'சமாதானம்;, அகிம்சை மற்றும் சமத்துவத்திற்கான பெண்கள்' அமைப்பின் அறிக்கை!
முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை - மே 2019 எமது கூற்று
இலங்கையில் நீதி, சமத்துவம், அர்த்தமுள்ள சமாதானம் ஆகியவற்றை நிலைநாட்ட செயற்படுபவர்கள் நாங்கள். முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை எமது தீவின் பல இடங்களிலும் வெடித்துள்ள நிலையில ;இதனை எழுதுகிறோம். 13.05.2019 அன்று பள்ளிவாசல்கள், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான கடைகள் வடமேல் மாகாணத்தின் சிலாபத்தில் வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகின. நேற்றும் (14.05.2019) வட மேல் மாகாணத்தில் உள்ள கினியாம, கொட்டம்பிட்டிய போன்ற பல இடங்களில் வன்முறை நிகழந்ததை அறிகின்றோம். இவை இன்னும் தொடர்கின்றன.
தமிழருக்கு எதிரான வன்முறை நிகழ்ந்த பலநுறு உயிர்களைப் பலிகொண்ட 1983 கறுப்பு ஜூலை மாதத்தை எம்மில் பலர் முகம் கொடுத்து வாழ்ந்த அனுபவம் உடையவர்களாக உள்ளோம்;. பல ஆயிரம் உயிர்களைக் காவு கொண்ட உள்நாட்டுப் போhக்.கால கட்டத்திற்கு ஊடாக வாழ்ந்த கசப்பான அனுபவத்தை உடையவர்கள் நாங்கள், 2014 இல் அழுத்கமவிலும் கடந்த வருடம் திகணவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தபோது நாங்கள் பயத்துடன் இருந்தோம். ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த வன்முறையால் இறந்தவர்களையும், காயம் அடைந்தவர்களையும் சிதைந்த குடும்பங்களையும் பற்றி ஆறாத துயரம் கொண்டவர்களாக உள்ளோம். சகல மனிதாபிமானத்துக்குமான விண்ணப்பமாக இந்த விண்ணப்பத்தை நாங்கள் எழுதுகிறோம்.
சகல இலங்கைப் பிரஜைகளையும் தத்தமது பெறுமதி, நம்பிக்கை சமயம், மனிதாபிமானம் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள் என வேண்டுகி;றோம். என்ன விலை கொடுத்தாவது வன்முறைக்கு எதிராகச் செயற்படுமாறு சகல இலங்கை பிரஜைகளையும் வற்புறுத்தி வேண்டுகின்றோம். ஒருமித்த அரசியல் தலைமைத்துவத்துடன் வன்முறையை உடனடியாக ஒழித்து, பொறுப்புடமை நியாயம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் என எமது பிரதிநிதிகளை வற்புறுத்துகின்றோம். நிறுத்த முடியாத ஒரு யுத்தத்தை நோக்கிய பாதையில் மீண்டும்; அடி எடுத்து வைக்க மாட்டோம் என உறுதிபூணுமாறு சகலரையும் கேட்கி;றோம்
மேலும் மேலும் நிகழும் மரணங்களுக்காகத் துக்கம் அனுஷ்டிப்பதில் அர்த்தமில்லை. இவை நிகழ்ந்தபின் கூறுபவை வெற்றுரைகள் ஆகும். பாவத்திற்கு மன்னிப்பு கேட்கவோ உடந்தையாக இருந்தமைக்கு விளக்கம் அளிக்கவோ எம்மால் முடியாமற் போய்விடும்;. ஒரு தேசம் என்ற வகையில் இவ்வளவு கஸ்டங்களையும் அனுபவித்தும் இன்னுமொரு கறுப்பு ஜூலை நிகழ்வதைத்த தடுக்க முடியாவிட்டால் நாம் எதனைச் சாதித்தோம்? எங்கள் கூட்டுப் பிராத்தனையில் எல்லா மக்களையும் குறிப்பாக இத் தருணத்தில் வலுவற்றவர்களாக உணரும் அனைவரையும் உள்ளடக்குகிறோம். நாங்கள் வன்முறையை எதிர்த்துச் செயற்படுவோம். வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வோம்!.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய நாட்டின் பலபகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர விடுதிகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட, சுமார் 350 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று 500 பேரை மோசமான காயங்களுக்கு உட்படுத்திய, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டி ஃபோறம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
s) 17 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் மத்திய புலனாய்வுத்துறை கூறியிருப்பது, எம்மைப் பொறுத்தவரை, ஒரு புதினமல்ல! ஆனால், கனடாவில் 2017ஆம் ஆண்டு, வெறுப்புக் குற்றங்கள் 47 சதவீதத்தினால் அதிகரித்திருக்கின்றன என்பது கனடியர்களால் புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு செய்தியல்ல! கனடாவில் வெறுப்புக் குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படத் தொடங்கிய கடந்த 10 வருடங்களில் இதுவே மிகப் பெரும் அதிகரிப்பு. 29-11-2018 வியாழன்று கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் காணப்படும் இத்தகவல்களைக் கனடியர்கள் கருத்தில் கொள்ளாமல், வெறுமனே கடந்துசெல்ல முடியாது.
ஒழுங்கும், நேரான இலக்குமுள்ள, வஞ்சக உள்ளமற்ற, நேர்மையான தலைவனொருவனைக் காணும் பாக்கியத்தை இலங்கை எனும் தேசம் பெறவேயில்லை. தலைவனாக முகமூடியணிந்தவாறு, நாட்டு மக்களை பலிகடாக்களாக்கி விளையாடும் கோமாளிகளும், சுயநலவாத நரிகளும் ஆட்சிக்கு வந்து தேசத்தைச் சூறையாடுவதையே எப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமது கையாலாகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக அடுத்தவர் மீது பழி சுமத்தும் தலைவர்கள் இலங்கையை மீண்டும் மீண்டும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
- அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில், முகநூலில் வ.ந.கிரிதரன் எழுதிய குறிப்புகள், தமிழ்சின் சிஎன் இணையத்தளத்தில் நக்கீரன் எழுதிய நீண்ட கட்டுரை, முகநூலில் விஜயபாஸ்கரன், எழுத்தாளர் பா.அ.ஜயகரன், எழுத்தாளர் கருணாகரன் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பற்றி அனுபவம் மிகுந்த மின் பொறியியலாளர் ஜானகி பாலகிருஷ்ணன் அவர்கள் அனுப்பி வைத்த எதிர்வினை இது. உங்கள் கருத்துகளையும் அனுப்பி வையுங்கள். ஆக்கபூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பதிவுகளுக்கு உங்கள் கருத்துகளை
- நடிகை ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் ஆளுமைகள் பலர் நிலை கலங்கியுள்ளார்கள். ஆணும், பெண்ணும் புரிந்துணர்வுடன் நட்பு கொள்வதென்பது வேறு. பயன் ஒன்றுக்காகப் பெண்ணொருவரை ஆண் ஒருவர் தன் அதிகார நிலை காரணமாகப் பயன்படுத்துவது என்பது வேறு. அதுதான் நடிகை ஶ்ரீ ரெட்டியின் விடயத்திலும் நடத்துள்ளது. இவர் செய்தது சரியா தவறா என்று பார்ப்பதற்குப் பதிலாக இவரை இவ்விதம் பயன்படுத்திய ஆளுமைகள் செய்தது சரியா தவறா என்று பார்க்க வேண்டியதே மிகவும் முக்கியம். ஏனெனில் இத்துறையில் ஆயிரக்கணக்கில் ஆர்வமுள்ள பெண்கள் நுழைந்துகொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஏனைய துறைகளைப்போல் இத்துறையில் நுழைவதற்கு ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகள் விடயத்தில் இந்தியச் சட்டட்த்துறை போதிய கவனம் எடுக்க வேண்டும். விசாரணைகளை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நண்பர் ராகுல் சந்திரா இது பற்றி நல்லதொரு கட்டுரையினை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். ஶ்ரீ ரெட்டிக்கு ஏற்பட்ட நிலையினைப் 'பாலியல் இலஞ்சம்' என்று கூறியிருக்கின்றார். ஆம்! சரியான சொல்லாடல் அது. பாலியல் இலஞ்சம் கொடுத்தும் அதற்குரிய பலனை அவர் அடையவில்லை. இலஞ்சம் வாங்குவது தவறானதொரு செயல். பாலியல் இலஞ்சமும் இலஞ்சத்தில் ஒரு வகையே. ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் அவரது சொந்தக் கதையினை மட்டும் விவரிக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நிலவும் சமூக விரோதச் செயல்களையும் வெளிப்படுத்துகின்றன. இவ்விதமான சமூக விரோதச் செயல்களைப் புரிபவர்கள் யாராகவிருந்தாலும் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்னும் நிலை ஏற்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மேலும் பெண்கள் பலர் முன்னுக்கு வந்து தம் அனுபவங்களையும் கூறக்கூடும். திரையுலகினைச் சீராக்க வேண்டிய காலகட்டமிது. பெண்கள் எவ்விதத் தயக்கமுமின்றி நடிப்புத் துறையில் ஈடுபடுவதற்குரிய சூழ்ழலை ஏற்படுத்த வேண்டும். அதற்குச் ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் வழி வகுக்கட்டும். - பதிவுகள் - 



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









