அஞ்சலி: (முகநூற் குறிப்பு) பலஸ்தீனியப் பெண் எழுத்தாளரும் கவிஞருமான ஹெபா ஹமல் அபு நாடாவின் (Heba Kamal Abu Nada ) கடைசிக் கவிதை! - தமிழில் : நட்சத்திரன் செவ்விந்தியன் -
காசாவில், இஸ்ரேலிய குண்டுத்தாக்குதலில் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட 32 வயதான பலஸ்தீனியப் பெண் கவி ஹெபா ஹமல் அபு நாடா ( Heba Kamal Abu Nada)
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது.
நண்பர்கள்
சின்னச் சின்ன
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏவுகணைகளைவிட
வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை
என்னால்
மீட்க முடியவில்லை.
காக்க முடியவில்லை.
எனக்கு அழ முடியவில்லை.
எனக்கு
என்ன செய்வதென்றும் தெரியவில்லை.