நாள் - மே 24, 2026 | இடம் - Scarborough Civic Centre - Council chambers, 150 Borough dRIVE, Toronto,ON M1P 4N7 | நேரம் - பிற்பகல் 2.00 மணி

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எழுதிய 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ' என்னும் நூலிற்கான வெளியீட்டு நிகழ்வு மே 24, 2026 அன்று பிற்பகல் 2 மணிக்கு , ஸ்கார்பரோ சிவிக் சென்டரில் நடைபெறவுள்ளது. கல்விக்கூடங்களின் முன்னாள் மாணவர்கள் அக்கல்லூரிகளின் சொத்துக்களே. அவர்கள் பெருமை மிகு சாதனைகள் அக்கல்விக்கூடங்களின் சாதனைகளே. மயூரநாதனின் இந்த வரலாற்று நூலானது அவ்வகையில் முக்கியமானதொரு சாதனை.
தமிழர் வரலாற்று நூல்களில் இந்நூல் மிகவும் முக்கியத்துவம் மிக்கது. யாழ்ப்பாண நகரின் பெளதிகக் கட்டமைப்பு, கட்டடச்சூழல் போன்றவற்றின் அடிப்படையில் நகரின் நானூறு ஆண்டு வரலாற்றை அணுகுவது இந்நூலின் முக்கிய சிறப்பம்சம். இத்தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்களுடன், தெரிந்த அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி மற்றும் மொறட்டுவைப் பல்கலைககழக முன்னாள் மாணவர் அமைப்புகளே! உங்கள் முன்னாள் மாணவர் ஒருவரின் வரலாற்றுச் சாதனை இது. இதனை ஆதரிப்பது அவசியம். உங்கள் அமைப்பு அங்கத்தவர்களுடன் இத்தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருங்கள்.
வரலாற்றில் தெளிவற்று இருக்கும் நிலையினை மாற்றித் தெளிவுள்ளதாக்குவதற்கு இவ்விதமான வரலாற்று நூல்கள் அவசியம். அதனால் இவ்விதமான நூல்களுக்கு ஆதரவளிப்பது நம் கடமை. ஆதரவளிப்போம்! நூல் வெளியீட்டை வெற்றிகரமானதாக்குவோம்!
நாள் - மே 24, 2026
இடம் - Scarborough Civic Centre - Council chambers, 150 Borough dRIVE, Toronto,ON M1P 4N7
நேரம் - பிற்பகல் 2.00 மணி
மேலதிகத் தகவல்களுக்கு:
புவனேந்திரன் - 416 570 5261
குருநாதன் - 416 892 3249



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









