கும் போராடுவதாகும் என்ற தத்துவத்தைக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கையும் தனித்துவமான சிந்தனைத் தெளிவும் இன்றியமையாதவை. அவற்றிற்கு அவர்களின் குடும்ப அமைப்பு,பொருளாதார வசதி,அவர்கள் சார்ந்த சமுதாயக் கோட்பாடுள்,அன்புள்ளவர்களின் வழிகாட்டல்கள் என்பன இன்றியமையாத உந்து சக்திகளாகத் தொடர்கின்றன.

பெரும்பாலான பெண்களைப் பொறுத்தவரையில்,அவர்களின் குடும்பங்களில் பெண்கள் இரண்டாம்தர முக்கியத்துவம் உள்ளவர்களாகவே இpருக்கிறார்கள். ஆதிகாலத்திலிருந்து,சமுதாயத்தில் ஆண்களின் நிலை உயர்வான கணிக்கப்படுகிறது,அதனால் அவனைத் தங்கள் குடும்பத்தின் முக்கியஸ்தவனாக மட்டுமல்லாமல் சமூகத்திலும் மதிக்கப்படவேண்டியவனாக அவன் வளர்க்கப் படுகிறான்.

இன்று நாம் வாழும் உலகம்,விஞ்ஞானம்,தொழில் விருத்தி,உலகமயப் படுத்தல் எனப் பல விதத்தில் முன்னேறியிருந்தாலும்,பெண்களும் பெரும்பாலான சமுக விருத்திகளில் பங்கெடுத்தாலும் ஆண்களுக்குச் சமமான உயர்ந்த அந்தஸ்து பெண்களுக்குக்; கிடைப்பது குறைவாக இருப்பதால் அதன் எதிரொலியாகக் குடும்பங்களிலும் பரந்து பட்டசமுதாயத்திலும் பல பிரச்சினைகள் தொடர்கின்றன.

அவற்றைத்தாண்டித் தனித்துவத்தை நிலைநாட்டுவது ஒரு பெரிய போராட்டம். அப்போராட்டம் ஒரு பெண் பிறந்த சுற்றாடலிலிருந்தே ஆரம்பிக்கிறது.அப்படியான போராட்டத்திற்கு முகம் கொடுத்தவர்களில் நானும் ஒருத்தி. அந்த அனுபவங்களை எனது பலமெனக் கருதிக் கொண்டு; பல மாற்றங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்த கொண்டிருப்பது எனது வாழ்வில் தொடரும் ஒருநீண்ட பயணமாகும்

அந்தப்பயணத்தில் பன்முக மட்டங்களில் எனது எழுத்து எனக்குப் பெருந்துணையாகவிருந்தது. அந்தத் துணை தந்த துணிவுடன்,தமிழ்ச் சமுதாய மேம்பாட்டுக்காகச் செய்த சிறு பணிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். மனித முன்னேற்றம்,மேம்பாட்டுப்; பணிகளுக்கும் மூலதனமாகப் பணம் தேவை. வாழ்க்கையின் நீண்ட பயணத்திற்து உறுதுணையாக என்னிடமிருந்தது மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட,இடைவிடாத தனித்துவ பெண்ணியச் சிந்தனைத் தேடலும் அதைத் தழுவிய எழுத்துக்களுமாகும்.

அதாவது மிகவும் இறுக்கமான,துணிவான சமத்துவ சித்தாந்தங்களை விட்டுக்கொடுக்காத எழுத்துக்கள்தான் எனது வாழ்க்கையின் மூலதனம்.

-எனது தொடர் எழுத்துப் பணி, மனித நேயத்தினடிப்படையிலான பெண்ணிய சமத்துவத்திலமைந்தது. அதன் அடிப்படையில் இலங்கையில் தமிழர்களுக்கெதிராக இலங்கையரசால் தொடுக்கப் பட்ட அரச வனமுறைகளால் துயர் பட்ட ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் ஏக்கத் தொனிகளின் சிறு விம்மல்களைப் பற்றிப் பல படைப்புக்களை எழுதியிருக்கிறேன். ஆங்கில நாட்டில் வாழ்ந்த சுதந்திர சிந்தனையால் தமிழர் பட்ட துயரங்களை எந்தத் தடையோ பயமோ இல்லாமல் யதார்த்தமாகப் படைத்திருக்கிறேன்.

அக்கால கட்டத்தில், அதாவது நூறு வருடங்களுக்கு முன் வெள்ளையினத்தவரால் மிகவும் கொடுமைப் படுத்தப்பட்ட கறுப்பு மக்களைப் பற்றி மனிதநேயம சார்ந்த பெண்ணியத் துணிவுடன் திருமதி ஹரியட் பீச்சர் ஸ்ராவ் என்ற வெள்ளைமாது 1852ல் ‘அங்கிள் டொம் கபின்’ என்ற நாவல் எழுதியது எனக்குத் தெரியாது. நான் லண்டனுக்குப் போவதற்குப் பத்து வருடங்களுக்கு முன் 1960ம் ஆண்டில் அமெரிக்க கறுப்பு மக்களின் துயர் பற்றி திருமதி ஹார்ப்பர் லீ என்பவர் எழுதிய ‘ரு கில் எ மொங்கிங் பேர்ட்’ என்று மனித நேயம் சார்ந்த பெண் படைப்பைப் பற்றித் தெரியாது. ஏனென்றால் எனது அன்றைய கால வாசிப்பு பெரும்பாலும் தமிழ் இலக்கிய உலகுடன சங்கமமானது.

எனது படைப்புக்கள் என்கிராமத்தைச் சார்ந்த யதார்த்தத்துடன் ‘மாமி’ என்றகதையாகப் படைக்கப் பட்டது.

ஆங்கில நாட்டில் தமிழ் படைப்புக்களை ஆரம்பித்த முதலாவது இலங்கைத் தமிழ்ப் பெண்மணியான என்னை, இலங்கைப் பிரச்சினையை வெளியுலகிற்கு வெளிப்படுத்திய ’ஒரு கோடைவிடுமுறை’ என்ற நாவல் இந்திய புத்திஜீவிகளிடையே 1982ல் அறிமுகப்படுத்தப் பட்டது. அதைச் செய்தவர் இலங்கை இலக்கிய ஆர்வலர் திரு பத்மநாப ஐயர் அவர்களாகும்.

பெண் எழுத்தாளர்களுக்குத் தமிழ் இலக்கிய உலகில் பெரிய அங்கிகாரம் கிடைப்பதில்லை. ஆனால் எனது எழுத்திலுள்ள கருத்துக்கள். கதை சொல்லும் தளங்களான,லண்டன்,பாரிஸ்,பேர்ளின்,இலங்கை என்பனவும் கதை மாந்தர்கள் என்பவர்கள் பெரும்பாலும் ‘உலகம் பரந்த’ மனிதர்களாகவிருப்பதாலும்; எனது எழுத்துக்களுக்கு வரவேற்பு இருந்தது. அதிலும் பொய்புனைவற்று உண்மைகளைத் தைரியமாகச் சொல்வதால் என் எழுத்துக்கள் பலரால் விரும்பப் படுகிறது. படிப்பவர்கள் இலக்கிய ஆர்வலர்;கள் மட்டுமல்லாது,நிகழ்கால் புதிய இலக்கியத் தோற்றம், கருத்துக்கள் என்பவற்றில் அக்கறை கொண்டவர்களாகவுமிருக்கிறார்கள்.இலக்கிய ஆய்வு செய்யும் மாணவர்களாகவிருக்கிறார்கள். பிற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பவர்களாகவுமிருக்கிறார்கள்.

அத்துடன் எனது எழுத்துப் பணி பெண்களுக்கான மேம்பாட்டுக்கும்,தன்னம்பிக்கைக்கும்,வழிதேடும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் எழுத்தில் மட்டுமல்லாது செயற்பாட்டிலும் செய்து காட்டப்பட்டிருக்கிறது. உதாரணமாக, இலங்கைப் போராடடத்தில் பெண்களின் துயர் பல படைப்புக்களில் என்னால் பதிவு செய்யப் பட்டதுடன் அவர்களுக்காகக் குரல் கொடுக்க ,லண்டனில் ‘தமிழ் மகளீர் அமைப்பை’1982ல் ஸ்தாபித்து மனித உரிமைக்கான பல பிரச்சாரங்களை முன்னெடுத்தேன்.,

அதன் காரணமாகப் பிரித்தானிய,’விசேட விசாரணைப்பிரிவினரால்’ விசாரிக்கப்பட்டேன். மனித உரிமை சம்பந்தமான எனது பணிகள் பற்றி விசாரித்த சம்பவம்,முற்போக்குப் பத்திரிகையான,’த நியு ஸ்ரேட்மன்’ பதிவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரித்தானிய தொழிற்கட்சி எம்.பி.களான திரு.ரோனி, பென், திரு.ஜெரமி கோர்பின் போன்றர்களால் பாராளுமன்றத்தில் என்னை’விசாரித்த விடயம்’ காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

‘தமிழ் மகளிர் அமைப்பின்,இலங்கையில் தமிழர்முகம் கொடுக்கும் கொடுமைகளுக்கும்,அதிலிருந்து தப்பி மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக வரும் தமிழர்களின் நிலை பற்றிய போராட்டத்திற்குப் பல சிறுபான்மை அமைப்புக்கள்,பெண்கள் அமைப்புக்கள்,மனித உரிமைப் போரட்ட ஸ்தானங்கள் என்று பன்முக மக்களும் ஆதரவு தந்தனர். லண்டனிலுள்ள,’ஸ்பார் றிப’;,என்ற பெண்கள் பத்திரிகையம்,அமெரிக்காவிலுள்ள,’அவுட் றைட’ என்ற பெண்கள் பத்திரிகையும் எங்கள் போராட்டத்தை உலகம் அறியப்பண்ணின.

29.5.1985ம் நாளில் எங்கள் போராட்டத்தின் நிமித்தமாகப் பிரித்தானியப் பாராளுமன்றம் பிரித்தானியாவுக்கு வரும் அகதிகளுக்கான புதிய விதிமுறைகளை ஆராயச் சட்டம் உண்டாக்கியது.

தொடர்ச்சியான எனது எழுத்து மூலம்,புலம் பெயர் வாழ்க்கையில் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் தாயகத்தில் இலங்கைப் பெண்களின்; போராட்டங்களையும் பல கோணங்களிலும் அவதானித்து எழுதினேன்.அவை,சிறுகதைகளாகவும் நாவல்களாகும் வெளி வந்தன. அத்துடன், திரைப்படத்துறை பட்டதாரி மாணவியாகவிருந்தபோது, இலங்கைத் தமிழர் நிலை பற்றி ஒரு ‘டாக்குமென்டரியும்’( ‘எஸ்கேப்புறம் ஜெசைட்’) எடுத்தேன். 1987ம் ஆண்டு இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களுக்குச் சென்று அவர்கள் நிலை பற்றிய ‘ புகைப்படக் கண்காட்சியை,லண்டன் ‘கொன்வேய் ஹாலில்’வைத்தோம்.

எனது சில படைப்புக்கள் பெண்களின் கண்ணோட்டத்தில் அவர்களின் துயரை விபரிப்பதாக இருந்தாலும் அக்கதைகள் ஒட்டுமொத்தமான இலங்கைத் தமிழினத்தின் துயர் சரித்திரத்தைப் பதிவிட்டது.

அவற்றில்;,’சுற்றி வளைப்பு’என்ற கதை இராணுவத்தினரின் கொடுமைக்குள்ளான ஒரு கிராமத்தின் கதையை ஒரு இளம் பெண்ணின் வாய்மொழியாகப் பொழிகிறது,’ஓநாய்கள’ , ‘அரைகுறை அடிமைகள’  போன்றவை 1980ம் ஆண்டு கால கட்டத்தில் இலங்கைத் தமிழரின் நிலையை விளங்கப் படுத்துகின்றன.

இத்துடன் இலங்கைத் தமிழ்ப் போராட்டக்குழுக்களிடையே நடந்த வன்முறைகளை அடிப்படையாக வைத்து, ’ஆனா ஆவன்னா ஈனா’. ’ஒரு சரித்திரம் சரிகிறது’ போன்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறேன்.

‘லோரா லக்ஸ்ஸம்பேர்க் ஸ்ரா’ என்ற கதை ஜேர்மனிக்குப்புலம் பெயர்ந்த ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்,எப்படித் தனது குடும்பத்தின் வாழ்க்கைப் போராட்டங்களுக்கு முகம் கொடுக்கிறாள், கணவரின் குறைநிறைகளை என்னவென்று புரிந்து கொண்டு குழந்தைகளையும் கணவரையும் பராமரிக்கிறாள் என்பதைச் சொல்லும் கதையாகும்;. இந்தக் கதையில் கணவன் மனைவியின் உறவில் நெரிசல் வரும்போது கணவர் பற்றிய ஒரு மனைவியின் புரிந்துணர்வு உன்னதமாகச் சித்தரிக்கப் பட்டிருப்பதாக விமர்சிக்கப் பட்டது. பெண்ணிய சிந்தனை நடைமுறை என்பது இணைந்த தம்பதிகளின் உறவில் தவிர்க்க முடியாத பிரச்சினைகள் வரும்போது இருவரும் பிரிந்து போவதுதான் ஒரே ஒரு வழி என்பதை நிராகரிக்கிறது.

என்னுடைய எழுத்துக்களில், அறம் சார்ந்த சத்திய வார்த்தைகள் தொனிப்பதால் எனது எழுத்துக்களைப் படிக்கும் ஆர்வலர்கள் உலகம் பரந்த விதத்தில் ஆயிரக்கணக்காக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள ‘சிறுகதைகள்’ டாட் கொம்’; என்ற இணையத்தளத்தைப் பார்த்தால் தெரியும். பல்லாயிரக்கணக்கானோர் எனது படைப்புக்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டு வருகிறார்கள்.

ஆணாதிக்க சிந்தனை சார்ந்த வாழ்க்கை முறை மாறவேண்டும் ஆணும் பெண்ணும் இணைந்த குடும்ப உறவு அன்புடன்,புரிதலுடன்,சமத்துவத்தின் அடிப்படையில்;,அமைய வேண்டும் அதனால்,புதிய சமுதாயம் உருவாகவேண்டும் என்பது எனது எழுத்துக்களில் அடிக்கடி தொனிக்கும் குரலாகும். அதற்கு உதாரணமாக,’சுபமங்களா’ இலக்கியப் போடடியில் பரிசு பெற்ற,’யாத்திரை’ என்ற சிறுகதையைப் படிக்கலாம். .

எனது எழுத்துக்களில் பீரிட்டு கொதிக்கும் பெண்ணியம்,மனிதநேயம்; சார்ந்த தர்ம உலகைக் காணும் தேடலையும் அவசியத்தையும்; புரிந்துகொண்ட மாணவர்கள் இலங்கை,இந்தியப் பல்கலைக் கழகங்களில் எனது நூல்களைப் படித்துப் பல ஆய்வுகளைச் செய்கிறார்கள்.

இதுவரை எந்த இலங்கை எழுத்தாளர்களுக்கும் கிடைக்காத கவுரத்தை,கொங்கு நாடு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, த. பிரியா என்பவர் எனது எட்டு நாவல்களான,’உலகமெல்லாம் வியாபாரிகள்’’, 'தேம்ஸ்நதிக்கரையில்’ ’ஒருகோடை விடுமுறை’’, 'தில்லையாற்றங்கரை’ , 'பனிபெய்யும் இரவுகள்’ ,’நாளைய மனிர்கள் , ‘வசந்தம் வந்துபோய்விட்டது’, ’அவனும் சில வருடங்களும்’ எனபவற்றை அவரின் கலாநிதிப் பட்டப் படிப்பு ஆய்வு செய்ததன்மூலம் தந்திருக்கிறார்.

அத்துடன் நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் பெரும்பாலானவற்றைப் படித்து தனது ,எம்.பில் பட்டப்படிப்புக்காக ஆய்வு செய்திருக்கிறார்.

எனது எழுத்துக்களுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் இதுவரை கிடைத்த விருதுகள் வித்தியாசமான -அதாவது கிழக்குலகும் மேற்குலகும் சேர்ந்து தந்த சிந்தனைத் தொடர்களின் பரிணாமத்தின் பிரதிபலிப்புக்கள் என இலக்கியவாதிகள் ஏற்றுக்கொண்டதன் பிரதிபலிப்பு என்று நினைக்கிறேன்.
ஓரு எழுத்தாளன் தனது படைப்பில் தான் வாழும் சமுதாயத்தின் சரித்திரத் துணுக்குகளைப் பிரதிபலிக்கிறான் என்பதை எனது படைப்புக்களைப் படிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். 1960;ம் ஆண்டுகளிலிருந்து லண்டனுக்குச் சென்ற பலர் ஆங்கிலம் படித்த உயர் மட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
லண்டனில் முதன் முதலாக எழுதப்பட்ட முதல்தமிழ் நாவலான ’உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்ற எனது நாவல் இலங்கைத் தமிழ்க் கலாச்சாரத்தால் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட பெண்கள், மேற்கத்திய ‘சுதந்திர’ சிந்தனையுடன் முட்டிமோதித் தங்களின் தனிமனித உணர்வுகளை,சுயைமையை வெளிப்படுத்தி,எப்படி. அடைய முயல்கிறார்கள் என்பதைச் சொல்கிறது.

1970 ம் கடைசிப்பகுதியில் எழுதிய’ தேம்ஸ் நதிக்கரை’ இன்றும் பலரால் பேசப்படும் ஒரு உருக்கமான நாவல். தமிழ்ப் பெண்களை முக்கிய பாத்திரங்களாகக் கொள்ளாத நாவல். அமெரிக்க அப்பாவுக்கும் இந்தியத் தாய்க்கும் பிறந்து ஒரு இலங்கைத் தமிழனைக் காதலிக்கும் லோரா என்ற பெண்ணைப் பற்றிய உருக்கமான நாவல் இக்கதையிலும் ,ஆணாதிக்கம் என்பது உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களின் கண்ணோட்டம் என்பதையும் அதனால் லோரா முகம் கொடுத்த பாலியல் வன்முறை முயற்சிகளையும் விபரித்து அவற்றிலிந்து அவள் எப்படித் தனது தன்மானம் நிறைந்த தற்பாதுகாப்பு உணர்வால் தப்பித்துக் கொள்கிறாள் என்பதைச் சொல்கிறது.

இப்படியான கதைகளை எழுதிய எனது இலக்கிய அனுபவங்களைக் கேட்கும் ஒரு சில மாணவர்களாவது எனது எழுத்துலகப் பிரயாணத்தின் சில கருத்துக்களையாவது உள்வாங்கிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

லண்டனில் பல்லாண்டுகள் பல துறைகளில் மேல் கல்வி கற்று பல ஸ்தாபனங்களில்,அதாவது.இலங்கையில் மருத்துவத்தாதியாக ஆரம்பித்த எனது உத்தியோகப் பிரயாணம் லண்டன் சென்றதும் பல மேற் கல்வித் தகமைகளைப் பெற்றதாலும் பன்முகத் தறைகளில் நீண்டது, லண்டனில் பெண்கள் காப்பகம், ‘றீகபிலிடேசன் சென்டா’;, சுகாதார ஸ்தாபனத்தில் குழந்தைநல அதகாரி,போன்ற பல துறைகளிற் பணிபுரிந்த அனுபங்கள் எனது இலக்கியத்தின் அடிநாதம்.

எழுத்து என்பது மிவும் பிரமாண்டமான சக்தி.உலகத்தின் பல மாற்றங்களுக்கு எழுத்தாளர்கள் உதவியிருக்கிறார்கள்.நான் ஒரு பெண், எனக்கென்று ஒரு இலட்சியமிருக்கிறது. அதாவது எனது எழுத்து மூலம் பெண்களின் ,வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவ முடியமேன்றால் மிகவும் பெருமைப்படுவேன்.

அந்த சிந்தனையுடன்தான் இந்தியாவில் பத்து வருடங்கள் பெண்கள் சிறுகதைப் போட்டியைத் திரு கோவை ஞானி அய்யாவுடன் 1998ம் ஆண்டிலிருந்து 2008ம் வரை நடத்தினேன். அந்தப் போட்டி பல நாறு இந்தியத் தமிழ்ப் பெண்களை எழுத்தாளர்களாக உருவாக்கியது. அவர்கள் எழுதிய கதைகளைத் தேர்ந்தெடுத்து 200 கதைகளை காவியா பிரசுரம் புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.

ஒரு எழுத்தானனின் எழுத்துப் படைப்புக்கு அவனுடைய வாழ்க்கை அமைப்பும் அனுபவங்களும் முக்கியமானவை.

எனது வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதானால்,கடந்த ஐம்பது ஆண்டுகளாக லண்டன் மாநகரில் வாழ்கிறேன்.லண்டனில் பல மேற்படிப்புக்களை மேற் கொண்டாலும் திரைப்படத்துறை பட்டப்படிப்பு,மானுட மருத்துவ வரலாறு முதுகலைப் பட்டம் என்பன முக்கியமானவைகளாகும்;. எனது பன்முகத் தன்மையான படிப்பும் அனுபவும் தமிழர்கள் இதுவரை தெரிந்து கொள்ளாத ஒரு புதிய எழுத்துலகை அறிமுகம் செய்கிறது.

அதற்கு உதாரணமாக அண்மையில் சிங்கள் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு ,பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதுவராலாயத்தில் வெளியிடப்பட்ட ‘பனி பெய்யும் இரவுகள்’ என்ற சாகித்திய அக்கமி பரிசு பெற்ற நாவலைக் குறிப்பிடலாம்.இந்நாவல் காதல் காமம்,பற்றிய மறைமுகமான போராட்டங்களை உளவியல் ரீதியாகப் படைக்கப் பட்டிருப்பதால்,அண் பெண் நெருங்கிய உறவில் இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை கொண்ட நாவலாகப் பார்க்கப் படுகிறது..

அதேமாதிரி’ என்னுடைய ’ முதலிரவுக்கு அடுத்த நாள்' என்ற சிறு கதை’ பற்றிப் பேசுபவர்கள்,’இந்த நாவலை உங்களைத் தவிர வேறு யாராலும் எழுத முடியாது’ என்று சொன்னார்கள். முதலிரவு என்ற ஒரு மிக மிக முக்கியமான இரவில் ஒருதம்பதிகளிடையே  ஆண் பெண் உறவு என்பது எப்படி உடல்சார்ந்த உறவாக மட்டும் ஆரம்பிக்கிறது அதனால் அவர்கள் முகம் கொடுக்கும்,முக்கியமாகப் பெண்களின் உளவியல் தவிப்பு மிகவும் தத்ரூபமாக எழுதப் பட்டிருப்பதாகப் பாரிசில் நடந்த பெண்கள் இலக்கிய சந்திப்பிற் சிலர் சொன்னார்கள்.

பலரின் ஆயவுகளுக்குள்ளான சில நாவல்களில். லண்டன் ஆர்ட் கவுன்சிலின் உதவியுடன் மொழி பெயர்க்கப் பட்டிருக்கும் ‘ தில்லையாற்றங்கரை’ நாவலைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதுபற்றிக்குறிப்பிடும்போது. லக்ஸ்மி ஹோஸ்ட்ரம் என்ற ஆய்வாளர்,’இது ஒரு சோசியோ அந்திரோபோலோஜிக்கல் நாவல்’ என்று கூறியதாக எனக்குச் சொல்லப் பட்டது. ஏனென்றால் இந்நாவல் மாற்றமடையும் சமுதாயத்தில் தங்கள் ‘சுயமையைத்’ தேடும் பதிய தவைமுறை இளம் பெண்களைப் பற்றிப் பேசுகிறது.இந்த நாவல் ‘இலங்கை சுதந்திர எழுத்தாளர்கள் அமைப்பின’ பரிசு பெற்ற நாவலாகும்.

என்னுடைய பல சிறுகதைகளும் நாவல்களும் இலக்கியத் துறையில் பேசுபொருளாக இருந்து வருகின்றன.புலம் பெயர்ந்த பல தமிழ்ப் பெண்களுக்கில்லா பல்வித படிப்பும், அனுபவங்களும், அரசியல்,சமுக ஈடுபாடுகளுமிருப்பதால் எனது படைப்புக்கள் ‘உலக மயமாக்கப் பட்ட இலக்கிய’ கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது.

என்னுடைய படைப்புக்களில் பெண்ணியவாதம், இன்றைய உலகஅரசியல் கோட்பாடுகள், சுற்றாடல் மாசுபடுதல் போன்ற பல இடங்களில் பேசப்படுகின்றன.இதை’ நாளைய மனிதர்கள்’ என்ற நாவலிற் தெளிவாகக் காணலாம்.

தமிழர்கள் வாழும் இந்தியா இலங்கை போன்ற நாடுகள் தாண்டிய வெளி உலகில் மிகப் பிரமாண்டமான லண்டன் நகரில் தமிழில் சிறு நாவல்கள் சிறுகதைகள், கட்டுரைகள் என்பவற்றைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எனதுபெரும்பாலான படைப்புக்கள் தமிழில் எழுதப்பட்டவை என்றாலும், பல ஆய்வுக் கட்டுரைகளையும் சில சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகரில் தமிழில் சிறு கதைகளையம் நாவல்களும் எழுதிய முதலாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறேன்.இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் இன்று ஒரு மூத்த எழுத்தளர்களில் ஒருத்தராகக் கணிக்கப் படுகிறேன்.

எனது எழுத்துக்களால் எனது வாழ்க்கையில் மட்டுமல்ல,எனது சமுதாயத்திலும்,எனக்குத் தெரியாத,எழுத்தார்வம் கொண்ட பல இந்திய.இலங்கைப் பெண்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன.

அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதால்,எழுத்து என்பது எத்தனை வலிமை வாய்ந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். 12 அல்லது 13 வயதில் எங்கள் மாவட்டக் கட்டுரைப் போட்டியில் ‘ பாரதி கண்ட பெண்கள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்குப் பரிசு கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாடசாலை கையெழுத்துப் பத்திரிகையிலும் துணையாசிரியையாகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து சிறு வயதிலேயெ தேசிய பத்திரிகைகளுக்கு ஏதோ எழுதத் தொடங்கிவிட்டேன். கிராமத்தில் நான் கண்ட அனுபவங்கள் என்னைச் சிந்திக்கப்பண்ணிண. ஓருத்தருக்கு மற்றொருவர் கொடுக்க வேண்டிய மரியாதையையும் சமத்துவத்தையும் பேணாத இருவரின் உறவும் குடும்ப வாழ்க்கையும் ஒருநாளும் நல்லதொரு வாரிசுகளைப் பெறமுடியாது .சீரற்ற உறவுள்ள தம்பதிகளால் எதிர்;காலத்தை நிர்வகிக்கும் தலைமுறையைப் படைக்க முடியாது என்பதைக் கிராம வாழ்க்கையில் பெண்கள் படும் அவதிகள் மூலம் புரிந்து கொண்டேன். இதை,என்னுடைய ‘மாமி’ என்ற கதை பிரதிபலிக்கிறது.

பெண்கள் தங்களின் வலிமையை.திறமையை உணரவைக்க உதவவேண்டும் என்று நினைத்தேன்.அந்த உணர்வுகளின் தாக்கத்தின் எதிரொலியாகப் பல ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட நாவல்’ தில்லையாற்நங்கரை’ என்ற நாவலாகும். அந்த நாவலைப் படித்தால் கிராமங்களிலுள்ள பெண்களின் போராட்டங்கள துல்லியமாக விளங்கும்.. அந்தத்தில்லையாறங்கரைக் கிராமத்திலிருந்து எனது பத்தொன்பதாவது வயதில் மேற்படிப்புக்காக யாழ்ப்பாணம் சென்றேன்.

அக்கால கட்டத்தில் எங்கள் கிராமத்திலிருந்து உத்தியோக ரீதியான மேற்படிப்புக்கு யாழ்ப்பாணம் சென்ற முதலாவது பெண் நான். அங்கு எங்கள் கல்விநிலயத்திற்குப் பத்திரிகை ஆரம்பித்து இணைஆசிரியையானேன்.அப்பத்திரிகை மருத்துவம் சம்பந்தமான பத்திரிகையாகும். ஆனால் ‘மல்லிகை’ போன்று முற்போக்கு பத்திரிகைகக்கு ‘எழில் நந்தி’ என்ற புனை பெயரில் இரு சிறு கதைகளை எழுதினேன். யாழ்ப்பாணத்திலும்; பெண்களின் நிலையில் பெரிய மாற்றமில்லை.அதற்குக் காரணம் மிகவும் பழமைவாய்ந்த சமுதாயக் கட்டுமானங்கள் என்பது தெரிந்தது.அப்படியான விடயங்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல ரீதியான சமுதாயப் பிரச்சினைகளும் என் சிந்தனையக் கிளறின.

பெண்ணிய சித்தாந்தம் என்பது,பெண்என்பவள் தன்னை ஒடுக்கி வைத்திருக்கும் அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல தன்னைப் போன்ற ஒடுக்கப் பட்ட மக்கள் அத்தனைபேருக்கும் போராடுவது என்பதை திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் கடிதங்களிலிருந்து புரிந்து கொண்டேன்.

பெண்களுக்கு மட்டுமல்ல ஒடுக்கப் பட்ட அத்தனை மக்களும் சமத்துவமாக நடத்தப் படவேண்டும் என்று எழுதத் தொடங்கினேன். ஆணாதிக்க சிந்தனை மட்டுமல்லாது மாற்றமுடியாத பழம் சிந்தனைகளால் மக்கள் பிணைக்கப் பட்டிருந்தது புரிந்தது. அதிலும்,முக்கியமாகப் பெண்களுக்குச் சமுதாயத்தில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழுதிய எனது,’சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற சிறு கதையைப் படித்த முற்போக்குவாதியான திரு பாலசுப்பிமணியம் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டார்.

சமுதாயம் மாற்றத்திற்குப் பெண்விடுதலை முக்கியம் என்பதை எனக்கு விளங்கப் படுத்தினார். அது பற்றித் தொடர்ந்து எழுத ஊக்கம் தந்தார் எழுத்தோடு தொடர்ந்த பல கருத்துக்களையும் இணைத்த எங்கள் உறவு வளர்ந்தது. திருமணம் நடந்தது.இருவரும் லண்டன் சென்றோம்.

லண்டனிலும் படித்த பெண்கள் என்று வாழ்பவர்களும் இங்கிருக்கும் இனவாதத்திற்கு மட்டுமல்லாது அவர்கள் குடும்பத்தில் ஆணாதிக்க கொடுமைக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.பெண் என்பவள் இரு குடும்பங்களின் கவுரவத்தைக் காப்பாற்றவும்,வர்க்கம் சார்ந்த கட்டுமானங்களைத் தொடரவும் பண்டமாற்றாகப் பயன்படுத்தப் படுகிறாள் என்பது தொடர்கிறது. அந்த வாழ்க்கைமுறையை, எனது முதலாவது நாவலான ‘ உலகமெல்லாம் வியாபாரிகள்’ அதைப்பிரதிலிக்கிறது. அத்துடன்’மஞ்சுளா’,’கற்புடைய விபச்சாரி’ போன்ற சிறுகதைகள் மத்தியதரவர்க்கத்துப் பெண்களின் துயரைச் சொல்கிறது.

இதுவரை எட்டு நாவல்களும் ஏழு சிறு கதைத் தொகுதிகளும் இரு மருத்துவப் புத்தகங்களும் .தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வு நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறேன.;இன்று லண்டனில் வாழும் நான், பல மேற்படிப்புக்களை லண்டனில் முடித்துக்கொண்டவள்.ஆங்கில நாட்டில் திரைப் படத் துறையில் பட்டம் பெற்ற முதலாவது ஆசியப் பெண்மணி நான் என்று நினைக்கிறென்.

எழுத்துத் துறைமூலம் மட்டுமல்ல வெகுசன சாதனமான சினிமாவின் மூலமும் எனது கருத்துக்களைச் சொல்ல லண்டனில் திரைப்படத்துறையில் பட்டம் பெற்றேன். ஆனால் இலங்கையில் தொடாந்த போர்காரணமாக அந்த இலட்சியம் நிறைவேறவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளை உலகுக்குச் சொல்ல ‘த எஸ்கேப் புறம் ஜெனசைட்’ என்ற டாக்குயமென்டரியைச் செய்தேன் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அது மனித உரிமை சார்ந்த விடயம்பற்றிப் பேசும் டாக்குயுமெண்டரியாகப் பல இடங்களிற் காட்டப்பட்டது. அந்த டாக்யுமென்டரி எங்களின் சரித்திரம் இனி வரும் தலைமுறைகள் தெரிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் அந்தப் படைப்பல் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது.

அத்துடன் எனது மூன்றாவது வருடத்திரைப்படமாக,குடும்பத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் கொடுமை பற்றி,’த பிரைவேட் பிளேஸ்’ என்ற குறும்; படமெடுத்தேன்.

இலங்கைத்தழர்கள் பற்றிய எனது எழுத்துக்களால் பல மாற்றங்கள் தொடர்ந்தன.இலங்கைத் தமிழரின் துயரை உலகுக்குச் சொல்ல ‘லண்டன் தமிழ் மகளீர் அணி’யை ஆரம்பத்து அதற்கத் தலைவியாகிப் பலபிரசாரங்களை ஐரோப்பிய நாடுகளில் செய்ததால் பல மனித உரிமை அமைப்புக்களின் அழைப்பில் பல நாடுகளுக்குச் சென்றேன். அங்கெலலாம் ,வெளிநாடு வந்த தமிழ் அகதிகளுக்கான ஆதரவு பெருகியது.

‘தமிழ் மகளீர் அமைப்பின் தலைவியாகவிருந்து தொடங்கிய சமூகப் பணி விரிந்தது.அதைத் தொடர்ந்து லண்டன் வந்த தமிழ் அகதிகளுக்காக தமிழ் அகதிகள் ஸ்தானம், தமிழ் அகதிகள் வீடமைப்ப ஸ்தாபனம் என்ற இரு பெரும் நிறுவனங்கள் பிரித்தானிய தொழிற் கட்சியின் உதவியுடன் ஆரம்பித்து அவற்றின் தலைவியாகவிருந்து பல்லாயிரக் கணக்கான இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்வு லண்டனில் மேம்பட உதவினேன்.

அக்கால கட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு மட்டுமல்ல புலிகளுக்குப் பயந்து ஐN ராப்பா முழுதும் அகதிகளாய்த் தஞ்சமடைந்த தமிழ் புத்திஜீவிகளால் ‘ இலக்கிய சந்திப்புக்கள் 1988ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப் பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றில் பங்கெடுத்ததுடன் லண்டனில் 2006ல் எனது தலைமையில் ஐரோப்பிய தமிழர் இலக்கிய சந்திப்பை ஒழுங்கு செய்தேன்.

அத்துடன், மேற்குறிப்பிட்ட இலக்கிய சந்திப்புக்களில் பெண்களுக்குத் தகமையான இடம் கொடுபடாததால் ஐரோப்பிய தமிப் பெண்களால் ‘பெண்கள் சந்திப்பு’ ஆரம்பிக்கப் பட்டது அவற்றில் பலவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன் சில ஆய்வுக் கட்டுரைகளையும் அர்ப்பணித்திருக்கிறேன்.அத்துடன் லண்டனில் 2005ம் ஆண்டு பெண்கள் சந்திப்பை நடத்தும் பொறுப்பைத் தலைமை தாங்கி நடத்வைத்தேன்

எழுத்துத் துறையின் தொடர் பணி மட்டுமல்லாது தமிழ் மக்களின் பணிகளும் காரண்மாக இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களுக்குப் பேச்சாளராக அழைக்கப் பட்டிருக்கிறேன். மதுரை, தஞ்சாவுர், கொங்குநாடு, எத்திராஜ் கல்லூரி,சென்னை பல்கலைக்கழகம்,இலங்கையில் பேராதனை,கிழக்கு பல்கலைக்கழகம்.போன்றவை குறிப்பிடத் தக்கவை.

பிரித்தானியாவில்,பிறிஸ்டல் யூனிவர்சிட்டி , சசக்ஸ்யுனிவர்சிட்டி,சிட்டி யுனிவர்சிட்டி,ஸ்காட்லாந்தில் அபர்டின் யுனிவர்சிட்டி, ஹொலாண்டில் ஹேக் யுனிவர்சிடடி,சுவிட்சர்லாந்தில் பேர்ன் யுனிவர்சிட்டி, என்பன சில.

அத்துடன் தமிழர்கள் அகதிகள் ஸ்தாபனத் தலைவியாகவிருந்த கால கட்டத்தில் பிபிசியில் சில தடவைகள் பேட்டி கொடுத்திருக்கிறேன்.இந்தியாவில் சன் டிவி,இலங்கையில் வசந்தம் போன்ற டிவிகளுக்கும் பேட்டி கொடுத்திருக்கிறேன்.

-1986; ஆண்டு பிரான்சில் நடந்த அகில உலக அகதிகள் மகாநாடு,

-1998ல் இந்தியாவில் நடந்த.’முருகன் மகாநாடு’

-1994ல் ஜேர்மனியில் நடந்த’தமிழாய்ச்சி மகாநாடு’ என்பன நான் கலந்து கொண்ட பல மகாநாடுகளிற் சிலவாகும்.

அத்துடன் உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளான ஐரோப்பிய நாடுகள், கனடா, அவுஸ்திரேலியா போன்ற இடங்களுக்க இலக்கிய பேச்சாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன்.எனது மனித உரிமை சார்ந்த கொள்கைகளால் 2012ல் ஐ.நா சபைக்கும் போகவேண்டிய நல்ல சந்தர்ப்பமும் கிடைத்தது ஒரு மிகவும் அருமையான அனுபவமாகும்.அத்துடன் இலங்கை,இந்தியப் பத்திரிகைளில் பலவற்றில் எனது நேர்காணல்கள் பதிவாகயிருக்கின்றன.

எனது ஏழாவது சிறுகதைத் தொகுதி ‘நேற்றைய மனிதர்கள்’ அண்மையில் வெளிவரவிருக்கிறது.இன்று பலருக்கு அறியப் பட்ட பெண்களின எழுத்துக்கள் பெண்ணிய சாயல்கள் கொண்டவையா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கிது. பெண்ணியம் எனப்பேசப் படுவது பல வியாக்கியானங்களை உள்ளடக்கியது.

சோசலிஸ்ட் பெண்ணியவாதிகள், றடிகல் பெண்ணியவாதிகள், சுற்றாடலைப் பாதுகாக்கப் போராடும் பெண்ணியவாதிகள், தங்கள் இன, மத, தேச அடையாளத்தை முன்னெடுக்கும் பெண்ணியவாதிகள் என்ற பலரகமுள்ளோர் இன்று பல படைப்புக்களை எழுதுகிறார்கள். எனது தாரக மந்திரம் நான் ஒரு மனித உரிமைவாதி, பெண்களுக்கு மட்டுமல்ல ஒடுக்கப் பட ஒட்டு மொத்த மக்களையும் பற்றி எழுது என்பதாகும்;.

இன்று இந்த உலகம், நவீன லிபரலிசம்,தனிமனிதத் தேவைகளின் முன்னெடுப்பு, பொருளாதாரத் தேடல்களால் இன்றைய மனித சமூகத்தின் ‘வாழ்நிலைக் கோட்பாடுகளை மாற்றிக் கொண்டிருக்கிறது.’ஒன்று பட்ட சமுதாயம்’ என்ற வரைவிலக்கணம் சார்ந்த வாழ்க்கை அமைப்;பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது.சமுதாய அக்கறையுள்ள மனிதனாக ஒரு மனிதன் ‘வளரக்’ கூடாது என்பதில்’ முதலாளித்துவக் கடமைப்புக்கள் கவனமாகவிருக்கின்றன. உலகத்தை அடிமைப்படுத்தியிருக்கும் பெரு முதலாளிகளும்,அவர்களுக்குத் தலையாட்டும் அரசியற் தலைவர்களும்,அறம் சார்ந்த சிந்தனைய அழித்துத் துவம்சம் செய்து ‘மனிதத்தை’அழிக்கப் படாதுபாடு படுகிறார்கள்.

அந்தக் கொடுமைகளுக்கு எதிராக எழுதுவதும் குரல் கொடுப்பதும்,மனித நேயத்தை முன்னெடுக்கும் எழுத்தாளர்களினதும்,முற்போக்குவாதிகளினதும் தலையாய கடமையாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R