1. நான் எழுதுவது கவிதை இல்லை

கண்டதையும் கேட்டதையும்....
கண்டபடி கிறுக்குகிறேன்.......
யார் சொன்னது நான்...............
எழுதுவது கவிதை என்று ....?

பயணம் பல செல்கிறேன்.....
பயணத்தில் பல பார்க்கிறேன்.....
பட்டதை  பார்த்த அனுபவத்தை.......
வாழ்க்கை கவிதை  தலைப்பில்.....
கண்டபடி கிறுக்குகிறேன்......
யார் சொன்னது நான்........
எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது......
மனதில் இரத்தம் வடியும்.......
எழும் என் உணர்வை......
சமுதாய கவிதை  தலைப்பில்......
கண்டபடி கிறுக்குகிறேன்.......
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?

அடிமாடாக அடித்து.....
அடுத்த வேளை உணவுக்கு......
அல்லல் படும் குடும்பங்களை.......
பார்ப்பேன் மனம் வருந்தும்....
பொருளாதார கவிதை தலைப்பில்.....
கண்டபடி கிறுக்குகிறேன்....
யார் சொன்னது நான்........
எழுதுவது கவிதை என்று ....?

காதோரம் கைபேசியை வைத்து.....
கண்ணாலும் சைகையாலும்......
தன்னை மறந்து கதைக்கும்.....
காதலரை பார்க்கிறேன்.......
காதல் கவிதை  தலைப்பில்....
கண்டபடி கிறுக்குகிறேன்.....
யார் சொன்னது நான்.......
எழுதுவது கவிதை என்று ....?

சின்ன வயதில் எல்லோருக்கும்.....
காதல் தோல்வி வரும் -அதை.....
மீட்டு பார்க்கும் போது உயிரே.....
வலிக்கும் .வந்த வலியை கொண்டு....
காதல் தோல்வி கவிதை  தலைப்பில்.....
கண்டபடி கிறுக்குகிறேன்.....
யார் சொன்னது நான்......
எழுதுவது கவிதை என்று ....?

நண்பர்களுடன் சிரிப்பேன்....
நலினமாகப் பேசுவார்கள்.....
நையாண்டியாகப் பேசுவர்.......
எடுத்த தொகுத்த வரிகளை கொண்டு.....
நகைச்சுவைக் கவிதைக் தலைப்பில்......
கண்டபடி கிறுக்குகிறேன்....
யார் சொன்னது நான்......
எழுதுவது கவிதை என்று ....?

கஸல் என்பேன் .ஹைக்கூ என்பேன்...
கடுகு கவிதை என்பேன் திருக்குறள்....
ஹைக்கூ என்பேன் காதல் தத்துவம்....
என்பேன் இப்படியேல்லாம் பிசத்துவேன்....
யார் சொன்னது நான்.....
எழுதுவது கவிதை என்று ....?

சினிமாக்களில் மசாலாப்படம்....
சிலவேளைகளில் கருத்து படம்....
என் கவிதையும் இப்படித்தான்.....
மசாலாப்படம் கூடாததுமில்லை.....
கருத்துபடத்தால் சமூகம் வெற்றி ...
பெற்றுவிட்டது என்றும் இல்லை.....
படைப்புகள் மன இன்பத்துக்கே......
எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்
சமூக ஒழுக்கத்தோடு .....!

நான் எழுதும் கவிதையே....
சிறந்தது என்று நினைப்பவன்....
நான் இல்லை - நான் அறிந்ததை....
அவன் அப்படி கேள்வி படுகிறான்....
என்று உணர்பவன் நான் என்பதால்....
கண்டபடி கிறுக்குகிறேன்....
யார் சொன்னது நான்....
எழுதுவது கவிதை என்று ....?

 



2.  சிலுவை சுமக்கும் மனிதன்!

மனிதனின் எல்லா செயல்களும் ....
சிலுவையாக மாறுகின்றன ....
எல்லா விளைவுகளும் ஆணியாக....
அறையப்படுகின்றன....!

குடும்பம் என்னும் உறவை ....
சிலுவையாய் சுமக்கிறான் ....
அன்பு என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!

கல்வி, பதவி, என்னும் ....
சிலுவையை சுமக்கிறான் .....
அதிகாரம் என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!

உழைப்பு, வருமானம் எனும் ...
சிலுவையாய் சுமக்கிறான் ....
விரத்தி நோய் என்னும் ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!

போட்டி வெற்றி என்னும் ....
சிலுவையாய் சுமக்கிறான் ....
பகைமை ,பொறாமை ,ஆணியால் .....
அறையப்படுகிறான்.....!

அத்தனை சுமைகளையும் ....
சுமக்கும் மனிதனுக்கு ....
விடுதலை ஒன்றே விடுதலை ....
ஓடும் புளியம்பழம் போல் ....
வாழ்வதே விடுதலை .....!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R