- இத்தகவல் இறுதி நேரத்தில் கிடைத்ததால் உரிய நேரத்தில் பிரசுரிக்க முடியவில்லை. ஒரு பதிவுக்காக பிரசுரிக்கின்றோம். - பதிவுகள்.காம் -
வணக்கம்! மணற்கேணி இருமாத இதழைத் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது 57 ஆவது இதழ் தயாராகி வருகிறது. தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்விதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை மணற்கேணி உருவாக்கியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
2010 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதல் இதழ் வெளியானபோது கதை, கவிதை என படைப்பிலக்கியத்துக்கும் இடம் அளித்திருந்தது. பின்னர் ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடும் ஒரு ஆய்விதழாகத் தன்னை மாற்றிக்கொண்டது.
எழுத்தாளர் முருகபூபதியின் 71ஆவது பிறந்ததினம் ஜூலை 13. அவருக்குப் பதிவுகள் இணைய இதழும் ,வாசகர்களும் தம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெட்சுமணன் முருகபூபதிக்கு இம்மாதம் 13 ஆம் திகதி 71 ஆவது பிறந்த தினமாகும். அதனை முன்னிட்டு, அவர் ஏற்கனவே எழுதிய நடந்தாய் வாழி களனி கங்கை நூல் Mystique of Kelani River என்ற தலைப்பில் இம்மாதம் கிண்டிலில் மின்னூலாக வெளியாகிறது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் திரு. நூர் மகரூப் முகம்மட் , ஏற்கனவே முருகபூபதியின் சில ஆக்கங்களை மொழிபெயர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. நூர் மகரூப் முகம்மட் , கவியரசு கண்ணதாசனின் வனவாசம் நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவராவார். நடந்தாய் வாழி களனி கங்கை கிழக்கிலங்கையிலிருந்து வெளியான அரங்கம் இதழில் முன்னர் தொடராக வெளியாகி, கொழும்பு குமரன் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. அரங்கம் இதழின் ஆசிரியர் திரு. சீவகன் பூபாலரட்ணம் தனது அணிந்துரையில் இந்நூல்பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் புகழ் பெற்ற நாவல்களிலொன்று 'அன்னா கரினினா' . இந்நாவலைத் தழுவித் தமிழில் 1953இல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் 'பணக்காரி' என்னும் பெயரில் திரைப்படமொன்றும் வெளியாகியுள்ளது. சித்தூர் நாகையா அன்னாவின் கணவன் கரீன் ஆக நடித்துள்ள திரைப்படத்தால் அன்னா வேடத்தில் நடித்திருப்பவர் அந்நாளைய 'கனவுக்கன்னி' டி.ஆர்.ராஜகுமாரி. இத்திரைப்படத்தில் அன்னாவின் காதலன் வெரோன்ஸ்கி என்னும் இளம் இராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருப்பவர் யார் தெரியுமா? பின்னாளில் எம்ஜிஆர், புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம் அறியப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன்தான்.
6
மேற்படி நடுக்கமூட்டும், ஆவிகளையும், ஆன்மாக்களையும் விட்டு இலக்கியத்துக்கு வந்தால், மரீனாவின் இலக்கிய அறிவும் கூட, வியக்கதக்கதாய் இருப்பதை கண்டு கிளிம் அதிசயிக்கின்றான். அது மிக மிக ஆழமானதாயும், சமயங்களில் உலக இலக்கிய வரலாற்றையே நாடி பிடித்து விடும் அளவுக்கு, பற்பல தளங்களுக்குள் ஊடுறுவுவதாகவும் அமைந்து விடுகின்றது.
இவளை ஒத்த, ஏனைய பலரைப் போலவே, பகுத்தறிவை அடியோடு வெறுக்கும் அவள், ஒரு சம்பாசனையின் போது, ‘இது சிறு குருவிகளுக்கான காலம் அல்ல’ என்ற தீர்ப்பை வழங்குவது கூட இத்தகைய ஓர் இலக்கிய அல்லது வாழ்நிலை நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்ட ஓர் கூற்றாகவே இருக்கின்றது. (1901 இல் கார்க்கியால் எழுதப்பட்டு, பலராலும் பெரிதும் புகழப்பட்ட ‘புயல் பறவையின் பாடல்’ (SONG OF THE STORMY PETREL) எனும் கதையையே மரீனா இவ்வாறு குறிக்கின்றாள்).
இதேப்போன்று, மறுபுறத்தில், நாவலின் இன்னுமொரு பாத்திரமான, மேலே கூறப்பட்ட, வெலண்டைனின், இலக்கியம் தொடர்பிலான கூற்றுக்களும், ஒரு புள்ளி வரை, மரீனாவின் பிரச்சினைக்குரிய இலக்கிய நிலைப்பாடுகளுடன் ஒட்டி செல்வதாகவே அமைந்துள்ளன. (இது குருவிகளுக்கான காலம் அல்ல என்பதுப்போல்)!
கிளிம்மை பொறுத்தவரை, டஸ்டாவஸ்கியின் அமைதியற்ற பாத்திரங்கள் கிளிம்மின் சிந்தையை ஆகர்சிப்பதாகத் தெரிகின்றது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நூற்றுக்கணக்கான, அல்லது ஆயிரக்கணக்கான பிம்பங்களை தனக்குள் தேக்கி தேக்கிச் சேமித்து வைத்திருக்கும் கிளிம்மிற்கு அவ்விம்பங்களே பிரச்சினைகளை தோற்றுவிக்கும் அடிப்படைகளில் ஒன்றாக, காலப்போக்கில் உருவெடுப்பதாய் உள்ளது.
- தற்போது 'காளி' குறும்படத்தையொட்டி எழுந்துள்ள சர்ச்சையை ஒட்டிய சர்ச்சையொன்று இச்சிறுகதையில் வரும் ஓவியனொருவனின் 'காளி' ஓவியத்துக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இக்கதை எழுதப்பட்டது 2015 ஆம் ஆண்டில் என்பது கவனத்தில் வைக்கத்தக்கது. -
வகுப்பில் கலைகளின் வெவ்வேறு மரபுகள் பற்றியும் அதன் சமூக வரலாற்று முக்கியத்துவங்களையும் பற்றியும் ஆசிரியர் சிக்கலான மொழிப்பிரயோகங்களை உபயோகித்து தன் அகராதி அறிவை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். இருக்கையில் நெளிந்தவாறு ஜன்னலுக்கு கீழே வெளியே தெரிந்த திறந்த வெளி சிற்பக் கூடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே சிற்பக்கலை பயிலும் மாணவர்கள் சிலர் சிற்பத்தை வடிவப்படுத்துவதில் மௌனமாக செயல்பட்டு வந்தார்கள். அவர்கள் கைவண்ணத்தில் அந்தக் கல் மெல்ல மெல்ல வடிவம் பெற்று புதிய உருவங்களின் சாயல் திகைந்துகொண்டிருந்தது. ஒரு சிற்பம் நிதானமாக உருவாகும் அதிசயத்தை அது எனக்குத் தந்துகொண்டிருந்தது.
வகுப்பு கலைந்தவுடன் நான் கீழே இறங்கி அந்த சிற்பக் கூடத்துக்குப் போனேன். அங்கே நான்கு மாணவர்கள் செதுக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த நான்குமாணவர்களில் ஸவீதாவும் ஒருவர். ஸவிதா இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சிற்பக்கலை மாணவி. பார்ப்பதற்கு சற்றுக் கருப்பாக இருப்பாள். மத்யப்பிரதேசத்திலிருந்து வந்திருந்த பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவள் அருமையான மாணவி. அவள் சிற்பம் செதுக்கும்போது அவளை கவனிப்பது மிக உற்சாகமாக இருக்கும். அவள் உடல் மனம் கைகள் அத்தனையும் அந்தக் காரியத்திலேயே கரைந்து போய்விட்டது போல் இருக்கும். சூழலை மறந்து சிற்பத்தை சுற்றிச்சுற்றி வந்து பல்வேறு கோணங்களில் அதன் ஒத்திசைவை சரி பார்த்தவண்ணம் அவள் முனைப்புடன் செதுக்கிக்கொண்டிருந்தாள். சுற்றிலும் இருந்த உயரமான மரங்களின் அடர்த்தியைத் தாண்டி தகிக்கும் வெய்யிலால் வழிந்த வியர்வையையும் பொருட்படுத்தாமல் அவ்வப்போது நெற்றியைத் துடைத்துக் கொண்டவாறு அவள் செயலில் ஈடுபட்டிருந்தாள்.
அ.செ.மு,.வின் 'புகையில் தெரிந்த முகம்' பற்றிச் சில வார்த்தைகள்!
மாயவாத சித்திரிப்பில் எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்' என்னும் தலைப்பில் ஜொஸப்பின் பாபா (துணைப் பேராசிரியர், புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை ) எழுதிய விமர்சனத்தை வாசித்தபோது தமிழகப் பண்ணையொன்றில் கால்நடை வைத்தியராகச் செல்லும் ஒருவரிடம் அங்கு காதற் பிரச்சினையால் காதலன் படுகொலை செய்யப்பட, தற்கொலை செய்துகொண்ட கற்பகம் என்னுமொரு பெண் தன் கதையைக் கூறுவதாகக் கதையோட்டம் செல்வதை அறிய முடிந்தது.
இறந்தவர்கள் தம் கதைகளைக் கூறி தம் கொலைகளுக்கான மர்மத்தைத் தீர்க்கும் வகையிலான படைப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. உலகப்புகழ் பெற்ற நாவல்களிலொன்றான நோபல் பரிசு பெற்ற துருக்கிய நாவலாசிரியரான ஓரான் பாமுக்கின் 'எனது பெயர் சிவப்பு' (My Name is Red) நாவல் இத்தகைய பாணிப் படைப்புகளிலொன்று. 'மாஜிக்கல் ரியலிசம்' மிக்க பின் நவீனத்துவப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆனால் இது போன்ற பாணியில் அமைந்த குறுநாவலொன்றினை ஐம்பதுகளிலேயே இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ளார் என்பது கவனத்துக்குரியது. அவர் அ.செ.முருகானந்தன். அக்குறுநாவல் சுதந்திரன் வாரவெளியீட்டில் தொடராக வெளியாகி, நவலட்சுமி புத்தகசாலை (136 செட்டியார் தெரு, கொழும்பு) பதிப்பகத்தால் 1950இல் வெளியிடப்பட்ட 'புகையில் தெரிந்த முகம்'.
இலங்கையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் நடேசன் அவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலப்பகுதியில் சென்னக்கு அடுத்திருந்த காஞ்சிபுரம் பகுதியில் ஒரு கிராமத்தில் அமைந்திருந்த பண்ணையில் வேலை செய்தபோது பெற்ற அனுபவங்களை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நாவல்தான் பண்ணையில் ஒரு மிருகம் . தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. இதன் முன்னுரையில் நடேசன் எழுதியிருக்கும் குறிப்புகளிலிருந்தே இந்த செய்தியையும் அறிய முடிகிறது. அந்தப் பண்ணையில் மேற்பார்வையாளராக அவர் வேலைக்கு வந்து சேர்வதுடன் கதை ஆரம்பிக்கிறது. ஒரு மிருக மருத்துவராக இருந்தும் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு அதே மருத்துவராக வேலை செய்ய சட்டச் சிக்கல்கள் உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
தொகுப்பின் முதல் கதை `சதிவிரதன்’. அறிவியல் சார்ந்த வித்தியாசமான படைப்பு. பல காரணங்களை முன்னிட்டு, உறைபனிக்காலங்களில் மனிதர்களை தொடர்ச்சியாக நான்குமாதங்கள் தூங்க வைக்கும் `உறங்குநிலைத்திட்டம்’ ஒன்றை பேராசிரியர் ராம், தன் உதவியாளர்களான மைக்கல், யூலி என்பவர்களுடன் சேர்ந்து முன்வைக்கின்றார். கதையின் முன்பகுதி அறிவியல் சார்ந்து பல விடயங்களை அலசி ஆராய்கின்றது. அறிவியலின் தாக்கம் மனித உணர்வுகளில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புகளைப் பின்பகுதி சொல்கின்றது. அல்லது கதையின் தலைப்பான `சதிவிரதனு’க்கானது. பேராசிரியர் கண்டுபிடித்த அறிவியல் அவருக்கே வினையாகின்றது. விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக, தன் உதவியாளர் யூலியின் மீது விழுந்துவிடுகின்றார். குரு அரவிந்தனின் கற்பனைக்கு ஒரு சபாஷ்.
இயற்கையோடு மழை குளிருக்கு இணைந்து பழக்கப்பட்ட விலங்கினங்கள், பறவையினங்கள் உறங்குநிலைக்குப் (Hibernating) போவதற்கும் – மனிதர்களுக்கு ஊசியைப் போட்டு செயற்கையாக உறங்குநிலைக்குப் போக வைப்பதற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. மனிதர்களை தொடர்ச்சியாக தூங்க வைப்பதன் மூலம் எதனைச் சாதிக்கலாம்? வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! உறங்குவதற்கு அல்லவே! பேராசிரியர் உறங்குநிலைத்திட்டத்தை விடுத்து குளிரிலும் உறைபனியிலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவாக ஏதாவது மருந்தைக் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாம் என்பது எனது கருத்து.
யூலை 10 நாவேந்தன் நினைவுதினம்
'நற்றமிழுக்கு ஒரு நாவேந்தன்" எனப் புகழ்பெற்றவர் நாவேந்தன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல்துறைகளிலும் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். தமிழகத்திலும், ஈழத்திலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவே நூலுருப்பெற்றன. நாவேந்தன் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நாடறிந்த நல்லதோர் பேச்சாளராகத் திகழ்ந்தவர். அற்புதமான எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்கவாதி. ஆளுமைமிக்க அதிபர். 'நாவேந்தன், தமிழகத்துத் தலைசிறந்த பேச்சாளர் வரிசையில் வந்த ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணாதுரை போன்றோரின் வழியில், இலங்கையில் அழகுதமிழில் எளிமையாகப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆற்றொழுக்காகப் பேசும்பாணியில் ஒரு முன்னோடியாக விளங்கியவர்.
தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் இளைஞர் அணி முக்கியஸ்தராகக் கட்சிக் கொள்கைகளைப் பரப்பித் தமிழ் உணர்வும் தமிழ்த் தேசியவாதமும் வட கிழக்குப் பகுதிகளில் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரவும் வகை செய்தார். சுதந்திரன் பத்திரிகையில் ஆஸ்தான எழுத்தாளராகப் பல புனைபெயர்களில் பொருள் மிகுந்த கருத்துக்களை அள்ளித் தெளித்தவர். இவர் நடத்திய 'சங்கப்பலகை" என்ற பத்திரிகையில் 'நக்கீரன்" என்ற பெயரில் நாவேந்தன் எழுதிக் குவித்தவை எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் முன்வைத்த வாதங்களையெல்லாம் தவிடுபொடியாக்கும் தர்க்க முறையான வாதத்திறன் கொண்டவையாக அமைந்திருந்தன. அரசியல் எதிராளிகள் நாவேந்தன் மீது கொண்டிருந்த அச்சமும் நியாயமானதே.
"தமிழ்த் தேசிய வாதம் இன்று உண்மையாக வளர்ச்சியுற்று அகில உலகக் கவனத்தை ஈர்த்ததுடன் தென்னாசியாவில் ஒரு உறுதியான கருத்திற் கொள்ள வேண்டிய சக்தியாக வளர்ந்துள்ளதென்றால் அதில் நாவேந்தனுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு." இவ்வாறு தனது கல்லூரிக் காலம் முதல் நாவேந்தனை நன்கறிந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னுரை
கல்வி அறிவின் கண் சிறந்து விளங்கும் பெண்பாற்புலவர்கள் அகப்பாடல்களில் மிகுதிபட பெண்மையின் மனஉணர்வினை எடுத்தியம்புவதில் ஆணிவேராகத் திகழ்ந்துள்ளனர் என்றால் மிகையாகாது. பெரும்பான்மை ஆண்களை விட பெண்களே அதிகஅளவில் பாதிப்படைவதுண்டு. ஆண்கள் தனது மனவுணர்வுகளை எளிதில் எடுத்துரைப்பது இல்லை. ஆனால் பெண்ணினமோ மனச்சுமை குறைய பிறரிடம் புலம்பி ஆறுதல் அடைவர். தன்னம்பிக்கை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் இளகும் பண்புள்ளம் பெண்ணினத்திற்கே உரியதாகும். சங்ககாலத்தில் தலைவி தலைவனது பிரிவை எண்ணி வருந்தும் தவிப்பினை ஒரு பெண்ணாக உள்ளுணர்ந்து புலவர்கள் பாடியிருப்பது போற்றுதலுக்குரியதாகும். குறிப்பாக, நற்றிணைப் பாடலைப் பாடிய பெண்பாற்புலவருள் சுமார் 21க்கு மேற்பட்டோர் தன்னிலை எண்ணிப் பாடிய பாங்கினை அறியலாம். அதாவது ஒரு பெண்ணிற்கு ஏற்படும் துயரினை வேறொரு பெண் அறிந்து தான் அடைந்த துயராகக் கருதி வெளிப்படுத்தும் தன்மையினைப் பின்வரும் நற்றிணைப் பாடல் வழிக் காண்போமா.
பொழுது கண்டு புலத்தல்
காலமாகிய பருவம் கண்டு தனிமையில் வருந்துதல் இருபாலாருக்கும் பொதுவான ஒன்றாகும். அக்காலத்தில் தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வாராமையால் தலைவி தனிமையில் ஏங்கி வருந்துவாள். பொழுது (பிரிவு) கண்டு பொறுத்துக் கொள்ளாத தலைவி அவனை நினைத்து மனவேதனைக்கு ஆட்படுகின்றாள். தலைவனது நினைவில் உணவின்றி, உறக்கமின்றி துன்புறும் காட்சியினை நிறைய சங்கப்பாடல்கள் பதிவுசெய்துள்ளன. உதாரணமாக, வறண்ட பாலை நிலத்தில் பொருள்வயிற் பிரிந்தோனை எண்ணி புலம்பும் காட்சியை நல்வெள்ளியார் தன் மனஉணர்வோடு இயைத்து பின்வருமாறு பாடுகிறார்.
சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT (ஓரினப்புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் முதலியவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு) பதாகையைப் பிடித்திருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது. இந்து மதக் கடவுள் காளிமாதாவை இந்தச் சித்தரிப்பு அவமதிப்பதாய் ஆவணப்பட இயக்கு னரும், அதில் நடித்திருப்பவருமான கவிஞர் லீனா மணிமேகலை ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்களில் பேசுபொருளாகியிருக்கிறார். அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டிருக் கின்றன. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள்.
படைப்புச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களுக்கு அடி பணிய மாட்டேன் என்று கவிஞர் லீனா மணிமேகலை கூறியிருக்கிறார். கனடாவில் தன் மீது வந்திறங்கும் காளி பல இடங்களை அங்கு சுற்றிப் பார்த்து, பல மனிதர்களோடு பேசிப் பழகி ‘அன்பு செழிக்கவேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்துவதாகவே தன் படம் அமைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ‘என் உயிரே போனாலும் பரவா யில்லை என்ற விதமாக அவர் பேசியிருப்பது - கொலை மிரட்டல் வந்ததுபோல் கருதவைக்கிறது. அப்படி வராத பட்சத்தில் இந்த வரி தேவை யில்லை என்று தோன்றுகிறது.
தமிழ் இணையக் கழகம் - தமிழ்நாடு & தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் - இலங்கை இணைந்து நடத்திய “தமிழ் இணையம் 100” நிகழ்வை 2-7 -2022 சனிக்கிழமை சென்னை, அண்ணா நூலக கட்டிட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் தொடக்கமாக தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் அமைப்பின் செயலாளர் சி. சரவணபவானந்தன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து நிகழ்வின் நோக்கவுரையைத் தமிழ் இணைய கழகத்தின் தலைவர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் அமைப்பின் நோக்கம் குறித்தும் இந்த நிகழ்வின் சிறப்புக் குறித்தும் பேசினார். நிகழ்வின் தொடக்கமாக தமிழ் இணையக் கழகம் நடத்திய இணைய வழி உரையாடல் 100 நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 18 கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கட்டுரையை நூலாக்கம் செய்து ஆய்வுக்கோவையாக அமெரிக்காவில் வருகைபுரிந்திருந்த மணி மணிவண்ணன் அவர்கள் வெளியிட சென்னையின் இயங்கிவரும் இந்திய அரசின் தேசியத் தகவலியல் மையத்தின் துணைத் தலைமை இயக்குநரும் முனைவர் இ இனிய நேரு அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தத்யயேவ்ஸ்கி நூல்களுக்குப் புறக்கணிப்பா?
அண்மையில் சாப்டர்ஸ் புத்தகக் கடைக்குச் சென்றிருந்தபோது ஒன்றை அவதானித்தேன். வழக்கமாக ருஷ்ய எழுத்தாளர் தத்யயேவ்ஸ்கியின் அனைத்துப் புத்தகங்களையும் அங்கு காணலாம். ஆனால் இம்முறை பெயருக்கு ஒன்றிரண்டே காணப்பட்டன.
தற்போது நடைபெறும் ருஷ்ய-உக்ரைன் யுத்தம் காரணமாக மேற்கு நாடுகள் ருஷ்ய பொருட்கள் மேல் ருஷ்ய சொத்துகள் மேல், ருஷ்ய மனிதர்கள் மேல் என்று பல்வகைத்தடைகளை விதித்து வருவதன் நிலையோ சாப்டர்ஸில் தத்யயேவ்ஸ்கி நூல்கள் மீதான இந்தப் புறக்கணிப்பும் என்றும் எண்ணம் தோன்றாமலில்லை.
'ட்வீட்டர்' (varcharian என்பவரின் 'ட்வீட்') தகவலொன்றின்படி ஸ்வீடனிலுள்ள நீதிமன்றமொன்று தத்யயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான 'குற்றமும் தண்டனையும்' நாயகன் Raskolnikov , நாவலில் செய்த கொலைக்குத் தண்டனையாக அவனுக்கு ஆயுட்காலத்தண்டனை விதித்துள்ளது. இத்தனைக்கும் தத்யயேவ்ஸ்கி அன்றிருந்த ருஷ்ய அரசால் சைபீரியாவில் சிறைவைக்கப்பட்ட ஒருவர். இச்செய்தியின் உண்மை பொய் தெரியுவில்லை.
ஓவியர் மணியத்தின் வாத்தியாரின் 'மாட்டுக்கார வேலன்' 'கட் அவுட்'டின் தெளிவான புகைப்படமொன்றினை அண்மையில் இணையத்தில் கூகுள் தேடலில் கண்டேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இதனை இணையத்தில் பகிர்ந்துகொண்டவர் யாரென்பது சரியாகத்தெரியவில்லை. அவருக்கும் என் நன்றி.
தமிழ்நாடு புதுக்கோட்டையில் பெருங்காளுர் கிராமத்தில் வைத்திலிங்கம் பிள்ளை – அமிர்தம்மாள் தம்பதியின் புதல்வனாக அகிலாண்டம் என்ற இயற்பெயருடன் பிறந்தவர், பின்னாளில் காந்தீயவாதியாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் வளர்ந்தவரான எழுத்தாளர் அகிலன் அவர்கள் - பிறந்த நூற்றாண்டு இந்த வருடம் ஜூன் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இலங்கையிலும் இதே திகதியில் 1927 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் டொமினிக்ஜீவா என்ற மல்லிகை ஜீவா.
- அண்மையில் வெளியான எழுத்தாளர் அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்' நாவல் பற்றிய எனது விமர்சனம் ஜூலை மாதக் கணையாழி இதழில் வெளியாகியுள்ளது. கணையாழி சஞ்சிகை தற்போது மின்னிதழாக மட்டும் வெளியாகின்றது. மிகக்குறைந்த கட்டணத்தில் கணையாழிக்கான ஆண்டுச் சந்தாவைச் செலுத்த முடியும். அதற்கான இணையத்தள முகவரிகள்: 1. கணையாழி - https://kanaiyazhi.com & 2. மக்ஸெச்டர் - https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Celebrity/All-Issues -
தமிழில் வரலாற்றுப் புனைவுகள் என்றதும் எமக்கு நினைவுக்கு வருபவர்கள் கல்கி, சாண்டில்யன்,ஜெகசிற்பியன் , அகிலன் , நா.பார்த்தசாரதி மற்றும் இவர்களையொட்டிக் கற்பனாவாதப் புனைவுகளாக வரலாற்றுப் புனைவுகளை எழுதியவர்கள். இவை பூரணமான வரலாற்றுப் புனைவுகள் அல்ல. வரலாற்றுச் சம்பவங்களை, ஆளுமைகளை உள்வாங்கிப் பின்னப்பட்ட, வெகுசன வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்திடப் பின்னப்பட்ட கற்பனாவாதப்புனைவுகள். இவற்றிலிருந்து சிறிது வேறுபட்டது பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்', 'மானுடம் வெல்லும்' போன்ற நாவல்கள். மிக அதிக அளவில் கிடைக்கப்பெற்ற வரலாற்றுத்தகவல்களின் அடிப்படையில் ஒரு காலகட்டத் சேர்ந்த சாதாரண மானுடர்களின் வாழ்வை வைத்துப் பின்னப்பட்ட புனைவுகள் அவை. இவ்வகையில் ஆட்சியாளர்கள், அவர்கள் வரலாறுகளைத் தவிர்த்துச் சாதாரண மானுடர்களின் வாழ்வை விபரிக்கும் மிகச்சிறந்த வரலாற்று நாவலொன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது. அதுதான் இளங்கோவடிகளின் 'சிலப்பதிகாரம்' அக்காலத்திலிருந்த நாவலையொத்த வடிவமாகக் காப்பியத்தைக் கூறலாம். எனவே காப்பியமாகச் சிலப்பதிகாரம் உருவாக்கப்பட்டது. அக்காப்பியம் அக்கால மாந்தர் வரலாற்றை, நிலவிய சமூக அமைப்பை, இருந்த நகர அமைப்பை, இருந்த ஆட்சி அமைப்பை, நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளை, தொழிற்பிரிவுகளை எனப் பலவற்றைப்பற்றிய தகவல்களைத் தருகின்றது. சிலப்பதிகாரத்தையொட்டி சங்ககால மானுடர் வாழ்வை மையமாக வைத்து எழுத்தாளர் நா.பார்த்தசாரதி வெகுசன வாசகர்களுக்காகச் சிறந்தொரு கற்பனாவாத வரலாற்றுப் படைப்பாக 'மணிபல்லவம்'என்னுமொரு நாவலைத் தந்துள்ளார். நான் வாசித்த வரலாற்று நாவல்கள் பற்றிய நினைவுகளெல்லாம் சிந்தையிலோடி மறைந்தன எழுத்தாளர் அண்டனூர் சுராவின் அண்மைக்கால நாவலான , 'சந்தியாப்' பதிப்பக வெளியீடாக வெளியான 'தீவாந்தரம்'நாவலை வாசித்தபோது.
எழுத்தாளர் அண்டனூர் சுரா அண்மைக்கால எழுத்தாளர்களில் தன் படைப்புகள் மூலம் , அவற்றுக்குக் கிடைத்த விருதுகள் மூலம் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவராக இருப்பவர். கதை, கட்டுரை, நாவல் என்று இவரது இலக்கியப்பங்களிப்பு பரந்து பட்டது. மேலோட்டமாக எழுதிக்குவிப்பவர்களிலொருவரல்லர். ஆழ்ந்து சிந்தித்து, ஆழமாகத் தகவல்களைத்திரட்டி எழுதுபவர்களிலொருவர். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இவரைபற்றி இவரது முத்தன் பள்ளம் நாவலுக்கான அணிந்துரையில் "அழகிய பெரியவன், எம்.கோபாலகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், கீரனூர் ஜாகிர்ராஜா, வா.மு.கோமு, செல்லமுத்து குப்புசாமி எனும் நீளும் தீவிர நாவலாசிரியர் வரிசையில் மற்றுமோர் படைப்பாளி என்று." என்று குறிப்பிட்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 'தீவாந்தரம்' நாவலை வாசித்தபோது இச்சிந்தனை மேலும் உறுதிப்பட்டது.
இலங்கை இளம் மலையகத் தமிழ்க் கவிஞர்களுக்கான கவிதைத்தொகுப்பு நூலிற்குக் கவிதைகள் வரவேற்பு! இறுதி நாள் – 10.07.2022 வரை!
அன்புடையீர் வணக்கம்! இலங்கையின் மத்தியப் பகுதியில் வாழும் இளம் மலையகத் தமிழ்க் கவிஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு சிறு முயற்சியாக கவிதைத் தொகுப்பு நூல் ஒன்று தமிழகத்தில் வெளியாகவுள்ளது. அதில் மலையகத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளர்கள் தத்தம் கவிதைகளை எழுதி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் ISBN எண்ணுடன் நூலாக வெளியிடப்படும்.
1. உடலின் மனம்
பாலியல் தொழிலாளிதான் அவள்
அண்ணே அண்ணே என்று பகலில் விளிப்பவர்களோடு
அன்றன்றைய இரவுகளில் நெடுஞ்சாலை மேம்பாலத்தடி அதிகாலையிருளில்
இடுக்குமுடுக்கில் படுத்தெழவேண்டிய பிழைப்பு
அவசர அவசரமாய் ‘சோலி’ முடிப்பவர்கள்
அவளளவில் அருளாளர்கள்.
அன்னாரொருவரிடமிருந்து கிடைத்த பணத்தில்
அடுத்த வீட்டில் இரண்டு மூன்று மணிநேரங்கள்
பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுவந்திருக்கும்
நான்கு வயதுமகனுக்கும் ஆறு வயது மகளுக்கும்
தெருவோரக்கடையிலிருந்து டீ பன் வாங்கிக்கொண்டு விரைந்தாள்
வழியில் குறுக்கிட்ட வாடிக்கையாளரொருவன்
வரச்சொல்லி யழைக்க
’விழித்துக்கொண்டு காத்திருப்பார்கள் குழந்தைகள்’
எனச் சொல்லி கையிலிருந்ததைக் காட்ட
”அட, வாடீ” என்று இடுப்பை வளைத்து இழுத்தவன் கையை
வெடுக்கென கடித்து அகன்றவளின்
ஒவ்வொரு பல்லும்
பிளேடாய்
பிச்சுவாக்கத்தியாய்
அருவாமணையாய்
அரிவாளாய்….
ஹோரேஸ் ஹேமன் வில்சன் ஒரு ஆங்கில 'ஓரியண்டலிஸ்ட்' ஆவார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தின் முதல் போடன் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் (St Thomas’ Hospital) மருத்துவம் பயின்றார். மேலும் 1808 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வங்காள ஸ்தாபனத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக இந்தியா சென்றார். பொது அறிவுறுத்தல் குழுவின் செயலாளராக பல ஆண்டுகள் செயல்பட்டு கல்கத்தாவில் உள்ள சமஸ்கிருத கல்லூரியின் படிப்பை மேற்பார்வையிட்டார்.
“பூர்வீகப் பள்ளிகளில் ஆங்கிலத்தை மட்டுமே பயிற்றுவிக்கும் ஊடகமாக இருக்க வேண்டும்” என்ற முன்மொழிவை கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவராக இருந்தார். 1832 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் வில்சனை சமஸ்கிருதத்தின் புதிதாக நிறுவப்பட்ட போடன் நாற்காலியின் முதல் ஆக்கிரமிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மார்ச் 6, 1832 இல் 'தி டைம்ஸில்' ஒரு நெடுவரிசை நீள விளம்பரத்தை வெளியிட்டார். 1836 இல் கிழக்கிந்திய கம்பெனியின் நூலகராக நியமிக்கப்பட்டார்.
கிழக்கிந்திய கம்பெனி கல்லூரியிலும் கற்பித்தார். 10 ஏப்ரல் 1834 இல் அவர் லண்டன் ராயல் சொசைட்டியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக்கின் பரிந்துரையின் பேரில் வில்சன் 1811 ஆம் ஆண்டு வங்காளத்தின் ஆசிய சங்க செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கல்கத்தாவின் மருத்துவ மற்றும் உடலியல் சங்கத்தின் உறுப்பினராகவும், Royal Asiatic Society இன் உறுப்பினராகவும் இருந்தார். வில்சன் இந்தியாவின் பண்டைய மொழி மற்றும் இலக்கியங்களில் ஆழ்ந்த ஆர்வம் காட்டினார். அவர்; சமஸ்கிருதம்-ஆங்கில அகராதியை (1819) பூர்வீக அறிஞர்களால் தொகுக்கப்பட்ட பொருட்களிலிருந்து தயாரித்தார். ருடால்ஃப் ரோத்(சுரனழடக சுழவா) மற்றும் ஓட்டோ வான் போட்லிங்க்(ழுவவழ எழn டீழாவடiபெம)ஆகியோரால் இந்த வேலை முறியடிக்கப்பட்டது. அவர்கள் வில்சனுக்கான தங்கள் கடமைகளை அவர்களின் சிறந்த படைப்பின் முன்னுரையில் வெளிப்படுத்தினர்.
இன்று எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டுப் பிறந்த தினம்.அதனையொட்டி ஓவியர் புகழேந்தி தனது முகநூற் பக்கத்தில் தான் வரைந்த அகிலனின் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தார். அதனை நன்றியுடன் இங்கு மீள்பகிர்தல் செய்கின்றேன்.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மல்லிகை சஞ்சிகைக்கும், டொமினிக் ஜீவா அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. சமூக, அரசியற் செயற்பாட்டாளரான அவர் தனி மனிதராக எழுத்தாளர்களை அரவணைத்து மல்லிகையைக் கொண்டு வந்தார். அதன் இதழ்களூடு எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக்கொடுத்தார். காத்திரமான பங்களிப்பு. கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன மல்லிகை இதழ்கள்; வளம் சேர்த்தார்கள் மல்லிகையில் எழுதிய எழுத்தாளர்கள். இன்னுமொரு விடயத்துக்காகவும் மல்லிகையின் பங்களிப்பு முக்கியமானது. அது: இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினை வெளிப்படுத்தும் ஆவணங்களாக இருந்தன மல்லிகை இதழ்கள்.
மாணவர்கள் மத்தியிலும் மரவள்ளி விதைபின் தேவையை விதைக்கிறோம். இன்றைய தினம் கிளிநொச்சி மலையாளபுர கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு எமது வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய அமைப்பின் ஊடாக மரவள்ளி தடிகள் வழங்கி வைக்கப்பட்டன.இந்த செயல்பாட்டை நடைமுறைப்படுத்திய சமூக செயல்பாட்டாளர் சகோதரர் துளிர் தீபன் அவர்களுக்கும் ஏனைய சகோதரர்களுக்கும் எமது அமைப்பின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறிய சிறிய முயற்சிகளை விழிப்புணர்வாக விதைத்து வருகிறோம் நீங்களும் உங்களுக்குத் தோன்றும் வழிமுறையில் விதைத்து வாருங்கள்.