நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது, இதுவரை இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்த பாரம்பரிய அரசியல்வாதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிப்பொறுப்பை மார்க்சியச் சிந்தனைகள் மிக்க கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் 'தேசிய மக்கள் சக்தி' வேட்பாளரான அனுரா குமார திசாநாயக்கவிடம் கையளித்திருக்கின்றார்கள் மக்கள். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துகள்.

தமிழ் மக்கள் பெருமளவில்  கலந்து கொண்டு இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் ஏனைய சிறுபான்மையின மக்கள் மத்தியிலும் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு. புதிய இளந்தலைமுறையினர் இவ்வின மக்களின் அரசியலைக் கையெடுக்கும் வேளை ஏற்பட்டிருக்கின்றது.  அரசியல்வாதிகள் இன, மத, மொழி வாதங்கள் மூலம்  தம் அரசியல் நலன்களுக்காக மக்களைப் பிரித்து வைத்ததே நாட்டின்  சிறுபான்மையின மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்குக் காரணம்.  தனது பிரச்சாரங்களில் மத வாதம், இனவாதம் போன்ற பிரிவுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றார் புதிய ஜனாதிபதி. அவர் அதனை நடைமுறைப் படுத்துவார் என்று எதிர்பார்ப்போம். சவால் நிறைந்த எதிர்காலம் அவருக்காகக் காத்திருக்கின்றது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றியடையவார் என்று நம்புவோம். வாழ்த்துகிறோம்.

தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் சிந்தனைகள் சமூக, அரசியல் , பொருளியல் சூழல்களுக்கு ஏற்ப மாறிவிட்டிருப்பதை உணர்ந்து அவற்றுக்காகச் செயற்பட வேண்டியதையும் நடந்த தேர்தல் உணர்த்தியிருக்கின்றது. தம் நலன்களுக்காகத் தீர்வுகளை மக்கள் மத்தியில் திணித்தால் அவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இரண்டு தடவைகள் ஆயுதப் புரட்சிகள் மூலம் நாட்டின அமைப்பை  மாற்றப் போராடிய கட்சி மக்கள் விடுதலை முன்னணி. அக்கட்சியினர் தம் கட்சியைப் பாராளுமன்றக் கட்சிகளில் ஓன்றாகக் கட்டமைத்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றார்கள். அதுவும் முக்கிய சாதனைகளில் ஒன்று, அவர்களின் விடா முயற்சி பலனைப் பெற்றுத் தந்திருக்கின்றது.

தேர்தல் முடிவு பற்றிய தனது டிவிட்டர் செய்தியில் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க 'சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமைதான் புதிய தொடக்கத்தின் அடித்தளமாக அமையும். நாம் நாடும் புதிய மறுமலர்ச்சி இதன் மூலமே சாத்தியமாகும். நம் எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம்! என்று கூறியிருக்கின்றார். அது நம்பிக்கை தரும் கூற்று.

ஊழலற்ற ஆட்சிக்காக, பொருளாதாரச் சீரமைப்புக்காக, இன, மத, பேதமற்ற நாடொன்றுக்காக மக்கள் அநுரா குமார திசாநாயக்காவுக்கு வெற்றிக்கனியைக் கையளித்துள்ளார்கள். அதை உணர்ந்து தன் ஆட்சியை அவர் கொண்டு நடத்துவார் என்று நம்புவோம். வாழ்த்துகள்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R