ஆய்வு: வாழும் தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா - (தமிழ்நேயம் இதழை முன்வைத்து)
தமிழகம் நன்கறிந்த பாவலராகவும் தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபடுபவராகவும் இன்று நம்மிடையே வாழ்ந்து வருபவர்; ம.இலெனின் தங்கப்பா (08.03.1934). பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், பாவலர், படைப்பாளர், தமிழ்ப்போராளி எனப் பல தளங்களில் பயணிப்பவர். பன்மொழி அறிஞர் இளமையிலேயே தன் தந்தையாரிடம் தமிழ்க்கவிதை பற்றியும், பகுத்தறிவுப் பார்வை பற்றியும் அறிந்து கொண்ட இவர் இன்றுவரை அவற்றைக் கடைப்பிடித்து வருகிறார். உயர்நிலைப்பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் வரலாறும், ஆங்கிலமும் பயிற்றுவித்த இவர், கல்லூரியில் இருபது ஆண்டுகள் தமிழ்இலக்கியம் கற்பித்தார். இளமைக்காலத்தில் ஆங்கிலத்தை விரும்பிக்கற்றார். இயல்பாகவே இயற்கை எழிலில் மிகுந்த நாட்டம் கொண்டவராதலால் 'ஷெல்லி', கீட்ஸ், வோர்ஸ்வொர்த் ஆகியவர்களின் பாடல்கள் இவரை ஈர்த்தன.
இயற்கை நலம்:
இவரது பாடல்களில் இயற்கை, தமிழர்நலம், சுற்றுச்சூழல், வாழ்வுநலம், விழிப்புணர்வு, மாந்தரிடையே நல்லுறவு பேணுதல் போன்ற சிந்தனைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இவரது இயற்கை ஈடுபாட்டிற்குச் சான்றாக ஒரு பாடல்,எளிமையும், இனிமையும் இயற்கையழகும் பயின்று வருவதைக் காணலாம். (த.நே.45,g.4,5)
“விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே.”- (ப.66)
இயற்கையோடு இயைந்த வாழ்வே உயரியவாழ்வு என்பது இவர் கருத்து. மாணவர்களுக்கு இயற்கை அழகையும், சுற்றுச்சூழலைப் பற்றிய புரிதலையும் உணர்த்தும் முறையில் விடுமுறை நாட்களில் மிதிவண்டியில் மாணவர்களோடு பயணம் மேற்கொண்டார்.

“அழுதேன்….! அவனையும் அவனது தாய் தந்தையரையும் நினைத்து, உண்மையில்…. நான் வாய்விட்டு அழுதேன்!” 
முன்னுரை:
முன்னுரை
புதுக்கவிதைகளின் படைப்பு முறை உத்திகளில் படிமம் ஒன்றாகும். ‘Image’ என்னும் சொல்லில் இருந்து உருவெடுத்தது இதுவாகும். கவிஞர் எஸ்ரா பவுண்டு புனைவியக்கக் கொள்கையினை எதிர்த்த இளம் கவிஞர்களை ஒன்று திரட்டி ஒரு அமைப்பை நிறுவினார். பிற கவிஞர்களிடமிருந்து அவர்களை பிரித்துக் காட்டுவதற்காக படிமக் கவிஞர்கள் (Imagist) எனப் பெயர் சூட்டினார். படிமக் கவிஞர்களின் கொள்கையாக பின்வருவனவற்றை வெளியிட்டார். இக்கொள்கை படிமத்தின் இயல்பினை வரையறைகளை விளக்கும் வகையில் அமைகின்றது.
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. சங்க மருவிய காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை
இலக்கியம் என்பது நாம் வாழும் சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும். சங்க இலக்கியத்தின் மூலம் சங்க காலமக்களின் வாழ்வியல், சமூகம், பண்பாடு, கலாச்சாரம், முதலானவற்றை அறியலாம். சங்க காலமக்கள் வாழ்வு அகம், புறம் என இரண்டாகப் பிரித்திருந்தனர். அகவாழ்வு களவு, கற்பு என இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தன. திருமணத்திற்கு முந்தைய வாழ்வினை களவு என்றும், திருமணத்திற்கு பின் அமையும் வாழ்வினை கற்பு வாழ்வு என காரணத்தின் பெயர்கொண்டு பிரித்திருந்தனர். ஒழுக்க நெறி என்பது சங்க கால மக்களின் வாழ்வில் இரண்டரக் கலந்து விட்ட நிலையினை சங்க இலக்கியம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
பாட்டியல் நூல்களால் வரையறுத்துக் கூறப்பட்ட சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று.
சங்க காலத்தில் மாந்தர்களிடையே நிலவிய அகப்புற உணர்வுகளை உணர்த்துவதற்குத் தேவையான புலப்பாட்டு முறைகளையும் கொள்கைகளையும் வரையறை செய்துகொண்டு அவற்றிற்கிணங்க இயற்றப்பட்ட தமிழ் இலக்கிய மரபினை எடுத்துரைக்கும் பகுதி பொருளிலக்கணமாகும். இப்பொருளிலக்கணத்தில் தொல்காப்பியர் தன் காலத்தில் நிலவிய இலக்கியங்களைத் தரவுகளாகக் கொண்டு செய்யுளியலில் இலக்கியத்தின் வடிவம், உள்ளடக்கம், உத்திகள், வகைமை ஆகியவற்றைப் படைத்துள்ளார் எனலாம். பிற்காலத்தில் இவைகள் அனைத்தும் இலக்கியக் கோட்பாடுகளாகத் தோற்றம் பெற்றன. செய்யுளியலின் உறுப்புகள் இலக்கியக் கோட்பாடுகளாகத் திகழ உரையாசிரியர்களின் உரைகள் நமக்கு ஏதுவாக அமைகின்றன. தொல்காப்பியரின் பயன் கோட்பாடு சங்க காலச் சமூக இயங்கியல் தளத்தில் தலைவன், தலைவி காதல் வாழ்வில் நிகழ்ந்த மாற்றம் மற்றும் சமுதாயத்திற்குத் தேவையான நற்பயன்களை இலக்கியம் படிக்கும் வாசகனைச் சென்றடையும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இன்றைய நவீன இலக்கியங்களான நாவல், கவிதை, சிறுகதை போன்றவைகளிலும் தொல்காப்பியரின் பயன் கோட்பாட்டினைப் பொருத்திப் பார்க்கலாம் என்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். ஓவ்வொரு இலக்கிய வகையும் ஏதோ ஒரு பயனைச் சமுதாயத்திற்கு விட்டுச்செல்கிறது அவற்றினை இனம்கண்டு வெளிக்கொண்டு வரலாம்.
வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக இலக்கியம் விளங்குகிறது என்பர். இக்கூற்றிற்கு ஏற்ப, பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள பழைய இலக்கியங்களே நமக்குத் துணைபுரிகின்றன. எனவே, இலக்கியம் என்பது மொழி வழி நின்று சமுதாய வாழ்க்கையை விளக்குகிறது எனலாம். தமிழர் தம் சமுதாய வாழ்க்கையின் வளர்ச்சி நிலைகளைப் பதிவு செய்து நிற்கும் தொன்மையான நூல்கள் தொல்காப்பியமும், சங்க இலக்கியமுமே ஆகும். தொல்காப்பியப் பொருளதிகாரமும், சங்கஇலக்கியமும் பழந்தமிழ் நாட்டின் சமூகநிலையினை அக்காலத்திற்கேற்ப பதிவுசெய்துள்ளது. உலக வாழ்வையும் வரலாற்றையும் ஏதேனும் இரு சொற்களில் சுருக்கிச் சொல்வதாயின், அவை காதலும், போரும்தான். மனிதவாழ்வின் இரு சக்கரங்களாகச் சுழலும் இவைதாம், வாழ்வின் விளக்கமான இலக்கியத்தின் அடிப்படைக்கூறுகளாகவும் அமைகின்றன. வாழ்வியல் இலக்கியத்திற்கும் இலக்கிய வாழ்விற்கும் முதன்முதலில் இலக்கணம் வகுத்த முத்தமிழ் நாகரிகம் இவ்விலக்கியப்பொருளை அகப்பொருளாகக் காதலையும், புறப்பொருளாகப் பெரும்பகுதி வீரத்தையும் குறிப்பிடுவது புதிய செய்தியன்று. தமிழிலக்கண இலக்கியத்திறனாய்வுக்கு முன்னோடியாக அல்லது பெருமளவில் தொல்காப்பியத்தைத் தொட்டே இன்றுவரை எழுந்துள்ள ஆய்வுப்போக்குகள் அமைந்துள்ளன. விளக்கமுறை, விதிப்புமுறை என்ற பாகுபாட்டில் அமைந்துள்ள இலக்கணநூல்களின் அடிப்படையை ஆராயும்பொழுது, தொல்காப்பியம் என்பது ஒரு விளக்கமுறை இலக்கணம் என்பர். இது தமிழின் இயல்பான இலக்கண வழக்கை எடுத்துச்சொல்கின்றதே தவிர, இன்னென்ன மாதிரியில்தான் இருக்கவேண்டும் எனப் பெரும்பாலும் வரையறுத்துக் கூறவில்லை. இதுகூறும் சமுதாயம் என்பது அக்காலத்தில் எப்படியெப்படி இருந்ததோ அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது எனலாம். ஆதலின் தொல்காப்பியம் என்பது கற்பனை நிலையில் நின்று ஒரு சமுதாயத்தை உருவாக்கவில்லை. இலக்கணநூல் வழியாக ஒரு சமுதாயத்தைக் காட்டுவது என்பது அரியசெயலாகும் எனினும், இலக்கணம் பல இலக்கிய நூல்களின் சாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டமையால், இலக்கண நூல்வழிக் காணும் சமுதாயம், கற்பனைச் சமுதாயமாக இல்லாது, உண்மையும், கருத்து வலிமையும் உடைய ஒன்றாகவே அமையும் எனலாம். அதனடிப்படையில் அணுகும்பொழுது தொல்காப்பியமும், அதனை விவரிக்கும் சங்கஇலக்கிய சமுதாயமும், காப்பியக் கதைநகர்வுகளும், தமிழில் தோன்றிய மற்ற இலக்கியங்களும் ஆண், பெண்ணை மையமிட்ட அகப்புறப் பாகுபாட்டையும் அவற்றில் தோன்றும் காதல், போர் இயைபுகளையும், முரண்பாடுகளையும் தமிழிலக்கண இலக்கியப் பதிவுகளில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிந்து தமிழிலக்கியத் திறனாய்வுக்கு ஏதேனும் ஒரு பரிமாணத்தில் உந்துசக்தியாக அமையும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
உலகமொழிகள் எல்லாம், வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருந்த பொழுது நம் தமிழ் மொழியானது இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே உருவாக்கி செழிப்புற்றிருந்தது. அதில், குறிப்பாக உலகப்பொதுமறை எனப்போற்றப்படும் திருக்குறள் எல்லா துறைகள் பற்றிய உள்ளடக்கத்தையும் கொண்டிருந்தது. அண்மைக்காலத்தில் உலகநாடுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வெற்றிக்குரிய தொழிலாக போற்றப்படும் வணிகம், வர்த்தகம், நிர்வாகம், நிதிமேலாண்மை போன்றவற்றின் அடிப்படைக்கொள்கைகள் நூற்றுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளில் இடம்பெற்றுள்ள கருத்துகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முன்னுரை:
அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்களின் சில படைப்புக்களால் ஈர்க்கப்பட்டு அவரைப் பற்றிய எனது தேடலின் விளைவாக நான் அறிந்தவற்றை அல்லது உணர்ந்தவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். இந்தப் பதிவைச் சக எழுத்தாளர்களுடனும் தமிழ் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் முகமாக எழுதிய இந்தக் கட்டுரை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு மலரில் இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதெனக் கருதுகின்றேன்.
முன்னுரை
பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் இலக்கிய மூலாதாரங்களில் சங்க இலக்கியங்கள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. அவற்றில் எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல் தனித்துவமானதாக அமைந்துள்ளது. அகமும் புறவும் விரவிய இவ்விலக்கியத்தில் வையைப்பாடல்களை ஆதாரமாகக் கொண்டு அக்கால சமூகநிலையை நோக்கமுடியும். 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









