Sidebar

பதிவுகளில் தேடுக!

பதிவுகள் -Off Canavas

காலத்துக்காலம் தென்னிலங்கையிலிருந்து இனவாதத்தைக் கக்கும் அமைச்சர்கள் தம் சுய  அரசியல் இலாபங்களுக்காக உருவாகிக்கொண்டு வருவதை வரலாற்றினூடு பார்த்து வருகின்றோம்.  முன்னாள் கடற்படை அதிகாரியும், அமைச்சருமான சரத் வீரசேகரா இன்றுள்ள சிறில் மத்தியூவாகத் தன்னைத் தென்னிலங்கை அரசியலில் கட்டமைத்து வருன்றார்.

அண்மையில் தனது இந்திய விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் தரை வழி இணைப்பை உருவாக்குவது பற்றிய தனது ஆலோசனையை வெளியிட்டுள்ளதாகச் செய்திகள்  வெளிவந்தன். இது பற்றிக்குறிப்பிட்ட சரத் வீரசேகர முட்டாள்தனமாக அது இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

இலங்கையைப்பொறுத்தவரையில் இந்தியா ஏற்கனவே வலுவாகக் காலூன்றி விட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல, சீனாவும்தான்.  அது அவரது கண்களுக்குத் தெரியவில்லை. இந்தியா உறுதியாக தன் பாதுகாப்புக்கு இலங்கைக்கான தரைவழி இணைப்பு அவசியமென்றி முடிவு செய்தால்,  இலங்கை விரும்பாவிட்டாலும் இலங்கைக்கான தரை வழி இணைப்பை உருவாக்கியே தீரும். ஒரு கணம் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவான வரலாற்றை நினைத்துப் பாருங்கள். முதலில் படகுகுகளில் உணவுப்பொதிகளை அனுப்பினார்கள். படகுகளை இலங்கைக் கடற்படையினர் திருப்பி அனுப்பினர். அதனை வெற்றிச் செயலாகத் தென்னிலங்கைப் பத்திரிகைகள் கொண்டாடின. அடுத்தநாளே விமானத்தில் வந்து உணவுப்பொதிகளை வீசியது இந்திய விமானப்படை. வாலைச்சுருட்டிக்கொண்டு கிடந்தது சரத் வீரசேகரா பணியாற்றிய  இலங்கை விமானப்படை.  இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் காலடியில் சரணடைந்தார் 'தம்'மிஷ்டர் ஜே.ஆர். இது வரலாறு. சரத் வீரசேகரா கூக்குரலிடுவதற்கு முன்னர் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

இன்று மீண்டும் சரத் வீரசேகரா சிங்கள தேசியக்கூக்குரல் இடுகின்றார். சிங்களத் தேசியமோ, தமிழ்த்தேசியமோ நட்புரீதியில் அமைந்திருக்க வேண்டும். பகைமை மிக்கதாக வளர்க்கப்படுமானால் இலங்கையின் அமைதி சீர்குலைந்து விடும். அதுதான் முன்பு நடந்தது.

தெற்கு , வடக்கும்,  கிழக்கு, மேற்கு, மத்தி என நாட்டின் எந்தப்பகுதியென்றாலும் மக்கள் இனவாதத்தேசியம் உருப்பெறுவதை அனுமதிக்கக் கூடாது. இனவாதமற்ற தேசியம் அவசியமானது. இனங்கள் தம்மைப்பற்றி அறந்து கொள்ள , உணர்ந்து கொள்ள அது அவசியமானது. ஆனால் அது இனவாதத்தேசியமாக ஒருபோதும் மாறி விடக்கூடாது.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R