நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: தமிழ் ஸ்டுடியோ புத்தாண்டு கொண்டாட்டம். 31-12-2017, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் இரவு 1 மணி வரை.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நன்கொடை : 250 ரூபாய். (கட்டாயமில்லை)

காலை 10  மணி: திரைக்கதை பயிற்சி: அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்: ஸ்வர்ணவேல்

12:30 - 1:30 வரை உணவு இடைவேளை

மதியம் 2 மணி: எழுத்தாளர் & பத்திரிகையாளர் சமஸுடன் கலந்துரையாடல்

மாலை  4 மணி: ஒளிப்பதிவு கலந்துரையாடல்: 'தீரன்' ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனுடன் ஒளிப்பதிவு குறித்து அதன் தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடல்
மாலை 6 மணி: சமீபத்தில் வெளியான "ஒரு கிடாயின் கருணை மனு" திரையிடல் மற்றும் இயக்குனர் சுரேஷ் சங்கையாவுடன் கலந்துரையாடல்
இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை: திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இலக்கியம் குறித்து கலந்துரையாடல்: இயக்குனர் மிஷ்கினுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.

இந்த அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்வதற்கு 250 ரூபாய் நன்கொடை செலுத்த வேண்டும். இந்த நன்கொடை கூட அரங்க வாடகை உள்ளிட்ட இதர செலவுகளுக்காகவே கூறப்படுகிறது. உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட 250 ரூபாய் பணம் நன்கொடையாக கொடுக்க இயலாத நண்பர்களும் கலந்துக்கொள்ளலாம். 250 ரூபாய் என்பது நன்கொடைதான், கட்டாயமில்லை. 250 ரூபாய் நன்கொடை செலுத்தி தங்கள் இருக்கையை உறுதி செய்துக்கொள்ள விரும்பும் நண்பர்கள் பியூர் சினிமா அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
தமிழ் ஸ்டுடியோ <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்