[2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு சீன எழுத்தாளரான மோ யானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பற்றி இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளின் மீள்பிரசுரமிது. ஒரு பதிவுக்காக. - பதிவுகள்-] 2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை சீன படைப்பிலக்கிய எழுத்தாளர் மோ யான் வென்றுள்ளார். குவான் மொயே என்ற இயற்பெயருடைய இந்த படைப்பிலக்கியவாதி 1955 ஆம் ஆண்டு பிறந்தார். வட-கிழக்கு சீனாவில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் இவர் பெரும்பாலும் வளர்ந்தார். சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது இவருக்கு 12 வயது. அப்போது பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு சென்றார். முதலில் விவசாய வேலையைச் செய்த இவர் பிறகு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 1976ஆம் ஆண்டு வாக்கில் அவர் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்தார். இதில் இருக்கும்போதுதான் இலக்கையங்களை வாசிக்கத் தொடங்கினார், பிறகு எழுதவும் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை 1981ஆம் ஆண்டு இலக்கியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் கழித்தே இவரது பெயர் பிரபலமானது. Touming de hong luobo என்ற நாவல் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. இது 1986ஆம் ஆண்டு வெளிவந்தது என்றால் 1993ஆம் ஆண்டு இதே நாவல் பிரெஞ்ச் மொழியில் பெயர்க்கப்பட்டது.
இவரது எழுத்துக்களில் அவரது இளமைப்பிராய அனுபவங்கள் ஆதிக்கம் செலுத்தின. குறிப்பாக Hong gaoliang jiazu (1987) என்ற நாவலில் இத்தகைய போக்குகளைக் காணலாம் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிறகு 1993ஆம் ஆண்டு Red Sorghum ஆங்கிலத்தில் வெளியானது. இதில் 5 கதைகள் இடம்பெற்றன. இவர் பிறந்து வளர்ந்த இடமான கவோமி 20ஆம் நூற்றாண்டில் கண்ட பல கொந்தளிப்பான தருணங்கள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொள்ளைக்கலாச்சரம், ஜப்பானிய ஆக்ரமிப்பு, விவசாயக் கூலிகள் வாழ்ந்த மிகவும் கடினமான வாழ்க்கை முறை என்று இந்த நூல் விரிகிறது. ரெட் சோர்கம் என்ற இந்த நூலில் உள்ள விஷயங்கள் சாங் இமூவ் என்பவரால் சிறப்பாக திரைப்பட வடிவத்தில் கொண்டு வரப்பட்டது என்று விமர்சகரக்ள் தெரிவித்தனர்.
Tiantang suantai zhi ge என்ற நாவல் (1988), (ஆங்கிலத்தில் இது The Garlic Ballads 1995), அப்போதைய சீன சமூகத்தையும் அரசியலையும் எள்ளி நகையாடும் Jiuguo (1992) (ஆங்கிலத்தில் The Republic of Wine 2000) என்ற படைப்பிலக்கியம்- இது சமூக ஒழுங்கை குலைப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நாவலாகும்- இவருக்கு பெயர் பெற்றுத் தந்தன.
Fengru feitun (1996) என்ற படைப்பு 2004ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் Big Breasts and Wide Hips என்று வெளிவந்தது. இதில் ஒரு குடும்பத்தின் நடக்கும் நிகழ்வுகள் மூலமாக 20ஆம் நூற்றாண்டு சீன வரலாற்றையே எழுதியுள்ளதாக மதிப்பீட்டாளர்கள் வரையறை செய்துள்ளனர்.
2006ஆம் ஆண்டு Shengsi pilao என்ற நாவல் வெளியாந்து இது ஆங்கிலத்தில் Life and Death are Wearing Me Out என்று ஆங்கிலத்தில் வெளியானது. இதில் இருண்ட ஒரு நகைச்சுவை வெளிப்பட்டுள்ளது. அதாவது தினசரி வாழ்வு அபத்த சுவை, அவலச்சுவையுடன் எடுத்தாளப்பட்டுள்ளது. இளம் வயதினரின் குடியரசில் நிகழும் உருமாற்ற வித்தைகள் இதன் முக்கிய அம்சமாகும்.
2004ஆம் ஆண்டு Tanxiangxing என்ற நாவல் வெளிவந்தது. உடையும் பேரரசில் மனித கொடூரங்கள் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் 2013ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் Sandalwood Death என்று வெளியாகவுள்ளது.
2009ஆ,ம் ஆண்டு இவர் எழுதிய Wa என்ற நாவலில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சீன அரசின் கொள்கையின் விளைவுகள் கையாளப்பட்டுள்ளது.
கற்பனை, மற்றும் எதார்த்தத்தை வரலாற்று/சமூக கோணங்களில் இவர் நாவல் கையாள்கிறது. இலக்கிய மேதைகளான வில்லியம் ஃபாக்னர் மற்றும் 'நூறாண்டு கால தனிமை" புகழ் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியல் கார்சிய மார்க்வேஸ் ஆகியோரது பாணி இவரது எழுத்துக்களில் காணக்கிடைப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கும் அதே வேளையில் சீன வாய்மொழி கதை மரபு, நாட்டுப்புற கதை மரபு ஆகியவற்றின் தாக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது.
இவை தவிர மோ யான் பல சிறுகதைகளையும், பல கட்டுரைகளையும் படைத்துள்ளார். தற்கால எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமான ஒரு படைப்பாளியாகவே மோ யான் கருதப்படுகிறார்.
இவரது கதைகளில் ஒரு வகையான மயக்கநிலை எதார்த்தவாதம் அல்லது பிரமை கலந்த எதார்த்தவாதம் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.
நன்றி: http://tamil.webdunia.com/miscellaneous/literature/articles/1210/11/1121011038_1.htm
தினமணி.காம்: இலக்கியத்துக்கான நோபல் பரிசு சீன எழுத்தாளர் மோ யானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மோ யான்(57), உணர்ச்சிகரமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். நிதர்சனத்தின் மாயத்தன்மை, நாட்டுப்புற வழக்குகள், வரலாறு, சமகாலம் அனைத்தையும் இணைக்கும் வகையில் இவரது எழுத்துகள் உள்ளன என நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது. மோ யான் என்பது அவரின் புனைப்பெயராகும். இயல்பில் அதிகமாகப் பேசும் வழக்கமுடைய மோ யான், "பேசாதே' என்ற அர்த்தமுடைய இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் சீனக்குடிமகன் மோ யான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதல் சீனர் அல்லர். சீனாவில் பிறந்து, பிரான்ஸூக்குக் குடிபெயர்ந்த காவோ ஜின்ஜியான், 2000ஆவது ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றிருந்தார். குறிப்பாக அவரின் "ஸோல் மவுண்டெய்ன்' என்ற நாவலுக்காக அவருக்கு நோபல் வழங்கப்பட்டது. ஆனால், சீனா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாவலை சீனாவில் தடை செய்தது. மோ யான்: 1955ஆம் ஆண்டு சீனாவில் பிறந்த மோ யானின் இயற்பெயர் குவான் மோயே. ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் 1987ஆம் ஆண்டு எழுதிய "ரெட் சோர்கம்' (Red Sorghum) நாவல் ஹாலிவுட் படமாக எடுக்கப்பட்டு பெரும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. The Republic of Wine, Life and Death Are Wearing Me Out ஆகியவை இவரின் குறிப்பிடத்தக்க பிற படைப்புகளாகும்.
நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்தச் செய்தி எனக்குக் கிடைத்த போது, நான் உணவருந்திக் கொண்டிருந்தேன். இலக்கியத்துக்கான நோபல் பரிசு என்பது மிகவும் உயர்வானது. ஆனால், அதுவே உச்சபட்ச விருது அல்ல. எனது படைப்புகள் குறித்து நான் திருப்தி அடைகிறேன்; தொடர்ந்து எழுதுவேன். எனது படைப்புகள் சீனர்களின் வாழ்க்கை, நாட்டின் பிரத்யேகக் கலாசாரம், நாட்டுப்புறக் கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. மனித உணர்வுகளை விவரிப்பவை. எல்லைகள், இனங்களுக்கு அப்பாற்பட்டவையாக அவை இருக்கும்
நன்றி: http://dinamani.com/world/article1295628.ece
BEIJING, Oct. 12 (Xinhua) -- The breaking news of Mo Yan's Nobel Prize in Literature on Thursday evening soon aroused public curiosity of the 57-year-old Chinese writer: Why was it him that was favored by the Swedish Academy? Less than half an hour after the announcement from Stockholm, Mo's works turned to "sold-out" status at China's major online book sellers. One lucky buyer wrote in an online comment: "Rushed to purchase, but to my shame, I have not read any of his novels." Although Mo was entitled one of the top domestic literature awards before the Nobel Prize, he is not the most popular novelist in China, in either the book market or in reputation. Chinese media seemed to be stunned as some journalists were reported to be on their way overnight to Gaomi City of east China's Shandong Province, Mo's birthplace where he stayed with his family. Born in 1955 into a rural family, Mo dropped out of school and became a farmer when he was a teenager. He joined the military and devoted himself to writing after Chinese literary circles started the introspective ideology for the Cultural Revolution (1966-1976). For more than a century, Nobel Prize has been regarded by the world as recognition to an individual or even a nation's cultural and scientific advances. Despite an economic miracle in the past few decades, scientists and experts in physics, chemistry and medicine have so far been deemed hopeless by the Chinese public to win Nobel Prizes in sciences. Chinese scientists' failure to win a Nobel Prize has been blamed on the lack of originality, creativity and being xenocentric. However, Mo's novels, although believed by some to be too rustic, are labeled as realistic portrayals of contemporary Chinese people.
Yet Mo, whose novels were translated into several languages, was honored the prize, beating his major Japanese competitor who is more popular in China, Haruki Murakami. Mo's novel "Big Breasts & Wide Hips," translated by Howard Goldblatt, tells a story of a mother who struggled and suffered hardship and intertwined fates with Chinese people in the 20th century. His more recent work "Frog" more directly criticized China's one-child family policy, which helped control the country's population explosion but also brought tragedies to rural residents in the past 60 years. "I think the reason why I could win the prize is because my works present lives with unique Chinese characteristics, and they also tell stories from a viewpoint of common human beings, which transcends differences of nations and races," Mo said on Thursday evening to Chinese journalists. Mo also said many folk arts originated from his hometown, such as clay sculpture, paper cuts, traditional new year paintings, have inspired and influenced his novels. Mo's prize may give powerful encouragement to the country's writers as the more reflective of Chinese lives their works are, the more possible they arise as a world literature.
The breakthrough of the Nobel Prize in Literature also came ahead of a key national congress of the Communist Party of China (CPC), which has called for cultural self-consciousness and self-confidence of the Chinese nation. As the world's second largest economy with a history of thousands of years, China will inevitably encounter ideological disputes and even conflicts with foreign civilizations. The country faces a yawning gap between the rich and the poor, worsening environment pollution and an aging population. Paying more attention to such issues, Chinese writers may create more works that record the nation's journey to rejuvenation. With more Chinese writers like Mo, the world could learn a more real China. Perhaps, this is another reason for the Swedish Academy's choice.
Courtesy: http://news.xinhuanet.com/english/china/2012-10/12/c_123812309.htm