முதல் நாளிரவு நேரம் பிந்திப் படுக்கைக்குச் சென்றதால், அடுத்த நாள் ஆறுதலாக விழித்தெழுவது என்பதுதான் திட்டம். ஆனால், ரொறன்ரோ நேரத்தைவிட ஒரு மணி நேரம் முந்தியதாக இருந்த Aruba நேரம் என்னை ஏழு மணிக்கு முன்பாகவே விழிக்கச்செய்து விட்டது. ‘மீராவின் தம்பி’, ‘சிறகடித்துப் பறப்போம்; என்ற என் இரண்டு சிறுவர் நூல்கள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த வீடியோவைத் தனுசன் அனுப்பியிருந்தார். நேரத்துடன் எழும்பியதால் அதனை உடனேயே பார்க்க நேரமிருந்தது. அதனூடாக முன்பின் தெரியாத இரு ஆசிரியர்கள் என் நூல்கள் பற்றிப் பார்வையைப் பகிர்ந்ததைக் கேட்கமுடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை முழுமையாகப் பார்த்துமுடித்ததும் அது பற்றி ஒரு குறிப்பெழுதவேண்டும் போலிருந்தது. உடனடியாக எழுதி, தனுசனுக்கு அனுப்பிச் சரிபார்த்துவிட்டு, வீரகேசரி வாரஇதழுக்கு அனுப்பினேன்.

எங்களின் சுற்றுலாவை Arubaஇன் பிரபல்யமான தேசிய பூங்காவான Arikok National Parkஇல் ஆரம்பிப்பது என முடிவெடுத்திருந்தபடி, மகள் எழுந்ததும் அதனைச் செயலாக்கினோம். Parkஇன் வரவேற்புப் பகுதியில் இருந்தோர் Four-wheel drive இல்லாமல் Parkஐ முழுமையாகப் பார்க்கமுடியாதென்றனர். சரி பார்க்கக்கூடியதைப் பார்ப்போமென முதலில் அங்கிருந்த குகைகளுக்குச் சென்றோம். 310 அடி அகலமான Fontein Cave இயற்கையின் ஓர் அதிசயமாக நின்றிருந்தது. மேலிருந்து தொங்கும் icicles போன்ற அமைப்புக்களும், கீழிருந்து கூம்பு வடிவில் மேலெழுந்து நிற்கும் அமைப்புக்களும் (stalagmites & stalactites) நிறைந்திருந்த அந்தக் குகையின் உட்புறத்தில் வளர்ந்திருந்த அல்காக்கள் மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் அதனை வர்ணமிட்டிருந்தன. அத்துடன் குகையில் கூரையில் அழகான ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன. இருப்பினும் குகைக்குள் இருந்த அதிகமான வெக்கையும் ஈரப்பதனும் நீண்ட நேரம் அதற்குள் நிற்கவிடாமல் வியர்த்து விறுவிறுக்கச் செய்தது.

  - 310 அடி அகலமான Fontein Cave இயற்கையின் ஓர் அதிசயமாக நின்றிருந்தது -

பின்னர் குவிந்த மாடம் போன்ற (dome) அறைகளைக் கொண்டிருந்த பிரசித்திபெற்ற Quadirikiri Caveக்குச் சென்றோம். 490 அடி தூரம் நீண்டிருந்த அந்தக் குகையின் கூரையில், sunroof மாதிரி இயற்கையாகவே இடைவெளிகள் அமைந்திருந்தன. அவற்றினூடு ஊடுபரவிய சூரிய ஓளி குகைக்குள்ளே பிரகாசித்துக்கொண்டிருந்தது. அப்படியிருந்தும் வெளவால்கள் அங்கு வாழ்வது தெரிந்தது. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு அவை அங்கங்கே அடிக்கடி பறந்துகொண்டிருந்தன.

                           - பிரசித்திபெற்ற Quadirikiri Cave -

பின்னர் அந்தப் Parkஇலிருந்து வெளியேறி, உலகத்திலேயே சிறந்த கடற்கரை என்ற பெயரைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கும் நீல நிற நீரும் வெண்ணிற மணலும் நிறைந்த Eagle Beachக்குச் சென்று அதன் ஆர்ப்பரிக்கும் அலைகளில் நனைந்தோம். நீல வானமும் நீலக் கடலும் சங்கமித்திருந்த அந்தக் காட்சி பல உணர்வுகளை எழுப்பியது. முடிவில் கடற்கரையருகே இருந்த Passions என்ற உணவகத்தில் இரவுணவைச் சாப்பிட்டோம். மகள் அவவின் mother-in-lawக்குப் பிடித்த Sea bass, எனக்குப் பிடித்த lobster. Shrimp என்று அத்தனை கடலுணவுகளையும் கொண்ட உணவை எனக்கும் vegan உணவைத் தனக்கும் ஓடர் பண்ணியிருந்தா. உணவு மிகவும் சுவையாக இருந்தது.

                    - அங்கு இயற்கையாகவே அமைந்திருந்த Conchi natural pool -

அடுத்த நாளும் Arikok National Parkக்கு மீளச் செல்ல முடிவெடுத்தோம், ஆனால் இம்முறை hiking செய்து அங்கு இயற்கையாகவே அமைந்திருந்த Conchi natural poolஐப் பார்க்கவேண்டுமென்பது திட்டமாக இருந்தது. அப்படிச் செய்யவேண்டுமென்றால் Park உள்ளேயுள்ள கார் தரிப்பிடத்திலிருந்து 2½ மணி நேரம் நடக்க வேண்டுமென வரவேற்பிடத்தில் முதல் நாள் சொல்லியிருந்தனர். மணல் கும்பிகள், மேட்டுநிலங்கள் பள்ளத்தாக்குகள் என இருக்கும் அந்தத் தரையில் அவ்வளவு தூரத்துக்கு/ நேரத்துக்கு என்னால் நடக்கமுடியாமலிருக்கும் என்பதால் முதல் நாளிரவு Trip Advisor வலைத்தளத்தில் தேடிப் புதியதொரு வழியைக் கண்டுபிடித்திருந்தா மகள். அந்த வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த இடத்தில் காரை நிறுத்தினால் ஒரு மணி நேரம் நடந்தால் போதும் என்றிருந்தது. அப்படியாக அந்தப் பாதையைத் தேடிப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் பாதை மிகவும் ஒடுக்கமானது. செடி கொடிகளுக்கு ஊடாகக் கற்களும் மணலும் நிறைந்த பாதையூடாகக் காரைச் செலுத்த வேண்டியிருந்தது. எங்களின் Kiaவில் கீறல்கள் வந்துவிடுமோ எனப் பயமாக இருந்தது. அதனால் அவர்கள் குறிப்பிட்டிருந்த இடம் வரமுன்பே ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு நடப்பதாக முடிவெடுத்த நாங்கள் காரைவிட்டு இறங்கி காரைச் சுற்றிச்சுற்றி நடந்து அதனைப் பரிசோதித்தோம். நல்லவேளையாக அந்தச் செடி கொடிகள் காரில் எந்த அடையாளத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. அது மிகவும் ஆறுதலாக இருந்தது.

மகள் எனக்காக மெதுவாக நடக்கவேண்டியிருந்தது. மணல் கும்பிகள் மேல் ஏறி இறங்கி ஒருமாதிரி களைக்கக் களைக்க வியர்க்க வியர்க்க நடந்து முடித்தபோது ஆயாசப் பெருமூச்சுத் தோன்றியது. வழியெல்லாம் வெவ்வேறு நிறங்களில் பல ஓணான்கள் ஓடித்திரிந்தன. Daimari Beach இன் அழகான கடற்கரை ஓரமாக நடந்துசென்றிருந்த எங்களை Conchi natural pool வரவேற்றது. எரிமலைப் பாறை ஒன்றினுள் வட்டவடிவில் ஏற்பட்ட பெரிய குழிவொன்றைக் கரேபியன் கடல் நீர் நிரப்பியிருந்ததால் அது ஓர் இயற்றையாக அமைந்த குளமாக மாறியிருந்தது. Conchi என்றால் கிண்ணம் என்று பொருள். பெயருக்கேற்ற வகையில் கிண்ணம் போலிருந்த அதனருகே நின்று பார்த்தபோது, அதற்குள் நிறைந்திருந்த கற்களும், மிகுந்த வேகத்துடனும், ஆர்ப்பாட்டத்துடனும் மோதி மோதி ஓயும் அலைகளும் பரபரப்பை மேவிய அச்சத்தை ஏற்படுத்தின. போதாதற்கு கடலிலிருந்து எழும் பேரலைகளும் அந்த பாறையின் மேலாக எழுந்து கடல் நீரை அதற்குள் வாரியிறைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் இறங்கவேண்டாமென நினைத்தோம்.

கரையில் நின்று யோசித்துக்கொண்டிருந்த எங்களின் தயக்கத்தைப் பார்த்த park ranger ஜோன் தானிருக்கிறேன், வாருங்களென எங்களுக்குத் துணிவைத் தந்ததுடன், வழுக்கிக்கொண்டிருந்த கூரான கற்களின் மேல் கவனமாகப் பாதம் பதித்துக் குளத்துக்குள் இறங்கவும் உதவிசெய்தார். தனித்துவமான அந்தக் குளம், மிகவும் வியக்கத்தக்க, பரவசமூட்டும் நம்பமுடியாத இனிய அனுபவத்தைத் தந்தது! வார்த்தைகளில் வடிக்கமுடியாத அந்தப் பரபரப்பான, நிறைவான அனுபவத்தை நாங்கள் அடைவதற்குக் காரணமாகவிருந்த ஜோனுக்குப் பல தடவைகள் நாங்கள் நன்றி கூறினோம். நெதர்லாந்திலிருந்து 10 வயதில் அங்கு புலம்பெயர்ந்திருக்கும் அவர் Baby Beachஐயும் பார்க்காமல் விட்டுவிடாதீர்கள், அதுதான் நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருந்தபோது நீச்சல் பழகும் இடமாகவிருந்தது, இப்போது சுற்றுலாத் தளமாகிவிட்டது, இருந்தாலும் புகார் இல்லை என்றார். பின்னர் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள்தான் தங்களை வாழவைக்கின்றனர் என்றும், கொரோனா நேரம் நாடு மிகவும் கஷ்டப்பட்டதென்றும் நன்றியுடன் சொன்னார். அவ்வளவு கஷ்டப்பட்டு hiking செய்ததற்கு மிகுந்த பயன் ஏற்பட்ட நிறைவுடன், மகள் செய்துகொண்டு வந்திருந்த egg sandwichஐச் சாப்பிட்டபோது மிகவும் திருப்தியாக இருந்தது.

         - தொடர்ந்து அதனருகே இருந்த Ayo Rock Formationsக்குச் சென்றோம் -

பின்னர் Natural Bridgeஐ நோக்கிப் பயணித்தோம். வேகத்துடன் பாயும் நீருக்கு எத்துணை செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு உதாரணமாக பாலம் போன்ற அந்த அமைப்பு இயற்கையாகவே தோன்றியிருந்தது. கடல் மட்டத்தில் இருந்து 23 அடி உயரத்தில், 100 அடி நீளமாக இருந்த அந்தப் பாலத்தின் மேல் பகுதி கடினமான சுண்ணாம்புப் பாறையாகவும், அடிப்பகுதி அரிப்பினால் மென்மையாக்கப்பட்ட பாறையுமாக இருந்தது. தொடர்ந்து அதனருகே இருந்த Ayo Rock Formationsக்குச் சென்றோம். கிட்டகிட்டச் சென்றபோதே அதன் அபாரம் புரிந்தது. இயற்கையின் இன்னொரு அதிசயமது. எப்படி அந்தப் பெருங்கற்களும் பாறைகளும் ஒன்றன்மேல் ஒன்றாகச் சமநிலையில் இருக்கின்றன என்பது வியப்பே. பின்னர் Arubaஇன் இன்னொரு பிரபல்யமான வெண்மணல் கடற்கரையான Arashi beachஇன் அமைதியான அலைகளை அனுபவித்தோம்,

திரும்பிச் செல்லும் வழியிலிருந்த வீடுகளில் பப்பாசி மரத்தையோ, தென்னை மரத்தையோ அல்லது போகன்வில்லாவையோ பார்த்தால் சந்தோஷமாக இருந்தது. மிக அருமையாகத்தான் அப்படியிருந்தது. சோம்பல் இல்லாமல் மரம் வளர்க்கிறார்கள் என எனக்குப் பாராட்டத் தோன்றியது. தண்ணீருக்காக அவர்கள் என்ன கஷ்டப்படுகிறார்களோ, யாருக்குத் தெரியும் என்றா மகள். பின்னர் கடற்கரையோரமாக இருந்த Elements இல் இரவுணவு உண்டோம். உணவு பரிமாறியவர் சூரிய அஸ்மனத்தின் அழகான நிறங்களின் சங்கமத்தின்போது எங்கள் இருவரையும் படமெடுத்துத் தரவா எனக் கேட்டுப் படமெடுத்துத் தந்தார். உணவும் நன்றாக இருந்தது. Aruba சுற்றுலாத்தளம் என்பதால் உணவகங்கள் எல்லாமே தரமான, ருசிமிக்க உணவையே விற்பனை செய்கின்றன. அதனால் ஓப்பீட்டளவில் உணவின் விலை அதிகமானதாகவே இருந்தது.

மீளவும் இருப்பிடத்துக்குச் சென்றபோது, நான் எழுதிய குறிப்பில் மீளமீளத் திருமறைக் கலைமன்றமென எழுதியிருக்கிறேன் என்றும், ஆனால் அது திருமறைக் கலாமன்றமென்றிருக்க வேண்டுமென்றும் கூறும் செய்தி, வீரகேசரி வார இதழின் உதவி ஆசிரியர் ரேணுகா அவர்களிடமிருந்து வந்திருந்தது. அவரின் புறூவ் பார்க்கும் திறனுக்காக அவவைப் பாராட்டி, என் நன்றியையும் தெரிவித்துப் பதிலளித்தேன். இப்படியாகப் பதிவுகள் ஆசிரியர் கிரிதரன், மகுடம் ஆசிரியர் மைக்கல் ஆகியோரும் பிழைகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அப்படிச் செய்வது தங்களின் பணியை அவர்கள் செவ்வனவே செய்கிறார்கள் என்பதைக் காட்டுவதுடன், எழுத்தாளர்களின் எழுத்தையும் மெருகூட்டுகிறது.

மீதி தொடரும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com