ஆய்வு: தமிழ்நாட்டில் அய்யனார் வழிபாடு
தமிழ் இலக்கியங்களில் இறைவழிபாடு முறையில் நோக்கிடும்போது தமிழகமக்களின் பழமையும், ஆய்வுக்குட்பட்ட பல செய்திகளும் புலப்படுகின்றன. வழிபாடு என்பது பின்பற்றுதல் என்ற பொருளினைத் தரும். பலதரப்பட்ட கடவுள்களைச் சைவசமயத்தினர் வணங்கி வருகின்றனர். இறைவனை நேரில் காண இயலாததாகி இருப்பினும் இறைவனுக்குப் படையல் இடுவதும், தன்னையும், தமது குடும்பத்தாரையும் காக்கும் சக்தியாக எண்ணியும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தெய்வமாக அமையப்பெற்ற அய்யனார் வழிபாடு குறித்து இவ்வாய்வுக்கட்டுரை அமையப்பெறுகிறது.
அய்யனார் விளக்கம்
அய்யனாரைப் பல சாதி சமயத்தினரும் வழிபாடு செய்துவருகின்றனர். அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆண்பால் ஈறு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விகுதியாகும். பழங்காலம் முதற்கொண்டே அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. சமணர்கள் கோயிலிலும் அய்யனார் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள். அவர்கள் இவரைப் பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள். யானை வாகனம் அவருக்குரியது என்றும் கூறி வழிபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள சிறுதெய்வ வழிபாடு முழுவதும் அழகர்மலையிலுள்ள பதினெட்டாம்படி கருப்பர் வழிபாட்டிற்குக் கட்டுப்பட்டதேயாகும். அய்யனார் கோயில்களில் இருக்கும் தெய்வச்சிலைகள், எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் வைத்துச் சுட்டுச் செய்யப்பட்டவைகளாய் இருந்து வருகின்றன.(நன்றி-வலைத்தளம்)
சைவமும்,வைணவமும் ஒருங்கிணைந்ததுபோல அய்யனாரின் பிறப்பு அமைந்துள்ளது. அய்யப்பனே அய்யனார் எனவும், சாஸ்தா எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது 'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்' என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. காப்பியச் சிலம்பில் சாஸ்தாவைப் பற்றிப் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.

மனித வளர்ச்சியினால் பண்பாட்டில் ஆண் x பெண் உருவாக்கம், சமூக உருவாக்கம், சமுதாய வளர்ச்சி என அனைத்தும் சுழற்சி முறையில் ஒன்றையொன்று சார்ந்து இயங்கி இனப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு அடித்தளமாக நிலைகொண்டிருப்பவள் ஒரு பெண். இப்பெண் மனித தோற்றத்திற்கான உயிராகவும் ஆயுதமாகவும் இருந்து வருகிறாள். தொடக்க காலத்தில் உயிர் உற்பத்திக்கே தன்னை ஆட்படுத்திக்கொண்ட பெண் பின்பு விவசாய உற்பத்திக்கான தொடக்கம், பொருளாதார உற்பத்தியில் உபரியைப் பெருக்குதல், விற்பனை செய்தல் எனத் தன்னைப் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் உயர்த்திக்கொண்டாள். இது சங்க காலத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வந்தாலும் சமூக வயத்தளத்தில் குடும்பமென்ற ஒடுக்கு நிலைக்குள்ளும் பெண் ஆழாக்கப்பட்டாள். இதனால் குறிப்பிட்ட இயங்கு தளத்திலே தன்னை தகவமைத்துக்கொண்டு வாழமுற்படவும் செய்தாள். ஓவ்வொரு வயத்திலும் ஓர் அடையாளமாகப் பரிணமித்த பெண்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இதனால் உடல்தோற்றத்தில் மட்டுமின்றி வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தச் செய்ததுடன் சமூக அடையாளமாகவும் சில அணிகலன்களையும் மரபாக அணிந்தனர். அதில் ஒன்று தான் சிலம்பு.
முன்னுரை
முன்னுரை:
முன்னுரை
இசை என்பது ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இனிமையான ஒலிவடிவமாகும். மனித இனம் முதற்கொண்டு, சகல உயிரினங்களையும் இசைய வைக்கும் ஆற்றல் இதனிடம் பொதிந்து கிடப்பதனாலேயே இசை என்ற காரணப் பெயரை இது பெற்றதாகப் பொருள் கூறுவாரும் உளர். ’இசை கேட்டுப் புவி அசைந்தாடும்’ என்றும், ’என் இசை கேட்டு எழுந்தோடி வருவாரன்றோ’ என்றும் திரையிசைப் பாடல்கள் ஒலிப்பதை நாம் கேட்டிருக்கின்றோமல்லவா? இவையும் இசை பற்றிய இவையொத்த பல பாடல் வரிகளும் கவிதையழகுக்கென வரையப்பட்ட வெற்றுக் கற்பனை வார்த்தைகளல்ல. மாறாக, இசையின் வரலாற்று வழிவந்த உண்மை அனுபவங்களின் வெளிப்பாடுகளே என்பதற்கான சான்றாதாரங்கள் ஏராளம் உள.
சிறு வயதிலேயே பொட்டுக்கட்டப்பட்டு, தாசியாக வாழ மறுத்து, பெரும் போராட்டத்தையே வாழ்க்கையாக வாழ்ந்து தீர்க்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணின் உண்மைக் கதையே ‘செடல்’ புதினமாகும். இப்புதினத்தின் முதன்மைக் கதை மாந்தர் செடல். நட்டுவன் குலம், கூத்தாடிச் சாதியைச் சேர்ந்த இவள், அக்குடும்பத்தின் எட்டாவது பெண்பிள்ளை. மழை பெய்ய வேண்டும் என்ற ஊர் நன்மையைக் காரணம் காட்டி, பழைய பஞ்சாங்கத்தை நம்பிக் கொண்டு, ஊரிளுள்ளோரின் வற்புறுத்தலினாலும், மேல் குடியினரின் அதிகாரத்தினாலும் செடல் பொட்டுக்கட்டி விடப்படுகி றாள்.
அறிமுகம்
தமிழ் மொழியின் இன்றைய வளர்ச்சி என்பது பல்வேறு ஊடக மாற்றங்களைக் கடந்து வந்த ஒன்று. கற்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான வளர்ச்சிப் பாதையில் தமிழ்மொழி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் காலத்திற்கேற்ற சிந்தனை மாற்றம் என்பது இன்றியமையாததாக இருந்துள்ளது. இன்றளவும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மொழி அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவதற்கு உரைநடை ஒரு அடிப்படை சிந்தனைமாற்றமாக இருந்துவருகின்றது. இலக்கண உலகில் இதன் தோற்றுவாய் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
சங்ககால நூல்களுள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற புறநானூறு நூலானது அக்கால மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மேலும் சங்க கால மன்னர்கள் தங்களது சிறப்பகளாக பெரிதும் கொண்டிருந்த கொடைத்தன்மையானது மிக முக்கியமானதாக கருதிவந்துள்ளனர் என்பதற்க்கு சான்றாக பல இடங்களை ஆய்வு செய்கிறபொழுது அவர்களது கொடைத்தன்மையின் பண்பை சில புலவர்கள் ஏற்றியும் கூறியுள்ளனர். மேலும் கடையெழு வள்ளல்கள் அவர்களது ஈகைப் தன்மை பற்றி இங்கே ஆய்வு செய்யபடுகிறது.
[ 'சிறகு' இணைய இதழில் வெளியான இக்கட்டுரையினை,இதன் பயன் கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்- ]
முன்னுரை
கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முந்தைய மொழி என போற்றப்படும் தமிழ் மொழியானது ஓலைச்சுவடு காலம் தொடங்கி பல்வேறு விதமான கால கட்டங்களை கடந்து இணையம் வரை வளா்ந்து நிற்கிறது. இந்த விஞ்ஞான யுகத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் கணினி மற்றும் இணையத்தில் வளா்ச்சியடைந்துவிட்டது.
ஆங்கிலேய அரசியல்வாதிகள் பட்டு வேட்டி, நஷனல், சால்வை சகிதம் தமிழர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் காட்சிகளை அண்மைக் காலங்களில் கனடாவில் கண்டிருக்கின்றோம். அப்போதெல்லாம் இவர்களுள் பலரும் ‘வனக்கம்’ என்று பேசத் துவங்கி, ’நான்றி’ என்று பேசி முடிக்கக் கேட்டிருக்கின்றோம். 2012இல் ஓப்ரா வின்ஃப்றி நெற்றியில் பொட்டுடன் மும்பாய் வீதிவழியே நடந்து சென்றதை அறிந்திருக்கின்றோம். சாறியும் பொட்டும் அணிந்தவராய் மடோனா இசை நிகழ்ச்சியில் பங்குகொண்டதைப் பார்த்திருக்கின்றோம். இவையும் இவைபோன்ற இன்னபிறவும் சமூக, அரசியல், பொருளாதார பலாபலன்களை உள்நோக்காகக் கொண்ட பண்பாட்டுப் பகடைக்காய் நகர்த்தல்கள் மட்டுமே என்பதையும் நாம் நன்கு அறிவோம். ஆயினும் எருமைச் சருமத்தில் மழைத்துளி விழுந்தாற்போல, இவை குறித்து அக்கறை ஏதுமற்றவராய் ஏனோதானோவென்று வாழாதிருப்பதை விடுத்து, இவற்றின் பின்னணியில் தோன்றாப் பொருளாய் மறைந்திருக்கும் அதிகார அரசியலையும் – அதன் பெறுபேறாக வரலாற்று வழிவந்த வலிகள், வேதனைகள், அவமானங்கள் ஆகியவற்றைப் புதைபண்புகளாகக் கொண்ட ‘பண்பாட்டு அபகரிப்பு’ (Cultural Appropriation) எனும் எண்ணக்கருவையும் - நாம் ஓரளவுக்கேனும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும். 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









