அமைச்சர் விஜித ஹேரத்
அண்மையில் இலங்கையின் பாராளுமன்றத்தில் வடகிழக்கில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை மையமாக வைத்து தென்னிலங்கை அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர் ஆகியோர் மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுத்து அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசைக் கடுமையாகச் சாடினர். அநுரவின் அரசு தமிழர் சார்பான அரசு என்பது போன்றதொரு தோற்றப்பாட்டினை எழுப்புவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைப்பதற்குக் கடும் முயற்சியெடுத்தனர். இதனை அநுர அரசு முளையிலேயே கிள்ளி எறிந்தது வரவேற்கத்தக்கது.
இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உடனேயே இனவாத அரசியல்வாதிகளை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுத்தார். இவ்விதம் இனவாதத்தைத் தூண்டியவர்களை இனவாதிகள் என்றார். நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக நடைபெறும் நினைவு கூரல்களைச் செய்யும் உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. அவற்றைத் தடுக்க முடியாது. சட்டங்களை மீறுபவர்களைக் காவல்துறை கையாளும் என்று அவர் தனது பதிலடியில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் இனவாத அரசியல்வாதிகளின் திட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டது.
இது ஒரு முக்கியமான நிகழ்வு. நாட்டின் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவாகச் செயற்பட வேண்டும். அவ்விதம் செயற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. மாவீரர் நிகழ்வுகளை முன்னிட்டு, இனவாதக் கருத்துகளைப் பரப்ப முயற்சி செய்த சிங்களவர்கள் சிலரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஊடகங்கள் இதனை ஒரு செய்தியாக வெளியிட்டன. தமிழ் அரசியல்வாதிகள் அல்லது ஊடகவியலாளர்கள் அல்லது ஆய்வாளர்கள் எவராவது இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வரவேற்றிருக்கின்றார்களா என்பது எனக்குத் தெரியவில்லைல. அப்படி எவராவது எதிர்வினையாற்றியிருந்தால் அறியத் தாருங்கள். ஆட்சியை இழந்த பிற்போக்குச் சக்திகள் இது போல் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இனவாதத்தைக் கிளப்பி அதில் பயனடைய முயற்சி செய்வார்கள். இந்நிலையில் இம்முறை அமைச்சர் விஜித ஹேரத் தகுந்த பதிலடி கொடுத்து , ஆரோக்கியமாகச் செயற்பட்டிருக்கின்றார். வரவேற்