▬மறைந்த வைத்தியை திருமதி சீதாதேவி மகாதேவா▬மார்ச் மாதம்; 8-ம் திகதி.   சர்வதேச மகளிர் தினம் எங்கும்  சம்பிரதாயமாகக் கொண்டாடப் படுகின்றது.  ஆனால் இன்றுகூட உலக நாடுகள் எவற்றிலும் பெண்களையும் ஆண்களையும் எம் சமுதாயங்களும் அரசாங்கங்களும் வேலை செய்யும் இடங்களிலோ இல்லங்களிலோ பொதுஇடங்களிலும் நிகழ்ச்சிகளிலுமோ சரிசமமாகக் கருதுவதும் இல்லை> நடத்துவதும் இல்லை.  இதற்கு அடிப்படைக் காரணம் என்னவெனில் இன்றும் எஞ்சியுள்ள ஆணாதிக்கமே.  பெண்களின் உதாசீனப் பிரயாசைக் குறைவும் இன்னொரு காரணமாக இருக்கலாம் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

கீழைத் தேசங்களாகிய ஆசிய நாடுகளில் ஆண் பெண் வேற்றுமை மிகக் கூடுதலாக இன்னும் நிலைக்கிறது.  ஒரு கொடூரமான உதாரணம்:  இந்திய இந்துப் பெண்கள் கணவன்மார் இறந்து அவர்களுடைய சடலம் எரியும் பொழுது மனைவிமாரையும் நெருப்பில் வீழ்ந்து மாளச் செய்கிற வழக்கம் இன்னமும் உண்டு.  இதைச் சில காலமாக அரசாங்கம் சட்ட முறையாக நிறுத்தி வந்தாலும் ஒருசில கிராமங்களில் இப்பொழுதும் இந்த அநியாயம் குறைந்த அளவில் எனினும் நடக்கவே செய்கிறது.  மேலும் அங்கு பலர் தம் மனைவிமாரை அடிமைகளாகக் கருதி மனிதப் பிறவிகளைப் போல் நடத்துவதே இல்லை.  எனினும் மேல் நாட்டாரின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் பெண்களை நடத்தும் வகையையும் அறிந்து மேலும் கல்வி மேம்பாட்டாலும் அரசாங்கக் கட்டுப் பாட்டினாலும் இவ்விதமான அநீதிகள் குறைந்து கொண்டு வருவது ஒரு நற்செய்தியே.

2008இல் ஒக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 1.3 பில்லியன் தொகை வறுமையில் வாழும் உலகமக்களில் நூற்றுக்கு 70-வீதம் பெண்களே எனக் குறிப்பிட்டுள்ளது.  இதற்குக் காரணம் பெண்களுக்கு இன்றும் மனிதஉரிமைகள் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்பதே. அத்துடன் ஆண்கள் பெண்களைக் கீழ்த் தரமாகக் கருதி வேலை வீடு பணம் முதலியவற்றில் பூரண சமத்துவம் மறுக்கப்படுகிறது.  மேலும் உலகில் தொழில் செய்பவர்களில் பெண்ணினம் மூன்றில் இரு பங்காக இருந்தாலும் உலகின் வருமானத் தொகையில் நூற்றுக்கு 10-வீதமான வருமானத்தையே பெறுகிறார்கள்.  அரை மில்லியனுக்குக் கூடிய பெண்கள் கர்ப்பத்திலும் பிள்ளைப் பேற்றிலும் மரணம் அடைகிறார்கள்.  உலகின் அரசாங்க சபைகளில் பெண்கள் நூற்றுக்கு சராசரி 14-வீதம் இடத்தைத் தான் கைப்பற்றி இருக்கிறார்கள்.

உலகில் குடும்பங்களில் மிகக்கூடியதாக முக்கியமாக ஆண்களின் தாக்குதலால் காயப்படுவதும் மரணமடைவதும் பெண்களே.  இவை ஆராய்ச்சிப் புள்ளிவிவரங்கள்.

பிரித்தானியப் பெண்கள் சமவுரிமை பெற எடுத்த கடும் முயற்சியை 1860இல் தொடங்கி 1919இலேயே வெற்றி பெற்றனர்.  பிரித்தானியாவின் சரித்திரத்தில் இதை ஒரு பிரதான நிகழ்சியாகக் கருதி நூல்கள் மூலமும் அரசாங்க பதிவுகள் மூலமும் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.  எனவே, 40-வருடங்களாக அவர்கள் முயற்சி செய்தே அன்று ஓரளவு வெற்றிபெற்றனர்.

முதலில் பெண்கள் தங்களுக்கு வாக்குரிமை தர வேண்டும் எனப் பல பெண்குழுக்களாக அரசாங்கத்தை நெருக்கத் தொடங்கி அவர்கள் அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்த நியாயங்களின் நிரல் பின்வருமாறு:

☺ வேறு வேறு பிரிவான மக்களோ பாலினமோ சார்ந்த முடிவுகளுக்கு அவர்களே அங்கத்தவராய் இல்லாமல் அரசுகள் நியாயமான முடிவுகளை எடுக்கவும் முடியாது.  சட்டங்களைத் தீர்மானிக்கவும் முடியாது. 

☺ அரசியலும் நாட்டின் செல்வமும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. அதனால் பெண்கள் அரசாங்கத்தில் இல்லாவிடில் அவர்களுக்குச் சம்பளம் குறைவாகத் தான் கொடுக்கப்படும்.  அதை எதிர்த்து நிவர்த்தி செய்ய அரசாங்க சபையில் பெண்கள் இருப்பது அவசியம்.

☺ ஆண்களின் குறைகளைக் கேட்க ஆண்கள் சட்டசபையில் அங்கத்தினராக இருக்கிறார்கள். அதேபோல் பெண்களின் குறைகளைக் கேட்க பெண் அங்கத்தினர்கள் தேவை.  பெண்களும் வரி கட்டுகிறார்கள்.  ஆனால் வரிகளைத் தீர்மானிப்பது ஆண்கள் மட்டுமே.  எனவே பெண்களைப் பற்றிய சட்டங்கள் தீர்மானிப்பதில் பெண்அங்கத்தினரும் ஈடுபடவேண்டும்.

☺ சில மேல்-உத்தியோகங்களைப் பெண்கள் என்றும் அடைய முடியாது இருக்கின்றது.  இதை மாற்றுவதற்குப் பெண்களுக்கு வாக்குரிமை தேவை.

☺எனவே தேசங்களின் சட்டங்களை ஆண்கள் மட்டும் தீர்மானிக்காமல் பெண்களும் ஆண்களும் சேர்ந்து தீர்மானிப்பதே உசிதமும் சிறந்ததும்.

40-வருடங்களாகப் பாடுபட்டும் சித்தியடையாத நிலையில் எமலின் பாங்க்;ஹேஸ்ரும் அவரின் இரு மகள்மாரும் WSPU எனும் சங்கத்தை ஆரம்பித்து பிரித்தானியாவின் நகரங்கள் எல்லாவற்றிலும் கிளைகள் நிறுவி எல்லாரும் கூடிப் பெரிய ஆர்பாட்டங்கள் செய்து அரசாங்கசபை அங்கத்தினருக்கு எழுத்தில் முறைப்பாடுகளும் சமர்ப்பித்தனர். வேறு சில பெண்-கூட்டமைப்புக்களும் ஆரம்பிக்கப் பட்டன. 
அரசாங்க சபைக்குச் சென்று பிரதம மந்திரியுடன் நேரில் பேசுவதற்கு விண்ணப்பித்த கோரிக்கை மறுக்கப்பட்ட போது கற்களாலும் தடிகளாலும் யன்னல்கள் கதவுகள் உடைக்கப்பட்டு 150-பெண்கள் மறியலினுள் தள்ளப் பட்டார்கள்.  அங்கு அவர்கள் உண்ணாவிரதம் ஆரம்பித்த போது அரசாங்க மருத்துவர்கள் உணவை வலோத்காரமாகக் குளாய் மூலம் அப் பெண்களின் குடல்களுக்குள் செலுத்தினார்கள்.  இது நடந்தது 1909ஆம் ஆண்டிலே.

அவ்வாறு சங்கங்கள் வேறு மேல்நாடுகளுக்கும் பரவின.  ஒன்று கூடி பெண்கள் வாக்குரிமை வேண்டி பல மேல்நாடுகளிலும் ஆர்பாட்டங்கள் நடத்தினர்.  அவர்களின் சங்கம் பெரிய உலகப் பெண்கள் சங்கமாக மாறியது. அக் காலத்தில் அமெரிக்காவின் சில பகுதிகளும் அவுஸ்திரேலியா நியூசிலண்டின் சில பகுதிகளும் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த முதல் இடங்கள் என்ற பெருமையைப் பெற்றன.

இவ்வண்ணம் பல ஆர்பாட்டங்கள் நடாத்திய பின் இறுதியில் 1919இல் பிரித்தானியாவில் அரசாங்க அங்கத்தினராய் வரப் பெண்களுக்கு அனுமதி வழங்கி அதே ஆண்டில் முதல் பாராளுமன்றப் பெண் அங்கத்தினராக நான்சி அஸ்றர் (Lady Nancy Astor) இடம் பெற்றார்.

பெண்கள் ஆர்பாட்டங்கள் ஊர்க்குழப்பங்களின் பலனாக 1928இல் பிரித்தானியாவில் 21-வயதையடைந்த பெண்கள் வாக்குரிமை பெற்றனர். இதற்குப் பின் பலஆண்டுகளாக அரசாங்கமே பெண்களின் குறைகளைத் தானாகவே முன்வந்து குறைத்து வந்துள்ளதும் பெருமைக்குரியது.

1975இல் எமது பிரித்தானிய அரசாங்கம் ஆண்-பெண் ஓரவஞ்சனை ஒழிப்புச் சட்டம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சம்பளம் எனும் இரு சட்டங்களையும் இயற்றியது.  இவற்றின்படி வேலைக்குத் தெரிவு செய்வதிலும் வேலைத்தல உயர்வுகளிலும் வேலைகள் பழக்குவதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஓரவஞ்சனைகள் ஒன்றுமே இருக்கக்கூடாதுஎன்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்.  இதற்குப் பின் வருடாவருடம் கல்வியிலும் உத்தியோகங்களிலும் பெண்கள் மேம்பட்டு வந்துள்ளார்கள்.  எல்லாவித வேலைத் துறையிலும்; கூடக்கூட ஈடுபட்டு வருகிறார்கள்.  சில ஆண்டுகளின்முன் எடுத்த கணக்கீட்டின்படி நூற்றுக்கு 40வீதம் ஆண்-மாணவரும் 59-வீதம் பெண்-மாணவிகளும் ஜிசிஎஸ்சி-யில் 5-பாடங்களில் மேல்தரத்தில் சித்தி பெற்றிருக்கிறார்கள்.  வேலை செய்யும் வயதுடையோரில் நூற்றுக்கு 79-வீதம் ஆண்களும் 70-வீதம் பெண்களும் தொழில்செய்கிறார்கள்.  ஆனால் உத்தியோக ரீதியில் ஐந்தில் இரு பங்கே பெண்கள். விற்பனை நிலையங்களிலும் அரசாங்க உத்தியோகங்களிலும் சமமான தொகைகளில் இருக்கிறனர். 
நூற்றுக்கு 67-வீதம் தாய்மார்கள் சம்பளத்திற்கு வெளிவேலை செய்கிறார்கள் என்பதும் ஒரு கணிப்பு.

அண்மையில் வெளிவந்த ஓர் ஆராய்ச்சித் தொகுப்பின் படி சிறுமிகள் சிறுவர்களிலும் பார்க்கப் படிப்பிலும் சமூக நிகழ்வுகளிலும் மற்றவர்களை ஆதரிப்பதிலும் ஐந்துவயதிலேயே திறமை பெறுகிறார்கள்.  1995இல் எடுத்த ஒருகணக்கீட்டில் மேற்கல்வியில் பெண்கள் ஆண்களிலும்பார்க்கக் கூடியதொகையில் ஈடுபட்டிருந்தார்கள்;.  கல்வி முடித்த மாணவர்களுக்கு ஆண்-பெண் வித்தியாசமின்றி எல்லாவிதத் தொழில்களைப் பற்றியும் விபரங்களையளித்து ஊக்குவிக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் குறிக்கோள்.  சில குடும்பங்களில் பெண்கள் உத்தியோகம் பார்ப்பதும் ஆண்கள் வீட்டுக் கருமங்களைப் பார்க்கும் நிலையும் உண்டு.

எனினும் இயற்கை நியதிகளையும் நாம் மறக்கக்கூடாது.  எவ்வாறு எனில் அடிப்படை உரிமைகளில் பெண்களின் நிலை சமன்பட்டு வந்தாலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடம்பும் மூளையும் வேலை செய்யும் விதத்தில் இயற்கையான வித்தியாசங்கள் இருப்பதால் சில தொழில்கள் பெண்களுக்கும் வேறு சில ஆண்களுக்கும் கூடிய உசிதமாக உள்ளன.  எனவே கொம்பனித்-தலைமை தொழிலதிபர்-முதலாளிகள் போன்ற கடின உத்தியோக வேலைகளில் பெரும்பாலும் ஆண்களையும் மருத்துவம், தாதி, சமையல் வேலைகளில் பெண்களையும் காணலாம்.  விளையாட்டுத் துறை யிலும் இருபாலாரும் பிறம்பாகப் போட்டியிடுவது உசிதமும் நியாயமுமே.

ஆனால் ஆண்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் சராசரி 17.5 வீதம் குறைவாகவே இன்றும் பெண்களுக்குக் கொடுக்கப்படுகிறது என அதைச் சமமாக்குவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது.  இப்போ பெண்ணுரிமை இயக்கங்கள் ஆரம்பித்த அரசியல் துறைகளில் இன்றைய நிலமையைப் பரிசீலித்து எம் முன்னேற்றத்தை மதிப்பிடுவோம்.

2001இல் எம்பிரித்தானிய அரசாங்க சபையில் 118-பெண் அங்கத்தினரே (18-வீதம்) இருந்தார்கள்.  2011இன் நிலை என்னவெனில் 650-அங்கத்தினர் கொண்ட பிரித்தானியப் பொதுமக்களின் பாராளுமன்றத்தில் 143-பெண் அங்கத்தினரும் (22-வீதம்) 830-அங்கத்தினர்களைக் கொண்ட பிரபுக்கள் சபையில் 166-பெண்களுமே (20-வீதம்) உள்ளனர்.  இந்த 21ம் நூற்றாண்டிலும், 10-ஆண்டுகளில் 2 - 4 சதவிகிதமே பெண்களின் நிலை இந்த மிகவும் முக்கியமான அம்சத்தில் சீரடைந்துள்ளது எனலாம்.

மேற்கூறிய பிரித்தானிய நிலையை எமக்கு முதற்-பரிச்சயமான கீழைத்தேய ஆசியநாடாகிய இலங்கையுடன் ஒப்பிட்டுப்பார்ப்போம். 
இலங்கையின் சனத்தொகையில் 52 வீதமும் மொத்தவாக்காளரில் 56 வீதமும் பெண்களே எனினும் இன்றும் பாராளுமன்றத்தில் 6-சதவீதமும் மாகாண சபைகளில் 5-வீதமும் உள்ஊராட்சி சபைகளில் 2-வீதமுமே பெண்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர் என 2011 வீரகேசரி அறிவித்தது.

2005இல் Liverpool Friendly Society வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று பெண்களுக்கு நம்ப முடியாத ஒரு நல்ல செய்தியை வெளிக்கொண்டு வந்தது. அதாவது: 2025இல், இந்நாட்டின் செல்வத்தில் 100க்கு 60வீதம் பெண்கள் அடைவார்கள் என்றும் 45வயதுக்குக் குறைந்தவர்களிலும்; 65வயதுக்கு மேற்பட்டவர்களிலும் பெண்களே ஆண்களிலும் பார்க்கக் கூடிய தொகையில் மில்லியனர்களாக (கோடீசுவரர்களாக) இருப்பார்கள் என்றும் அவர்களின் ஆராய்ச்சி முடிவு பெண்களை ஊக்கியது.

மேலும் பெண்கள் மேற்படிப்பில் கூடுதலாக இப்போ இருப்பதாலும் தனிக்குடும்பம் நடத்தும் பெண்களின் தொகையும் பெண்களின் உத்தேச- புள்ளிக்கணிப்புச்-சீவியகாலமும் ஆண்களிலும் பார்க்கக் கூடியிருப்பதாலும் சொந்த வீடுகள் வைத்திருப்பவர்களில் பெண்கள் ஆண்களிலும் பார்க்கக் கூடிக்கொண்டே வருவர் எனவும் இவ்வாராய்ச்சியில் கூறியிருக்கிறார்கள்.

முன்னர் கூறியதைப் போல் பிரித்தானியாவில் 40-வருடங்களாகப் பெண்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மறியலிலும் அடைக்கப்பட்டு அரசின ருக்கு விண்ணப்பங்கள் விடாது சமர்ப்பித்து பத்திரிகைகள் வெளியிட்டு சிரமப்ப்பட்டிருந்தாலும் அரசாங்கத்தை நடத்திய ஆண்கள் பெண்களுக்கு சமஉரிமையும் வாக்குரிமையும் கொடுக்க அன்று மறுத்தனர்.  இப்பொழுது ஆண்களே இன்னும் 78-80 வீதத்திலுள்ள அரசினரே தாமாகப் பெண்களின் சார்பாகச் சட்டங்கள் இயற்றி எல்லா அரசாங்கத் துறைகளிலும் பெண்க ளுக்குச் சம உரிமைகளை ஊக்குகின்றர் எமது இந்த நல்ல நாட்டிலே!

முடிவில்: பெண்கள் இன்று வேறுவித அடிப்படை உரிமைகளுக்குப் போராடும் நிலையில் உள்ளார்கள். உ-ம்: தம் பிள்ளைகளைத் தமக்கு உத்தியோகம் சுகாதாரம் போன்றவற்றில் கூடிய வசதியான உசிதமான தற்காப்பான காலங்களிலேயே கற்பமுற்றுப் பெறும் முக்கிய முன்னுரிமை.

எனவே நாம் கோரும் உரிமைகள் காலத்துக்குக் காலம் மாறிக்கொள்ளும். அவ்வாறு நாம் இன மொழி சமய பாலின வயது ரீதியில்; வேறு வேறு உரிமைகளுக்குப் போராடும் போது உலக குடும்ப சமுதாயச் சமாதான நிலைகளைச் சடுதியாக மாற்றி எம் நாளாந்த வாழ்க்கைப் பிரவாகத்துக்குத் தீங்கு விளைவிக்காமல் எம் உரிமைகளைப் பெறும்போது மற்றையோரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மறக்கவே கூடாது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R