புதைகுழிகளாக மாறிய பள்ளிமைதானங்கள்! - குரு அரவிந்தன் -
இது எந்த நாட்டில் நடந்தது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எங்களுக்குப் புகலிடம் தந்து எங்களை அரவணைத்த கனடா நாட்டில்தான் நடந்திருக்கின்றது. புதைகுழிகள் என்றதும் எங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தாயகத்தில் செம்மணிப் புதைகுழிதான். செம்மணியைத் தொடர்ந்து தாயகத்தில் ஏராளமான புதைகுழிகள் வரலாற்றில் பதியப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டன. யுத்த சூழலில் இன்னும் அனேகமான புதைகுழிகள் அடையாளம் காட்டப்படாமலே இருக்கின்றன. இரண்டு தலைமுறை போனால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பில் எல்லாமே மூடிமறைக்கப் பட்டிருக்கின்றன. காலம்கடந்தாலும், மறைக்கப்பட்ட யுத்தகாலப் புதைகுழிகள் ஒருநாள் தோண்டப்படும் போது பல உண்மைகள் தெரிய வரலாம். ஆனால் இதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதற்குக் குற்றம் புரிந்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தினம் தினம் எதிர்கொள்ளும் வலியும், வேதனையும் யாருக்கும் சொல்லிப் புரியப்போவதில்லை. சொந்த மண்ணைப் பறிகொடுத்த, எங்களுக்கு ஏற்பட்ட அதே வலியைத்தான் இங்கே உள்ள முதற்குடி மக்களும் எதிர் கொள்கிறார்கள். ஆனால் இங்கு ஜனநாயக கோட்பாடுகள் பின்பற்றப்படுவதால், உண்மையை ஓரளவாவது கண்டறிய முடிகின்றது. 2008 ஆம் ஆண்டு கனடா பிரதமர் இப்படி நடந்தற்காக முதற்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். தற்போதய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கத்தோலிக்க திருச்சபை இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கனடிய மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இழப்பு இழப்புத்தானே!


தமிழகச் சட்ட மன்றத்தேர்தலில் திமுக கூட்டணி இதுவரை வெளியான முடிவுகளின்படி 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியிருக்கின்றார். இத்தேர்தலின் மூலம் ஸ்டாலினின் நீண்டநாட் கனவு நனவாகியிருக்கின்றது. தேர்தலில் அ.தி.மு.க தோற்றாலும் ,வலிமையான எதிர்கட்சியாக உருவாகியிருக்கின்றது. அதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் தனது தலைமையைத் தப்ப வைத்துள்ளார்.
இன்று (ஏப்ரில் 24) டேவிட் ஐயா (எஸ்.ஏ. டேவிட் ஐயா) அவர்களின் பிறந்ததினம். அவரது பிறந்த தினத்தையொட்டி 'டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் (1924 - 2015) ' என்னும் தலைப்பில் காணொளியொன்று உருவாகியுள்ளது. 2012இல் உருவான காணொளி. இரு பகுதிகளைக் கொண்டது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் (யோகன் கண்ணமுத்து) அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் உருவான காணொளியை இயக்கியவர் டி. அருள் எழிலன். காணொளிக்காக டேவிட் ஐயாவை நேர்காணல் செய்தவர் எழுத்தாளர் சயந்தன்.
யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி படகர் இன மக்களின் பூர்வகுடித் தன்மைக்குரிய, அவர்களின் பல்வேறு தனிக்கூறுகளுள் நீலகிரியைப் பற்றிய நிலவியல் அறிவும் இன்றியமையான ஒன்றாகும். நீலகிரியில் உள்ள பெரும்பான்மையான இடங்கள் படகர்களால் பெயரிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பெயர்கள் படகர்களின் தனித்திராவிட மொழியான படகு மொழியின் தொன்மையினை விளக்குவனவாகத் திகழ்கின்றன.

Antonio Gramsci தென் இத்தாலியின் ஸார்டினியாவை சேர்ந்தவர். நெப்போலியனின் பிரெஞ்சு பேரரசு தகர்ந்த பின் சுதந்திரமடைந்த ஸார்டினியா 1861 ல் ஐக்கிய இத்தாலியின் பகுதியாக சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய பிற்போக்கின் குறியீடாக, மூர்க்கத்தனமான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பெயர்போன நிலப்பிரபுத்துவ முறையையும் ஒடுக்குமுறை யந்திரங்களையும் கொண்டிருந்த அரசின் கீழ் இருந்தது. பிரான்ஸ்கோ கிராம்ஷி, ஜியுஸெப்பினா மார்ஸியாஸ் இணையருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவரே அந்தோனிய கிராம்ஷி ஆவர்.1897 ல் நடந்த இத்தாலிய நாடாளுமன்ற தேர்தலின் போது பிரான்ஸ்கோ கிராம்ஷி ஊழல் செய்த ஒருவரை எதிர்த்து போட்டியிட்ட இளம் வேட்பாளரை ஆதரித்த காரணத்தால், கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்தார் என்ற பொய்யான வழக்கு தொடரப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு குழந்தைகளுடன் அந்தோனிய கிராம்ஷியின் தாயார் மிகவும் மோசமான வறுமையில் இரவுபகல் ஓய்வொழிச்சலின்றி உறக்கமின்றி ஆடைகள் தைத்து விற்று பணம் ஈட்டுகிறார். கிராம்ஷி சிறையில் இருக்கும்போது தாயார் பற்றி கீழ்க்கண்டவாறு நினைவு கூறுகிறார். 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









